- Wednesday, May 9, 2012, 10:19
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
மாமி ஊரிலிருந்து வந்து விட்டாள் பணத்தோடு. வயல் விற்ற பணம் இரண்டரை லட்ச ரூபாய் இருந்தது. அதை அப்படியே பாங்கில் போட்டு வைத்தார்கள். பின்னால் அதிலிருந்து டாக்டருக்கு ஃபீஸ் கொடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டார்கள். டாக்டர் ஃபீசே ஒன்றரை லட்சம் ஆகி விட்டது. அது தவிர ரூம் வாடகை, மருந்துச் செலவு, நோயாளிக்கான சிறப்புச் சாப்பாடு என்று மேற்கொண்டு ஒன்றரை லட்சம் தேவைப் படும் போல இருந்தது. மீதிப் பணத்துக்கு என்ன ...
Full story
- Wednesday, May 2, 2012, 9:50
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
மாமியும், ப்ரியாவும் கூடிக்கூடிப் பேசினர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த முறை சிவநேசன் ஃபோன் செய்யும் போது சொல்லி விடலாம் என்று யோசித்தனர். அப்படி அவர்கள் விஷயத்தைச் சொல்லி அவன் தன் டூரை பாதியிலேயே முடித்துக் கொண்டு வந்து அதனால் மங்கையின் நிலை மேலும் மோசமாகி விடக் கூடாது அல்லவா? ஏனென்றால் அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்ற விவரத்தையே இன்னும் தெரியப் படுத்தவில்லையே. அதைத் தெரிந்து கொண்டால் மங்கை ...
Full story
- Wednesday, April 25, 2012, 9:32
- இலக்கியம், தொடர்கதை
- 1 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சில சமயங்களில் காலம் இறக்கை கட்டிக் கொண்டு ஓடுவது போலவும், சில சமயங்களில் நத்தையை விட மெதுவாக நகர்வது போலவும் நமக்குத் தோன்றும். இதற்குக் காரணம் நம் மனம்தானேயன்றி காலத்தின் மேல் பிழையில்லை. சிவநேசன் குடும்பத்தினருக்கு இப்போது காலம் மிகவும் மெதுவாகச் செல்வதாகத் தோன்றியது. டாக்டரிடம் மங்கையைக் காட்ட வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகும் கூட ஒரு முறை மங்கை நெஞ்சு வலி தாளாமல் மயங்கி விழுந்தாள். அப்போது அவசரத்திற்குப் ...
Full story
- Wednesday, April 18, 2012, 11:45
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சிவனேசன் வெளிநாடு சென்று சேர்ந்து விட்டான். சேர்ந்ததுமே விரிவாகப் ஃபோன் பேசினான். தனக்கு எல்லாமே சௌகர்யமாக இருப்பதாகவும், பயணம் செல்லக் கம்பெனியே கார் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னான். அது மட்டுமல்ல உணவு, தங்குமிடம் எல்லாமே அவர்கள் பொறுப்பு என்பதோடு, இவனுக்குரிய சம்பளமும் கிடைப்பதால் பணம் பற்றிய கவலை இல்லை என்றான். அது மங்கைக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது.
முன் பின் தெரியாத ஊரில், பணம் இல்லாமல் அவன் தவிக்க நேரிடுமோவென்ற அவள் ...
Full story
- Tuesday, April 10, 2012, 9:11
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
கடந்த சில நாட்களாகவே மங்கையின் வலக்கண் துடித்துக் கொண்டிருந்தது. பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்று யாரோ சொன்னது மங்கைக்கு ஞாபகம் வந்தது. அதோடு பக்கத்து வீட்டம்மா அந்த வீட்டைப் பற்றிச் சொன்னது வேறு அவள் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லாமல் மனதிலேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
மாமி வீட்டு வேலைகளில் உதவுவதால் முன்னளவு அடிக்கடி நெஞ்சு வலி வருவதில்லையே தவிர அடியோடு நின்று ...
