- Wednesday, May 9, 2012, 8:09
- சிறப்புச் செய்திகள்
- 0 views
சித்திரை 27, 2043 தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்கள்தருமபுரம் ஆதீனம்மயிலாடுதுறை 609001
திருவடிகளுக்கு வணக்கம்.
தேவாரம் மின்னம்பல தளத்தில் பன்னிரு திருமுறைகள் முழுவதையும் குரலிசையாகக் கேட்கும் முயற்சிக்கு முழுமையான நன்கொடைத் தளம் அமைப்பவர்கள் சிங்கப்பூர் திருமுறை அன்பர்கள். பெரிய புராணப் பதிவு, தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை உரிமம் பெறுதல் தொடர்பான பணிகளை முன்பு உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். சிங்கப்பூர்த் திருமுறைத் தொண்டர்களின் இந்த நற்பணிக்குத் தங்களின் ஆசியை வழங்கினீர்கள். குரலிசைப் பதிவாகாத திருக்கோவையார், திருமந்திரம், 11ஆம் திருமுறை தொடர்பான பணியின் விவரங்களைக் ...
Full story
- Wednesday, May 9, 2012, 3:50
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன் குடும்பப் பெயர்கள். மேலை நாட்டில் உண்டு, தமிழ் நாட்டில் மிகக் குறைவு. கோத்திரம் என்ற சொல்லின் பின்னால் குடும்பப் பெயர்கள் மறைகின்றன. குலம் என்ற சொல்லும் உண்டு. குலை குலையாக உள்ளதால் பல குலங்கள், ஒரே குலையில் உள்ளதால் ஒரு குலம். ஒரு குலத்தவர் தமக்குள்ளே மணம் செய்து குலத்தைப் பெருக்குவர். மாமன் மகள், அக்கா மகள் என ஒன்றுக்குள் ஒன்றாகத் திருமணம் செய்வதால் சொத்து யாவும் அதே குலத்துள் தொடரும். மரபுகளும் தொடரும். ...
Full story
- Friday, April 27, 2012, 4:39
- சிறப்புச் செய்திகள்
- 0 views
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து மாமன்றத்தின் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை, பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பபட்டுள்ளது.
இந்து மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற எந்தவொரு முயற்சியையும் பொறுக்க முடியாது, ~மதத் துவேஷ நிகழ்வுகளுக்கு இந்து ...
Full story
- Friday, April 20, 2012, 4:55
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அரிச்சந்திரன் நாடகத்தைப் பிரித்தானிய அரசி விக்டோரியாவின் முன் வழங்கியவர் யாழ்ப்பாணத்தவரான முத்துக்குமாரசாமி (1833-1879). பிரித்தானிய அரசியிடம் சர் பட்டம் வாங்கிய முதலாவது ஆசியர்.
கடந்த 250 ஆண்டுகளில் மேனாடுகளுக்குக் குடியேறிய தமிழர்களுள் பெருமளவினர் பிரஞ்சு நாட்டிலேயே வாழ்கிறார்கள்.
புதுச்சேரி வழியாகக் காவிரிப் படுகை சார்ந்த தமிழர் பிரான்சுக்குச் சென்றார்கள். அங்கேயே தங்கினர். இன்றைய பிரான்சில் புதுச்சேரி வழித் தமிழர் தோராயமாக 300,000 பேர் வாழ்கின்றனர்.
பிரித்தானியாவிற்கும் கடந்த 250 ஆண்டுகளில் தமிழர் புலம்பெயர்ந்தனர். 1950களில் பிரித்தானியாவில் வாழ்ந்த தமிழரின் தொகை தோராயமாக ...
Full story
- Wednesday, April 11, 2012, 11:56
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு ச. சச்சிதானந்தன்
சச்சிதானந்தன் சிறையில் வாடலாமா? கேட்டவர் சிலம்பொலி செல்லப்பனார்.யாரிடம் கேட்டார்? மேடையில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கேட்டார்.எங்கே? சென்னை, ஏவிஎம் இராசேசுவரி மண்டபத்தில்.
எப்பொழுது? 1997 பிப்புருவரி இறுதியில்.முதலமைச்சர் சொன்ன பதிலால் இன்றுவரை நிறைவடையாதவர் சிலம்பொலி செல்லப்பனார்.
சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்ஓடையிலே என் சாம்பல் கரையும் போது...
Full story
- Saturday, April 7, 2012, 5:33
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும்.
88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட்.
1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் ...
Full story
- Thursday, March 29, 2012, 22:05
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சென்னை வடக்குப் பகுதி வண்ணாரப் பேட்டை. அங்கே தியாகராசர் கல்லூரி. மாணவனாகத் தேர்வு எழுதத் தியாகராசர் கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன்.
வட சென்னைத் தமிழ்ச் சங்கக் கூட்டங்கள் தியாகராசர் கல்லூரியில் நடைபெறும். பேராசிரியர்கள் பலர் பேசுவர். வகுப்பறை நிறைந்திருக்கும். புலவர் தேவராசன் அக் கூட்டங்களை ஒழுங்கு செய்வார். தமிழ் உணர்வாளர் என்றோர் கூட்டம் 1980களின் தொடக்கத்தில் சென்னையில் கருக் கொண்டது. அந்த உணர்வாளர்களுள் ஒருவர் புலவர் தேவராசன்.
