Archive for the ‘தலையங்கம்’ Category

Page 2 of 3123

சிறு முதலீட்டாளரை நசுக்கும் மத்திய அரசின் அன்னிய முதலீட்டுத் திட்டங்கள்.

தலையங்கம் (26) பவள சங்கரி பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி மத்திய தர மக்களை பாடாய்ப்படுத்தி விட்டு, போக்குவரத்துத் துறை ஊழியர்களின் அகவிலைப்படியை முன் தேதியிட்டு இப்போது உயர்த்தி அளிக்க வேண்டியத் தேவை மாநில அரசிற்கு ஏன் என்று புரியவில்லை. மத்திய அரசின் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு, அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் ஆகியவற்றின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதன் பின்னணிதான் என்ன? அன்னிய முதலீட்டாளருக்கு 51 ... Full story

இலவசங்கள் தரும் அரசு – சுமத்தும் சுமைகள்!

இலவசங்கள் தரும் அரசு - சுமத்தும் சுமைகள்!
தலையங்கம் (25) பவள சங்கரி கேஸ் விலையிலும், டீசல் மற்றும் பெட்ரோல் விலையிலும் தற்போதைக்கு ஏற்றம் இல்லை என்ற செய்தியால் சற்று பெருமூச்சு விட்டனர் மக்கள்.அன்றாட,அத்தியாவசியத் தேவைப் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று பால்.அதன் விலை இன்று லிட்டருக்கு கிட்டத்தட்ட 7ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது நியாயமற்ற செயல் என மக்கள் கருதுவதிலும் நியாயம உண்டு. ஏற்கனவே, நம் நாட்டில் பட்டினிச்சாவு மற்றும் சத்துக் குறைவினால் 57 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் மேலும் கொடுமையான ... Full story

