Archive for the ‘இலக்கியம்’ Category

Page 35 of 82« First...102030...3334353637...405060...Last »

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (19)

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (19)
தி.சுபாஷிணி குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தெனப் பஞ்ச சயனத்தில் மேலேறிமென்னெஞ்சில் பள்ளிக் கிடத்தியோ பாவாய்!மெல்ல எழுந்தே எங்களைப் பாராய்!மைத்தடங் கண்ணினாய்! மணவாளனின் பிரிவன்னநாங்களும் துடிக்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!     படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a9.jpg   Full story

விடுதலையைச் சுவாசித்தபடி

விடுதலையைச் சுவாசித்தபடி
சாந்தி மாரியப்பன் என் ஒற்றைச் சொல்லொன்று உரசிப் பார்த்ததால் கொப்பளித்துத் துப்பிய உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம், இதழோரம் கசியவிட்ட தேய்பிறைப் புன்னகை மூலம் கழுவிச் சுத்தப் படுத்த முயன்று, இன்னும் அழுக்காகி நிற்கிறாய். மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும் உன் பேதமை எழுப்பிய அவநம்பிக்கை அலைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ ஆட்டத்திலிருந்து நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே.. உன் மனப்பூட்டைத் திறந்த சாவி இப்போதேனும் கிடைத்ததேயென்ற பூரிப்புடன் அகல விரித்த என் கைகளில் நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின் நிர்மலமான நீல வானில் இறக்கையற்றுப் பறக்கிறோம் நானும் என் தக்கை மனசும், விடுதலையைச் சுவாசித்தபடி   படத்திற்கு நன்றி: http://stockfresh.com/image/828729/hand-holding-heart-shape-cloud-and-blue-sky Full story

சைவத்தைப் பேணும் அம்மை-12

சைவத்தைப் பேணும் அம்மை-12
சு.கோதண்டராமன்  அம்மையாரின் நகைச்சுவை  அம்மையார் கண்ணுதற் பெருமானையே எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவதெனக் கொண்டார். பிறவி என்னும் பெருங் கடலைக் கடக்க வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு எப்பொழுதும் அவனையே சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அவர் கடுமையானவராக இல்லை. அவரிடத்தில் இயல்பாகவே ஒரு நகைச் சுவை உணர்வு இருந்தது. தன்னை அவர் பேய் என்று கூறிக் கொண்டாலும் இந்தப் பேய் அச்சுறுத்தும் பேயாக இல்லை. இறைவனுடைய தோற்றத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருக்குப் பக்தியுடன் ... Full story

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (18)

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (18)
தி.சுபாஷிணி உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்என்னையும் உன்னில் இட்டேன் என்னும்உயிர்த் தத்துவம் உவந்த ளித்தபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியே!சூடிக் கொடுத்த சுடர் கொடியே!சூதுகளைந் திட்டோம்! எழுவாய்நீ நாச்சியாரே!           படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a7.jpg Full story

பூட்டு

பூட்டு
ஜெ.ராஜ்குமார் மனிதர்கள் யாரும் இல்லா வீட்டுக்குப்  போடுகிறோம் பூட்டு! கெட்ட எண்ணங்களையும் சேர்த்துப்  போடுகிறோம் மனதில் பூட்டு! உனது எனது என அபகரித்ததைக்  கணக்கில் காட்டாது  போடுகிறோம் கருப்புப் பூட்டு! ஆணும் பெண்ணும் இணைய  சமுதாயம் போடும் திருமணப் பூட்டு! ஆண்டவன் பெயரில்  சந்நியாசி போடும் காவி பூட்டு! இன்னும் பலப்பல  பூட்டு இருந்தும் - இன்றோ என்றோ  பிரிய இருக்கும் உயிர்க்கு  இல்லையே ஒரு பூட்டு?   படத்திற்கு நன்றி: http://www.yenra.com/security/word-lock.html Full story

