Author Archive

Page 1 of 612345...Last »

“இரையும் இறையும்”

  தமிழ்த்தேனீ சமீபத்தில் ஒரு பெண்மணி மிகவும் ஆசைப்பட்டு முருங்கைக்காய் சாம்பார் ஊற்றிக்கொண்டு உணவை அள்ளி விழுங்க ஆரம்பித்தாள், அந்தப் பெண்மணிக்கு முருங்கைக்காய் மிகவும் பிடிக்கும் போல இருக்கிறது, திடீரென்று புரைக்கேறியது அவருக்கு, மூச்சுவிடக்கூட முடியாமல் தவித்தாள் அவருடைய உறவினர்கள் மிகவும் பயந்துபோய் அந்தப் பெண்மணியை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்,அந்த மருத்துவர் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து ஆராய்ந்தார் ,,அப்போது அவர் கண்ட உண்மையைக் கூறினார் அந்தப் பெண்மணி முருங்கைக் காயைக் கடித்து ... Full story

ஐந்தறிவு

ஐந்தறிவு
தமிழ்த்தேனீ   உச்சி வெய்யில் பாறைதனை உருக்கி ஊத்துது மச்சு வீடு மாடி வீடு குடிசை வீடு கோபுரங்கள் அனலில் இட்ட மெழுகு போல உருகிப் போகுது பூமி கூட சூரியனாய் அனலைக் கக்குது   மங்குகின்ற பார்வையுடன் மயக்கம் கூடுது பொங்குகின்ற தார்க்கடலாய்ச் சாலை மாறுது சிங்கம் கூட குகையினிலே மயங்கிப் பதுங்குது வங்கக் கடல் நீரெல்லாம் ஆவியாகுது   செங்கழுநீர்ப் பறவையெல்லாம் நீரில் மூழ்குது செங்கால் நாரையெல்லாம் சிறகை உதறுது  எறும்புகளும் பூமியின்மேல் ஊறத் தொடங்குது உணவுதனைக் கவ்விக்கொண்டு வேகம் எடுக்குது ஈசல்களும் புற்றை விட்டுச் சிதறித் தெறிக்குது எங்கிருந்தோ ஓரினிய குரல் குயிலு கூவுது செங்கரும்புத் தேன் போலக் காதில் ... Full story

உழைப்போர் தினம்

உழைப்போர் தினம்
  தமிழ்த்தேனீ ஒவ்வொரு வருட மேதினமும் உழைப்பவர்தினமே உழைக்கும் தினமே உழைப்போர் தினமேஉழைப்போரெல்லாம் உழைப்பார் தினமேஉழைப்போரின்றி உலகே இல்லை உழவர் விதைத்தார் உணர்ந்தே அறுத்தார் உணவாய் நமக்கே பகிர்ந்தே அளித்தார்உண்டே நாமும் ஓங்கி வளர்ந்தோம்குயவர் புனைந்தார் காய்த்தே அளித்தார் கலசம் வைத்தே களிப்பில் ஆழ்ந்தோம்உடுத்தும் உடையை நெசவர் அளித்தார் உயர் ரகப் போர்வையும் நெய்தே அளித்தார்மானம் காத்தார் மறைத்தே வாழ்ந்தோம் குறவர் எல்லாம் பாயை ... Full story

விலங்கு

விலங்கு
தமிழ்த்தேனீ விலங்கு பூட்டிய கையோடு ஒரு விலங்கைப் போலிருந்த அந்தத் தீவிர வாதியிடம் ஒரு நிருபர் கேட்டார். "இந்தச் சின்ன வயசுலே அது எப்பிடி இத்தனை மக்களை வெடிகுண்டால் சாகடிச்சுட்டுச் சட்டத்தோட பிடியிலே மாட்டிகிட்ட அப்புறமும் சிரித்துக்கொண்டே ஏதோ விண்வெளிப் பயணம் போறா மாதிரிக் கையை ஆட்டிகிட்டே போக உங்களாலே எப்பிடி முடியுது?" "நாங்க மட்டுமா இப்பிடி இருக்கோம்? நம்ம நாட்டைச் சுரண்டற அத்தனை பேரும் மாட்டிக்கிட்டா இப்பிடித்தான் கையை அசைக்கிறாங்க, தொலைக் ... Full story

காதலுக்கு ஜே

காதலுக்கு ஜே
    தமிழ்த்தேனீ காற்றினும் வேகமாக கடுகி விரைந்து கொண்டிருந்தது அம்சவேணி .ஆம் இளவரசன் மணிமாறன் மனோவேகம் அவனுடைய செல்லக் குதிரையை செலுத்திக் கொண்டிருந்தது. லகானை அவன் சுண்டும் லாவகத்துக்கு ஏற்ப வளைந்து நெளிந்து துள்ளிக் குதித்து, முன்கால்களை உயரத் தூக்கிப்பிளிறி, பின்னங்கால்களை தரையுதைத்து .மணிமாறனின் கால்கள் தன்னுடைய வயிற்றில் நுணுக்கமான மர்மஸ்தானங்களின் மூலத்தை கட்டை விரலால் சுழற்றும் போதெல்லாம் கடுகி விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தது அம்சவேணி. கன்னங்கரேலென்ற அதன் உருவம் அன்று காலையில் பணியாளர்களின் கவனிப்பால் மெருகேறி அந்த ... Full story

