- Wednesday, May 16, 2012, 4:23
- இலக்கியம், சிறுகதைகள்
- 2 views
விசாலம்
காலைப்பொழுது. 'பால்' என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க முடியவில்லை... தலைவலி, மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது மழையில் நனைந்ததால் இருக்குமோ? அல்லது சைனஸ் தொந்தரவோ ? துப்பட்டாவை எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன், துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்பு போல் சுருண்டு கிடக்கிறது ..இப்போது அது என் தலையில் ஏறியது ...என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார். காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா சுவர்க்கமா, ஒன்றும் தெரியாது அவருக்கு.
நல்ல வேளை, காலைக்காப்பி ...
Full story
- Wednesday, May 16, 2012, 4:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வையவன்
விற்றே வாங்கலாம்
விற்க வந்தான் பரதேசிவிலை பேசினான் சுதேசிபடிந்தது பேரம்கைமாறியது தேசம்தலைமுறைகள் கழிந்துகண்ணீர் சிந்திக் குண்டடிப்பட்டுசிறையில் அடைந்துகொடிகள் தூக்கிஉப்புக்காய்ச்சிமறுமுறை நடந்ததுகைமாற்றம்ஏன் சிரமமென்றுவிற்றே வாங்கிக்கொள்ளவந்திருக்கிறது உலகமயமாக்கல்!
படத்திற்கு நன்றி
http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=84867
Full story
- Monday, May 14, 2012, 5:10
- இலக்கியம், கட்டுரைகள்
- 3 views
(மே 7 - 13, 2012)
திவாகர்
சில்லறை விஷயங்கள் என்பதாக ஒரு நகைச்சுவை கட்டுரை ஒன்றினை சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான 'குமுதினி' 1933 இல் ஆனந்த விகடனில் எழுதி இருந்தார். சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் பற்றி நகைச்சுவையாகவும், அதே சமயத்தில் அதில் உள்ள முக்கியத்துவத்தையும் பற்றிய செய்திகளும் அந்தக் கட்டுரையில் இருக்கும். கல்கி மிக விரும்பிப் படித்த கட்டுரையாக பின்னாளில் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்..
சரி, ...
Full story
- Monday, May 14, 2012, 5:07
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
அவ்வை மகள்
இயற்கைக் கொடைஎன்பர்
இறைவன் அருளென்பர் பிறப்பின் ஊற்றென்பர்பிறவிப் பயனென்பர் பாசப்பேழைஎன்பர் விசுவாசக் கோட்டைஎன்பர் பேசும் தெய்வமென்பர் நேசக் குன்றென்பர்அணை இவளென்பர் அரண் இவளென்பர் அன்பு இவளென்பர் அமைதி இவளென்பர் ஆற்றல் இவளென்பர் தேற்றல் இவளென்பர் உறுதி இவளென்பர் ஊக்கம் இவளென்பர் இரக்கம் இவளென்பர் நெருக்கம் இவளென்பர் தியாகச் சுடரென்பர் மனந் ...
Full story
- Monday, May 14, 2012, 5:06
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
முகில் தினகரன்
இளைஞனே!
அன்னையிடம் அமிழ்துண்ட அனிச்சமலர் உதடுகளில்அமிலத்துகள்களா?
மழலை குழைத்து மிருது காட்டியமகிழம்பூ நாவில் மரணத் துணுக்குகளா?
யார் சொன்னது?புத்துணர்ச்சிப் புதையல் அந்தப் புதை குழிக்குள் உள்ளதென்று?
உன்வாழ்க்கை ஏட்டின் பக்க எண்ணிக்கைவலுக் கட்டாயமாய் கிழிபடுவதுவாலிபக் கண்களுக்குவசப்பட வில்லையா?
உன்விழிகளின் விளிம்புகளில் கரு வளையம் வரைந்தகல்லறை விரல்கள் பான் பராக் பரல்களென்பதுபுரிய வில்லையா?
உன்சுறுசுறுப்பு வீணையில் சுகராகம் மீட்டிடலாகிரிக் குதிரைக்குலாடம் அடிக்கும்...