Full story
- Tuesday, April 3, 2012, 10:50
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
கடந்த சில நாட்களாகவே நிகிலால் வீட்டில் ஒரே பிரச்சனை. சிவனேசன் வரை விஷயம் போகாமல் பார்த்துக் கொண்டாள் மங்கை. அவன் செய்ய விரும்புவது நல்ல விஷயமாக இருந்தாலும், மங்கையினால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
விஷயம் இது தான். நிகில் படிக்கும் பள்ளி வாசலில் ஒரு பிராமண மூதாட்டி வடை சுட்டு விற்பாளாம். அந்தக் கிழவிக்கு யாருமே இல்லையாம். இளம் வயதிலேயே விதவையான அந்தக் கிழவி இப்படிப் பள்ளி வாசல்களில் ...
Full story
- Tuesday, March 27, 2012, 12:40
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
வழக்கமாக அலுவலகத்திலிருந்து சோர்ந்து திரும்பும் சிவனேசன் அன்று மிகவும் மகிழ்ச்சியாகக் கையில் ஸ்வீட்டுடன் வந்தான். எதிரே வந்த மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டான். அதைச் சற்றும் எதிர்பார்க்காத மங்கை "என்னங்க! இதென்ன புதுசாக் கல்யாணம் ஆனா மாதிரி" என்றவள் அவன் கையிலிருந்த இனிப்புப் பெட்டியைப் பார்த்து விட்டு "என்னங்க இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்துருக்கீங்க?" என்றாள். "சொல்றேன்" என்றவன் "ஆமா! குழந்தைங்க, ப்ரியா எல்லாரும் எங்கே?" என்றான். "ப்ரியா ...
Full story
- Tuesday, March 20, 2012, 0:49
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
காலை வேளையில் குளித்து முடித்து , தலையில் ஒரு துண்டைச் சுற்றியபடி பரபரவென இயங்கிக் கொண்டிருந்தாள் மங்கை. ஒன்பது மணிக்குள் நான்கு பேருக்கு டிஃபன் கொடுத்து, சாப்பாடு கையில் கட்டிக் கொடுத்து , பள்ளி , கல்லூரி ,மற்றும் அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டுமே. அடுப்பில் ஒரு பக்கம் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மறு அடுப்பில் ஆவி பறக்க இட்லிகள் தயாராகிக் கொண்டிருந்தன. மங்கை அவற்றை எடுத்துப் பரிமாறு முன் ...
Full story
- Tuesday, February 14, 2012, 5:23
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் தனக்கு கற்பிக்கும் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறான். அதுவும் திட்டமிட்டு நிதானமாக செயல் படுத்தியிருக்கிறான். இவற்றிற்கு இடையே வெளிநாட்டினர் நம் கலாசாரத்தைப் பாராட்டி அதைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இந்தியா வருகை என்ற செய்தி வேறு.
இவர்கள் எந்த கலாசாரத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? ஆசிரியர்களை பெற்றொருக்கும் மேலாக வைத்து அவர்களுக்கென ஒரு நாளையே ஒதுக்கி மரியாதை செய்யும் கலாசாரத்தையா? இல்லை தவறுகளைச் சுட்டிக் காட்டினார் என்று கொலை செய்த கலாசாரத்தையா? பெண்களை சக்தியின் சொரூபமாக வணங்கி ...
Full story
- Thursday, February 2, 2012, 11:52
- Featured, கட்டுரைகள்
- 1 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
38-ஆவது சுற்றுலாப் பொருட்காட்சி தீவுத் திடலில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அரசு நடத்தும் பொருட்காட்சி இது. கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. எப்படித்தான் இருக்கிறது? பார்ப்போமே என்று போயிருந்தோம். எடுத்த எடுப்பிலேயே ராமேஸ்வரம் கோயிலின் பிரம்மாண்டமானப் பிராகாரத்தை அழகாகப் பெரிதாக்கி கட் அவுட் வைத்திருக்கிறார்கள். பஸ்ஸிலிருந்து பார்த்து வரும் போது நாமே அதனுள் நுழைவது போன்ற காட்சிப் பிழையை ஏற்படுத்துவது ...
