- Wednesday, April 18, 2012, 5:10
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
வெசீரா...
சனி 07-04-2012, அன்று காலை சுமார் 10 மணி அளவில், ஓர் அடர் சாம்பல் நிறப் புறா என் மாடி ஓரத்தில் வந்து அமர்ந்திருக்கக் கண்டேன். நலமின்றி இருந்திருக்கலாம். (இல்லையெனில் அவை அருகே வருமா?!).அறையினுள் கொணர்ந்தேன். அது சிறிது பறந்து என் பெற்றோர் படத்தின் மீது பற்ற முயன்று ,சரிந்து கீழே வந்து என் நூல்அலமாரியில உட்கார்ந்து விட்டது. நீர்.வாழைப்பழம் ,கேரட்,தர்பூசணி துண்டுகளை ஒரு தட்டில் வைத்து நீட்டினேன். ஆனால் அது எதையும் ...
Full story
- Wednesday, April 18, 2012, 5:10
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்
படிப்பில் சிறந்த குழந்தைகள் மட்டுமே வேண்டும் என்று கல்விக்கூடங்கள் எவ்வாறு கோர முடியும்?
எந்த ஒரு பெற்றோரும் தமது குழந்தை தம்மை விடவும் கூடுதலான கல்வியறிவு பெற்றுச் சிறக்க வேண்டும் என்றே பிரயாசைப்படுவர். “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது தானே!
இது பெற்றோர்களின் இயற்கையான சுபாவம். இந்த ஒரு சுபாவம் தான், இந்த ஒரே ஒரு சுபாவம் தான் கல்வி நிறுவனங்களுக்கு வெல்லக் கட்டியாக ...
Full story
- Wednesday, April 18, 2012, 5:10
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
அவ்வை மகள்
சந்தமுறப்பாடுகிறேன் முழுமனதாய் அந்தாதிஅந்தாதிச் சந்தமெந்தன் செல்கதிக்குச் சிந்தைக்கு சிந்தை துரகமெனவோடியப் பிந்தை நிலைநிலையாடிப் படம் காட்டவென் சித்தாம்புயத்துபுயமிருந்தும் கால்கையிருந்துமன்றொன்றும் ஒன்றும் வில்க்ககிலீர் வாலாபாக் குண்டுமழைமழைக்குருதி மண்ணைச் செம்மைச் சூளையிடசூளையிடம்பெயலாக் கரம் சுற்றக் கண்முன்னேமுன்னே ஆங்கெழுந்த மத்துகளில் துடித்தெழுந்து எழுந்தழைக்கா மரணம் பிழைக்ககிலீர் பலி வீணே!வீணேபோகுமோ அவர்தம் பாடுகளும் பாதைகளும்பாதைகளும் மீள்பார்வைதரும் புத்தாண்டு பிறந்திடவும்பிறந்திடவும் நந்தனத்தில் முந்தைநிலை நினைவகற்றோம்நினைவகற்றோம் வையத்து ...
Full story
- Wednesday, April 18, 2012, 5:00
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
முகில் தினகரன்
கருவறையில் கண்டு வந்த கனத்த நிம்மதியைக்காலம் முழுதும் தேடினேன் கண்டிலேன் எங்கெனும்
வகுப்பறை வாசலில் வாஞ்சையுடன் தேடியதில்வண்டிச்சுமைப் பாடங்களே வருத்தத்தின் விருத்தமாய்...
மணவறைக் கோட்டத்தில் மாண்புடனே தேடியதில்இல்லறச் சுமைகளே இறக்க முடியாச் சோகங்களாய்….
பள்ளியறைக் கூடலில் பருவத்தின் மேய்ச்சலில்பரிதாபமாய்த் தேடியதில் பந்தங்களே பாச வலையாய்…
பூஜையறை வேள்வியில் புனஸ்காரப் புதையலில்புனிதமாய்த் தேடியதில் புரிபடா புதிர்களே புற்றீசல்களாய்…
சமையலறைச் சதுக்கத்தில் சாமார்த்தியமாய்த் தேடியதில்வியாதிகளின் விலாசங்களே விளங்காத வியப்புக்களாய்….
இதயமெனும் கோட்டையில் இங்கிதமாய்த் தேடியதில்இயந்திர வாழ்க்கையின் யதார்த்தங்களே இயல்புகளாய்…
அறிவுத் ...
