- Thursday, March 8, 2012, 19:57
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
முத்துமாரி - உள்ளத்தில் கள்ளமில்லா கிராமத்து மக்களின் காவல் தேவதையாய் இருந்து மறம் அழித்து அறம் வளர்க்கும் கலியுக தெய்வம். காசு பணம் செலவில்லை. கையெடுத்துக் கும்பிட்டாலே போதும். ஆசார அனுஷ்டானங்கள் எதுவும் அவள் கேட்பதில்லை.
பாமரர்கள் கேட்பதெல்லாம் அவள் தருவாள். அவளை வழிபடுவதில்தான் எவ்வளவு ஆனந்தம்! ஆடல், பாடல், கொண்டாட்டம்! உலகத்து நாயகியான முத்துமாரி, உலகில் உண்மை நிலை பெற, தேச முத்து மாரியாய் நின்று அருள்மழை பொழிவதை ...
Full story
- Thursday, March 8, 2012, 19:23
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
ஹோலி வடநாட்டுப் பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால் தமிழ்நாட்டிலும் கொண்டாடப் படுகிறதே! சமீப காலங்களில் கொண்டாடப் படுவதைச் சொல்லவில்லை. நாம் காமன் பண்டிகை என்று கொண்டாடுகிறோமே. அந்தப் பண்டிகைதான் நம்மூர் ஹோலி. ஹோலி என்ற சொல்லுக்கு எரித்தல் என்று அர்த்தமாம். இதுதான் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை. வடக்கே ஹோலிகா எரிக்கப்பட்டதைக் குறிக்கும் ஹோலிப்பண்டிகை தெற்கே மன்மதன் எரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
திரிபுரம் எரித்த ...
Full story
ராமலஷ்மி
தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை
தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்குச் சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், ...
Full story
இராஜ ராஜேஸ்வரி
சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்றபல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் ...
Full story
தி. சுபாஷிணி
இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், இதுபோல் -ஓர் இரவுதான் அதுவும். எந்தச் சூழ்நிலையிலும் நான் பொருந்துவேன் என்று தெளிந்து என்னை அறிந்து என்னைப் பெற்றவர்களிடம் விடை பெற்று, என் வாழ்வின் அடுத்த கட்டமாகிய குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குப் புறப்பட்டு வந்தேன். முப்பத்து முப்பது கோடித் தேவர்களும் நட்சத்திரங்களாய் என்னுடன் வந்து வழியனுப்பியதாய் மகிழ்ந்து இருந்தேன். அது உண்மையெனும்படிதான் அன்று நான், ஏன் பல வருடங்கள் கழித்தும் அது பொருள்படா எண்ண ஏற்றம் என்று எண்ணவில்லை. ஆனால் ...
Full story
- Thursday, March 8, 2012, 6:40
- Featured, இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
அன்பு நண்பர்களே,
நண்பர் முகில் தினகரன் அவர்கள், சமூகவியல், மனித வள மேம்பாடு ஆகியவைகளில் முதுநிலைப் பட்டம் பெற்று மத்திய அரசு சார்பு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணி புரிகிறார். இதுவரை 600 சிறுகதைகள் எழுதியுள்ளார். 300க்கும் மேற்பட்ட கதைகள் பல்வேறு பிரபலமான பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. 40 நாவல்களும், 70 கட்டுரைகளும், 200க்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார். பெரும்பாலானவைகள், மேடைகளிலும் வாசிக்கப் பட்டுள்ளன. 100 மேடைகளுக்கும் மேல் பட்டி மன்றமும் கண்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் சிறுகதை ...
Full story
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கப் பெண்களின் நிலையையும் இந்த மகளிர் தினத்தன்று பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பல பெண்கள் குரல் எழுப்பினாலும் அமெரிக்கப் பெண்களுக்கு 1919-ஆம் ஆண்டில்தான் ஓட்டுரிமை கிடைத்தது. அப்போதும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை. ஓரளவாவது படித்திருக்க வேண்டும், சொத்து இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இருந்தன. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைக்க பல தசாப்தங்கள் பிடித்தன. அதே மாதிரிச் சொத்து ...
Full story
இன்னம்பூரான்
உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று ஹிந்து மத வழிபாடு தெரிவிக்கிறது. மனித உருவில் அதனுடைய சாதனையை கேளுங்கள். முதல் உலக யுத்தத்தின் போது சோற்று பஞ்சமும், நிம்மதியற்ற வாழ்க்கையும் ரஷ்ய பெண்ணுலகத்தை பெரிதும் பாதித்தது. இன்னலும், கொடுமையும் தாங்கமுடியாமல் பெண்ணினமே போர்க்கோலம் பூண்டது; கொதித்தெழுந்தார்கள்; புரட்சி செய்தார்கள். இது நடந்த தினம்: பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை. (கிரகேரியம் நாட்காட்டி படி, மார்ச் 8, 1917) நாலே நாட்களில் ஜார்ஜ் மன்னன் முடி துறந்தான். புரட்சியில் வாகை சூடி ...