நந்தன வருஷப் பிறப்பு

நந்தன வருஷப் பிறப்பு
    தமிழ்த்தேனீ நாளை 13/04/2012 அன்று சித்திரை மாதத்தில் வெள்ளிக்கிழமை உத்திராட நக்ஷத்திரத்தில் சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ப்ரவேசம் செய்கிறார். இந்த நேரம் சுத்தவாக்கிய பஞ்சாங்கப்படியும் , திருக்கணிதப் பஞ்சாங்கப்படியும் நந்தன வருஷ பிறப்பு. நேரங்கள் சற்றே மாறுபடும். நந்தன வருடம் பிறக்கும் இதே நன்நாளில்தான் விஷுக்கனியும் கொண்டாடுகிறார்கள் “ஆநந்ததா நித்யம் ப்ரஜாப்ய:பலசஞ்சயை: நந்தனாப்தே அஸ்வஹானி: ச்யாத் கோஸ தான்ய வினாஸக்ருத்” என்பது நந்தன வருடப் பிறப்புக்குரிய பலச்ருதி ராஜா , மந்திரி, சேனாதிபதி, அர்க்காதிபதி,மேகாதிபதி எல்லாவற்றிற்கும் சுக்கிரன்தான் அதிபதி. சஸ்யாதிபதி ... Full story

கதாநாயகன்

கதாநாயகன்
தமிழ்த்தேனீ சிங்காரச் சென்னையின் மூலை முடுக்களிலெல்லாம் பரவி வாசம் செய்யும் கூவத்தின் நாற்றமும், வாகனங்களின் ரப்பர் டயரையே வாகனமாகக் கொண்டு எல்லா இடங்களுக்கும் பரவி நாற்றத்தையும், வியாதிகளையும் பரப்பும் சாக்கடைக் கொப்பளிப்புகளும், கொசுக்களும் கை கோர்த்தபடி நகரை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்காகப் போடப்படும் அமைப்புகளினாலும், புற ஊதாக் கதிர்களால் ஊடுருவி உள்ளே இருக்கும் பூமியின் அத்துணை உறுப்புகளும் வெளியே தெரியும்படியான நெடுஞ்சாலைகளில் மொஹஞ்சதாரோ ஹரப்பா நாகரீகமே வெளியில் தெரியும் அளவுக்குப் ... Full story

தலை சுற்றல்

தலை சுற்றல்
தமிழ்த்தேனீ மருத்துவர்: மிஸ்டர் பரந்தாமன், உங்களுக்குத் தலைச் சுற்றல் வருதுன்னு சொன்னீங்க கவலையே படாதீங்க, நான் பாத்துக்கறேன், காரணத்தைக் கண்டு பிடிச்சிடறேன். என்னோட 20 வருஷ அனுபவத்திலே எவ்ளோ பேரைக் குணப்படுத்தி இருக்கேன். சரி இப்போ நான் கேக்கற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க. காரணத்தைக் கண்டு பிடிச்சிடலாம். தலைச்சுத்தல் ஓடிப்போயிடும். பொதுவா காதிலே எல்லாருக்கும் ஒரு திரவம் இருக்கு, அது குறைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ தலைச்சுற்றல் வரும். அதுனாலேதான் சின்ன வயசிலே தட்டாமாலை ... Full story

உருகாத வெண்ணை

உருகாத வெண்ணை
தமிழ்த்தேனீ உன்னைக் கரம் பிடித்த நாள் முதலாய் ஆதரவாய் கைகொடுத்து என்னைக்கைவிடாமல் எப்போதும் காக்கின்றாய் என் தாயாய். மனமிறங்கி உன்சுற்றவயல் தனிலே நாற்றாய் நீ இருக்க கருணை கொண்டு சுற்றமெல்லாம்- என்வயலில் நட்டார்கள் வந்தாய்நீ வயல்செழிக்க எம்குலம் தழைக்க முன்னைச் செய்த பயன் முழுமையாய்க் கிடைத்தாற்போல் முன்னிருந்துநடத்துகிறாய் முழுவாழ்வை செழிப்பாக்கிப் பண்பால் ஆளுகிறாய் அன்பைமுன்னிறுத்தி அருங்குணங்கள் அத்தனையும் அணுக்கி உள்ளே தெம்பாய்உள்ளடக்கி தெள்ளிய அமுதாய் தேனடைத் தேனாய் ஆனாய் நீ பொன் பொருளென்று சொத்துக்கள் ... Full story

