- Monday, May 14, 2012, 0:32
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தி.சுபாஷிணி
ஆம்! அம்மா அதிகம் பேசமாட்டாள். இதோ! இப்பவும் பேசாதுதான் கிடக்கிறாள். ஆட்கள் ஒருவர் ஒருவராய் வரத் தொடங்கி விட்டனர். எனது உறவுகளும், அம்மாவின் உறவுகளும் அப்பாவழி எங்களுக்குக் கிடைத்த உறவுகளும் வர தொடங்கிவிட்டனர். எங்களுக்கு உறவுக்காரர்கள் மிகவும் குறைவு. அப்பாவின் பொதுத் தொண்டின் பயனால் நண்பர்கள் அதிகம். அம்மா கல்யாணத்திற்கு போனாலும் சரி, கருமாதிக்குப் போனாலும் சரி, ஓரே மாதிரியாகத்தான் போவாள். அவளுக்கு அதில் ஒன்றும் வேறுபாடு தெரியாதா? இல்லை அவள் அதில் காண ...
Full story
- Monday, May 7, 2012, 4:16
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சுபாஷிணி
டாக்டர் எஸ். தருமாம்பாள் (1890-1959)
இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தன் சுய முயற்சியால் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 1930இல் இவர் பிரசித்தி பெற்ற சித்தமருத்துவராக மக்களிடையே அறியப்பட்டார். மாநகராட்சி உதவியுடன், சென்னை தங்கசாலையில் சித்தமருத்துவ மையம் ஒன்றை நிறுவி, ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்தார். இதன் மூலம் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஆலோசகராக இவர் விளங்கினார்.
பெரியார் ஈ.வெ.ரா கருத்துகளில் ஈடுபாடு உடையவர். எனவே துணிச்சலோடு பல கலப்பு மணங்களையும், விதவை மறுமணங்களையும் இவர் நடத்தி ...
Full story
- Wednesday, April 25, 2012, 4:19
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தி.சுபாஷிணி
ஏற்கனவே மஞ்சள் நிற வர்ணம் தீட்டிய பலகையில் பிரவுன் நிறத்திலும், அதைவிட அடர்த்தியாயும், மஞ்சள் ஆர்க்கர் வண்ணமும், ஒரு ஒழுங்கில் இருப்பது போலவும், இல்லாது போலவும் வண்ணம் தீட்டப்பட்டது. நடுவில் விடப்பட்ட இடத்தில் மஞ்சள் ஆர்க்கர் நிறம் வடித்த வடிவம் சூரிய ஒளியில் ஒளிரும் தங்கமாய் உட்- குழிவோடு காணப்பட்டது. அதைச்சுற்றி, கறுப்பு நிறக் கோட்டால், வளைந்த நெற்றியுடன் கூர்மையான சற்றே பெரிய நாசியும், ...
Full story
- Monday, April 23, 2012, 3:28
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
அம்புஜம்மாள் (1889-1983)
செல்வம் செழித்த, விடுதலை வேட்கை நிறைந்த வீட்டில் பிறந்த அம்புஜம்மாளுக்கு மகாத்மா காந்தியடிகள் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார். 1929இல் தன் சித்தி ஜானம்மாவுடன் இணைந்து ‘சுதேச லீக்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் இவர் கதர்த்துணி, சுதேசிப் பொருட்களை விற்றார்.
இராட்டையால் நூல் நூற்கும் திட்டத்தைக் கொணர்ந்தார். தினந்தோறும் சென்னைத் தெருக்களில் கொடி பிடித்துக் கொண்டு, பாரதியார் பாடல்களைப் பாடிச் செல்வது இச்சங்கத்தின் அன்றாட வேலையாகும். சுயராஜ்ய நிதிக்காக ஒரு பெருந்தொகை திரட்டித் திலகரிடம் கொடுத்தார். ...
Full story
- Monday, April 16, 2012, 3:59
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி(1886 -1968)
‘தொன்று தொட்டு வரும் பழக்கம், கடவுட்பணி’ என்று தேவதாசி முறைக்கு ஆதரவாக ஆண் வர்க்கம் அலட்டிய போழ்து, ‘அவ்வாறெனில் அவருடைய சகோதரிகளும் மகள்களும் இனி பொட்டுக்கட்டி கடவுட் சேவை செய்யட்டும்’ என்று தைரியக் குரல் எழுப்பியது ஒரு பெண், அன்றைய சட்டசபையில். ஒரு நிமிடம் சபையே அதிர்ச்சியில் மௌனமானது. இதன் விளைவு, தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.
அப்பெண் குரலுக்குரியவர் புதுக்கோட்டையில் உதித்த ‘புரட்சி முத்து’ டாக்டர் முத்துலட்சுமி அவர்கள். ...