வல்லமை – சிந்தனை,செயல்,முன்னேற்றம் – தலையங்கம்

வல்லமை - சிந்தனை,செயல்,முன்னேற்றம் - தலையங்கம்
சத்யமேவ ஜெயதே! பவள சங்கரி விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டதன் மூலம் உலகையே உலுக்கிய இணையதளம் இந்த விக்கிலீக்ஸ். இதன் முதுகெலும்பாகச் செயல்படும் இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் , இன்னும் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளப்பியதும் நிதர்சனம். தங்களது தளத்தை முடக்க ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி நொந்த மனங்களுக்கும் தீப ஒளிச் சுடர் அளித்த தீபாவளி! பண்டிகைகள் , கொண்டாட்டங்கள் அனைத்துமே நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும், அதன் மூலம் வருங்காலங்களில் நம் பணிகளில் முழுமையான கவனம் செலுத்த ஒரு உந்து சக்தி பெறும் வகையிலும்தான் அல்லவா. அந்த வகையில் இந்த வருட தீபாவளி நம்மால் இனிதே கொண்டாட முடிந்தது. நம் சக மனிதர்களின் துயரங்களுக்கு ஒரு விடிவு ஒளி தென்படுவதனால் அந்தக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. ஆம் நம் அண்டை நாட்டுச் சகோதரர்களின் பல்லாண்டுக்கால தீராத வேதனையின் விடி ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி அவதானமின்மையால் ஏற்பட்ட அவதி! கொஞ்சும் மழலையின் அகால மரணம்! இன்றைய அவசர உலகில் கவனமின்மையால் ஏற்படும் அழிவுகள் ஏராளம். எத்தனையோ இது போன்று அழிவுகளை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்தாலும், ஒரு தாயின் கவனமின்மையால் தன் செல்லக் குழந்தையை தன் கையாலேயே கொல்ல வேண்டிய நெஞ்சம் பதைக்கச் செய்யும் துர்பாக்கிய நிலை நேற்று அரங்கேறியுள்ளது. பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையின் உயிர் தன் கவனமின்மையால், தன் கையாலேயே போவது போன்ற ஒரு கொடுமை கனவிலும் நினைக்க முடியாத ஒன்று. நாமக்கல் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்
பவள சங்கரி நீதி பரிபாலனம்! சோழநாட்டின், திருவாரூர் கோவிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் இருக்கும் , ஒரு புராதனச் சின்னமான கல்தேர் மண்டபம் பார்த்திருக்கிறீர்களா? தேர்க்காலில் ஒரு கன்றை ஏற்றிக் கொன்ற தம் மகனை அதே தேர்க்காலில் ஏற்றிக் கொல்ல கட்டளையிட்ட மன்னன் மனுநீதிச் சோழனின் நீதி பரிபாலனத்தை பறை சாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் அந்த கல்தேர்.  கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரம சோழனால் அமைக்கப்பட் ட திருவாரூர் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்
பவள சங்கரி என் இனிய இதயமே! செப்டம்பர் 29 இன்று உலக இதய தினம். இதயம் இல்லாத சீவன்கள் ஏது? அந்த இதயத்திற்கு இயற்கை எத்துனை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது! அத்தனையும் மீறி அந்த அழகான இதயத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துவது யாருடைய தவறு? இதய நோய்கள் என்று பார்த்தால் அது பெரும்பாலும் மனித சீவன்களுக்கே வருகிறதே.... அது ஏன் என்று சிந்தித்திருக்கிறோமா? ஆம் ஐந்தறிவு சீவன்கள் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, அதிக உடல் பருமனால் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்
பவள சங்கரி இயற்கை அன்னையின் ருத்ர தாண்டவம்! சென்ற ஞாயிற்றுக்கிழமை, அந்தி சாயும் வேளையில் , 6.11 மணிக்கு சிக்கிம் மாநிலத்தை மையமாக வைத்து , 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் சிக்கிம்-நேபாள எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது நூற்றுக்காணக்கான உயிர் இழப்புகளையும்,பெரும் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி   நெஞ்சம் பதறுகிறது.............. ’கொடுமை கொடுமை என்று போனால் அங்கொரு கொடுமை துள்ளிக் கொண்டிருந்ததாம்!’ அப்படித்தான் ஆனது ஒரு 23 குழந்தைகளின் நிலைமை! ஆமாங்க..... குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு,  தலசீமியா எனப்படும் ரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டு ரத்தம் செலுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தங்கள் கவனக் குறைவால், கேட்பவர்களின் இரத்தம் உறையக் கூடிய ஒரு செயலைச் செய்துள்ளனர்.  ஆம் அந்த 23 குழந்தைகளுக்கும் எச்ஐவி பாதித்த ரத்தத்தை அந்த மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். இதனால் அந்த 23 குழந்தைகளையும் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி நாட்டிற்கு நாம் என்ன செய்தோம்? நம் இந்திய மக்களின் அடிப்படை மனம் என்பது தெய்வ சக்தி என்கிற ஆன்மீகம் என்ற சக்தியின் தாக்கம் கொண்டது. நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அதை அழகாக, “ நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுட்ன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக் கொழுந்துவிட வைத்து அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை” என்பார் தம் ‘அக்னிச் சிறகுகளில்’. அந்த தெய்வ சக்தி நம்மை இலவசங்களின் பால் அதிக ஈடுபாடு கொள்ளச் செய்வது நிதர்சனமாகிறது. இலவசங்கள் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்.
பவள சங்கரி   ஊழல் எனும் புற்று நோய்! ரகுபதி ராகவ ராஜாராம்! பதீதபாவன சீதாராம்! கரையானைப் போன்று நம் நாட்டின் வளத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஊழல் எனும் பேயை விரட்ட ஒரு மாபெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது! யுத்தம் செய்பவர் ஒரு இளம் வீரரா என்றால் அதுவும் அல்ல. ஒரு 74 வயது முதியவர், தன் உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதம் என்ற காந்தியப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்யப் போகிறார் இவர் ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி சமதர்மக் கல்வி!   தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன், மாநில கல்வி வாரிய பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளில் தனித்தனியாக இருந்த பாடத்திட்டதை ஒரே பாடத்திட்டமாக ’சமச்சீர் கல்வியாக’ மாற்ற கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1 மற்றும் 6 ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்.
           இனிய விடுதலைத் திருநாள் தினம்!          எங்கே செல்லும் பாதை?   பல்லாண்டுக் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த நம் பாரத தேசம், தன்னலமற்ற பெருந் தலைவர்களின், போராட்டத்தினால்  ஓர் நாள் நடு இரவில் பெற்ற  சுதந்திரத்தால் இற்றைத் திங்களில், 64 ஆண்டுகளுக்குப் பிறகும், வளமானதொரு வாழ்க்கை பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்ற கசப்பான உண்மையே விடையாக அமைகிறது. பொருளாதாரம், தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு என்று ஒரு புறம் வளர்ந்து கொண்டிருந்தாலும், கொத்தடிமைகளாக பணி புரியும் சாரார் ஒரு புறமும், ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்.

வல்லமை - சிந்தனை, செயல், முன்னேற்றம் - தலையங்கம்.
பவள சங்கரி   மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ?   விஜயவாடா நகரம். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை ... Full story

வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்

பவள சங்கரி பேதை நெஞ்சே! சில நேரங்களில் நடக்கக் கூடிய சில விசயங்கள் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்றே கணிக்க முடியாத ஒரு குழப்பத்திற்கு இட்டுச் செல்லும். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லக் கூடிய அதே வேளையில் முக்கியமான அம்சங்களில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பும் உருவாகி விடுகிறது.அப்படித்தான் நம் தொட்டில் குழந்தைத் திட்டமும்... ஒரு புறம் பெண் சிசுக் கொலைக்கும் , வறுமையினால் பெற்ற குழந்தையையே விற்க வேண்டிய சூழலில் பிச்சை எடுப்பதற்கும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் சிக்காமல் இருப்பதற்கும் ஒரு முற்றுப் ... Full story
Page 2 of 3123
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.