இயற்கை

இயற்கை
தமிழ்த்தேனீ ஒன்பது வழிகள் வைத்தான்உடல் விட்டு உயிர் போக‌ஒரு வழியும் வைக்கவில்லை.உயிர் வந்து உடல் சேர‌ இறைவனிடம் நான் கேட்டேன்இது என்ன ஓர வஞ்சனை ? அவனளித்தான் பல பதில்கள்அத்தனையும் புரியவில்லை,ஆனாலும்ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு.ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமேஇயற்கையை வெற்றி கொள்ளஎன்னாலும் முடியவில்லை,நான் கூட அதன் பிடியில் தவிக்கிறேன் மீளாமல்சொன்னால் நம்ப மாட்டாய். ஒரே ஒரு முறை விதைத்தேன் ப்ரபஞ்சம் ... Full story

பூக்கம்பம்

பூக்கம்பம்
தமிழ்த்தேனீ   ஒரு உயிரை விதைத்ததால் ப்ரபஞ்சம் வளர்ந்தது வாழைப் பயிரை நட்டதால் அதன்கீழ் வாழையடி வாழையாய்க் குருத்து வளர்ந்தது. ஒரு மரம் நட்டால் ஓங்கிப் பரந்து தோப்பாய் ஆகுது உயர்ந்தே நிமிர்ந்து ஓங்கி வளர்ந்து குலைதள்ளி இயற்கையாய்க் காயும் கனியும் காய்த்துப் பழுக்குது ஒரு விதை நட்டதால் பூமியும் பிளந்தது பூகம்பம் வெடித்தது விதையுண்ட நீரினால் விருட்சமாய் வளர முளைவிட்டு வளர்ந்து புதையுண்ட வேர்கள் உள்ளே நுழைந்தது.    மண்ணில் ஊன்றித் துளைத்தது, ஆழ்கடல் நீர்தேடி அலைந்து திரிந்தது, ஆழமாய் வேரோடித் துளைந்து வளர்ந்து பாதாளப் பயணம் போனது. விதை ஒன்றை நட்டால் விருட்சமாய் ஆகுது, சதைகொண்ட தாவரம் மண்ணில் வளருது இது ... Full story

காதலர் தினம் 2012

காதலர் தினம் 2012
  தமிழ்த்தேனீ “ காதலர் தினம் “ஏன் என்று தெரியவில்லை எப்படி என்றால் பதிலில்லை தகுதிகள் யோசிக்கவில்லை அதிசயம் ஆனால் உண்மை விளைவுகள் தெரியாது! முன் பின் எனக்கு பழக்கமில்லை பார்த்தபின் உன்னை மறக்கவே இல்லைநீயும் என்போல்தானா தெரியவில்லைஆனாலும் உண்மை ... Full story

ஆழ்மீகம்

ஆழ்மீகம்
 தமிழ்த்தேனீ                   காலையிலிருந்தே கூட்டம் கூட்டமாய்க் காக்காய் கத்திக் கொண்டிருந்தது. பல வேலைக்கு நடுவே இந்தக் காக்காய்க் கூச்சலும் அவரை அலுப்பாக்கியது,  ஒரு நிமிடமும்  ஓய்வு கிடைக்காத அளவுக்கு வேலை.  நாற்காலியில் வந்து அப்பாடா என்று உட்கார்ந்து சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டார் ரங்கநாதன்.  உள்ளே இருந்து லக்ஷ்மி,  “ஏங்க, இந்தத் துளசி மாலையைக் கொஞ்சம் கட்டிக் குடுங்களேன். நம்ம வீட்டிலேயே இருக்கேன்னு பறிச்சுட்டேன், ... Full story

ரசிகன்

ரசிகன்
தமிழ்த்தேனீ  ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன்  தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான். “ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ். “இல்லேப்பா  நான் சரியாத்தான் நடந்துக்கறேன்.  டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ  எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும்   அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன்,  நான் ... Full story

கரிசனம்

கரிசனம்
தமிழ்த்தேனீ   தம்பதி சமேதரரா சாஷ்டாங்கமாக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்து கை கூப்பி நின்ற ராமசேஷன் பக்கத்தில் குனிந்து நமஸ்காரம் செய்து விட்டு எழுந்த அம்புஜத்தின் காதில் கிசுகிசுப்பாக,  “நிதானமா எழுந்திரு, முதுகு பிடிச்சிக்கப் போறது” என்றார். “என்ன திடீர்ன்னு இவ்ளோ கரிசனம் என் மேலே? என்னிக்கும் இல்லாத அதிசயமா?” என்று முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு கேட்டாள் அம்புஜம்.  “முதல்லே கழுத்தை இப்பிடியெல்லாம் நொடிக்காதே, சுளுக்கிக்கும். சாதாரணமாப்  பேசேன், ... Full story
Page 1 of 612345...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.