Author Archive

வல்லமையாளர் விருது !

 வல்லமையாளர் விருது !
    (மே 7 - 13, 2012)   திவாகர் சில்லறை விஷயங்கள் என்பதாக ஒரு நகைச்சுவை கட்டுரை ஒன்றினை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான 'குமுதினி' 1933 இல் ஆனந்த விகடனில் எழுதி இருந்தார். சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் பற்றி நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் அதில் உள்ள முக்கியத்துவத்தையும் பற்றிய செய்திகளும் அந்தக் கட்டுரையில் இருக்கும். கல்கி மிக விரும்பிப் படித்த கட்டுரையாக பின்னாளில் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.. சரி, ... Full story

சென்றவார வல்லமையாளர்

சென்றவார வல்லமையாளர்
        திவாகர் 'உழைப்பின் வாரா உறுதிகள் உண்டோ?' இந்த வார வல்லமையாளராக உடனடியாக அறிவிப்பதற்கு இந்த ஒரு வார்த்தை என்னை ஒரேயடியாக மாற்றிவிட்டது. உழைப்பு உழைப்பு கடும் உழைப்பு இதன் மறுபெயர்தாம் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள். தேவாரம் எனும் தளத்தினை உருவாக்கி பன்னிரெண்டு திருமுறைகளையும் அந்த தளத்தில் பதித்து அதற்கான பொருள். கூடுதல் விளக்கம் கோயில் வரலாறு பதிக வரலாறு போன்றவைகளை பதிவேற்றி இன்று இந்த தளம் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்க்கணக்கான ... Full story

சென்ற வார வல்லமையாளர் விருது!

சென்ற வார வல்லமையாளர் விருது!
திவாகர் ஒவ்வொரு வாரமும் வல்லமையாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால் எனக்கு ஒரு சிறிய திருப்தியும் வருத்தமும் உண்டு. அது அந்த வார வல்லமையாளராக நான் என்னையே தேர்ந்தெடுக்க முடியாது அல்லவா!! அண்ணா கண்ணன் எனக்குக் கொடுத்திருந்த பொறுப்பில் எனக்கென ஒரு பயன் உள்ளது. அதாவது வல்லமையில் வரும் அனைத்துக் கட்டுரை, கதைகள் படிக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வழி செய்துவிட்டார். இது ஒன்றே அவர் கேட்டுக்கொண்டவுடன் ஒப்புக்கொள்வதற்கான் அடித்தளமாக அமைந்துவிட்டது. படிப்பது என்பது எழுதுவதற்கு முதலில் தேவையான அளவுகோல். சரி, வள வளவென வளர்ப்பது ... Full story

நந்தன வருடமும் இனிஷியலும்

நந்தன வருடமும் இனிஷியலும்
  திவாகர் எம். ஜி. ராமச்சந்திரன் என்பதை எம்.ஜி.ஆர் என்று அழைப்பது நமக்குப் பிடித்தமான ஒன்று. சாதாரணமாகப் பேசினாலும், அல்லது கட்டுரையில் நல்ல தமிழில் எழுதினாலும் எம்.ஜி. ராமச்சந்திரன் என நீட்டி முழக்கிக் கூப்பிடுவதில்லை. சுருக்கமாக எம். ஜி.ஆர் என்றே அழைக்கிறோம். இந்த இனிஷியல் வைத்துக் கூப்பிடுவது என்பது உலகம் முழுவதும் இப்போது பரவலாகிவிட்டது. இப்படி நமக்குத் தெரிந்த நண்பர்களைக்கூட இனிஷியல் வைத்து மட்டும் கூப்பிடுவது என்பது எப்போது ஆரம்பித்திருக்கும். இந்த இங்கிலீஷ்காரன் வந்ததிலிருந்துதான் நாம் அதிகம் இனிஷியல் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோமோ.. அதற்கு முன்னால் அதாவது 200 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக ... Full story

