- Friday, May 4, 2012, 5:15
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
வெங்கட் சுவாமிநாதன்
நினைவுகளின் சுவட்டில் (பாகம் - II (பகுதி - 43)
அந்தக் காலத்தில் ஹிராகுட் / புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின்தான் அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். ...
Full story
- Friday, May 4, 2012, 5:05
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
வெங்கட் நாகராஜ்
சென்ற பகுதியில் சொன்னது போல, இப்போது உங்களை ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்கிறேன்.
இத் தொழிற்சாலை 1969-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நமது ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இங்கு நான்கு தொகுதிகள் இருக்கின்றன. நாங்கள் சென்றபோது முதலில் தொழிற்சாலையின் பிரதிநிதி ஒருவர் தயாராகும் வாகனங்கள் மற்றும் இதர விவரங்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.
பிறகு உள்ளே சென்று வாகனங்களின் ...
Full story
- Friday, May 4, 2012, 5:00
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வையவன்
அல்லாஹூவின் கஜானாவில்
எத்தனை உதயங்கள் காத்திருக்கின்றன அடுத்தடுத்து ?எண்ண முயன்ற எத்தனை பேர் அஸ்தமித்து விட்டார்கள்?கர்த்தரின் கருவூலத்தில்எத்தனை காலை மாலைகள் குவிந்திருக்கின்றன?கணக்கிட முற்பட்டவர் யாராவது மிஞ்சியது உண்டா உயிரோடு?கண்ண பரமாத்மாவின் கண்ணின் சிறு சிமிட்டலில்உதித்து மறைந்த யுகங்களின் கணக்குப்பிள்ளை எங்கே ?நேற்றுப் பெய்த மழையில் பரம்பொருளின்கருணையால் உதித்த காளான்கள் போல மனிதர்கள்பிறக்கிறார்கள் பிடுங்கி எறியப்படுகிறார்கள் மறுநாள்யுகக்கணக்கு போட்டுச் சேவலாகக் கொக்கரித்துக்கோழியாகிக் குருமாவாய் பிரியாணியாய்ப்...
Full story
- Friday, May 4, 2012, 4:06
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
எஸ். இராமச்சந்திரன்
(இக்கட்டுரை, ஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம். கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர். கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர். மறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு), தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னையில் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு ...
Full story
- Wednesday, May 2, 2012, 18:20
- கட்டுரைகள்
- 0 views
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!
மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இன்பத்தைத் தேடி ஓடுகிறார்கள். வேண்டிய அளவு பொன், பொருள், புகழ் என்று பலவற்றைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பாடுபடுகின்றனர். . ஆனால் இவை யாவும் மனிதனுக்கு முழு நிறைவைத் தருவதில்லை. மேலும் தன் வாழ்க்கையில் பல பிரச்னைகள், துன்பங்கள் ஆகிய எல்லாவற்றையும் சந்திக்கும் மனிதன் மனம் துவண்டு போகிறான். இவற்றிலிருந்து விடுபட்டு மன நிம்மதியைப் பெற மனிதன் ஆலயத்திற்குச் செல்கிறான், ...
Full story
- Wednesday, May 2, 2012, 14:55
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
வீடெங்கும்ஒழுங்கற்றிருப்பதாக நினைத்துஅடுக்கிட முனையும் போதுதான்பரபரக்க ஆரம்பிக்கிறது அதுவும்.'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்துஒழுங்குபடுத்திடுவதாய் எண்ணிக்கலைத்து விடுகிறதுபிஞ்சு விரல்களால்..
குழந்தையின் இடுப்பிலேறிக்கொண்டகுழந்தைப்பொம்மையை நோக்கியபடிஒவ்வொரு பொம்மையும்விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றனசற்றே பொறாமையுடனும்,மறுபடியும் விளையாட வருவதாய்வாக்குறுதிகளுடனும்..
குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்வண்டியிலேறிய ஓடமும்முன்வினைத்தவத்தால்தெய்வஸ்பரிசம் பெற்றுப்புனிதம் பெற்ற சமர்க்களத்தைஒழுங்குபடுத்தியதாய் நினைத்துஒதுக்கி நிமிர்ந்த பின்னர்அழகாகவே இருக்கின்றன,மறுபடியும் இறைந்து கிடக்கும் ...
Full story
- Wednesday, May 2, 2012, 11:56
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சரோஜினி நாயுடு (1879 - 1949) இந்திய ஆங்கிலக் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை, அரசியல் ஆர்வலர், சொற்பொழிவாளர், மற்றும் நிர்வாகி இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர், மற்றும் முதல் இந்திய மாநில கவர்னராக இருந்தவர். இளமையில் எளிதில் உணர்ச்சிவயப்படுகிற ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறார்.
“ எம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகள் மற்றும் மலைக்குகைகளின் காதலர்களாகவும், பெரிய கற்பனாவாதிகளாகவும், அறிஞர்களாகவும், பெருந்துறவிகளாகவும் கூட இருந்துள்ளார்கள்” என்ற இவரது வாதத்தின் ...
Full story
- Wednesday, May 2, 2012, 10:44
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
விஜயகுமார்
முந்தைய பகுதியை வாசிக்க..
தாய்பேய்-2
ஒரு சிறு நடுக்கம் தான், இருந்தாலும் முதல் முறை நில நடுக்கம் அனுபவிக்கும்போது ஒரு பதற்றம் தானாக வந்தது. இதய துடிப்பு அதிகரித்தது. ஆனால் அவர்களோ ஏதோ தேநீர் அருந்த வெளியில் செல்வது போல முறையாக மாடிப்படிகளில் பேசிக்கொண்டே இறங்கி வெளியில் வந்தனர். அதற்கெனப் பல முறை டிரில் செய்த பழக்கமாம். சிறிது நேரம் கழிந்த பிறகு ...
Full story
- Wednesday, May 2, 2012, 10:42
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்தாட்கள் கொண்டே சாதிக்க முடியும்!
புத்தக-நோட்டுப் புத்தக மூட்டைகள் சுமந்தபடி பள்ளிக் குழந்தைகள் போவதும் வருவதும் குழந்தைகளுக்கு மட்டுமா தொந்திரவு?
அவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் இப்பைகளால் ஏற்படும் இடைஞ்சல் எத்தனை? – நெருக்கடி எத்தனை? – சிறிதும் பெரிதுமாகப் பேருந்துக்குள் ஏற்படுகிற விபத்துக்கள் எத்தனை?
பொதுப்பேருந்தில்பயணம் செய்தாக வேண்டிய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பிற பயணிகளிடம் வசவு வாங்காமல் பள்ளி சென்று வருவதில்லை என்றால் இதற்குக் ...
Full story
- Wednesday, May 2, 2012, 10:40
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சக்தி சக்திதாசன்
கவியரசரின் அனுபவச் செறிவை, தமிழ்ச் சொல்லாற்றலை, படைப்புத் திறமையை, கவிதைகளின் ஆழத்தைக் கண்டு எத்தனையோ முறை வியந்திருக்கின்றேன். வியந்து கொண்டிருக்கின்றேன். கவிதைகள் எழுதுகின்றோம், ஒருவரின் படைப்பைப் படித்துக் கருத்துச் சொல்லுகின்றோம். ஆனால் ஒரு காட்சியைக் கூறிவிட்டு அந்தச் சூழலுக்கேற்றவாறு, கதையோட்டத்தோடு இணைத்து ஒரு பாடல் அமையுங்கள் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் வேண்டுகோள் விடுக்கும் போது, அத்தனைச் சொற்களையும் எந்தக் களஞ்சியத்திலிருந்து எமது கவியரசர் எடுப்பாரோ தெரியாது, ஆனால் அவர் தனது பாடலை ...
