Author Archive

முத்துத்தாண்டவரின் முத்தான பாடல்கள்

முத்துத்தாண்டவரின் முத்தான பாடல்கள்
ஷைலஜா கர்நாடக இசையில் மூவேந்தர்களாக வழங்கப்படுபவர்கள், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி. இந்த மூவரும் பிறப்பதற்கு முன்பே, பல கீர்த்தனைகளைப் பாடி, இந்த மூவருக்கே முன்னோடிகளாய் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுள், 'தமிழ் மூவர்' என்று முத்துத்தாண்டவர், அருணாசலக் கவியராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரைச் சொல்லுவார்கள். தியாகராஜர், தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி, மூவரும் அவதரித்த புண்ணிய பூமி திருவாரூர்.  மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மூவரும் அவர்கள் வாழ்வின் ... Full story

மணமுள்ள மரபுக்கவிதைகள்!

மணமுள்ள மரபுக்கவிதைகள்!
    ஷைலஜா ஏப்ரல் 18ஆம் நாள், உலக மரபு தினமாகக் கொண்டாடப்படுகிறது! இதற்காக, பழைய நினைவுச் சின்னங்கள், புதையல்கள், பொக்கிஷங்கள் இவற்றைப் போல பெயரிலேயே மரபினைக் கொண்ட மரபுக் கவிதைகளையும் நாம் நினைத்துப் பார்க்கலாம். முன்பெல்லாம் அரங்க சீனிவாசன், திருலோக சீதாராம், சக்தி சரணன், மீ.ப.சோமு, மஹி, நா.சீ.வரதராஜன் இவர்களுடன் இங்கு குறிப்பிடத்தவறிய பலமரபுக் கவிஞர்கள் தமிழ்ப் பத்திரிகையுலகைத் தங்களின் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளால் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சில நேரங்களில் தீபாவளி மலர்களில் மரபுக் கவிதைகளைப் பிரசுரிக்கிறார்கள். சௌந்தரா கைலாசத்தின் இனிய மரபுக் கவிதைகளை மறக்க முடியாது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் போன்ற ... Full story

காந்தியமும் வள்ளுவமும்!

(பேராசிரியர் இல. ஜானகிராமன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி) வ.வே.சு. ஐயரின் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி ஆசிரமத்தில் நடைபெற்றது. கவியோகி சுத்தானந்த பாரதியும் வவேசு ஐயரின் புதல்வர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் வ.வே.சு. ஐயரின் உடைமைகளைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அதில் ஐயர் வைத்திருந்த துப்பாக்கி, பெரிய வெட்டரிவாள் முதலியன இருந்தன. அவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்த கவியோகி, ஒரு விஷயத்தைச் சொன்னார். மகாத்மா காந்தி, கண்ணன் காட்டிய வழியில் நடந்து வெற்றி கண்டவர். ‘எனக்கு மனக் கலக்கம் ஏற்பட்ட போதெல்லாம் நான் கீதையை நாடுவேன் உடனே ... Full story

வேர்களுக்கு ஒரு விழா!

ஷைலஜா ஆசிரியர் தினம் வருவதற்கு முன்பே சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’ என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7 பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு! இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தைச் சாதித்துள்ளார்கள். ஆசிரியர்களைக் கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி, ... Full story

இன்றோ திருவாடிப்பூரம்!

ஷைலஜா இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து, ஆழ்வார் திருமகளா ராய்! உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் இப்படிக் கொண்டாடுகிறார் திருமால் தனது  ஒரு அவதாரத்தின் போது யாரைத் தன் தகப்பனாராக வரிக்கலாம் என யோசித்தாராம். தான் வணங்கும்படியாக உயர்ந்தவர்  யாரென்று கண்டுபிடித்துத் தசரதனைப் பிடித்தாராம். அதுமாதிரி பூமிதேவி அவதரிக்கு முன்பாக யாரைத் தன் தந்தையாக ஏற்கலாம் என யோசித்து  அதற்குச் சகல விதத்திலும் சரியானவர் பெரியாழ்வாரே எனத் தீர்மானித்து ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.