- Wednesday, May 9, 2012, 5:15
- Featured, இலக்கியம், பத்திகள்
- 2 views
சு.கோதண்டராமன்
அறம் காக்க வந்த அவதாரம்
எப்பொழுதெல்லாம் அறத்திற்கு வீழ்ச்சியும் மறத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியபடி மக்கள் கூட்டத்தில் அவ்வப்போது அறம் நாட்ட ராமனாகவும் கிருஷ்ணனாகவும் புத்தராகவும் ஏசுவாகவும் முகமதுவாகவும் வள்ளலாராகவும் வந்த இறைவனே இரெட்டியப்பட்டி சுவாமிகளாகவும் அவதரித்தான் என்று கொள்ளலாம். அவர்கள் பேசின மொழியும் கூறிய வார்த்தைகளும் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரின் கருத்தும் ஒன்றே....
Full story
- Wednesday, May 2, 2012, 8:53
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சு.கோதண்டராமன்
ஏழுபிறவிக் கடலை ஏற விடு நற்கருணை ஓடக்காரர்
சுவாமிகள் தம் தவ வலிமையால் பல அற்புதங்கள் செய்தார். நூறு பேருக்குச் சமைத்த உணவைக் கொண்டு இருநூறு பேர் வயிறார உண்ணும்படிச் செய்தார். நோய்களையும் பேய்களையும் தம் கரத்தால் தொட்டே ஓடச் செய்தார். இறந்து போனவரைப் பிழைக்க வைத்தார். தன் சீடர்களும் திருநீறு கொடுத்து நோய் நீக்கும் வலிமை பெறச் செய்தார்.
இத்தகைய சித்து விளையாட்டுகளே தம் தவத்தின் முடிந்த முடிவாகக் ...
Full story
- Friday, April 20, 2012, 11:21
- இலக்கியம், பத்திகள்
- 0 views
சு.கோதண்டராமன்சமுதாயப் பிணி அகற்றிய சதுரர்
சுவாமிகள் தோன்றிய காலத்தே இருந்த சமுதாயக் குறைகளை ஒழிக்க அவர் கூறிய உபதேசங்கள் அக்காலத்தில் புரட்சிகரமாகவே தோற்றம் அளித்திருக்க வேண்டும். நாள் கோளை நம்பாதே, மணி மந்திரங்களை நாடாதே, தெய்வத்துக்கு நேர்ச்சைகள் செய்து கொள்ளாதே என்று அவர் உபதேசித்தது தற்கால நாத்திக வாதிகளின் கூற்று போலத் தோன்றினாலும் அவை இறைவனின் தனிப் பெருங் கருணையில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக் ...
Full story
- Thursday, April 12, 2012, 4:45
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சு.கோதண்டராமன்
மனக்கவலை மாற்றிய மகான்
தனக்குவமை இல்லாதான் தாளைப் பற்றுவது ஒன்று தான் மனத்துயர் நீக்கி மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதைச் சுவாமிகள் வலியுறுத்திச் சொன்னார்கள்.
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தினுள் அடைத்துவைத்தேன் –ஒன்றே காண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொன்னொளிசேர் அங்கையாற்கு ஆளாம் அது.
என்று காரைக்கால் அம்மையார் கூறியபடி இறைவனுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டுவிட்டால் ...
Full story
- Sunday, March 18, 2012, 1:16
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
உடற் பிணி நீக்கிய உத்தமர்
இரெட்டியப்பட்டி என்பது அருப்புக்கோட்டைக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள ஒரு சிற்றூர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கு சித்தியடைந்த ஒரு மகான், ஊரின் பெயரால் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார். இவரது சீடர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளனர். சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர்கள் தியாகராய நகரில் அவரது விழாவை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள். இரெட்டியப்பட்டியிலும் ஆண்டு தோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது....
Full story
- Tuesday, March 13, 2012, 12:51
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். (பெரியபுராணம் – திருமலைச் சருக்கம் 252)
சுந்தரர் ...
Full story
- Tuesday, February 28, 2012, 11:45
- Featured, கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
அண்மையில் ஒரு மாணவன் தன் இந்தி ஆசிரியையைக் குத்திக் கொன்றான் என்ற துயரமான செய்தி என் வாழ்க்கையில் 1966ஆம் வருடம் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டியது.
கும்பகோணத்தில் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வழக்கமான வேலையோடு பத்தாம் வகுப்பில் (அப்போதைய ஐந்தாவது பாரம்) இந்தி நடத்தும் வேலையும் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்திய கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ...