Full story
- Monday, April 16, 2012, 7:33
- இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
காற்றினும் வேகமாக கடுகி விரைந்து கொண்டிருந்தது அம்சவேணி .ஆம் இளவரசன் மணிமாறன் மனோவேகம் அவனுடைய செல்லக் குதிரையை செலுத்திக் கொண்டிருந்தது. லகானை அவன் சுண்டும் லாவகத்துக்கு ஏற்ப வளைந்து நெளிந்து துள்ளிக் குதித்து, முன்கால்களை உயரத் தூக்கிப்பிளிறி, பின்னங்கால்களை தரையுதைத்து .மணிமாறனின் கால்கள் தன்னுடைய வயிற்றில் நுணுக்கமான மர்மஸ்தானங்களின் மூலத்தை கட்டை விரலால் சுழற்றும் போதெல்லாம் கடுகி விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தது அம்சவேணி.
கன்னங்கரேலென்ற அதன் உருவம் அன்று காலையில் பணியாளர்களின் கவனிப்பால் மெருகேறி அந்த ...
Full story
- Monday, April 16, 2012, 5:34
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வையவன்
மனித நேயத்திற்கும்
வனித நேயத்திற்கும்என்ன வித்தியாசம்?வயசு வித்தியாசம்.மனித உறவுக்கும்புனித உறவுக்கும்என்ன வேறுபாடு?மனசு வேறுபாடு உலக அழகிக்கும்உள்ளூர் அழகிக்கும்என்ன வித்தியாசம்?மேக்கப் வித்தியாசம்.தலைவர் தொடர்புக்கும்தொண்டர் தொடர்புக்கும்என்ன மாறுபாடு?தொகுதி மாறுபாடு.காதல் கனவுக்கும் கல்யாணக் கனவுக்கும் என்ன வேறுபாடு?கயிறு வேறுபாடு.
படத்திற்கு நன்றி :
http://www.inspirationline.com/EZINE/16JAN2006.htm
Full story
- Monday, April 16, 2012, 4:44
- Featured, இலக்கியம், நேர்காணல்கள்
- 0 views
சிறப்பு நேர்காணல்
சந்திப்பு: விஞ்ஞானி வி.டில்லிபாபு
நண்பரை சந்திக்கும் போது 'வணக்கம்' சொல்கிறீர்கள். 'வணக்கம்' என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து நண்பரின் காதுகளுக்கு எவ்வளவு வேகமாக சென்றடைகிறதோ அதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கக்கூடியது பிரமோஸ் ஏவுகணை.
பிரம்மபுத்திரா, மாஸ்கோவா நதிகளின் பெயர்களின் முற்பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பிரமோஸ் விண்வெளி என்ற இந்திய-இரஷ்ய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பே இந்த ஏவுகணை.
கப்பலிலிருந்தோ, விமானத்திலிருந்தோ, தரைவழி வாகனத்திலிருந்தோ இதை ஏவி, விரையும் கப்பல்களையும் ...
Full story
- Monday, April 16, 2012, 4:29
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
மலர் சபா
புகார்க்காண்டம் - 03. அரங்கேற்று காதை
யாழ்ப் புலவன்
ஏழிசைதனை
இருவரிசைகளாக்கிச் செய்யப்பட்ட'செம்முறைக் கேள்வி' என்னும் சிறப்புப் பெயர் பெற்றது யாழ். செம்பாலை முதலியஎழுபாலைப் பண்களையும்அவற்றுக்கிடையே தோன்றும் ஐந்து அந்தரப்பாலைப் பண்களையும்அவற்றின் இணை நரம்புகளையும்அணைத்து இசைத்துச் சென்றிடும் யாழ். இசைத்தமிழின் இலக்கணங்கள்இம்மியளவும் குறைந்திடாதுவட்டப்பாலையென இசைத்துஅளவைகளின் அழகோடுஅரங்கேற்றுவது யாழ். வட்டப்பாலை முடியும் இடத்துவன்மையாய் நிற்பது 'தாரம்'....
Full story
- Monday, April 16, 2012, 3:59
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி(1886 -1968)
‘தொன்று தொட்டு வரும் பழக்கம், கடவுட்பணி’ என்று தேவதாசி முறைக்கு ஆதரவாக ஆண் வர்க்கம் அலட்டிய போழ்து, ‘அவ்வாறெனில் அவருடைய சகோதரிகளும் மகள்களும் இனி பொட்டுக்கட்டி கடவுட் சேவை செய்யட்டும்’ என்று தைரியக் குரல் எழுப்பியது ஒரு பெண், அன்றைய சட்டசபையில். ஒரு நிமிடம் சபையே அதிர்ச்சியில் மௌனமானது. இதன் விளைவு, தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.
அப்பெண் குரலுக்குரியவர் புதுக்கோட்டையில் உதித்த ‘புரட்சி முத்து’ டாக்டர் முத்துலட்சுமி அவர்கள். ...
