Archive for the ‘நறுக்..துணுக்…’ Category

இந்த நறுக்கும்.. !!!

  நறுக்.. துணுக்..... (14) இன்னம்பூரான் மதுரை மாவட்டத்தின் ஊமச்சிக்குளம் போலீஸ், கணவனை அடித்துக் கொன்ற மனைவியை, இ.பி.கோ. 100 என்ற ஷரத்தின் கீழ் , தற்காப்பு - கொலை என்று சொல்லி, விடுவித்தனர். குடும்பத்தினரை தொந்திரவு செய்பவன் என்று போலீஸ் ஆவணங்கள் கூறும் ஜ்யோதி பாசுவுக்கும், அவன் மனைவி உஷா ராணிக்கும் 1995 லிருந்து பிரச்சனைகள் - கிட்டத்தட்ட 20 வருடங்கள். 10.02.2012 அன்று அவன் வீட்டில் புகுந்து, மனைவியை அடித்தான். தன்னுடைய பெண்ணையே கற்பழிக்க முயன்றான். மனைவி அவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றாள். கிரிக்கெட் மட்டை வாழ்க. சட்டரீதியான ... Full story

வாயில் இருக்கு வழி!

வாயில் இருக்கு வழி!
கவிநயா நறுக்... துணுக்......(13) சில நாட்களுக்கு முன்னால் வெளியூர் போக வேண்டியிருந்தது. வழக்கமாகப் போகிற ஊர் இல்லை, அதனால் வழி எல்லாம் புதுசாக இருந்தது. போகும் போது பரவாயில்லை, ஆனா வரும்போது இருட்டு; எக்கச்சக்க போக்குவரவு; கூடவே மழை வேறே. அதனால வண்டி சாரத்தியம் அத்தனை சுலபமாக இருக்கலை. வழி சொல்கிறவங்க (அதாங்க GPS) அவங்களே தொலைஞ்சு போயிட்டாங்க. அதனால சில சமயம் வழியில் நிறுத்திக்கிட்டு, வரைபடத்தை வச்சு பார்த்துக்கிட்டு, இப்படியே மெதுவா வர வேண்டியதாயிடுச்சு. இந்த ... Full story

மீண்டும் தண்டோரா!

மீண்டும் தண்டோரா!
இன்னம்பூரான் நறுக்.. துணுக்...(13) 2ஜி உரிமங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்வு ஆட்சிபீடத்தை ஆட்டிவிட்டது என்றாலும், நொண்டி சாக்குகளும், சால்ஜாப்புகளும் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. எந்த அமைச்சரோ, பிரதமரோ ராஜிநாமா செய்வது பற்றி, அதிகார வட்டங்களில் பேச்சு எழவேயில்லை. இங்கிலாந்தில் முந்திய ஆட்சியின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் பதவியிலிருந்து விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: தன் ஆசைக்கிழத்தியின் தாதியின் பயண அனுமதி பற்றி லேசாக விசாரித்தது. அவருடைய காதலைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. இங்கிலாந்து போற்றும் ... Full story

யாதும் ஊரே.. யாவரும் கேளீர்!

யாதும் ஊரே.. யாவரும் கேளீர்!
நறுக்.. துணுக்... (11) மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உயரிய குறிக்கோளுடன் வாழும் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கையின் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இலங்கைப் பயணம் சென்றிருந்த கலாம், தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் 2013ம் ஆண்டுக்குள் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, இத்திட்டத்தை செயல்படுத்த தான் உதவி செய்யத் ... Full story

ஆகா, தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா!

ஆகா, தமிழனென்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா!
நறுக்.. துணுக்... ( 10) பவள சங்கரி தமிழ்மொழி 50,000 ஆண்டு வரலாற்றுப் பழமை பெற்ற மொழி. தமிழ்மொழி உலக மொழிகட்கு 1800 வேர்ச் சொற்களும், 180 மொழிகட்கு உறவுப்பெயரும் தந்துள்ளதை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. அதிலும் சிவசமயம் 22,000 ஆண்டுகள் பழமை கொண்டதாம். திருமந்திரம் என்பது 8000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சித்தர் நெறி நிற்கும் மந்திர, தந்திர வழிபாட்டு நூல். திருக்குறளும், திருமந்திரமும் நம் தமிழ்த்தாயின் இரு கண்கள் என்று போற்றத்தக்க தெய்வாம்சமும், வாழ்க்கை நெறிகளும் கொண்டனவாகும். ... Full story

பெண்களே ! உஷார் !!

