Archive for the ‘மின்னூல்கள்’ Category

Page 1 of 212

திருப்பூவணப் புராணம் – பகுதி – (25)

திருப்பூவணப் புராணம் - பகுதி - (25)
கி.காளைராசன் 10. இந்நூலாசிரியரின் பிற கட்டுரைகள்   இந்நூல் ஆசிரியர் கி.காளைராசன் அவர்களது படைப்புகளை ஆன்மிகம், ஆன்மிக அறிவியல் மற்றும் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவரது திருப்பூவணக் காசி என்ற முதல் நூல் திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியுதவி பெற்று அச்சிடப்பட்டு 24-09-2007 அன்று தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளார் அவர்களால் திருப்பூவணநாதர் திருக்கோயிலில் வைத்து வெளியிடப்பெற்றது. இவரது கட்டுரைகள் தினபூமி, தினமலர், மஞ்சரி, தமிழ் மாருதம், செந்தமிழ்ச் செல்வி, ஓம்சக்தி, மெய்கண்டார், கண்ணியம்  ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (24)

கி.காளைராசன் 49.திருவாலவாய்க்  காண்டம் (வங்கிய சேகர மன்னனுக்கு  மதுரையின் எல்லைகளைக் காட்டுதல்) சித்தரை மன்னன் பணிந்து வேண்டுதல் 2338    கறையணி  கண்டனைத்  தாழ்ந்து  கைதொழு திறையவ  நின்னருள்  வலியி  னிந்நிலப் பொறையது  வாற்றுவேற்கு  ஈண்டிப்  போதொரு குறையதுண்  டாயினது  என்று  கூறுவான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (23)

கி.காளைராசன் 6.3. சுந்தரர் பாடியது பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் திருவுடை யார்திரு மால  ய னாலு முருவுடை யாருமை யாளையொர் பாகம் பரிவுடை யா ரடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யாருறை பூவண மீதோ.             (1) Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (22)

கி.காளைராசன் தேவாரப் பாடல் (குறிப்பு - தேவாரப் பாடல் வரிகள் திருப்பூவணப் புராணப் புத்தகத்திலிருந்தபடியே இங்கு அச்சிடப்பட்டுள்ளன) 6.1. திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியது (1-ம் திருமுறை) பண் தக்கேசி திருச்சிற்றம்பலம் அறையார்  புனலு  மாமலரு  மாடர  வார்சடைமேற் குறையார்  மதியஞ்  சூடி மாதோர்  கூறுடை  யானிடமா முறையான்  முடிசேர்  தென்னர்  சேரர்  சோழர்  கடாம் வணங்குந் திறையா  ரொளிசேர்  செம்மை  யோங்கு  தென்றிருப்பூவணமே   (1) Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (21)

கி.காளைராசன் பத்தொன்பதவது திருவிழாச்சருக்கம்   1330    எனநற்புராணமுனிசொற்றலோடுமெழுதாமறைச்சவுனகன் புனிதந்தயங்குபுகழ்தங்குகங்கைபொதிசெஞ்சடைச்சங்கரன் றினமன்புகூரமகிழுற்சவங்கொடிருநாள்புகுந்ததனைநீ துணிநந்தவோதுகெனஞானநீடுதொழின்மேவுசூதன்மொழிவான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (20)

கி.காளைராசன் பதினாறாவது சுச்சோதிபிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்   1232    பொங்கர்தொறுமங்குறவழ்பொழிறிகழும்பூவணத்திற்பொருந்திமன்னன் றங்குகருமங்கண்முதற்றானிழைத்ததியாவையுநீ சாற்றுகென்னா வெங்கொடுங்காமாதிகளை யொறுத்தொழித்தசவுனகன்றான்வினவலோடுந் துங்கமறைவடித்தெடுத்ததூயவியாதனைநினைந்துசூதன்சொல்வான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (19)

