- Thursday, December 22, 2011, 9:54
- கட்டுரைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
தெய்வ வழிபாடுகளில் சக்தி வழிபாடு மிகச் சிறப்பானதும், தனிச் சிறப்பு உடையதும் எனப் போற்றப் படுகிறது.. ஆதி சங்கரர் முதல் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவரும், நினைத்த நேரம் நினைத்த உரு எடுக்கும் தன்மையுடையவருமான கோரக்கச் சித்தர் வரை அன்னையை வழிபட்டு அவள் பாதகமலங்களைச் சரணடைந்தவர் பலகோடி. அப்படிப்பட்ட சக்தி வழிபாட்டில் முக்கியமாக நாம் கவனித்து ஆராதிக்க வேண்டியவர்கள் தான் அன்னையின் பரிவார தேவதைகளான அறுபத்து நான்கு யோகினிகள். அறுபத்து ...
Full story
- Wednesday, December 21, 2011, 21:55
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
இன்று சனிப்பெயர்ச்சி
ஜோதிடர்கள் மக்கள் நலன் கருதி இந்த சனிப்பெயர்ச்சியை ஜ்யோதிடரீதியாக ஆராய்ந்து 12 ராசிக்காரர்களிலும் இருக்கும் 27 நக்ஷத்திரக்காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களைத் தரும், என்னென்ன பரிகாரங்கள் செய்யவேண்டும், எந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும், எந்த தெய்வத்தை பூஜை செய்ய வேண்டும். என்னென்ன விதமாக பூஜைகள் செய்யவேண்டும் என்றெல்லாம் எழுதி மக்களை தெளிவிக்க முயல்கிறார்கள், ஆனால் ஆண்டி முதல் அரசன் வரை எல்லா மக்களுக்கும் சனிபகவான் என்றாலே தானாக பயம் வரும் என்பதே உண்மை....
Full story
- Wednesday, December 21, 2011, 14:53
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
அம்மையாரின் ஆலங்காட்டுப் பயணம்
கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அம்மையார் பாண்டிய நாட்டிலிருந்து கயிலைக்குச் சென்றதாகவும் பின் அங்கிருந்து திருவாலங்காடு வந்து முத்தி அடைந்ததாகவும் சேக்கிழார் கூறுகிறார். அவர் கயிலைக்குச் சென்றதாகக் கூறுவது ஒரு உபசார வழக்காக இருக்கக் கூடும். ஏனெனில் அம்மையார் கயிலையை இறைவனின் இருப்பிடமாகக் கூறவும் இல்லை, கயிலையைக் காண வேண்டும் என்று அவர் விரும்பியதற்கான அடையாளங்களும் அவரது பாடல்களில் இல்லை. ...
Full story
- Wednesday, December 21, 2011, 13:46
- Featured, கட்டுரைகள்
- 4 views
விசாலம்
சனி பகவான் வரும் புதனன்று 21ம் தேதி மார்கழி 5ம் தேதி {கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரத்தில்} கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலா ராசிக்குள் நுழைகிறார். இந்த இடத்தில் 16-12-14 வரை இருப்பார். துலா ராசி என்பது சுக்கிரனின் வீடு. ஆகையால் கலை, அழகு, ஆடம்பரம், காமம் போன்றவைகள் மக்களிடையே அதிகரிக்கும். கலையில் இயல் இசை நாடகமும் வருவதால் சினிமா டிவி கலைஞர்கள் புகழ் உயரும் வாய்ப்பு ...
Full story
- Tuesday, December 20, 2011, 9:29
- home-lit, கட்டுரைகள்
- 0 views
என்.கணேசன்
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
பெரும்பாலான மனிதர்கள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் நம்புவதும், எதிர்பார்ப்பதும் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருப்பதில்லை. நிஜமாக முடியாத ஒரு நேர்கோடான, சீரான வாழ்க்கைக்காக ஆசைப்படுகிறார்கள். அப்படி ஒரு வாழ்க்கை யாருக்குமே என்றுமே இது வரை அமைந்ததில்லை. இனி அமையப் போவதுமில்லை. அதனால் அவர்கள் எதிர்பார்ப்புகளும், நடைமுறை நிஜங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருக்க, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் பிரச்சினைகளாகவே காண்கிறார்கள். அதன் ...