பெண்களே !  உஷார் !!
நறுக்.. துணுக்... ( 9) எஸ். நெடுஞ்செழியன் விடுதிகளிலோ ,அதன் குளியல் அறைகளிலோ, உடைமாற்றும் இடங்களிலோ மற்றும் துணிக்கடைகளின் அளவு சரி பார்க்கும் அறைகளிலோ, ஆள் உயர நிலைக் கண்ணாடிகள் பொருத்தி இருப்பார்கள் .அவைகளில் ஒரு பக்கக் கண்ணாடி மற்றும் இருபக்கக் கண்ணாடி என இரண்டு வகைகள் உண்டு . ஒருபக்கக் கண்ணாடியில் நாம் பார்க்கும் பகுதி மட்டும் நம் உருவத்தை காட்டும். ஆனால் இருபக்கக் கண்ணாடியிலோ மறுபுறம் இருந்து நம்மை யாராவது பார்த்தால், அவர்கள் பார்ப்பது நமக்கு தெரியாது. அவர்கள் நமக்குத் தெரியாமல் நம்மைப் பார்க்கலாம் , படம் ... Full story

கெப்ளர் விண்கலத்தின் வெற்றி!

கெப்ளர் விண்கலத்தின் வெற்றி!
நறுக்.. துணுக்...(8) பவள சங்கரி நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்! அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் ... Full story

கிளீஸ் 581G

நறுக்... துணுக்.. (7) பவள சங்கரி பூமியிலிருந்து 123 டிரில்லியன் மைல்களுக்கு அப்பால் புதிதாக பூமி போன்று ஒரு கோளம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! கிளீஸ் 581G என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் ஆச்சரியமானதும் , மகிழ்ச்சிகரமானதும் கூட!.....ஆஸ்ட்ரோ - பிசிகல் ஜர்னல் இந்த ஆய்வைப்பற்றிக் கூறும் போது திரவ நீர் இருப்பதும், பூமியின் புவியீர்ப்பு விசை போல 4 மடங்கு அதிகமாகவே அங்கு ஈர்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நம்முடைய பூமி போலவே கிளீஸ் 581ம் நீள் வட்ட வடிவ பாதையில் சுற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ... Full story

வாழ்க்கைத் தத்துவ முத்து!

வாழ்க்கைத் தத்துவ முத்து!
  நறுக்.. துணுக்...(6) பவள சங்கரி நேற்று , ஈரோடையில் ஒரு பாலத்துக்கருகில் சென்றுகொண்டிருக்கும் வேளையில் காதில் விழுந்த வாழ்க்கைத் தத்துவ முத்துகள்! சில்க் சிப்பாக்காரர் : சே, பணக்கார வீட்டில் கடைசிப் பையனாவும், ஏழை வீட்டில் மூத்த பையனாவும் பொறக்கவே கூடாது சாமி..... கதர் சிப்பாக்காரர் : ஏனுங்க இப்படி அலுத்துக்கறீங்க.....? சி.சி. : பின்ன என்னங்க.... பணக்கார வீட்டில கடைசி பையனா பொறந்தா, அண்ணங்காரன் எல்லாத்தையும் அனுபவிச்சிப்பிட்டு, மிச்சம் மீதியை குடுத்துப்போட்டு,இதில அதிகாரம் வேற.... அங்கன எளவுக்குப் போடா.... இங்கன கன்னாலத்துக்குப் போடா..... நோம்பி ... Full story