கி.காளைராசன் பதினாலாவது உமைவருசருக்கம்   1154    பூங்குழலுமைபின் பூவணந்தன்னிற்பொருந்தி நற்றவஞ்செயுமாறு மோங்கியகாதலுவந்திடத்தானமுத்தமர்க்குதவிடுமாறுந் தாங்கரும்வெகுளிதணந்திடுஞானச்சவுனககேளெனவருளிற் றூங்கியேமிகுவெந்தீங்கெறிந்தோங்குஞ்சூதமாமுனிவரன்சொல்வான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (18)

கி.காளைராசன் பதின்மூன்றாவது தக்கன் வேள்வியழித்தசருக்கம்   1088    மட்டவிழ்சரோருகனன்மைந்தன்மகிழ்கூர்ந்தாங் கிட்டிபுரிகாதையையிசைப்பவதுகேண்மோ கட்டழகுசேர்சவுனகத்தலைவவென்னாச் சிட்டர்புகழ்சூதமுனிசெப்பியிடுகிற்பான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (17)

கி.காளைராசன் பன்னிரண்டாவது திருக்கலியாணச்சருக்கம்   968      அருமறைநான்கையும் கத்தடைத்தசீர் மருவியசவுனகமகிழ்ந்துகேண்மியா பொருவிடைப்பாகனப்பொருவின்மங்கையைத் திருமணஞ்செய்ததுசெப்புவாமரோ Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (16)

கி.காளைராசன் பதினோராவது உமாதேவி திருவவதாரச்சருக்கம்   859      உற்றதிருமாலுடனியைந்ததையுரைத்தாய் தற்பரமசத்தியவதாரமுரையென்னாக் கற்றுணர்வுறுஞ்சவுனகன்கழறலோடும் பொற்புறுபுராணமுநிபுங்கவனுரைத்தான் Full story

திருப்பூவணப் புராணம் – (15)

கி.காளைராசன் பத்தாவது இலக்குமிசாபமோசனச்சருக்கம்   786      பான்மைசேருலகம்பரிந்துகாத்தளிக்கும் பகவனும்படர்சிறையளிசெந் தேன்விருந்துண்ணுஞ் செய்யபூங்கோயிற்றிருவுமீங்குற்றதென்னெனலு நான்மறைதினமுநாவிளையாடுநற்சவுனகமுனிகேளென் றானனமலர்ந்தேயருந்தவத்துறைபோமழகியசூதன்பின்மொழிவான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (14)

கி.காளைராசன் ஒன்பதாவது பிரமசாபமோசனச்சருக்கம்   694      ஆயுநான்மறையுமங்கமோராறுமாகியவமுதகானனநீர் பாயுநாவுடையசவுநகமுநிவன்படுகலியுடைதிரைப்பரவை மாயிருஞாலந்தன்னினீரொன்பான்மருவியபுராணமோர்வடிவாந் தூயமாதவத்தின்றுறைபெறுஞானசூதனைநோக்கினன்சொல்வான் Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (13)

கி.காளைராசன் ஆறாவது உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்   567      தற்பரத்துடன் றிகழ்சவுனகப்பெயர் முற்றுணரருந்தவமுநிவகேட்டியாற் சொற்றிடற்கரும்பரிசுத்தமேவிய நற்கதைதன்னையாநவிற்றுவாமரோ Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (12)