அமெரிக்கத் தேர்தல் 2012

அமெரிக்கத் தேர்தல் 2012
நாகேஸ்வரி அண்ணாமலை 2012-இல் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இப்போதே தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்து விட்டன.  சாதாரணமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை எதிர்த்து அவர் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடுவதில்லை.  ஜனாதிபதி பதவியில் இல்லாத இன்னொரு கட்சியில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான்.  தேர்தல் சமயத்தில் மிகவும் சிறிய ஓரிரு கட்சிகள் போட்டியிடுவதுண்டு.  ஆனால் இது பெயரளவில் மட்டுமே.)  பலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தங்களைத் தேர்ந்தெடுக்கும்படிப் பிரச்சாரம் செய்ய ... Full story

மகளிர் மற்றும் சிறுவர் தம் முன்னுரிமை.

முனைவர் நாகபூஷணம் சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி 4)   மகளிர் மற்றும் சிறுவர்தம் முன்னுரிமை. அனைவரும் தன்னுரிமை பெறும் வரை யாரும் உரிமை பெற்றவராகார். அனைவரும் ஒழுக்கமுடையவராகும் வரை யாரும் ஒழுக்கமுடையவராகார். அனைவரும் மகிழ்வோடிருக்கும் வரை யாரும் முழுமையான மகிழ்ச்சியோடிரார். மனித உரிமைக்கான போராட்டம் தொன்று தொட்டு இன்று வரை இனிவரும் காலங்களிலும் , தொடர்ந்து நிகழும் ஒன்றாகும். மனித உரிமை மீதான கடுந்தாக்குதல் ஏதோ ஒருவகையில் தன் கொடூரமான முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. சின்னஞ்சிறு குடும்பம் தொடங்கி , நகர்ப்புறம் , ... Full story

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (17)

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (17)
தி.சுபாஷிணி நாயகனாய் நின்ற நந்தகோபன் தனக்குநந்தவனம் உவந்த ளித்த நறுமலரே!கூர்வேல்கொடுந் தொழிலன் கூடிடும் வண்ணம்வட்டம் வரைந்து சுழிகள் எண்ணதிட்டம் தெரியாப் பேதையாய்த் தவித்தாய்நீ! தட்டுத் தடுமாறுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!             படத்திற்கு நன்றி : http://www.hindumandirmn.org/AboutTemple/SRIBHUDEVIANDAL.aspx Full story

” புத்தாண்டுப் பிறப்பு “

தமிழ்த்தேனீ அன்புள்ள நண்பர்களே ,சகோதர சகோதரிகளே, காலம் ஒரு அருமையான ஆசிரியன், அந்த ஆசிரியன் கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகத்தில் வேறு யாராலும் கற்பிக்க முடியாது என்பது திண்ணம் . காலம் ஆட்டிவைக்கிறது, நம்மைத் தூங்க வைக்கிறது,விழிக்க வைக்கிறது, விழ வைக்கிறது , எழ வைக்கிறது. எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறது, நம்மைப் பண்படுத்துகிறது. கால ஓட்டம் ,காலச் சுழற்சி கனவேகமாய் சுழன்று கொண்டிருக்கிறது. நிறுத்த முடியாத, மீண்டும் பெறமுடியாத காலங்கள்.அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது, மறந்து விடாதீர்கள் ... Full story

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (16)

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (16)
தி.சுபாஷிணி அறிவொன் றுமிலாத ஆயர்ச் சிறுமியர்அமைத்தபல் சிற்சிறு சிற்றில் சிதைத்துஆடியஉன் ஆட்டத்தில் சிதறிய சிந்தைஅல்லல் அன்ன அளித்து விடாதே!அருந்துயர் தாங்கேள்! ஆழியங்கை கொண்டவனே! அரற்றிய அணங்கே! எழுவாய்நீ நாச்சியாரே!               Full story

வார ராசி பலன்: 02.01.2012 -08.01.2012 வரை

வார ராசி பலன்: 02.01.2012 -08.01.2012 வரை
பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன் மேஷம் உங்கள் ராசி அதிபனான செவ்வாய் 5- ல் . பணியில் இருப்பவர்கள், சஞ்சலங்களுக்கு இடம் தராமல் மனத்தை செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் கச்சிதமாக முடியும். கேது 2-ல் இருப்பதால், மாணவர்கள் , சத்தான உணவு வகைகளை உண்டு வர, ஆரோக்கியம் சீராகத் திகழும். புதன் 9-ல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதிலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்வதிலும் நிதானமும் பொறுமையும் தேவை. கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், ... Full story

இசைப்பேன் கேளாய் கணபதி!

