- Wednesday, May 9, 2012, 5:59
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
வந்திடும் தேர்தல் விரைவில் வராது தூக்கம் இரவில்,முந்திட ஆசைதான் எவர்க்கும் மூல தனமாய்ப் பொய்கள்,தந்திரம் பலவாய் வேட்டை தட்டிப் பறித்திட ஓட்டை,மந்திரி ஆனதும் உடனே மறந்து விடுவதா கடமை...!
ஜாதிக் கட்சிகள் முளைக்கும் சேர்ந்தே வயிற்றை வளர்க்கும்,பேதம் பெருகி வளரும் பிரிவினை வாதம் பெருகும்,நீதி கிடப்பில் கிடக்கும் நித்தம் சண்டை நடக்கும்,மோதிப் பெற்ற வெற்றி மோதலாய்ச் சபையில் வெடிக்கும்...!
காந்தி ...
Full story
- Wednesday, May 2, 2012, 4:31
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
மின்னலைப் பிடித்துஒளி வாங்கியமின்மினிப் பூச்சிகள்ஜன்னலோரத்தில் பறக்கின்றன..
கேட்குமா கெட்டிமேளம்கூடிய விரைவில் -மூடிடும் ஜன்னல்களுக்காகக்காத்திருக்கும்கன்னி மலர்கள்...!
படத்திற்கு நன்றி
http://bestgallerytattoofor2012.blogspot.com/2011/09/sad-girl-face.html Full story
- Monday, April 30, 2012, 10:11
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
பாலைவனத்தில் ஒட்டகமும்,பரந்த கடலில்பாய்மரக் கப்பலும்படைத்தவனின் படைப்பைப்பயணித்துக் கடந்திடத்தான்..ஆனாலும் அவைபாலைவனப் புயலிலும்சுனாமி அலையிலும் சிக்கிச்சீரழியும்போதுதான் தெரிகிறதுபடைத்தவனின் இருப்பிடம்...!
படத்திற்கு நன்றி:
http://www.israelshamir.net/English/Tsunami.htm Full story
- Friday, April 20, 2012, 10:00
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
கண்காணாதகடவுளருக்காகக்கையில் ஆயுதமேந்திகண்ணில் காண்பவரையெல்லாம்கொன்று குவிக்கும் மனிதனே,ஏன்கண் முன்னேகாணும் கடவுளருக்குக்கஞ்சி ஊற்றிகாண மாட்டேன் என்கிறாய்சிரிப்பை...!
படத்திற்கு நன்றி:
http://azizaizmargari.wordpress.com/2011/07/21/feeding-america-and-fidya-for-ramadan Full story
- Friday, April 13, 2012, 4:37
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
நந்தன வந்தது நலம்தரவே
நன்றாய் மலரந்தது புத்தாண்டாய்,
சிந்தையில் கொண்டிடு சித்திரையை
சீரெலாம் தந்திடும் இத்தரைக்கே,
சிந்திய வியர்வை பலன்தந்தது
சிறப்பெலாம் வாழ்வில் மலர்கின்றது,
வந்திடும் செந்தமிழ்ப் புத்தாண்டிலே
வாழ்த்துவோம் வளமுடன் வாழ்கெனவே...!
படத்திற்கு நன்றி :
http://www.fastflowers.com.au/ Full story
- Monday, April 9, 2012, 10:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
வான வீதியில்வண்ணக் கோலமிடவிண்மீன் புள்ளியிட்டவெண்ணிலாப் பெண் மகளின்மேனி எழில் கண்டு,மோகம் தலைக்கேறிச் சுற்றி வந்தனமேகக் கூட்டங்கள்..
போதும் கோலமெனப்பாதியில் போட்டு விட்டுப்போய் விட்டாள் பாவையவள்..
கண் விழித்துப் புள்ளிகள்காத்திருக்கின்றன..
வருமா அவைகோலமாகும் காலம்...!
படத்திற்கு நன்றி:
http://writingcreativenonfiction.wordpress.com/2011/06/09/poem-star-gazing Full story
- Monday, April 2, 2012, 12:48
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
எங்கும் சாந்தி நிலவுதுஏற்றத் தாழ்வு மறையுது,மங்கல ஒலிதான் கேட்குதுமாநில ஒற்றுமை ஓங்குது,சங்கச் சண்டைகள் தீருதுசகலவும் மலிவாய் ஆனது,பொங்கும் இன்பமே காணுதுபாரு ஏப்ரல் ஒண்ணிது...!