கி.காளைராசன் மணிகன்னிகைச் சருக்கம்   407      நற்கதிபெறுந்திரணாசனன்கதை யற்புதங்கேட்டுநெஞ்சமைதிகொண்டிலன் சொற்றகுமாதவச்சூதயான்புகல் கிற்பனாலின்னமுங்கேட்குமாசையால்   408      ஓதருமுலகிலாருயிர்கள் செய்திடு பாதகமனைத்தையும் பாறல்செய்யுமக் கோதறுமாமணிகுண்டமேன்மையை யேதுவினோடெடுத்தியம்பல்வேண்டுமால்   409      உற்றமன்பதைக்குபகாரியாவது மற்றுநீயல்லதிவ்வையத்தில்லையாற் சொற்றிடென்வாய்மொழிதுணிந்துநாடியே யிற்றெனவேவிரித்தினிதினாலரோ   410      என்றிவைசவுனகனியம்பக்கேட்டரு டுன்றியதுகளறுசூதன்சொல்லுவான் கன்றிடுமறுபகைகடிந்துநாடொறும் வென்றிகொளந்தணர் வேந்தர் வேந்தனே   411      அத்தலப்பெருமையையாயிரம்பெரும் பைத்தலையனந்தனும் பங்கயத்தனுஞ் சித்திரமலர்த்திருமாலுந்தேவரு மித்திறமெனவுணர்ந்தியம்பலாகுமோ   412      ஆயினெம்மாலிமூதறையப்பாலதோ தாயினுமுயிர்க்கருள்சவுனகாதிப தூயவாசான்றனாற் சொல்லுமந்தண நேயமோடதிற்சிலநிகழ்த்துவாமரோ   413      அண்டமோர்விராட்புருடன்றனங்கமாம் புண்டரீகத்திருப்பொருந்தும்பூவணங் கொண்டபேரெழில்குடிகொண்டவன்முக மண்டலமாகவேமறைந்துவைகுமால்   414      பண்டைநாளமுதகும்பத்திலாரமு தெண்டகுமணிமயமாகியிப்புனல் விண்டலநின்றதுவீழ்தலான்மணி குண்டமென்றொருபெயர்கொண்டிலங்குமால்   415      துன்னுதற்கரியவத்தூயதீர்த்தமா மன்னதினாடினோரமுதருந்தியே பன்னுபத்தயன்றன்கற்பம்பரிந்துதாம் பொன்னுலகத்தினிற்பொருந்திவாழ்குவார்   416      அரியயனுருத்திரனமரர்கோன்கடற் றரைபுகழ்நாரதன்சனகனாதியர் கருடர்கந்தருவர்நற்கபிலரேனையர் திருமணிகன்னிகைத்தீர்த்தம்வாழ்வரால் 417      கோலமன்னுதீர்த்தமாடுகுலவுபூர்வமுகமதாய் வாலுகந்தனான்மிகுந்தவானிலங்குவெய்யவன் சீலமோடுசெய்யிலிங்கதெரிசனஞ்செய்வோர்கொடுங் காலன்மேனிதானிரண்டுகண்கள் கொண்டுகண்டிடார்   418      அந்தலிங்கதரிசனத்தினானன்முத்தியடையுமால் வந்துநாளுநாளுமேவணங்கினோர்கள்யாவரும் புந்தியாற்செய்பாவமும்புண்ணியம்மதாகுமா லிந்தநீர்மையுண்மையுண்மையென்பதையமில்லையே   419      எண்ணிறைந்தநன்மணிகனிகையினெய்தியாடுதல் கண்ணினண்ணுபூவணக்காசிலிங்கதரிசனம் புண்ணியம்புரிந்துளோர்தமக்குநேர்பொருந்திடும் பண்ணுபாதகர்க்கொர்காலமும்பலித்திடாதரோ   