- Monday, May 14, 2012, 5:00
- இலக்கியம், சிறுகதைகள்
- 9 views
இளங்கோவன்
நொச்சு நொச்சென்று எதையாவது பேசிக்கிட்டிருக்கும் கிழவியைப் போல நச நசவெனத் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்குது மழை. அடித்தும் பேயவில்லை. அசரவும் விடவில்லை இந்த நாலு நாளாய்.
மணிமேகலை ஆச்சிக்கு மழை மேல் அவ்வளவு கோவம். கொல்லையில் கட்டியிருக்கும் ரெண்டு எருமையும் பசியில் கத்துற சத்தம் வேறு, அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. முடியாத உடம்புடன், கொல்லைப் பக்கம் எழுந்து போனாள்.
“ஈர வைக்கலை திங்க முடியலையா? பருத்திக் ...
Full story
- Thursday, March 1, 2012, 15:13
- செய்திகள்
- 0 views
அழைப்பிதழ்
அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.
இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18
நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,நேரம்: மாலை 6 மணி
தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்
நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்)
முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து
ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
Full story
- Wednesday, January 25, 2012, 10:00
- இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
டி. என். இளங்கோவன்
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கும் முதல் நாள்.
காலையில் ப்ரேயர் முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் உரையாற்றும் போது, எல்லா மாணவர்களையும், கடந்த வருடம் ஆண்டுத் தேர்வின் போது அமர்ந்து இருந்த அறையில், அதே இருக்கையில் அமருமாறு பணித்தார்.
எதற்காக இந்த உத்தரவு என்று புரியாமல் எல்லா மாணவர்களும், குழப்பத்தோடு அவரவர் இடத்தை தேடி சென்றனர்.
”தட்டுத் தடுமாறி போன வருசம் பாஸ் ...
Full story
- Saturday, January 21, 2012, 11:53
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
இளங்கோவன்
சோர்ந்த மனத்தின்
சொல்லம்புப் பாதைகள் ..
சோக நீர் வயலின்
வடிகால் வாய்க்கால்கள்..
பறந்து களைத்த பருந்தின்
இறக்கைப் படபடப்புகள்..
உயவிழந்த வண்டியின்
உரசல் முனகல்கள் ..
புத்தாற்று வெள்ளத்தின்
புன்சிரிப்புச் சிதறல்கள்..
உரசும் மூங்கில்களின்
உணர்ச்சிப் பொறிகள்..
அக்காக் குருவியின்
அன்புக் கதறல்கள்..
நெருப்பில் வெடிக்கும்
கொட்டாங்கச்சிச் சிதறல்கள்..
பதுங்கு நரியின்
பகல் வேஷங்கள்..
காதல் நிலவின்
கவின்மிகு ஒளிப் பொழிவுகள்..
எண்ணிலடங்கா அர்த்தம் சுமக்கும்
கடிதங்கள் முன்பெல்லாம்
அஞ்சலட்டைகளாய்..
இப்போதோ
மின்னஞ்சல்களாய்..
படத்திற்கு நன்றி:
http://www.postalstationery.org/html/india_post_card_of_1902.html Full story
- Tuesday, January 10, 2012, 19:22
- கட்டுரைகள்
- 0 views
இளங்கோவன்
இணையத்தில் வருவதெல்லாம் உண்மையெனும் எண்ணம் இளைய தலைமுறையினரிடம் பரவலாக இருக்கிறது. அறிவைப் பெருக்க உதவும் இணையம், அதே நேரத்தில் பல பொய்யான தகவல்களையும் பரப்பும் தளமாகவும் அமைந்து விடுகிறது.
Facebook-ல் எனக்கு வந்த ஒரு தகவல், ஒரு புகைப்படத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தப் புகைப்படம் உலகத்தின் மிக உயர்ந்த “புர்ஜ் துபாய்” கட்டடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் பார்த்தால் உலகம் சுழல்வதைப் பார்க்கலாம் என்றும் சிறு குறிப்பும் ...
Full story
- Monday, December 19, 2011, 12:51
- கட்டுரைகள்
- 0 views
டி.என்.இளங்கோவன்
மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் சேகருக்கு ஒரே படபடப்பு !
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண்களை குறிப்பிடும் இடத்தில், ஒரு செமஸ்டரில் 78% க்கு பதிலாக 87% என்று தான் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை, நேற்று இரவு தான் கண்டு பிடித்தான், எதேச்சையாக விண்ணப்பத்தின் பிரதியைப் பார்த்த போது.
இன்று ஒரிஜினல் மார்க் ஷீட் காட்ட வேண்டும். எப்படியும் ...
Full story
- Wednesday, December 14, 2011, 14:13
- கட்டுரைகள்
- 0 views
டி.என். இளங்கோவன்
"என்ன செய்யப் போறேனோ தெரியல.. இந்த வருஷம் என் பையன் +2 முடிக்கப் போறான்.. அவன் படிக்கறதப் பாத்தா பணம் கொடுத்துத்தான் எஞ்சினியரிங் சீட் வாங்கனும் போல இருக்கு. இருக்கிற சேமிப்பு இதிலியே போயிடுச்சுன்னா,அடுத்த வருஷம் என் மூத்தப் பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப் போறேன்.. ஒன்னும் புரியல.. ஒரே கவலையா இருக்கு.."
"என்னமோ பிஸினஸ் சரியாவே போகலை. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடுமோ? பயமா ...
Full story
- Thursday, December 23, 2010, 0:24
- கட்டுரைகள்
- 0 views
முனைவர் மு.இளங்கோவன்
தமிழீழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப் பூரடனார் 21.12.2010 அன்று இயற்கை எய்தினார்.
ஈழத்து அரசியல் போராட்டம் காரணமாகக் கனடாவில் வாழ்ந்து வந்த ஈழத்துப் பூராடனார் தமிழீழத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சார்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த நாகமுத்து சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாளுக்கும் மகனாக 13.12.1928 இல் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் செல்வராசகோபால் ஆகும். செட்டிப்பாளையம் என்னும் ஊரில் பிறந்தாலும் தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.
ஈழத்துப் பூராடனார் 1985இல் கனடாவிற்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கே சென்ற பிறகு தமிழர்கள் ...
Full story