போட்டி பொறாமை போனதுபொழுதெலாம் மின்னொளி யானது,வாட்டும் வறுமை தீர்ந்ததுவளமெலாம் வந்து சேர்ந்தது,ஓட்டும் ஏய்ப்பும் நின்றதுஒற்றுமை எல்லாம் வென்றது,நாட்டில் நலமே நிலைத்ததுநாளாம் ஏப்ரல் ஒண்ணிது...!
படத்திற்கு நன்றி:
http://open.salon.com/blog/kikstad/2011/03/31/never_trust_a_pop_culture_story_on_april_fools_day Full story
- Saturday, March 31, 2012, 8:10
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
புயற்காற்றேபெருமிதம் கொள்ளாதே,பூக்களையும் செடிகளையும்பூண்டோடு அழித்து விட்டாய்..
மாண்டு விடவில்லை நாங்கள்,மீண்டும் வருவோம்..உன்னால் முடியாதுஎங்கள்விதையை அழித்திட..அது,விதித்தவன் கட்டளை...!
படத்திற்கு நன்றி:
http://www.csiro.au/en/Outcomes/Climate/Understanding.aspx Full story
- Tuesday, March 27, 2012, 13:09
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
மாறி வருகிறது மனித இனம்மனிதம் மறந்த சமுதாயமாய்..இதயம்இடம்பெயர்ந்தோ..ஜடமாகியோ,நிஜப் பிணங்களுடன் நிலைகொள்ளும்நடைப் பிணங்களாய்..எல்லைக் கோடுகள்தொல்லைக் கேடுகளாய்..இரத்த ஆறுகள்ஏன்றும் ஜீவநதிகளாய்..இனம் மொழி தேசம்ஏல்லாம் கடந்த ஒன்றாய்-வன்முறையாய்...
ஓ,இதுதான்கற்காலத் தொடக்கத்திற்குக்கால்கோள் விழாவா...!
படத்திற்கு நன்றி:
http://paradise7.hubpages.com/hub/Is-Violence-Necessary Full story
- Monday, March 19, 2012, 6:20
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
தொட்டில் குழந்தைதொண்ணூறைத் தாண்டியது-அரசுச் செய்தி..அங்கே,தண்டவாளத்தில்புதிதாய் ஒன்று..இங்கே,கருத்தரங்கம்-கற்பு பற்றிகருத்து மோதல்கள்...!
என்றும் இணைவதில்லைஇந்தத் தண்டவாளங்கள்...!
படத்திற்கு நன்றி:
http://www.frontlineonnet.com/fl2211/stories/20050603006700400.htm Full story
- Saturday, March 10, 2012, 16:07
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
நெல்லை நகர் வீதியிலே நெல்லையப்பர் துணையுடனேமெல்ல வலம் வருகின்றாள் மேன்மை மிகு காந்திமதி (நெல்லை நகர்)
அல்லலதை அகற்றி விட்டே அடியவரைக் காத்திடவேவில்லில் வரும் அம்பாக விரைந்தவளும் வருகின்றாள் (நெல்லை நகர்)
வேணுவன நாயகியாள் வெற்றியினைத் தந்திடவேதாணு மூர்த்தி துணையுடனே தவமியற்றி வருகின்றாள் (நெல்லை நகர்)
கம்பை நதிக் கரைதனிலே காத்திருந்த தேவியவள்கும்பிட்ட அடியவரின் குறை தீர்க்க வருகின்றாள் (நெல்லை நகர்)
எண் நான்கு அறம் ...
Full story
செண்பக ஜெகதீசன்
அன்புடன் அழகும் சேர்ந்ததாலே
அதனுடன் பண்பும் கலந்ததாலே,பொன்னகை மிஞ்சிடும் புன்னகையும் பூப்போல் மென்மையும் இணைவதாலே,அன்னையாய் அனைத்தும் படைப்பதாலே ஆண்மையின் முகவரி தருவதாலே,என்றுமே தாய்க்குலம் வாழ்கவென இனிய தமிழில் வாழ்த்துவேனே...!