காதல் கடிதம் – 2

காதல் கடிதம் - 2
    திவாகர்   நாடகம் - 6, காதல் கடிதம்-2  காதல் கடிதம் - 1 வனஜா: அது சரி, ராமா.. உங்களை ஒரு கேள்வி கேக்கலாமா? ராமர்: கேள்விதானே.. எது வேண்டுமானாலும் கேளேன்.. வனஜா: நீங்க சீதையை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா! அப்படியெல்லாம் இல்லியே.. அப்ப நீங்க எப்படி இப்போ மட்டும் இந்த தாஸுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழின்னு காதலை போற்றமுடியறது? ராமா: நானும் சீதையும் என்றுமே காதலர்கள்தான் வனஜா? வனஜா: அது எப்படி?... Full story

காதல் கடிதம்

காதல் கடிதம்
  நாடக அனுபவங்கள் – 6 திவாகர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் தாஸும் பார்வதியின் வீட்டுக்கே போய் அவளை பெண் பார்ப்பதற்காகவும் அதே சமயம் இந்தப் பெண் தாஸின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்கிறாளா என சோதிக்கவும் செல்கிறார்கள். அந்தச் சமயம் வீட்டில் பார்வதியும் தனியே இருக்கிறாள். இந்த தாஸுக்கு ஒரு வேண்டுதல் உண்டு. கலியாணம் செய்துகொண்டால், காதலித்து அந்தக் காதலை நன்றாக அனுபவித்து காதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப்புரிந்த பின் மணம் செய்து கொள்ளவேண்டும் என்பது அவன் வாழ்நாள் விருப்பம். அவன் துரதிருஷ்டம் அவனுக்கு இந்த காதல் செய்யும் பெண்ணே கிடைக்கவில்லை. இப்படித் ... Full story

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை
  திவாகர் - நாடகம் (5) சென்றவாரம் இங்கு (விசாகப்பட்டினத்தில்) ஒரு திருமண வரவேற்பு விழா.. எங்கள் நாடகங்களில் நாயகியாய் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்குதான் திருமணம். சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். (இவர்தான் என் ப்ளேய்ஸ்க்கெல்லாம் டைரக்டர், ’ஹி டாட் மீ டேமில் (he taught me tamil)’ என்று தன் கணவரிடம் என்னை அறிமுகப்படுத்திய கதையைப் பிறகு பார்ப்போம்). பொதுவாக விஜயவாடாவில் நாடகம் நடிக்க பெண் கதாபாத்திரங்களுக்காக எத்தனை சிரமப்பட்டோம் என்பதை ஏற்கனவே எழுதி இருந்தேன் இல்லையா.. ஆனால் விசாகப்பட்டினத்தில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் போட்டாயிற்று. சில நாடகங்களில் ... Full story

டாக்டர்.. டாக்டர்..!!

டாக்டர்.. டாக்டர்..!!
  திவாகர் நாடகம்-4 - விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும்   விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எழுதினார் திரு வி.எஸ்.எஸ் (இவர் பிரபல விமர்சகர். அந்தக் கால கட்டத்தில் ஆனந்த விகடனில் வெளிவரும் நாடகங்கள், இசைக் கச்சேரிகள் பற்றிய இவரது விமர்சனங்கள் பிரபலமானவை) இவர் அன்று எங்கள் நாடகத்துக்கு வந்திருந்து, பார்த்து விட்டு பத்திரிக்கையில் எங்களை கிண்டலாக, குற்றம் சாட்டியிருந்தார். நிறைய நாடகங்கள் பார்த்த அனுபவஸ்தரானவர் எங்களை அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் எனப் பார்க்காமல் ப்ரொஃபெஷனல் ஆர்டிஸ்ட் போல, அதுவும் ... Full story