Full story
- Tuesday, December 20, 2011, 9:06
- Featured, கட்டுரைகள்
- 0 views
இராஜராஜேஸ்வரி
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குட்டம் கிராமத்தில் குளக்கரையில் கேரளாவில் இருந்து வந்த சில குடும்பத்தினர் குடியேறினர். அன்றைய கேரளாவை ஆட்சி செய்த அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக இவ்வூரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பத்மனாபபுரத்தில் வாழ்ந்த போது அங்கே குடி கொண்டிருந்த தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.
அம்மனைப் பிரிந்து வாழும் துயரம் அவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டே ...
Full story
- Monday, December 19, 2011, 23:10
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தமிழ் கூறும் நல்லுலகம் படிப்படியாகத் தமிழர் அல்லாதோரின் வல்லுலகமாகிறது.
போரில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு.
ஈழத்தில் நடந்த நான்காவது ஈழப் போர் வைகாசி 2042இல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தோல்வியை அடுத்து ஈழத் தமிழரின் பராம்பரியத் தமிழ்த் தாயகத்தில், தமிழரல்லாதவரின் கை மேலோங்கி, சிங்கள மேலாட்சி நடைபெறுகிறது.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடும் தமிழ்கூறும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத் தமிழர் தாயகத்திலும் தமிழரல்லாதோரின் கை மேலோங்கி உள்ளது.
போரில் தோல்வியால் அல்ல, இந்திய ஒன்றியத்தின் பகுதியாகத் தமிழகமும் புதுச்சேரியும் இருப்பதால்....
Full story
- Monday, December 19, 2011, 12:51
- கட்டுரைகள்
- 0 views
டி.என்.இளங்கோவன்
மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் சேகருக்கு ஒரே படபடப்பு !
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மதிப்பெண்களை குறிப்பிடும் இடத்தில், ஒரு செமஸ்டரில் 78% க்கு பதிலாக 87% என்று தான் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை, நேற்று இரவு தான் கண்டு பிடித்தான், எதேச்சையாக விண்ணப்பத்தின் பிரதியைப் பார்த்த போது.
இன்று ஒரிஜினல் மார்க் ஷீட் காட்ட வேண்டும். எப்படியும் ...
Full story
- Sunday, December 18, 2011, 11:30
- கட்டுரைகள், ஜோதிடம், வார ராசி பலன்
- 0 views
பிரபல ஜோதிடர் காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம் : இந்த வாரம், நன்மை தரும் பட்டியலில், புதன் உள்ளார். வியாபார வட்டத்தில் இருந்த தேக்க நிலை மாறி, மீண்டும் பழைய சுறுசுறுப்பு உண்டாகும். செவ்வாய்-5-ல். பணியில் இருப்ப வர்கள், உயர்மட்ட அளவில் உள்ள அதிகாரிகளிடம் பழகும் போது எச்சரிக்கையாய் இருக்கவும். இல்லையெனில், பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சனி 7-ல். சுய தொழில் புரிபவர்கள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் ...
Full story
- Saturday, December 17, 2011, 15:19
- கட்டுரைகள்
- 0 views
பாலுகீதா
இப்படியும் சிலர்......! சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். என்னவென்று கேட்டேன். அவர் தனது மனவருத்தத்துக்கான காரணத்தைச் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
அந்த நண்பர், ஒரு குடும்பத்துடன் மிகுந்த நட்புடன் கடந்த இருபது வருடமாகக் கலந்து பழகி வந்துள்ளார். அந்த அக்குடும்பம் மட்டுமல்லாது அவர்கள் சொந்தங்கள் அனைவரும் இவருடன் மிகவும் அன்பாகப் பேசிப் பழகி வந்துள்ளனர். எங்கு சென்றாலும் இவரையும் இவரது குடும்பத்தாரையும் ...