Full story
மலர் சபா
"ஏ மனோ..பேங்க் போயிட்டு வந்துர்றியாப்பா..வீட்டு வாடகை, பால் காசு, மளிகைக் காசு குடுக்கணும்.."
"இதோ கிளம்பிட்டேம்மா...வேற ஏதும் வாங்கிட்டு வரணுமா.."
"அப்பா கண்ணாடி ரிப்பேர்க்குக் குடுத்துருந்தார்..ஒரு எட்டு வாத்தியார் கடைக்குப் போய் அத வாங்கிட்டு வந்துரு..."
"ஏன்..திரும்பியும் ரிப்பேரா...ஃப்ரேம் சுத்தமாப் போய்ருச்சும்மா..ரிப்பேர் பண்ணால்லாம் வேலைக்கு ஆவாது...என்ன பெரிசா செலவு ஆய்றப் போது..புதுசு வாங்கச் சொல்லுங்க."
"ஆமாண்டா....செலவைக் குறைச்சு உங்க அக்கா சுமையைக் குறைக்கணும்னு பாக்குறேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு கண்ணாடி..இன்னும் ...
Full story
செண்பக ஜெகதீசன்
அன்புடன் அழகும் சேர்ந்ததாலே
அதனுடன் பண்பும் கலந்ததாலே,பொன்னகை மிஞ்சிடும் புன்னகையும் பூப்போல் மென்மையும் இணைவதாலே,அன்னையாய் அனைத்தும் படைப்பதாலே ஆண்மையின் முகவரி தருவதாலே,என்றுமே தாய்க்குலம் வாழ்கவென இனிய தமிழில் வாழ்த்துவேனே...!
படத்திற்கு நன்றி :
http://www.hindustantimes.com/photos-news/Photos-Lifestyle/aishwaryaraisbabyshower/Article4-779142.aspx
Full story
அவ்வை மகள்
"பரம்பொருளுக்கு மட்டுமே நான் அடிபணிபவள்; எந்த எஜமானனுக்கும், எந்த விதிக்கும், எந்தச் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நான் அடிமை செய்வதில்லை. எனது சித்தமும், எனது வாழ்வும், நான் எனும் சுயமும் பரம்பொருளுக்கு அர்ப்பணமாகி விட்டன. அப்பரம்பொருளின் விருப்பம் அதுதானென்றால், எனது இரத்தம் முழுவதையும் சொட்டுச் சொட்டாய் வழங்க நான் என்னைத் தயார் செய்து கொண்டு விட்டேன். பரம்பொருளின் சேவையில் எந்த ஒன்றும் தியாகமில்லை. அது ஒரு பேரானந்தம்." இது அன்னை ...
Full story
காயத்ரி பாலசுப்ரமணியன்
இன்று பெண்கள் கால் பதிக்காத துறை என்று எதுவுமே இல்லை எனலாம். விமானம் ஓட்டுவது முதல், அகழ்வாராய்ச்சி வரை எல்லாவற்றிலும், பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதற்காகப் பாடுபடுவதோடு அதற்குரிய புகழையும் பெறுகிறார்கள். ஆணுக்குச் சரி நிகர் சமானமாக, வேலைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், பல தரப்பட்ட பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளையும் அள்ளித் தருகிறார்கள் மிகுந்த பெருமையாய் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கவும், கேட்கவும்!
இது ஒரு புறம் இருக்கட்டும். ...
Full story
- Wednesday, March 7, 2012, 19:08
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
பவள சங்கரி
அந்த நான் இல்லை நான் - கவிதை மலர் மதிப்புரை.
ஒருவரை ஒருவர் எழுதிக் கொள்கிறோம்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் கவிதையுடனான உறவு தொடங்கிய விதம் மிகச்சுவையான ஆரம்பம்....... ”அந்த நான் இல்லை நான்” என்ற கவிதைத் தொகுப்பில்.”புதுக்கவிதைப் புனலில் ஆடும் இவர், மரபுக் கவிதை மழையிலும் நனைபவர்” என்று கவிஞர் க.து.மு.இக்பால் அவர்களின் ...
Full story
காயத்ரி பாலசுப்ரமணியன்
மீரா தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியில், ஒரு முறை பார்த்துக் கொண்டாள். அதற்குள் அப்பாவும், அம்மாவும் கூப்பிடும் குரல் கேட்டது. "இதோ வந்துட்டேன்" என்று சொன்னவள், அவர்களுடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். மீராவிற்குத் திருமணம். அதற்குத் தன் தாய் வழித் தாத்தாவை நேரில் சந்தித்து, அவரின் ஆசி பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும் செல்கிறார்கள். இதற்கு மீராவின் அப்பா, லேசில் ஒத்துக் கொள்ளவில்லை....
Full story
இராஜ ராஜேஸ்வரி
சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற ...
Full story