ஒரு பெண் தேடுகிறோம்

ஒரு பெண் தேடுகிறோம்
விஜயவாடாவில் நானும் தேவாவும் சேர்ந்து போட்ட இந்த மூன்றாவது நாடகத்தை மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத அளவுக்கு அனுபவங்கள் கொடுத்த  நாடகமும் கூட இதுதான். விஜயவாடாவில் 1980 - ல் புஷ்கரம் வந்தது. (மகாமகம் போலப் பன்னிரண்டு வருடத்துக்கு ஒரு முறை வரும் கிருஷ்ணா நதி புஷ்கரம்). இந்தப் புஷ்கரம் வரும் போதெல்லாம் கூடவே நகரத்தில் பல புதிய கட்டடங்களும் சாலைகள் விரிவு படுத்தலும் நடந்து ... Full story

நான் என்றால் அது அவனும் நானும்

நான் என்றால் அது அவனும் நானும்
திவாகர் அவள் ஆவலோடு கொடுத்த அக்கடிதத்தைச் சற்று அதிர்ச்சியுடன் தான் படித்தேன். அதிர்ச்சியோடு என் முகத்தில் காணப்பட்ட சோகமும் அவளை இன்னமும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோ என்னவோ, அந்த மகிழ்ச்சி அவள் குரலில் நன்றாகவே தெரிந்தது. “ஆனு எப்படியெல்லாம் யோசிக்கறார் பாரு ராம்!.. அதனாலதான் எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சுருக்கு.. பாரேன்.. ஒரு பெண்ணோட குறையைக் கூட பெரிசா எடுத்துக்காம அது நீங்கணுமேன்னு ஆறுதல் சொல்றது எத்தனை பேருக்கு ... Full story

வண்டு

திவாகர். இந்தப் பாட்டி எப்பவுமே இப்படித்தான்.. பாட்டியைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதைப் போகப் போக நீங்களே புரிந்துகொள்வீர்கள். இத்தனைக்கும் என் பாட்டி ஒன்றும் பழங்காலப் பெருமை பேசும் பெரிசு இல்லவே இல்லை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். நான் மட்டுமா!!, என் கூடவே இரண்டு வருடங்கள் சென்னையில் ஹாயாக காலத்தை ஓட்டி விட்ட பாட்டியைப் பார்த்த யாருமே, இந்தக் கிழவி மாயவரத்துக்குப் பக்கத்திலிருந்து வந்த பஞ்சாங்கப்பாட்டி என்று சொல்லமாட்டார்கள்.... Full story

இப்படியும் ஒரு பிரகிருதி

இப்படியும்  ஒரு பிரகிருதி
திவாகர்   (பிரகிருதி  என்பதற்கு இயல்பு, இயற்கை, விசித்திரம், காரணம், பகுதி மொழி, பிரபஞ்ச மாயை, மிருகம், பெண், பஞ்சபூதம் என பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளன))   ’எல்லா விவரங்களையும் சொல்லியபின் என் மாமனாரைப் போன்ற இன்னொரு பிரகிருதியை நீங்கள் யாரேனும் பார்த்திருக்கிறீர்களா’ என்று ஒரு கேள்வி உங்களையெல்லாம் கேட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.. இல்லவே இல்லை என்றுதான்  உங்களிடமிருந்து பதில் வரும் என்று முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.. என்ன வகைப்பட்ட ஆசாமி இவர் ... Full story

நான், அவள், வானத்து நிலவு

திவாகர் நான் அவளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பேசுகின்ற நுனிநாக்கு ஆங்கிலத்தின் ஸ்டைல், அந்த மொழியில் அவளுக்கிருந்த ஆளுமை, அநாயாசம் மிகவும் ஈர்த்தது. மேடையில் ஒரு கையில் தனக்குப் போடப்பட்ட பொன்னாடை அலட்சியமாக தொங்கிக் கொண்டிருக்க, அடுத்த கை தான் எழுதிவைத்த குறிப்புகளை அடக்கிவைத்துக்கொள்ள, சிரித்த முகத்தை ஒரு போதும் மாற்றாமல் தொடர்ந்து அப்படியே வைத்துக்கொள்ள எப்படி இவளால் முடிகிறது..! அவள் என்ன பேசுகிறாள் என்பதையும் மறந்து என் நினைவு சில கணங்கள் சற்று கடந்த காலத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியதுதான். இதே விஜயவாடாவில் நானும் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.