- Sunday, January 29, 2012, 8:21
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
என் தோட்டத்தில்
கண் சிமிட்டிக் கொண்டிருந்த
நட்சத்திரங்களெல்லாம்
மேலே மேலே பறந்து சென்று
மேகத்துள் மறைந்து போயின.
வானில் மின்னிக் கொண்டிருக்கும்
மின்மினிகளை இரசித்துக் கொண்டிருக்கிறேன்.
படத்திற்கு நன்றி:
http://raefrazier.blogspot.com/2011/02/simple-pleasures.html Full story
- Friday, January 20, 2012, 10:10
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
சண்டையிடப் புதிய களம் கிடைத்திருக்கிறது அரசிக்கு
தலைவிரி கோலமாய் தலை சாய்த்துப் பார்க்கும் பெண்கள்
கண்கள் மேய தனத்தின் அடிவாரம் தெரிய உடுத்தும் பெண்கள்
இறுக்கமாய் அணிந்து மிடுக்காய்ப் போஸ் கொடுக்கும் வேற்று நாட்டு இராணிகள் இளவரசிகள்
இப்படி யாரேனும் ஃபேஸ்புக்கில் நண்பராக இணைய அரசனுக்கு வேண்டுகோள் விடுக்கையில்...
அறிந்த தோழிதானெனினும் இரவில் அரட்டையில் வருகையில்...
“உர்”ரென்று ஆகி விடுகிறாள் அரசி. சமாதானப் படுத்துவதற்குள் ஃபேஸ்புக்கும் வேண்டாம் ...
Full story
- Saturday, January 7, 2012, 18:05
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
நதியின் அடியாழத்தில் இரகசியமாய்ப் பதிந்து கிடக்கும் சிறு கூழாங்கல்லில் வளி நிரப்பினேன். பெரும்பலூனாய் மேலெழும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அலையில். ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் ஒப்படைக்க அருகில் நெருங்கினால் மீண்டும் கூழாங்கல்லாகி அடியாழத்தில் பதிந்துவிடுகிறது.
படத்திற்கு நன்றி:
http://servantoftheservant-ananda.blogspot.com/2011/09/floating-stones-at-rama-kund-in.html Full story
- Thursday, December 29, 2011, 16:11
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
இப்பொழுதெல்லாம் அவள்தற்கொலை குறித்துப் பேசுவதில்லைமுன்பெல்லாம்நேரிலோதொலைபேசியிலோ பேசினால்தற்கொலையில்தான் முடிப்பாள்.தற்கொலைதான் துயரங்களிலிருந்துதன்னைப் பூரணமாக விடுவிக்குமெனநம்பினாள்.முன்னெப்பொழுதும் காணாத சிரிப்புகள்அவள் முகத்தை அலங்கரிக்கின்றன இப்போது.உண்மையில்இப்போதுதான் இந்த உலகம்அவள் காலின்கீழ் இருப்பதை உணர்கிறாள்.இப்பொழுதுதான் அவள்தன் இருப்பைமுழுமையாய் உணர்கிறாள்.தளைகளை அறுத்தெறிந்த மகிழ்ச்சி அவள் நடையில்.சிறைச்சுவரைத் தகர்த்தெறிந்த பெருமிதம் அவள் பேச்சில்.ஊர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு திரிகிறதுஅவள் பாட்டுக்கு ...
Full story
- Tuesday, November 15, 2011, 13:08
- newsletter, கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
அலைந்து திரிந்த களைப்புக்கு இதமாய்க்
குளிர்ந்த பழச்சாற்றைக் கண்ணாடிக் குவளையில் கொண்டுவந்து நீட்டியது மோகினி மோகினியின் விரல்தொடாமல் பெற்றுக்கொண்ட சாத்தான் தன் உதடுகளை அழுத்தி உறிஞ்சியது கண்ணாடிக் குவளையில் பதிந்திருக்கும் மோகினியின் உதட்டு ரேகைகளையும் சேர்த்து. பிறகு எதிரெதிரமர்ந்து உரையாடிக்கொண்டே தரைபாவாத மோகினியின் கால்விரல்களை மோகிக்கத் தொடங்கிய சாத்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து கழுத்தின் கீழ்ப் பகுதியில் தடைப்பட்டு நின்றது....
Full story