இந்த உணர்வாளர்களுள் பெரும்பாலோர் தமிழாசிரியர். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றுவோர். கிஆபெ, கா. அப்பாத்துரையார் போன்றோர் அக்காலத்தில் ...
Full story
- Sunday, March 25, 2012, 18:18
- செய்திகள்
- 0 views
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
வணக்கம்
1946இல் பிறந்து, இலக்கிய உலகில் தடம் பதித்த எழுத்தாளர் யாழூர் துரை, 21.3.2012 மாலை 1600 மணிக்குச் சென்னை மந்தை வெளியில் காலமானார்.
அவரைப் பற்றிய விளக்கமான செய்தியை, எழுத்தாளர் கொடிவழி அருணகிரி அவர்கள் தந்துள்ளார்கள், இணைப்பில் பார்க்க.
நேரில் சென்றேன், இல்லத்தவரிடம் ஆறுதல் கூறினேன். என்னாலான உதவிகளை நல்கினேன். திரு. அருணகிரி அவர்களும் என்னுடன் வந்தார்கள், தன்னாலான உதவிகளை வழங்கினார்கள். இல்லத்தவருக்கு உதவ விழைவோர் திரு. அருணகிரி அவர்களுடன் பேசுக. புரட்சிப்புயல் ...
Full story
- Thursday, March 22, 2012, 12:53
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு நான்கு வழிப்பாதை உடனடித்தேவை. காலத்தைக் குறைத்து, தூரத்தை விரைந்து கடக்க அரசு முன்னெடுத்துச் செல்லும் அரிய திட்டம்.
அந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகையில் வழியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அழிந்து போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுவது என் கடன்.
தமிழரின் அறிவியல் பராம்பரீயம், கட்டடக் கலைப் பராம்பரீயம், தமிழ் ...
Full story
- Saturday, March 10, 2012, 16:13
- செய்திகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பேரினை நீக்குவோம், பிணம் என்று சொல்வோம், சூரையங் காட்டிடைச் சுடுவோம். பின்னர் நீரில் மூழ்குவோம். அவர் நினைப்பையே ஒழிப்போம். இப்படி எத்தனை எத்தனை பேரின் வாழ்வு நினைப்பு ஒழிந்த வாழ்வாயிற்று?
ஏனெனில் அவர்கள் எதையும் விட்டுச் செல்வதில்லை. பயனுள்ள எதையும் விட்டுச் செல்வதில்லை.
2,600 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருவரை நினைக்கிறோம். அவர் விட்டுச் சென்றவை நமக்குப் பயன்தருகிறது. அவர் நம் நினைவை விட்டு அகலக் கூடாதென்பதற்காக, அவருக்குச் சிலை எழுப்புகிறோம். கடந்த 2,300 ஆண்டுகளாக அவருக்குச் சிலை எழுப்பும் முயற்சியை உலகின் மக்கள் தொகையின் மூன்றில் ...
Full story
- Saturday, February 25, 2012, 11:41
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மலேசியாவில் இருபந்தைந்து இலட்சம் தமிழர். (2012இல் மலேசிய மொத்த மக்கள் தொகை 3 கோடியில் 8% தமிழர்) ஐந்து இலட்சம் தமிழ் இல்லங்கள். மலேசியாவின் ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் ஏதாவது ஒரு திருமுறைப் பாடலை மனனம் செய்து இசைத்துப் பாடக்கூடிய ஒருவராவது உருவாக வேண்டும் என்பது மலேசிய இந்துச் சங்கத்தின் நோக்கம். அதுவும் 2015 மார்கழிக்குள் இந்த நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்காக மலேசிய இந்துச் சங்கத்தினர் கடுமையாக உழைக்கிறார்கள்.
160 வட்டார அமைப்புகளைக் கொண்ட வலுவான நிறுவனம். மலேசியாவின் 13 மாநிலங்கள், 3 ...
Full story
- Wednesday, February 22, 2012, 6:57
- சிறப்புச் செய்திகள்
- 0 views
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
அனைவருக்கும் செய்தி சொல்க,
அனைவருடனும் பகிர்க
அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012
INTERNATIONAL CONFERENCE ON MURUGA BHAKTHI 2012
ஏற்பாடு1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.
UNIVERSITY OF MALAYA, KUALA LUMPUR, MALAYSIA.Tel: +6-016-3221635+6-016-6371705, +6-012-3547780EMAIL:muruganconference2012@hotmail.comWEB :www.thirupeedam.org.my
முருகன் அடியார்கள் மலேசியாவுக்குப் பதிவு விண்ணப்பம் அனுப்புக.புலமையாளர் கட்டுரை அனுப்புக....
Full story
- Monday, January 30, 2012, 10:06
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கெனியாவில் பிறந்தவர், கருந் தோலர், முகமதியர், பராக்கு ஒபாமா. மாணவனாகப் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்கா வந்தார். அவாய்த் தீவில் பட்டப் படிப்பு.
ஆன் சக மாணவி, வெண் தோலர், கிறித்தவர். காதலித்த இருவரும் 1961இல் மணந்தனர். கலப்பு மணத்தால் விளைந்த கருந் தோலர், சுருள் முடியர், முகமதியப் பெயராளர், மகன் பராக்கு உசேன் ஒபாமா.
2009 தையில் அமெரிக்க மாநிலங்களின்குடியரசுத் தலைவர் பராக்கு ஒபாமா! கருந் தோலும் சுருள் முடியும் தடித்த உதடுகளும் முகமதியப் பெயரும் கொண்ட அவரை, வெண் ...
Full story