இசைப்பேன் கேளாய் கணபதி!
இராஜராஜேஸ்வரி மனதிற் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்  நினைக்கும் பொழுது நின் மவுன  நிலை வந்திட நீ செயல் வேண்டும் கனக்குஞ் செல்வம் நூறு வயது  இவையும் தர நீ கடவாய்.   கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? – அட, மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்பட லாகாதோ?  எனப் புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடிப் பிரார்த்திப்போம். புத்தம் புதிதான ... Full story

பரிசு

பரிசு
புதுவை எழில்  நெட்டையும் குட்டையுமாக மலைகள்.... அவற்றின் முதுகுப் பக்கம் சரசரவென இறங்கிக்கொண்டு இருந்தான் சூரியன். ” போ, போ! என்னைய பாத்த அறுவறுப்பு. அதான் இப்படி மேகத்தாலே மூஞ்ச மூடிக்கிட்டு ஓடற.... இந்த மனுசங்களைப் பாத்துப் பாத்து ஒனக்கும் அவுங்க புத்தியே வந்துருக்சு.....” - விரக்திச்சிரிப்போடு அவள் கையைத்தூக்கினாள், சூரியனையே சுட்டுவிடும் ஆவேசம்! அழுகிப்போன வெண்டைக்காய்களாக விரல்கள்.” அடக் கடவுளே, சுட்டு விரல்ல பாதி; காணலியே, எங்க, எப்போ விளுந்து தொலச்சதோ! ... Full story

பல்லிக்கூடம்

பல்லிக்கூடம்
சு.கோதண்டராமன்  “நண்பர்களே, இன்று நம் பல்லிக்கூடத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நம் இளம் மாணவனுக்கு நாம் அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளிப்போமாக.” பல்லி ஆசிரியர் சொல்லி முடித்ததும், ஆங்காங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் ஒரே நேரத்தில் டக் டக் என்று ஒலி எழுப்பினர். ஆசிரியர் மாணவனை அருகில் அன்போடு அழைத்துப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார். “தம்பி, நீ இன்று தான் முதல் முதலாக வெளி உலகிற்கு வந்திருக்கிறாய். இந்த உலகத்தைப் ... Full story

புத்தாண்டில் புத்துணர்வுச் சிந்தனைகள்!

புத்தாண்டில் புத்துணர்வுச் சிந்தனைகள்!
பவள சங்கரி புத்தாண்டு வந்தாலே நாம் பல உறுதி மொழிகளை எடுக்க எண்ணுகிறோம். அதில் சிலவற்றை நிறைவேற்ற முயற்சித்தாலும், பல முயற்சிகள் செயல்படுத்துவதில் தாமதமும், தொய்வும் ஏற்பட்டு வருட இறுதியில் வலுவிழந்து போவதும் உண்டு. ஆனாலும் சில முக்கியமான உறுதி மொழிகள் நம் அடிப்படை குணங்களில் ஒரு சில மாற்றங்களையாவது கொண்டுவரத்தான் செய்கின்றன. உதாரணமாக வாழ்க்கையில் இனி ஒருவர் மீது குறை சொல்வதோ அன்றி அதிகம் கோபம் கொள்வதோ அறவே விட்டொழிக்கப் போகிறேன் என்ற உறுதிமொழி எடுக்கும் போது அதை முழுமையாக நிறைவேற்ற இயலாவிட்டாலும், அடுத்தவர் மீது கோபம் கொள்ளவேண்டிய ... Full story
Page 35 of 82« First...102030...3334353637...405060...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.