420      இருடுரந்தருள்சுருக்குமிம்மணிகன்னிகைநதி யருடவத்தினானதானமதனினாலுமன்புகூர் கெரிசனத்தினாலுமிக்கசீர்தயங்குகங்கையின் பரிசனத்தினாலும் வெய்யபாதகங்களழியுமால்   421      தெரியினரியபிரமகத்திதீர்க்குமுரியதரிசனம் பரவுமமுதநாளுமுண்ணல்பண்ணுமேவுபரிசன மரியபலமெலாமளிக்குமத்திருத்தநானமே விரவுமமுதமணிமயங்கொண்மணிகனிகையின்மான்மியம்   422      தந்தைதாய்தமக்கிழைத்ததணிவில்பாதகங்களும் பந்தமாற்றுகின்றதோர்பராபரன்றுரோகமுஞ் சுந்தரங்கொள்வேறொர்மாதர்தோளணைந்ததோடமும் முந்தையோரைநிந்தைசெய்தமுடிவிலாதபாவமும்   423      வேதியர்க்குவெகுளிசெய்தன்மிசைதலல்லமிசைதல்வெம் பாதகங்கண்மாடபத்தியங்களாதிபாதக மோதுகோள்களாதிபாவமொழியுமாலிப்பூவணந் தீதிலன்பினோடுவந்துதெரிசனஞ்செயளவினில்   424      இத்தலத்தில்வைகியேயிடும்பையில்குடும்பியா யுத்தமகுலத்தனாகியொற்கமிக்குடையனாய் முத்திகாமனானசீவன்முத்தனங்கையிற்றில மத்தனைச்செழும்பொனல்கினோர்பலத்தையறைகுவாம்   425      தூயவுலகினேமருவுசுகமெலாமடைந்தவ ணேயபுத்திரர்புத்திரர்களோடுநீடுவாழ்ந் தேயநற்சிவபுரத்தினேறியின்பமுற்றதின் மேயநாளிருந்துமேதினிக்குவேந்தராவரால்   426      ஊனநீங்குமையர்கையிலுள்ளொருமையோடுகோ தானநல்கினோர்கணீடுதரையிலின்பமருவியே தீனமின்றிவாழ்ந்துபின்றிருந்தருந்தவத்தினா லானகாமதேனுவின்றனமுகநன்கருந்துவார்   427      பின்னர்நற்றவந்தனிற்பெருங்குலத்துதித்துநேர் பன்னுபுத்திரர்பவுத்திரர்களோடுபரிவினான் மன்னுசெல்வமுடன்மகிழ்ந்துவாழ்ந்துமீண்டுமாசிலாச் சின்மயன்றினம்பொருந்துசிவபுரத்தையடைகுவார்   428      ஓதுமுத்தராயணத்தினோடுதக்கிணாயன மீதினுற்றகதிர்கடம்மை​வெவ்வராவிழுங்குநாண் மாதவுற்பவத்தினமதிவிரிந்தொடுங்குநா ளாதிவாரம்பமூதொர்பக்கமவ்வெதிபாதத்தினம்   429      ஏலுமாறுதலையிலிட்டவெண்பமூதுசேர்ந்தநற் காலமோடுசங்கிராந்திகாலமட்டமீதனின் வாலசங்குதங்கிநன்குவளருமணிகன்னிகையினின் மாலகந்தைகொன்றசூலவயிரவன்றனருளினால்   வேறு 430      இலகொளிபரப்புமெல்லோனெதிர்முகந்தரவிருந்து மலருடன்றூர்வைமிக்கவண்கனிதண்டுலங்கொண் டலகிலாப்பவங்கணாயேற்காடுமித்தீர்த்தந்தன்னாற் றொலைவுசெய்தருளவேண்டுஞ்சோதியேயெனப்பணிந்து   431      