சாதனைச் சிறுமி வர்ஷா

சாதனைச் சிறுமி வர்ஷா
(நறுக்.. துணுக் - 5) சாந்தி மாரியப்பன் ஊக்குவிக்கப்படும் குழந்தைகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதற்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். ‘உலகிற்கு இந்தியாவின் கொடை’ என்ற தலைப்பில் தேடுபொறியான கூகிளின் இந்தியப் பிரிவிற்கான லோகோவை வடிவமைப்பதற்காக முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்காகக் கூகிள் நிறுவனம் ஒரு போட்டி நடத்தியது. சுமார் 1,55,000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் தானும் கலந்து ... Full story

யோசனை: கூடங்குளம் > சென்னை நடைப் பயணம்

யோசனை: கூடங்குளம் > சென்னை நடைப் பயணம்
(நறுக்.. துணுக்.. - 4) அண்ணாகண்ணன் கூடங்குளத்தில் அமளி துமளி நடக்கையில், கல்பாக்கம் மக்களுக்கும் இந்தியாவின் இன்ன பிற அணு உலையைச் சுற்றியுள்ள மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு ஏன் இன்னும் வரவில்லை? கைகா அணுமின் நிலையத்தைச் சுற்றி மட்டும் சற்றே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. கூடங்குளத்தில் அணு உலை கூடாது எனில், இந்தியா முழுவதுமே கூடாது. இந்த இலக்குடன் மக்கள் கூட்டாகப் போராடக் காணோம்! இதை ஒரு வட்டாரப் ... Full story

எச்சரிக்கை!

எச்சரிக்கை!
நறுக்... துணுக்.. (3) பவள சங்கரி நேற்று காட்பாடி ரயில் நிலையத்தைக் கடக்கும்போது ஒரு சுவாரசியமான நிகழ்வைக் காண முடிந்தது. இளம் சிறார்களைக் கொண்டு (தேசீய பாதுகாப்புப் படை பயிற்சி மாணவர்கள்) , சென்னை தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையின், விழிப்புணர்வு சேவை அரங்கேற்றப்பட்ட விதம் அருமை! ஆம்,சிறார்கள் வாத்தியக் கருவிகளுடன் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் ரயில் நிலையத்தை வலம் வந்ததோடு பிரயாணிகளை அச்சடித்த காகிதங்களும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.... Full story

சுவாமி விவேகானந்தரின் முதிதை! (மொழி பெயர்ப்பு)

சுவாமி விவேகானந்தரின் முதிதை! (மொழி பெயர்ப்பு)
நறுக்... துணுக்.. (2) பவள சங்கரி ’முதிதை’ , என்பது நம்முடைய ஆழ்மனப்பதிவுகளை முற்றிலும் அழிக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான ஒழுங்குமுறை! எதிர்மறை சக்திகளுக்கு நம்மை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் விரும்பத்தகாத எண்ணப்பதிவுகளை திரட்டுவது வெகு எளிது. ஆயினும் அதனை அழிப்பது எளிதான காரியம் அன்று. முதிதை - தியானம் என்பது தீய எண்ணப்பதிவுகளை களைந்தெடுத்து நல்ல எண்ணப்பதிவுகளை மட்டும் பதியச் செய்யும் முறைமை. அன்றாடம் முறையாக தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள் ... Full story

சூரசம்ஹாரம் காட்டும் தத்துவம்!

சூரசம்ஹாரம் காட்டும் தத்துவம்!
அன்பு நண்பர்களே, நறுக்கென்று நாலு வார்த்தைகளில், சுவையாக, எதைப்பற்றி வேண்டுமானாலும் இந்தப் பகுதியில் நீங்களும் எழுதலாமே! நாட்டு நடப்பு, சமுதாயச் சிந்தனை, ஆன்மீகம், மனித நேயம், மழலைக் குறும்பு, மூத்தோர் சொல் இப்படி எது வேண்டுமானாலும் புகுந்து கலக்குங்கள் தோழர்களே!     நறுக்... துணுக்.. (1)               காயத்ரி பாலசுப்ரமணியன் முருகனை வழிபடும் பக்தர்களால் பெரிதும் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.