Full story
- Monday, May 14, 2012, 5:00
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
உமா மோகன்
இடுப்பு தரிக்கா காற்சட்டைக்கு
அரைஞாண் கயிறுக்காப்பு..முறுக்குவாளியில்மட்டுமன்றி கடுகுடப்பி சில்லறையிலும் வைத்திருப்பாய் என் தீனி...பால் காசு,பயிரெடுப்பு...உன் எல்லா வரவிலும் என் செலவு...அழுக்குப் படிந்த உன் மஞ்சள் கயிறு நினைவிலாடுகிறது இந்த அடையாள அட்டையை தொங்கவிடும்தோறும்.....வெடிப்புகளுக்கு இட்ட மஞ்சள் விளக்கெண்ணையால் கறை படிந்து போன உன் பாயைப் பார்ப்பதுண்டு அம்மா ...
Full story
- Monday, May 14, 2012, 5:00
- இலக்கியம், சிறுகதைகள்
- 9 views
இளங்கோவன்
நொச்சு நொச்சென்று எதையாவது பேசிக்கிட்டிருக்கும் கிழவியைப் போல நச நசவெனத் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்குது மழை. அடித்தும் பேயவில்லை. அசரவும் விடவில்லை இந்த நாலு நாளாய்.
மணிமேகலை ஆச்சிக்கு மழை மேல் அவ்வளவு கோவம். கொல்லையில் கட்டியிருக்கும் ரெண்டு எருமையும் பசியில் கத்துற சத்தம் வேறு, அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. முடியாத உடம்புடன், கொல்லைப் பக்கம் எழுந்து போனாள்.
“ஈர வைக்கலை திங்க முடியலையா? பருத்திக் ...
Full story
- Monday, May 14, 2012, 4:54
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஐயப்பன் கிருஷ்ணன்
குயிலின் ஓசைக்கு உதவுவதாய் எண்ணி
குழலை எடுத்து ஊதப் போனான்...குழல் மட்டும் போதாதென்று கூடவே மத்தளம்வேணுமென்றான்
மத்தளம் வேகம் அதிகரிக்ககுழலின் ஓசையும் கூக்குரலாகபாவம் குயிலும் பறந்து போனது
குயில் மீண்டும் வருமென எண்ணிகுழலூத அவன் காத்திருக்கிறான்மத்தளக்காரனும் மருகி நிற்கிறான்
மருண்ட குயில் மறுபடி வருமா எனமரத்தில் இலைகள் சலசலக்கின்றன
படத்திற்கு நன்றி
http://flutesndrumsdonaghadee.webs.com/ Full story
- Monday, May 14, 2012, 4:28
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
சமீபத்தில் ஒரு பெண்மணி மிகவும் ஆசைப்பட்டு முருங்கைக்காய் சாம்பார் ஊற்றிக்கொண்டு உணவை அள்ளி விழுங்க ஆரம்பித்தாள், அந்தப் பெண்மணிக்கு முருங்கைக்காய் மிகவும் பிடிக்கும் போல இருக்கிறது, திடீரென்று புரைக்கேறியது அவருக்கு, மூச்சுவிடக்கூட முடியாமல் தவித்தாள் அவருடைய உறவினர்கள் மிகவும் பயந்துபோய் அந்தப் பெண்மணியை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்,அந்த மருத்துவர் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து ஆராய்ந்தார் ,,அப்போது அவர் கண்ட உண்மையைக் கூறினார்
அந்தப் பெண்மணி முருங்கைக் காயைக் கடித்து ...
Full story
- Monday, May 14, 2012, 4:20
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பாகம்பிரியாள்
வாய் திறந்து பேசாமலே
அனைத்தையும் சொல்லும் அம்மாவின் அழகு முகம்! அப்பா வருகிறாரென்றால், அவளின் விழிகள் தாழ்ந்து விடும்.சந்தோஷமென்றால், அவளின் சிவந்த கன்னக் கதுப்பும் சிரிக்கும். அவள் வருந்திக் கொண்டிருக்கையில்,அவளின் வட்ட முகம் வாட்டத்தில் நீண்டு கிடக்கும் பாய் போல். சிந்தனைக் களத்தில் அவள் இருக்கிறாளென்பதைஏறிக்கிடக்கும் புருவம் காட்டிக் கொடுக்கும். பிள்ளைகளாய் நாங்கள் தவறு செய்கையில், பேசாமல் அவள் விழிகள் ...