சூரியவிலிங்கந்தன்னைச் சொல்லுமந்திரத்தினாலே சீர்பெறச்செபித்துத்தேவதேவனைப்பிரார்த்தித்தன்பாற் பேர்பெறுதீர்த்தமூழ்கிப்பிதிர்களோடிருடிகட்காங் கேர்பெறுதர்ப்பணங்களிரவிமந்திரத்தினாலே   432      யாவனிம்முறையிற்செய்வானவன்கடலுடுத்தபார்மேற் றேவர்கண்முனிவர்மிக்கதென்புலத்தவர்கடன்செய் மேவியபிரமசாரியெனின்விருப்பறுத்தேயொல்லை மூவுலகங்கள்போற்றமுத்தியையடைவனன்றே   433      அருமணமுடித்தோன்பின்றையைவகைவேள்வியாற்றிக் கிரியைநூற்கிடக்கையானேகேடில்பூசனையமைத்தே திருமகள்சுவர்க்கஞ்சேயாற்சேர்வனீதொருவினாலும் பெருகுமத்தீர்த்தமூழ்கிற்பிதிர்கடன்றரும்பேறுண்டாம்   434      தீதிலாவேள்விசெய்தோன்றேவனாந்தன்மைபோல வோதுமத்தீரத்தம்பொனுகவுவோனும்பனாவா னாதலாலத்தலம்போலரும்பிதிர்கடன்கடம்மைப் போதல்செய்தலங்களிந்தப்பூதலத்தில்லைமாதோ   435      இத்தலமன்றிவேறோரிருங்கதியளிக்குந்தான மித்தலமதனிலின்றாமியம்பிடினாகையாலே யித்தலமதிகமாமாயிரங்கோடிநற்றானத்து ளித்தலங்கண்டாலிம்பரிருங்கதியிரண்டுமுண்டால்   436      கற்றுணர்வுடையோர்கண்டகண்ணிமைகைநொடித்தல் பெற்றிடலமையுமேலும்பிறங்கிடுஞானந்தன்னா லுற்றவஞ்ஞானந்தன்னாலோதுபூவணத்தில்வாழ்வோர் நெற்றியிற்றிகழந்த வொற்றைநேத்திரராவரன்றே   437      நல்லதோர்தளிர்தானாதனவிலொருகனிதானாதல் வில்லிலங்கியபுரூரமின்னிடையன்னைபாகம் புல்லியபூவணத்தெம்புனிதனுக்கினிதளிப்போர் சொல்லுருத்திரனாய்ப்பின்னர்ச்சுத்தமாமுத்திசேர்வார்   438      வோறொருதலத்தினின்று மெய்யுயிர்வியோகமெண்ணி மாறிலாவித்தலத்தின்வைகுறின்மரணகாலை கூறரிதாயசெம்பொற்கொடியிடைமடவாளோடுந் தேறிடவந்தவன்றன்றெக்கிணகன்னந்தன்னில்   439      பாரிடைப்பிதாமகற்குப்பயப்பயப்பரிதல்போலச் சீருடைக்கடவுடன்பொற்றிருமேனிசாத்திக்கொண்டு பூரணமகிழ்ச்சியோடுபுத்திரன்றன்னைத்தேற்றித் தாரகப்பிரமந்தன்னைத்தானுபதேசஞ்செய்வான்   440      சாற்றுதுமரன்றனாணைசத்தியமீதுசாற்றி லாற்றல்சான்முனிவகேண்மோவாதலாலரிதினேனு நாற்றிசையுலகமேத்துநற்றிருப்பூவணத்திற் போற்றியேயெவரும்வாழ்கபுந்திகொண்டெந்தஞான்றும்   441      மருவியகாசிவாசமக்கண்மிக்குடல்வருந்தும் பொருவிறென்பூவணந்தான்பொருந்திடாமெய்வருத்த மரியனபொருளொன்றில்லையாதலாலைந்தவித்தீர் கருதிலப்பூவணந்தான்காசியிலதிகமாகும்   