படத்திற்கு நன்றி :
http://www.hindustantimes.com/photos-news/Photos-Lifestyle/aishwaryaraisbabyshower/Article4-779142.aspx
Full story
- Thursday, March 1, 2012, 11:47
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
நிலவு முகம் தெரிகிறதுநினைவு அலை தெளிக்கிறதுபுல்வெளியில் பனித்துளிகள்புது வானில் நவமணிகள்நிலவு மகள் வரும் வழியில்நிறக்கோலம் போடுகிறாள்... (நிலவு)
மலைச்சரிவில் மானினங்கள்மரம் நிறைய மலர்ச்சுமைகள்கழனியிலே கதிர் மணிகள்கனத்தாலே தலை குனியும்மனதிலெழும் நினைவதிலேமுகம் காட்டிச் சிரிக்கின்றாள்... (நிலவு)
சிறகடித்துப் பறக்கின்றேன்சிரிப்பதையே நினைக்கின்றேன்கடலடியின் முத்துக்கள்கனியிதழின் சொத்துக்கள்இதழ் குவித்து எனைக்கவர்ந்தேஇதயத்தையே எடுக்கின்றாள்... (நிலவு)
பறவையது பறக்கிறதுபக்கம் வரத் துடிக்கிறதுஇடர் பலவாய் வந்தாலும்எவர் ...
Full story
- Saturday, February 25, 2012, 19:19
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
பார்வைக்கு வருமுன்னே,
பப்பாளிப் பழத்துக்கும்
பலவிதமாய் மாத்திரைக்கும்
கள்ளிப் பாலுக்கும்
கவள நெல்லுக்கும்
தப்பிப் பிழைத்து
தரைக்கு வந்தது
தனிக்கதை...
பால வயதினிலே,
படிக்க வைக்க மனமின்றி
பள்ளிக்கு அனுப்பியதும்,
கொள்ளிக்குப் பிள்ளை முன்னே
குறைபட்டு நின்றதும்
குற்றேவல் செய்ததெல்லாம்
வளர்ந்த கதை...
வேலைத் தலங்களிலே
வேறுபட்ட பார்வைகளில்
வேதனையில் வீழ்ந்ததுவும்,
காதலெனும் மாயவலையில்
கால்மாட்டி நின்றதுவும்,
மணமேடையை மறைத்திடும்
வரதட்சணை வேலி கண்டு
வெந்து வாடியதும்,
கறுப்பு சிவப்பு
குட்டை நெட்டையெனக்
கழற்றி விட்டதுவும்,
காத்திருந்து காத்திருந்து
முற்றத்து முருங்கையென
முற்றி நின்றதுவும்..
பல இவைபோல்
பருவம் கண்டகதை...
மணமேடை மிதித்தவுடன்
மாறாட்டங்கள்..
இல்லறத்தில் இல்லாத
இடர்ப்பாடுகள்..
நேற்றைய மணமகள்களின்
நாட்டாமைகள்-
வெடிக்கும் ஸ்டவ்வாய்
வேறு பலவாய்..
பல்கலைக் கழகங்கள்
பார்த்திராத பட்டங்கள்..
பிள்ளைகள் பெற்றுப்
பெரிதாய் வளர்த்திடும்
பாதையில் சோதனைகள்
கதைகதையாய்...
வயது முதிர்ந்தபின்
வந்திடும் வேதனையில்
முதியோர் இல்லங்களும்
முகம்சுழிக்கும்
மௌனகதை...
ஆனாலும்,
அடிப்படையில் உயர்ந்த கதை-
அகம்நிறைந்த தாய்மை,
அன்பின் பேரூற்று..
அதுமட்டும் அடைபடுவதில்லை
அழிவதுமில்லை...!
படத்திற்கு நன்றி:
http://www.scenicreflections.com/download/242432/Native_Woman_Painting_Wallpaper Full story
- Monday, February 20, 2012, 10:09
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
மலையில் மழையது பெய்தால்
மண்ணில் குதித்திடும் அருவி.
சிலையாய் நின்றிடும் தெய்வம்
சிந்திடும் அழகுடன் அருளும்,
இலையில் விழுந்திடும் சோறே
ஏழையின் பசியை ஓட்டும்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
அலையில் கதை சொல்லும் கடலும்,
ஆற்றில் காண்பது முயற்சி,
வலையில் வீழ்ந்திடும் மீனும்
வல்லமை காட்டிடும் புலியும்,
தலைகீழ் தொங்கிடும் வெளவால்
தந்திடும் பலப்பலப் பாடம்,
கலைபல கற்றிடும் வாய்ப்பைக்
காட்டிடும் இயற்கை இனிதே...!
படத்திற்கு நன்றி:
http://www.soultravelmultimedia.com/2011/09/04/30-breathtakingly-beautiful-nature-wallpapers Full story