Full story
- Monday, May 14, 2012, 4:01
- இலக்கியம், சிறுகதைகள்
- 1 views
நீலகண்டன் (செம்பூர் நீலு)
நான் செம்பூரிலிருக்கும் அஹோபில மடத்திற்கு வழக்கம் போல் மாலையில் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை நல்ல கூட்டம். தீபாராதனை முடிந்த பிற்பாடு தீர்த்தம் சடாரி ப்ரசாதம் வாங்கிக்கொண்டு கோவிலை விட்டு வெளியில் வரும்போது தான் வித்யாவை கவனித்தேன். வித்யாவும் அவளின் கணவர் சுந்தரும் அப்போது தான் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். அவர்கள் என்னை கவனித்த்தாக தெரியவில்லை. நான் வலுவில் அவளிடம் சென்று “ எப்படி இருக்காய் வித்யா. வீட்டில் எல்லாரும் சௌக்கியமா நாம பார்த்து ...
Full story
- Monday, May 14, 2012, 0:32
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
தி.சுபாஷிணி
ஆம்! அம்மா அதிகம் பேசமாட்டாள். இதோ! இப்பவும் பேசாதுதான் கிடக்கிறாள். ஆட்கள் ஒருவர் ஒருவராய் வரத் தொடங்கி விட்டனர். எனது உறவுகளும், அம்மாவின் உறவுகளும் அப்பாவழி எங்களுக்குக் கிடைத்த உறவுகளும் வர தொடங்கிவிட்டனர். எங்களுக்கு உறவுக்காரர்கள் மிகவும் குறைவு. அப்பாவின் பொதுத் தொண்டின் பயனால் நண்பர்கள் அதிகம். அம்மா கல்யாணத்திற்கு போனாலும் சரி, கருமாதிக்குப் போனாலும் சரி, ஓரே மாதிரியாகத்தான் போவாள். அவளுக்கு அதில் ஒன்றும் வேறுபாடு தெரியாதா? இல்லை அவள் அதில் காண ...
Full story
- Friday, May 11, 2012, 6:13
- இலக்கியம், கட்டுரைகள், திரை
- 0 views
மோகன் குமார்
வசூல் ராஜா எனக்கு மிகப் பிடித்தமான படம் . ஹிந்தியில் அதன் இரண்டாம் பகுதி Lage Raho Munna Bhai முதல் பகுதியைவிட மிக நன்கு இருந்ததாக கூறினர். ஆங்கில சப் டைட்டிலுடன் இந்தப் பட டீவிடீக்காக ரொம்ப நாள் தேடி சமீபத்தில் தான் கிடைத்தது.
கதை
முன்னாவும் அவன் நண்பன் சர்க்கியூட்டும் கடன் வாங்கி திரும்பத் தராதவர்களை மிரட்டி பணம் வாங்கும் (அதே ) தொழில் செய்கின்றனர். முன்னா ஒரு ரேடியோ ஜாக்கியின் ...
Full story
- Friday, May 11, 2012, 5:23
- இலக்கியம், கவிதைகள்
- 2 views
பூட்ட ஏதும்
பொருளிலாத போதும்பூட்டிச் செல்வது வழக்கத்தின் காரணமாய் நிகழ்கிறது.கதவைத் திறக்கும்போது ஞாபகமாய் மனசைப் பூட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது .....உள் சுவர்களெங்கும் பிறர் அறியாப் பூட்டுகள் தொங்கிக்கொண்டே இருக்கின்றன .....தேவைக்கேற்ப அவரவர் எடுத்துக் கொள்வதுண்டு சிலசமயம் தனக்கு....சிலசமயம் பிறர் வாய்க்கு....பலசமயம் விஷயங்களுக்கு ....எப்போதும் கனவுகளுக்கு... படத்திற்கு ...
Full story
- Friday, May 11, 2012, 5:21
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
புத்தகம்மலைப்பாம்புவாசிக்கிறவர்எழுதுகிறவர்அச்சடிக்கிறவர்விற்கிறவர்யாரானால் என்ன?வளைத்துக்கொண்டால்விடாதுஉயிருள்ளவரைபழைய காகிதவியாபாரி உட்பட!
http://arthuride.wordpress.com/2011/12/29/serpent-in-the-garden/ Full story