442      பவமில்பஞ்சாமுதத்தாற்பஞ்சகவ்வியத்தான்மிக்க சுவைதருநன்னீர்தன்னாற்சோதியையாட்டுவிப்போன் சிவனதுவடிவமென்றேசெப்பிடுமுலகமெல்லா மவனதுபெருமைதன்னையறிகுவனமலன்றானே   443      கதிர்விடுமணிகுண்டத்தின்கரையினிற்கடவுண்முன்னர்ப் பிதிர்மகிழ்சிராத்தத்தோடும்பிண்டநற்றிலோதகத்தை விதிமுறைபிதிர்கட்காற்றின்வெஞ்சுடர்ப்பரிதிவானோன் மதிதருவாழ்நாள்காறுமனமிகமகிழ்ச்சியுண்டால்   444      பொங்குவெங்கதிர்பரப்பும்புனிதமாமணிகுண்டத்திற் றங்குநீரிடைப்பிதிர்க்கடங்களங்கங்கிடந்தா லங்கவர்மகிழ்ச்சிகூர்ந்தாங்கக்கணந்தன்னின்முக்க ணெங்கணாயகனாற்பெற்றேயிடபவாகனத்தராவார்   445      ஆதலாலரியமைந்தரத்தியைப்பத்தியாலே யோதிடும்பிதிர்கடாம்போயுயர்பதிகதியிற்சேர்வான் காதலால்வருந்தியேனுங்கடைப்பிடிகருதிமாதோ கோதிலாமணிகுண்டத்திற்கொண்டிடக்கடவரன்றே   446      முந்தொருகாலந்தன்னின்மொழியினோர்கங்கமங்கந் தந்திடந்தணனங்கத்தைத்தசையெனநசையிற்கொண்டே யந்தநற்றீர்த்தத்திட்டாங்ககன்றதக்கணத்தினன்னோ னிந்தநற்றீர்த்தந்தன்னாலிருங்கதியேறினானால்   447      இந்தநற்றீர்த்தம்வேதத்தியம்பிடுஞ்சாரமாகு மிந்தநற்பிறப்புக்கீறுசெய்திடுகடவுளாகு மிந்தநற்கதைச்சுருக்கமியம்பினனீவிருந்தா மிந்தநன்மாணக்கர்க்கிங்கிசைத்திடுமெந்தஞான்றும்   448      சந்தமாமறைதேர்கின்றசவுனகமுனிவகேண்மோ வந்தநற்பிரமகைவர்த்தந்தருமத்தியாய மிந்தவாறடைவிற்றேர்தியெழுபதின்மேலிரண்டாம் புந்திகொள்புகழ்செறிந்தபூவணக்காதைமாதோ   வேறு 449      சேணுலாவியதிங்கடருங்குடைசேருமாமதன்றன்றனைவென்றதோ ரேணுலாவியவின்பசுகம்பெறுமேசிலாவருடந்திடுமந்தணீர் மாணுலாவியமண்டலமெண்டகுமாசிலாமணிகுண்டமடைந்தசீர் பாணுலாவியசெஞ்சொல்பகர்ந்தவர்பாகசாதனன்றன்பதிதங்குவார் மணிகன்னிகைச் சருக்க முற்றியது ஆகச் செய்யுள் 449 *****     நாலாவது துன்மனன்சருக்கம்   450      தூண்டுகின்றசெஞ்சுடர்கொள்சோதிதாள் பூண்டவன்புசேர்பொற்பின்மேலையோன் காண்டகுந்தவச் சூதன்கண்ணுறீஇ மீண்டுமோர்கதைவிளம்பன்மேயினான்   451      வீரவேடனைவென்றசௌனக வோர்கநீயிமூதுரைப்பக்கேட்டிடி லாருயிர்க்கெலாமாயுணல்கிடுஞ் சேரும்வல்வினையாவுந்தீர்க்குமால்   452      ... Full story