Full story
- Sunday, April 15, 2012, 13:06
- கட்டுரைகள், ஜோதிடம், வார ராசி பலன்
- 0 views
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: கலைஞர்கள் தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி வெற்றி பெறலாம். மாணவர்கள் சிறு பூசல்களைப் பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியப் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகள் தானே குறையும். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொதுப்பிரச்னைகளைப் புத்திசாலித் தனமாகவும், பொறுமையாகவும் கையாளுதல் அவசியம். ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுகையில், வியாபாரிகளுக்குக் கிடப்பில் கிடந்த சலுகைகளும், கைக்கு வந்து சேரும். ...
Full story
- Saturday, April 14, 2012, 7:23
- இலக்கியம், கட்டுரைகள், திரை
- 1 views
சூர்யா
முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போலவே லைட்டர் சப்ஜெக்ட் படமாக ஒரு பீல் குட் மூவியை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தில் ஹீரோ உதயநிதி சொல்வதை போலவே “ஏதோ ஒண்ணு குறையுது” அதை கடைசியில் சொல்றேன்.
ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் வேலை வெட்டி இல்லாத ஹீரோ, அவருக்கு எப்போதுமே உதவ காத்திருக்கும் நண்பன் என்று காமெடியை மட்டும் நம்பி செலவை பற்றி கவலைப்படாத ...
Full story
- Friday, April 13, 2012, 11:54
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
இதோ,
இன்னுமொரு புத்தாண்டு.
வாழ்வின் கணக்கில் இன்னுமொரு பக்கம்.
கர வருடத்தை வழியனுப்பி விட்டு நந்தன வருடம் பிறந்திருக்கிறது. இந்தச் சித்திரை மாதம் முதல் தினத்தை நாம் தமிழ்ப்புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறோம். என்னதான் தமிழ்ப்புத்தாண்டு என்றாலும் இது தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில், முக்கியமாக எங்கள் நாஞ்சில் நாட்டுப்பகுதியில் இன்றும் கேரளச் சாயலுடன் விஷூக்கனி கண்டே கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் தாக்கத்தில் தமிழகத்தின் ஒரு ...
Full story
- Friday, April 13, 2012, 6:56
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 0 views
பவள சங்கரி
வாழ்வியல் வண்ணங்கள் (1)
பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ...
Full story
- Friday, April 13, 2012, 5:30
- இலக்கியம், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
கல்லக்குடிசந்திப்பு-3
தோழி
தோழிக்குச் சொல்வதுபோல்ஒரு கடிதம்கல்வெட்டாய்ச் செதுக்கிக்கலைவெட்டாய்அனுப்பிவைத்தேன்
அடுத்தநாள் காலைஅதேவேளைமீண்டும்ஒரு கடிதம்மேசையில் இருந்தது
உள்ளுக்குள் கரைபுரளும்உற்சாகம்தான்
சொல்லமுடியாதசுதிகூடித்துடித்தது நாடி
இன்றைக்குப்புயலில்லைதென்றல்தான்
மந்தமான வானிலைபோல்அமைதியான மனநிலை
பரபரப்பில்லாதபக்குவம் வந்தது
உறையைப் பிரித்துஉள்ளதைப் படித்தேன்உள்ளத்தைப் படித்தேன்
நேற்றுகவிதையோடு இருந்த கடிதம்
இன்றுஎல்லையைத் தகர்த்துநெகிழ்ந்து நகைத்தது
கடிதம்வரைந்த பாங்கும்தோழி வேடத்தில்சொன்னமுறையும்புதுவெளிச்சம்முகத்திற்கும்புதுத்தெளிவுமனத்திற்கும் வந்ததாம்;தந்ததாம்
நலம்நலமறியக் ...
Full story
- Friday, April 13, 2012, 4:55
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ராஜி வெங்கட்
நாட்கள் சேர்ந்து மாதம் பிறக்கின்றது
மாதங்கள் சேர்ந்து வருடம் பிறக்கின்றது.
நிமிடங்களில் நொடிகளும்மணிகளில் நிமிடங்களும் நாட்களில் மணிகளும் மறைகின்றது
என்றால்,
எது பிறக்கையில் மனித பகை மறையும்?
எது பிறக்கையில் மனித வளம் பெருகும்?
எது பிறக்கையில் நம் பொறாமைகள் அழியும்
அன்பு!!!!!!ஆம்!
பிறக்கும் வருடங்களில், நாட்களில்,மணிகளில், நிமிடங்களில். நொடிகளில்பூக்கும் அன்பைக் கொண்டாடுவோம்பண்டிகை போல!!!!
பூவையும் கனியையும் மட்டும் காணாமல்
பூத்த அன்பை கனிய விட்டு சமமாகக் காண்போம் அனைவரையுமே -விஷுக்கனியாக.
விஷு(சமம்) கனி ...
Full story