Full story
- Saturday, December 17, 2011, 11:49
- Featured, கட்டுரைகள், சட்ட ஆலோசனைகள்
- 0 views
முனைவர் நாகபூஷணம்
சென்ற முறை பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமைகளைப் பற்றிப் பேசினோம். இம்முறை மண்ணில் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு உண்டான உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமை , மண்ணில் கண் மலரும் வரை , மண்ணில் மலர்ந்த பின் வயதுத் தகுதி அடையும் வரை (அதாவது 18 வயது முடியும் வரை age of majority) குழந்தையின் இயற்கையான பாதுகாவலரை அதாவது பெற்றோரை (natural guardian) சார்ந்திருத்தல் இயல்பு . சில வேளைகளில் பெற்றோர் கவனிக்க இயலா நிலை நேரலாம். ...
Full story
- Friday, December 16, 2011, 13:18
- கட்டுரைகள், பொது
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
10.12.2011 அன்று ஏற்பட்ட முழுச் சந்திர கிரகணத்தை அனைவரும் கண்டு ரசித்திருப்பீர்கள். இதைக் குறித்து எத்தனையோ மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றைத் தவிர்த்து கிரகணம் எதனால் ஏற்படுகிறது, எத்தனை வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன? அவைகளுக்குள் இருக்கும் வேறுபாடுகள் என்னென்ன? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நிலவு, பூமி, சூரியன் இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் அல்லது மிக மிக அருகில் சந்திக்கும் போது பூமியின் ...
Full story
- Wednesday, December 14, 2011, 14:13
- கட்டுரைகள்
- 0 views
டி.என். இளங்கோவன்
"என்ன செய்யப் போறேனோ தெரியல.. இந்த வருஷம் என் பையன் +2 முடிக்கப் போறான்.. அவன் படிக்கறதப் பாத்தா பணம் கொடுத்துத்தான் எஞ்சினியரிங் சீட் வாங்கனும் போல இருக்கு. இருக்கிற சேமிப்பு இதிலியே போயிடுச்சுன்னா,அடுத்த வருஷம் என் மூத்தப் பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப் போறேன்.. ஒன்னும் புரியல.. ஒரே கவலையா இருக்கு.."
"என்னமோ பிஸினஸ் சரியாவே போகலை. கம்பெனியை இழுத்து மூட வேண்டிய நிலைமை வந்துடுமோ? பயமா ...
Full story
- Wednesday, December 14, 2011, 13:01
- Featured, newsletter, கட்டுரைகள்
- 6 views
காயத்ரி பாலசுப்ரமணியன்
வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும் கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆதலால்தான் ஆய கலைகள் அறுபத்து நான்கில், ஜோதிடமும் சேர்க்கப் பட்டுள்ளது. வாழ்வை வளம் பெறச் செய்யும் ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
கணிதம்: இது பெரும்பாலும், ஜாதகத்தோடு தொடர்பு கொண்டு, ...
Full story
- Tuesday, December 13, 2011, 10:14
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சக்தி சக்திதாசன்
கவிஞன், தத்துவாசிரியன், எழுத்தாளன், இலக்கியவாதி எத்தனை வடிவங்களில் இவ்வினிய மனிதன் என் இதயத்தினில் வலம் வருகிறான்?
அத்தனைப் பாக்களை இத்தரை மீதினில் பத்தரை மாற்றுத் தமிழருக்காய்ப் படைத்திட்ட இக்கவிஞன் மாபெரும் அறிஞனா? முதுகலை ஞானியா?
இல்லையே !
வெறும் எட்டு ஆண்டுகள் மட்டும் கல்விதனைக் கற்று எட்டாக் கவிகளுக்கெல்லாம் எட்டா வகையில் எளிமை மிகப் பாடல்களை யாத்து எத்துணைச் சாதனை படைத்த இக்கவியரசன் தனை என்னெஞ்சில் எண்ணும் ...
Full story