திருப்பூவணப் புராணம் – பகுதி – (11)

கி.காளைராசன் முதலாவது சூரியன் பூசனைச்சருக்கம்   231      ஓசைகொளித்தலத்துலகியாவையும் வீசியகனையிருள்விழுங்குகின்றவான் றேசுடைத்தினகரன்சிவலிங்கந்தனைப் பூசனைபுரிந்ததுபுகலுவாமரோ   232      பன்னருமாதவம்படிவமாகியே மன்னியசவுநகமகிழ்ந்துகேண்மியா வென்னலுமன்னவனியம்பருந்தவந் துன்னுநற்சூதனைத்துதித்தன்மேயினான்   233      உன்றனக்கிணையிலையுலகமூன்றினு முன்றனக்கிணையிலையுரைக்குங்காலையி லுன்றனக்கிணையுனையுரைக்குமாதலா லுன்றனக்கொன்றுளதுரைசெய்வாமரோ   234      அங்கண்வானகத்திருளகற்றுமாரழற் பொங்குவெங்கதிரவன்பூசையாற்றவே சங்கரன்விரும்பியேதானிலிங்கமா வங்கவணடைந்தவாறருளுநீர்மையால்   235      ஒன்றியகலையெலாமோதியேயுணர் வென்றிமேவியபுகழ்வியாதன்றன்னரு டுன்றியவருந்தவச்சூதமாதவ வின்றெமக்குரையெனவியம்பினானரோ   வேறு 236      கங்கைதங்கியசெஞ்சடிலசேகரன்முன்கண்ணகன்கதம்பமாவனத்திற் கங்கிதிக்கதனிலறைந்திடுகின்றவரைதலையிட்டகாவதத்தின் மங்குறோய்புட்பவனமதிலென்றுமன்னுமெம்பிரான்மகிழ்ந்தருளுந் துங்கமாதவநற்சவுநகவென்றுசூதமாமுனிவரன்சொல்வான்   237      அந்தநல்வனத்தினாதிகாலத்திலரியயன்முதற்கடவுளர்கள் வந்துபோற்றிசைக்குமாண்பினதாகிமலைமகள்வளர்க்கும்வான்றருவாய்ப் புந்திகொள்பாரிசாதமென்றொருபேர்புனைந்துநீங்காதுபொங்கொளியா யிந்திராதியர்சேரெண்டிசாமுகத்துமெங்கணும்பரந்துமிக்கிலகும்   238      கெழுதருநன்னீர்க்கிருதமாலையெனுங் கேழ்கிளர்வைகையங்கரைமேன் மொழியுமத்தருவின் மூலத்தினோங்கி முளைத்தெழுசிவலிங்கவடிவாய் வழிபடுமடியார்மனங்கொளநினைந்தவரந்தனைநினைந்தருள் புரிந்து விழைவினெஞ்ஞான்றும் வீற்றினிதிருப்பன்விண்ணவன்கண்ணுதற்பெருமான்   239      செங்கண்மால்விடையூர்சிவபிரான்றனக்குத்தெக்கிணதிக்கதிற்றிகழந்து மங்கலவிளைவான்மறைமுறைவழாதுமன்னியவத்தலந்தன்னி லங்கண்மாஞாலமெங்கணும்புகழுமழகியமின்னனையாகி யெங்கணாயகிதானிருந்தவம்புரிந்தே யியைந்திடுமியல்பினெஞ்ஞான்றும்   240      அன்னதொல்சிறப்பி னருந்தவமிழைக்குமந்தநற்பொற்கொடியான கன்னிதன்முன்னேகருங்கடற்றோன் றுங்கதிர்க்குலம்பரப்புமாதவன்றான் பன்னுமான்மாக்கள்பாவத்தை யொறுப்பான்பண்புறத்திருமணிகன்னி யென்னுநற்றீர்த்தமேழுலகேத்த வெழில் பெறத் தொட்ட தொன்றுண்டால்   241      இந்தநற்றீர்த்தந்தன்னையோரொருகாலிசைப்பவருறுபவமொழிவர் வந்ததிற்படிந்தமாத்திரையதனின்வருபிறப்பனைத்தையுமாற்றிச் சந்ததம்பொருந்துசச்சிதாநந்தத்தடங்கடற்றடத்தினிற்படிந்தே யந்தமாதியிலாவருளுடன்கலந்தேயார்வமாமுத்தியைச்சேர்வார்   242      சித்திரவலங்காரத்துடனுயர்வான்சேருமக்கற்பகமூலத் துத்தமதவங்கட்குறுதவப்பலங்க  ளுதவுமெம்பிரானுவந்திருந்தே யத்தருமலரா லருச்சனைபுரியுமன்பருக்காயிடையருளால் வித்தகமிகுநல்வேண்டுருக்கொண்டுவேண்டினார்வேண்டியதளிப்பான்   