Archive for the ‘பொது’ Category

Page 19 of 32« First...10...1718192021...30...Last »

சித்திரை புகைப்படக் கண்காட்சி

தகவல்: ஆண்டோ பீட்டர் Full story

உலகளவில் சாலை விபத்துகளால் 50 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலர் கே. சந்திரமௌலி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2011 ஏப்ரல் 26 அன்று சாலைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசிய போது, செயலர் இவ்வாறு தெரிவித்தார். சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளும் காயங்களும் பொருளாதார முன்னேற்றத்திற்குக் குந்தகம் ஏற்படுத்துவதாகவும் சந்திரமௌலி குறிப்பிட்டார். எனவே, முறையான செயல் திட்டத்தில் உயிரிழப்புகளைத் ... Full story

நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிய, வீடு வீடாகக் கணக்கெடுப்பு

நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிவதற்கு விரிவான கணக்கெடுப்பு ஓராண்டிற்குள் நடத்தப்பட வேண்டும். நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் எளிமையானதாகவும் விருப்பத்தின் அடிப்படையில் அமையாமல் தெளிவானதாக இருக்க வேண்டும். இதற்கான பரிந்துரையை இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் தனது 6ஆவது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பு நடத்தப்படும் பகுதிகளைச் சேர்ந்த ஒரு நபராவது இடம் பெறும் வகையில் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று, நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கண்டறியப்படும் ஏழைகளுக்கு அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களின் ... Full story

கலைஞர்களுக்கு ஓய்வூதியம் – ரூ.12.92 கோடி ஒதுக்கீடு

கலைகள் மற்றும் எழுத்துத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், 2010-11ஆம் ஆண்டில் (2011ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வரை) மொத்தம் ரூ.12.92 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகப் பண்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2007-08ஆம் ஆண்டில் ரூ.4.75 கோடியும், 2008-09ஆம் ஆண்டில் ரூ.4.91 கோடியும், 2009-10ஆம் ஆண்டில் ரூ.8.69 கோடியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர வெகுமதித் தொகை 2009-10ஆம் ஆண்டிலிருந்து ரூ.2000-லிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ================================================ தகவல் - பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை Full story

தாகூர் 150: ரூ.5 நாணயம் வெளியீடு

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதிய 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயத்தின் முன்புறத்தில் அசோகா தூணின் சிங்க முகம் இடம் பெறுகிறது. மையப் பகுதியில் சிங்க முகத்தின் கீழே மதிப்பு இலக்கம் ஐந்து என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தின் பின்புறம் ரவீந்திரநாத் தாகூர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்குக் கீழே 150ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் 1861 ... Full story

விஸ்வசேது இலக்கிய பாலத்தின் 6 நூல்கள் வெளியீட்டு விழா

Full story

ஸ்ரீ சத்திய சாயி பாபா மறைந்தார்

ஆன்மீகத் தலைவரும் சமூக சேவகருமான புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயி பாபா (85), 2011 ஏப்ரல் 24 அன்று காலை 7.40 மணிக்கு மறைந்தார். பகவான் என்றும் சாயி கிருஷ்ணா என்றும் பல பெயர்களால் அவரை அழைத்த, உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான சாயி பக்தர்கள், இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்மைக் காலமாகப் பல்வேறு நோய்களால் பாபா அவதிப்பட்டு வந்தார். ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சத்திய சாயி ... Full story

கிழக்கின் ‘அதிரடி’ புத்தகக் காட்சிகள்

ஏப்ரல் 23 அன்று, உலகப் புத்தக தினம். இதை முன்னிட்டு, 2011 ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி, சுமார் 10 நாள்களுக்குக் கீழ்க்கண்ட இடங்களில் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகளைக் கிழக்கு பதிப்பகம் நடத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் செய்தது போல பழைய, அழுக்கான புத்தகங்கள், இந்தக் கண்காட்சிகளில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தச் சலுகை, இருப்பு உள்ளவரை மட்டுமே. நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: மயிலாப்பூரில்: தேஜா பவன், மயிலாப்பூர் தெப்பக் குளம் பேருந்து நிறுத்தம் எதிரில், ராமகிருஷ்ணா மிஷன் சாலை, அடையாறு ஆனந்த பவன் அருகில், மயிலாப்பூர், ... Full story

வெங்கட் சாமிநாதனின் ‘வாதங்களும் விவாதங்களும்’ நூல் வெளியீடு

Full story

ஔவை நடராசனார் பவள விழா

தகவல்: முனைவர் அருள் நடராசன் Full story

நம் முன் உள்ள மாபெரும் சவால்கள்

மின்சாரம், தண்ணீர், நகரமயமாக்கல் ஆகியவை நம் எதிரே உள்ள மிகப் பெரிய சவால்களாகும். இவற்றைச் சமாளிக்கும் வகையில் புதிய யுத்திகளை நாம் தயாரிக்க வேண்டும் என்று திட்டக் குழுவை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய திட்டக் குழு கூட்டம், புதுதில்லியில் 2011 ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது: 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், பொருளாதாரத்தில் நாம் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவே ... Full story

லோக்பால் மசோதா, விரைவில் அறிமுகம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின் போது லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2011 ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தினத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மேலும் கூறியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும், நிர்வாக முறைகள் நடைமுறைகளைச் சீரமைக்கவும், ஊழலுக்கு எதிரான முறையான செயல்பாட்டை விரைவுபடுத்துவதுமே நமது முக்கிய நோக்கமாகும். பொது ... Full story

எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150ஆவது ஆண்டினை ஒட்டி, இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக, கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. 91 ஆயிரம் ரொக்கப் பணமும் தாகூர் உருவச் சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச் சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்குத் தாகூர் இலக்கிய விருது ... Full story

“அயலக இந்தியர் நலன் காப்போம்” – அமைச்சர் வயலார் ரவி

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் நல விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். டாக்காவில் 2011 ஏப்ரல் 20 அன்று கொழும்பு நடவடிக்கை குறித்த நான்காவது அமைச்சர்கள் நிலையிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர்  இத்தகவல்களைத் தெரிவித்தார். வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவ, குடியேற்ற விதிகளில் மாற்றம், மோசடி ஏஜென்டுகளைத் தண்டிக்கக் கடுமையான தண்டனைச் சட்ட விதிகள் உள்ளிட்டவை ... Full story

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் பாராட்டு

பிஎஸ்எல்வி சி16 ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். எந்தவிதத் தவறும் நிகழாமல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதன் மூலம் செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் ராக்கெட் தொழில்நுட்பங்களில் இஸ்ரோவின் மேம்பட்ட திறன் வெளிப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் “பிஎஸ்எல்வி சி 16 ராக்கெட் மூலம் இந்தியாவின் ரிசோர்ஸ் சாட் -2, இந்திய- ரஷ்ய யூத்சாட், சிங்கப்பூரின் ... Full story
Page 19 of 32« First...10...1718192021...30...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.