Full story
- Thursday, December 22, 2011, 9:54
- கட்டுரைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
தெய்வ வழிபாடுகளில் சக்தி வழிபாடு மிகச் சிறப்பானதும், தனிச் சிறப்பு உடையதும் எனப் போற்றப் படுகிறது.. ஆதி சங்கரர் முதல் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவரும், நினைத்த நேரம் நினைத்த உரு எடுக்கும் தன்மையுடையவருமான கோரக்கச் சித்தர் வரை அன்னையை வழிபட்டு அவள் பாதகமலங்களைச் சரணடைந்தவர் பலகோடி. அப்படிப்பட்ட சக்தி வழிபாட்டில் முக்கியமாக நாம் கவனித்து ஆராதிக்க வேண்டியவர்கள் தான் அன்னையின் பரிவார தேவதைகளான அறுபத்து நான்கு யோகினிகள். அறுபத்து ...
Full story
- Friday, December 16, 2011, 13:18
- கட்டுரைகள், பொது
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
10.12.2011 அன்று ஏற்பட்ட முழுச் சந்திர கிரகணத்தை அனைவரும் கண்டு ரசித்திருப்பீர்கள். இதைக் குறித்து எத்தனையோ மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றைத் தவிர்த்து கிரகணம் எதனால் ஏற்படுகிறது, எத்தனை வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன? அவைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நிலவு, பூமி, சூரியன் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் அல்லது மிக மிக அருகில் சந்திக்கும் போது பூமியின் ...
Full story
- Saturday, December 3, 2011, 8:07
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அந்தத் தனியார் மருத்துவமனை பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது. நல்ல பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து போகக் கூடிய மருத்துவமனை அது. ஆறு மாடிகளும், நான்கு தானியங்கி மின் தூக்கிகளும் சதா இயங்கிக் கொண்டேயிருக்கும். அரசு மருத்துவ மனைகளைப் போலில்லாமல், இங்கு நோயாளிகளைக் காண வருபவர்களின் கூட்டம் சற்றுக் குறைவு தான். ஆனால் வருபவர்கள் ஒரு கிலோவுக்குக் குறையாத ஆரஞ்சும், ஆப்பிளும் வாங்கி வருவார்கள்.
அந்த மருத்துவமனையில் பொதுப்பிரிவில் டீலக்ஸ் வார்டில் ...
Full story
- Wednesday, November 16, 2011, 1:16
- இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீட்டைத்தான் இப்போது காலி செய்து கொண்டிருக்கிறேன். அதை விற்பதா? இல்லை வாடகைக்கு விடுவதா என்பன போன்ற விஷயங்கள் இன்னும் தீர்மானிக்கப் படாத நிலையிலிருந்தன. போன மாசம் தன்னுடைய தொண்ணூறாவது வயது வரை அப்பா இந்த வீட்டில் தான் இருந்தார் அம்மாவோடு. இப்போது அம்மா தனியாகி ...
Full story
- Monday, September 12, 2011, 14:44
- இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அந்தப் புலி மிகவும் அடிபட்டிருந்தது. வனத்தை அளக்கும் அதன் கால்கள் முறிந்து விட்டன. எல்லாம் கவனக்குறைவால் வந்த வினை. யானை மந்தையிலிருந்து ஒரு சிறு யானைக்குட்டியை வேட்டையாடும் போது கூட்டத்தின் தலைவன் பார்த்து விட்டது. தன் தந்தங்களால் கீறி காலால் உதைத்துத் துவைத்து விட்டது. பின்னங்கால்கள் இரண்டும் ஒடிந்து விட்டன. அதனால் இனியும் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது இரை தேட முடியாது. அந்த வனாந்தரத்தில் யார் தனக்கு உதவப் போகிறார்கள் என்று ...
Full story