Full story
- Friday, February 17, 2012, 14:36
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
ஐந்தெழுத்து
அம்மையாரின் பாடல்களில் சிவன் என்ற சொல் காணப்படாதது போல, அதை ஒட்டிப் பிறந்த நமசிவாய மந்திரமும் காணக் கிடைத்திலது. திருவிரட்டை மணிமாலையில் 10 மற்றும் 16 ஆவது பாடல்களில் வரும் ஐந்து என்ற சொல் நமசிவாய மந்திரத்தைக் குறிப்பதாகச் சிலர் பொருள் கொள்கின்றனர். கூர்ந்து நோக்கினால் உண்மையை உணரலாம்.
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினவுணர்ந்தோர் காண்பர் தலையாய...
Full story
- Tuesday, February 7, 2012, 9:54
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு. கோதண்டராமன்
சைவத் தொட்டில் – சோழநாடு
தமிழ்நாட்டின் பிற பகுதிகள் போல் சோழ நாட்டிலும் சமண சாக்கியச் சமயங்கள் பெருகி வளர்ந்தன. புகழ் பெற்ற புத்த விகாரங்கள் இருந்த நாகப்பட்டினம், பூதமங்கலம் ஆகியனவும், காரைக்காலுக்கு மிக அருகாமையில் கொல்லார்புரம், புத்தர்குடி என வழங்கும் ஊர்ப் பெயர்களும், சம்பந்தர் திருநள்ளாறிலிருந்துத் திருத்தெளிச்சேரி வருமுன் அவரை வாதுக்கு அழைத்த சாக்கியர்கள் மீது இடி விழுமாறு செய்தார் என்ற பெரிய ...
Full story
- Thursday, February 2, 2012, 12:22
- Featured, கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
இடம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி நிலையம். விஞ்ஞானிகளும் தொழில் வல்லுநர்களும் இரண்டு ஆண்டு காலமாகக் கடுமையாக உழைத்து உருவாக்கிய இன்சாட் விண்கலம் ஏவப்பட நாள் குறித்தாகி விட்டது. இன்னும் சரியாக 30 நாட்கள் உள்ளன. எந்தெந்த நாளில் எந்தெந்த வேலை முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் சரியாக வல்லுநர்கள் முடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்கள் 30, 29, 28 என்று குறைந்து கொண்டே வருகின்றன.
ஆயிற்று, இன்னும் 24 மணி நேரம் ...
Full story
- Tuesday, January 31, 2012, 13:40
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார்.
இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ...
Full story
- Tuesday, January 24, 2012, 14:41
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
சோதி வழிபாட்டின் துவக்கம்.
அம்மையார் போற்றிய எம்மான் சுடலையில் நடனம் ஆடுபவன். சுடலையில் எப்பொழுதும் பிணம் சுடு தீ எரிந்து கொண்டிருக்கிறது. பெருமான் கையிலும் ஒரு பெருந் தீ எரிந்து கொண்டிருக்கிறது. சூரியனும் சந்திரனும் அவனது இரு கண்களாக விளங்க, தீ அவனது மூன்றாவதான நெற்றிக்கண்ணாக உள்ளது. அவன் கண் விழித்துப் பார்த்தால் காமன் ஒண்பொடியாக ஆகி விடுகிறான். அவன் கையிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பினால் முப்புரங்களும் வெந்து ...
Full story
- Saturday, January 21, 2012, 11:40
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
2012இல் உலகம் அழிந்து விடும் என்ற செய்தியைக் கேட்டவுடன் என் மனம் கால இயந்திரத்தில் ஏறி ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தது.
1962 பிப்ரவரி 5 அன்று எட்டு கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்து 1½ மணி நேரத்துக்கு மாநாடு நடத்தப் போகின்றன என்ற செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னே வந்து விட்டது. உடனே நம்மூர் சோதிடர்கள் “ஆகா, இது ஏதோ விபரீதத்தின் அறிகுறி. உலகம் அழியப் ...
Full story
- Tuesday, January 17, 2012, 12:51
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை
அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறை முகமாகவோ காரணமாக இருந்தார்.
அம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை முதன் முதலாக மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் பத்துப் பாடல்களிலும், ...
Full story
- Thursday, January 12, 2012, 9:26
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
அம்மையாரின் இசை
இவ்வுலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிய சமண சாக்கியங்கள் இசை, நடனம் ஆகிய கலைகளில் ஈடுபடுவது மறு உலக வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எனப் போதித்தன. ஆனால் அம்மையார் அவற்றையே பயன்படுத்தி இறை நெறியைப் போற்றுகிறார். இறைவனை ஆடும் தெய்வமாக உருவகப்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இசை முழங்குவதையும் குறிப்பிட்டு இக்கலைகளைத் தெய்வத் தன்மை கொண்டதாக ஆக்குகிறார்.
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, ...
Full story