243      அன்னதொல்புட்பவனத்ததுநாப்ப ணதிமனோகரமிகவுடைத்தா யுன்னதமொருநான்கரையதாய்ச்சுற்றும்பாதயோசனையதையுடைத்தாய்ப் பன்னுமூவுலகும்பாரிசாதமெனப்பகர்வதாய்ப்பணைபலவுடைத்தாய் மன்னியபறவைவிலங்குகடம்முள்வருபகையொழிந்திடவைகும்   244      அத்தருநிழற்கீழமரிலிங்கத்தினருளினாலாயிரங்கதிரோ னித்தமாய்த்தனாதுபதம்பெறுகிற்பா னினைந்துநெஞ்சகங்கொண்டே சித்திரைத்திங்கட்சித்திரைத்தினத்திற்றேசுறப்பூசனை புரிவான் சுத்தநீராடித் தூயநீறணிந்து துலங்குகண்டிகைமணிபூண்டு   245      பொங்குலகேத்தும் பூர்வலிங்கத்திற் பொருந்தவாலுகங்கொடுதிரட்டி யங்கையினொன்றினமைத்ததினிகழ்த்துமாறு போலங்கணன்றன்னைக் கங்கைதங்கியசெஞ்சடிலசேகரமுங்கதிர்த்திரணிலவு கான்றொளிருந் திங்களங்கொழுந்துஞ்செங்கண்வாளரவுந்திருமுகமண்டலமைந்தும்   246      கண்கண்மூவைந்துங் கரங்களீரைந்துங் கவின்றிகழ்படைக்கலங்களுநஞ் சுண்டிருள்பரந்தகண்டமும்பகுவாயுற்ற நற்பன்னகாபரணங் கொண்டதிண்டோளுங்கோலமார்பகமுங்குலவுசங்கக்குழைக்காதும் புண்டரிகத்தினுரிபுனையரையும்பொருந்திய பொற்பதாம்புயமும்   247      சுத்தமாமிதயகமலத்தினின்றுஞ்சுழுமுனாமார்க்கத்தினாலே சித்தநேர்நிறுவித்துவாதசாந்தத்திற்சேர்ந்துறுசிறந்தமந்திரத்தா லத்தகுபிராணவாயுவால்வாங்கியலர்தருகரத்தினிலமைத்துச் சத்தியோடுரியசதாசிவமூர்த்திதன்னையே நன்குறநிசித்து   248      வண்ணமேவியநன்மதுமலர்தன்னைவண்கரங்கொண்டுபின்கூப்பி யுண்ணிகழ்சமனையுன்மனைக்கப்பாலோங்கியே நிட்களமாகித் தண்ணிலாவெறிக்குஞ்சந்திரரநேகர்தந்தநூறாயிரவொளிசே ரெண்ணருஞானவுருவமாஞ்சிவனையிலிங்கமத்தியத்தினிலிருத்தி   249      தாபனஞ்செய்தபின்றகுசந்நிதானஞ்சந் நிரோதனந்தந்து மாபரன்னறக்குச்சுவாகதார்க்கியமும்வழங்கியே காளகன்னிகையுஞ் சோபனவிலிங்கமுத்திரையுடனேதுலங்குகைகூப்புமுத்திரையுந் தூபமுமலிங்குதீபமுங்கொடுத்துச்சுகந்தநன்மஞ்சனமாட்டி   250      திலந்தருதயிலந்தேனுவைந்துவந்து சிந்தைகொள்கின்ற வைந்தமுத நலந்தருமான்பானண்ணிடுந்ததிநெய்நன்மதுகன்னலின்சாறு பலங்குளிர்தெங்குசந்தனக்குழம்புபத்தியினாட்டி நீராட்டித் துலங்கியவைகைத்துறையினீர்சுமந்தசுரிமுகச்சங்கநீராட்டி   251      மகிழ்தருதிருவொற்றாடையுஞ் சாத்திமருவுசெம்பட்டுடன் மன்னு மகமகிழ்கலவையாரமேலணிந்தேயரவகங்கணங்கரத்தமைத்துப் பகர்நவமணிகள்படர்வெயிற்கிரணம்பரப்புமாபரணமுமணிந்து திகழ்மணிமகுடஞ்செங்கதிரெறிப்பத்திருமுடியிலங்குறச் சேர்த்தி   252      பரவிடுநைவேத்தியம்பலவளித்துப் பாத்தியாசமனமுங்கொடுத்துத் திருமிகுதூபதீபமுங்காட்டித்திருவெழுத்தஞ்சையுஞ்செபித்தாங் குரியநற்பூசைப்பலனரற்குதவியோரிருகாலமுஞ்செய்து குருமலர்கொண்டுபணிந்தெதிர்முக்காற்கும்பிட்டுத்தட்டமுமிட்டு   253      ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.