Full story
- Saturday, April 7, 2012, 18:59
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
நாகம்மையார் (1885 -1933)
சேலத்தில் பிறந்த இவர், 1898இல் தம் உறவுக்காரரான ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மணந்து தம் வாழ்வினைப் பயனுள்ளதாக்கிக் கொண்டார்.
தம் கணவரின் முயற்சியால், அவரது பகுத்தறிவு இயக்கத்தில் இணைந்ததால் 1926 இல் முதன் முதலில் ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியாருடன் தானும் கலந்து கொண்டதால், தமிழ்நாடு முழுவதும் இவர் அறியப்பட்டார். அது முதல் அவரது ஆடை கதராடையானது.
1921இல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலில் கலந்துகொண்டார். அப்போது பெரியாரை அரசு கைது செய்தது. உடனே நாகம்மையாரும் பெரியாரின் தங்கையான ...
Full story
- Thursday, April 5, 2012, 21:23
- செய்திகள்
- 0 views
சீனி குலசேகரன்
மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி. அவர்களின் 88 வது பிறந்தநாள் விழா, இலக்கிய அன்பர்களின் சந்திப்பாக அவரது 21-ஈ, சுடலைமாடன் கோவில் தெரு வளவு வீட்டு முற்றத்தில் வைத்து மிக எளிமையான முறையில், கடந்த 31-03-2012 அன்று நடந்தேறியது.
எழுத்தாளர் கழனியூரன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.
பேராசிரியர் அறிவரசன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கியோடு, சென்னையச் சேர்ந்த எழுத்தாளர் தி.சுபாஷிணி எழுதிய ' தந்தைமைத் தவழும் வளவு வீடு ...
Full story
- Saturday, March 31, 2012, 5:00
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
மூவலூர் இராமாமிர்தம் - (1883-1962)
திருவாரூர் கிருஷ்ணசாமிக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்த இவர், ஏழ்மையின் காரணமாக, மாயவரம் மூவலூர் ஆச்சிக் கண்ணு என்னும் தாசியால் வளர்க்கப்பட்டார். சாதியின் பெயரிலும் பிறப்பின் அடிப்படையிலும் கடவுளின் பெயரில், பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கிய ஒரு சமூகக் கொடுமைக்கு எச்சரிக்கை மணி அடித்தவர் இவர். இதற்காக 1925இல் இசைவேளாளர் சங்க மாநாடு கூட்டினார்; தேவதாசி முறை ஒழிப்பைப் பிரகடனப்படுத்தினார்.
தேசவிடுதலையுடன், சமூக இழிவிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் சமூகப் போராளியான இவரை மகாத்மா காந்தியடிகளும் அண்ணாதுரை அவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர். ...
Full story
- Saturday, March 24, 2012, 16:56
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
தமிழ் நாட்டை ஆண்ட நாயக்கர் வழி வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள் ஆவார். இவரது ஆட்சி போர்க்களமும் குழப்பங்களும் நிறைந்திருந்ததால், 1682இல் மன்னர் இறந்தார். உடனே தன் மகன் முத்து வீரப்பநாயக்கரை மன்னராக்கினார் மங்கம்மாள். ஆனால் நாட்டை ஆண்டது மங்கம்மாள்தான்.
கி.பி. 1686இல் தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜியும், இராமநாதபுரம் சேதுபதியும் படையெடுக்க முயன்றபோது,மங்கம்மாள் அவர்களைத் தம் இராஜ தந்திரத்தால் முறியடித்தார். எதிர்பாராதவிதமாக 1687இல் தம் மகன் இறந்த உடனே அவனது மனைவியும் ...
Full story
- Tuesday, March 20, 2012, 4:15
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
சிட்சிட் சிட்டுக்குருவி
பட்டென்று பறந்திடாதே?பட படக்குது இதயம்! நீவிட்டுச் செல்லும்சின்னஞ் சிறியசிறகோசை இன்பம்கிடைக்காதுதவிக்குதுஎன் இல்லம்!
மென்சிறு பாதங்கள் மென்மலர்க் காம்பாய்உன் அலகு உவக்கும் ஸ்பரிசம்உணரத் துடிக்கும்மின் விசிறியும்நீண்ட நிலைக்கண்ணாடியும்!
எங்கள் ஊர்க் கொல்லையில்செங்கட் சுவரில்வைத்த பிரை காணாது தவிக்கும்உன் வாசம்!
சின்னஞ்சிறு முட்டைகள்சாம்பல் நிறமாய் வெடித்து வரும் குஞ்சுகள் போடும் கூப்பாடுகள்...
Full story
- Saturday, March 17, 2012, 6:46
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
வீரத்தமிழச்சி வேலு நாச்சியார் சேது நாட்டின் மன்னர் சேதுபதிக்கும், முத்தாத்தாள் நாச்சியாருக்கும் பிறந்தார்.வேலுநாச்சியார். இவர், கல்வியோடு வீரத்தையும், ஆணுக்கு நிகராய்த் தேர்ச்சி பெற்றார். இவருக்குத் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஆங்கிலம், பிரஞ்ச்சு ஆகிய மொழிகளில் புலமை உண்டு. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். அப்போது சிவகங்கை முதலான 72 பாளையங்களும் ஆற்காடு நவாப் முகமது அலியின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பாளையங்கள் அனைத்தும் ஆற்காட்டு நவாப்புக்குக் கப்பம் கட்டி ...
Full story
தி. சுபாஷிணி
இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், இதுபோல் -ஓர் இரவுதான் அதுவும். எந்தச் சூழ்நிலையிலும் நான் பொருந்துவேன் என்று தெளிந்து என்னை அறிந்து என்னைப் பெற்றவர்களிடம் விடை பெற்று, என் வாழ்வின் அடுத்த கட்டமாகிய குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குப் புறப்பட்டு வந்தேன். முப்பத்து முப்பது கோடித் தேவர்களும் நட்சத்திரங்களாய் என்னுடன் வந்து வழியனுப்பியதாய் மகிழ்ந்து இருந்தேன். அது உண்மையெனும்படிதான் அன்று நான், ஏன் பல வருடங்கள் கழித்தும் அது பொருள்படா எண்ண ஏற்றம் என்று எண்ணவில்லை. ஆனால் ...
Full story
- Tuesday, March 6, 2012, 5:11
- இலக்கியம், பத்திகள், மகளிர் தினம் - 2012
- 0 views
தி.சுபாஷிணி
தமிழகப் பெண்களின் சாதனைப்பரல்கள் (2)
ஆண்டாள் - (7-ஆம் நூற்றாண்டு இறுதி 8-ஆம் நூற்றாண்டு தொடக்கம்)
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் அன்றாடம் தம் நந்தவனத்தில் பூக்கொய்து, இறைவன் அரங்கனுக்கு மாலை தொடுத்து அணிவித்து மகிழ்வார். நளவருடம் ஆடிமாதம் சுக்கில சதுர்த்தியும் செவ்வாய்க் கிழமையும் கூடிய பூச நட்சத்திரத்தன்று, நந்தவனத்தில் மலர்களுக்கிடையே அழகிய மழலை மலரும் படுத்திருந்தது. பெரியாழ்வாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. அக்குழந்தை கோவிந்தன் அருளியது என்று மகிழ்ந்து, ‘கோதை’ என்று பெயர் ...
Full story
- Saturday, March 3, 2012, 5:34
- Featured, இலக்கியம், பத்திகள், மகளிர் தினம் - 2012
- 0 views
தி.சுபாஷிணி
முன்னுரை:
சாதனை என்றாலே வல்லமை என்னும் பொருள்தான் கண்முன் தோன்றுகின்றது. வல்லமையெனின் ஆண்மைதான் முன்னிற்கும். இந்த முன்னிலைதான் பெண்மையை மறைத்து விடுகிறது. ஒரு பிரச்சனை என்று வரும்பொழுதோ ஒரு குறிப்பிட்ட வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையால் ஒதுக்கப்பட்டு, ‘மாண்டு போ’ எனச் சபிக்கும்போது, ‘எதிர்த்து நான் வாழப் பிறந்தவள்; சாதிக்கப் பிறந்தவள்’ என்ற உணர்வு மேலோங்கும்போதோ, நல்ல உள்ளங்கள் கொதித்து எழுகின்றன. அவ்வுள்ளங்களுக்கு ஆண், பெண் என்கின்ற உடை தேவையில்லை. ‘சகமனிதனின் வலிதான் என்வலியும்’ என்கின்ற மனம்தான் வேண்டும். அப்படிப்பட்ட உள்ளங்களின் வரலாற்றுச் செய்திகளும், அநீதி கண்டு பொங்கிய வெம்மையையும், மனிதம் சாகும் போது அதை உயிர்ப்பிக்கத் ...
Full story
- Friday, February 24, 2012, 14:50
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தி.சுபாஷிணி
கதையல்ல நிஜம்!
உலகெங்கும் காதலை அதன் முழுப்பரிமாணத்திலும் கொண்டாடிக் கொண்டாடிக் கழித்த பின், அதன் எச்சமாய்க் காதல் வழிந்து கொண்டிருந்த மறுதினம் காதல் காலை வேளையில், காபி போட சமையலறையில் நுழைகின்றேன். காதலும் காபியும் என்றும் இணைந்ததுதானே! காதலர்களின் முதல் அழைப்பே காண்டீனுக்குச் சென்று காபி குடிக்கலாம் என்றுதானே! அடுப்பில் பாத்திரத்தை ஏற்றித் தண்ணீர் ஊற்ற அடுப்பைப் பற்ற வைத்தேன். பூஜை அறையின் விளக்கை ஏற்றிவிட்டு மீண்டும் அடுப்பின் ...
Full story