Full story
- Wednesday, May 2, 2012, 9:50
- இலக்கியம், தொடர்கதை
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
மாமியும், ப்ரியாவும் கூடிக்கூடிப் பேசினர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த முறை சிவநேசன் ஃபோன் செய்யும் போது சொல்லி விடலாம் என்று யோசித்தனர். அப்படி அவர்கள் விஷயத்தைச் சொல்லி அவன் தன் டூரை பாதியிலேயே முடித்துக் கொண்டு வந்து அதனால் மங்கையின் நிலை மேலும் மோசமாகி விடக் கூடாது அல்லவா? ஏனென்றால் அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்ற விவரத்தையே இன்னும் தெரியப் படுத்தவில்லையே. அதைத் தெரிந்து கொண்டால் மங்கை ...
Full story
- Wednesday, May 2, 2012, 8:53
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
சு.கோதண்டராமன்
ஏழுபிறவிக் கடலை ஏற விடு நற்கருணை ஓடக்காரர்
சுவாமிகள் தம் தவ வலிமையால் பல அற்புதங்கள் செய்தார். நூறு பேருக்குச் சமைத்த உணவைக் கொண்டு இருநூறு பேர் வயிறார உண்ணும்படிச் செய்தார். நோய்களையும் பேய்களையும் தம் கரத்தால் தொட்டே ஓடச் செய்தார். இறந்து போனவரைப் பிழைக்க வைத்தார். தன் சீடர்களும் திருநீறு கொடுத்து நோய் நீக்கும் வலிமை பெறச் செய்தார்.
இத்தகைய சித்து விளையாட்டுகளே தம் தவத்தின் முடிந்த முடிவாகக் ...
Full story
- Wednesday, May 2, 2012, 5:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
முகில் தினகரன்
வாலிப வயதில்உன் மேனியில் முளைக்கும்இன்னுமொரு வெளியுறுப்பு….மனைவி!வெளியுறுப்புத்தான்ஆனாலும்உள்ளுறுப்புக்கள் மொத்தத்தையும்உற்சாகமாய் இயக்கி வைக்கும்புடவை கட்டிய ரிமோட்…..மனைவி!உன் இளமைக் கொசுக்களின்தனிமைக் கடிகளைஇன்பப் படிகளாய் மாற்றும்சுக வர்த்திச் சுருள்…..மனைவி!
பொறுப்பற்ற பயலென்னும்போலிப் பட்டத்தை அழித்துப்பொறுப்பான கணவனென்னும்புதுப் பட்டத்தை உனக்கு வழங்கும்உயிருள்ள யுனிவர்ஸிட்டி….மனைவி!
தாம்பத்ய சுகத்தைஉன்னோடு பகிர்ந்து கொண்டுபிரசவ வேதனையைத்தான் மட்டும் ஏற்பதால்அருள்மிகு மனைவியேஸ்வரி அம்மன்!
உன் சந்ததிச் சங்கிலி அறுபடாதிருக்க…....
Full story
- Wednesday, May 2, 2012, 4:50
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
எங்கோ ஓடுகிறேன்...
எதையோ பார்க்கிறேன்...என்னமோ செய்கிறேன்...!ஏற்றம் வருமென கனவில் நினைக்கிறேன்..!
பழகும் மனிதரெல்லாம் புதிதாய் இருந்தாலும்...பழகிய மனிதரைபோல் பழக்கம் வரவில்லை..!பாழ்மனம் ஏனோஅமைதி பெறவில்லை...!
படித்ததையெல்லாம்பார்த்ததையெல்லாம்ஏட்டில் வடித்தேன்...!ஒரு பாமரன் போலே அதை ரசித்தேன்...!
எந்த பாமரனும் வாசிக்கவே இன்னும் எழுதுகிறேன்எழுத்தாளனாய் நூறு நூல்களைத் தாண்டி...!
படத்திற்கு நன்றி
http://human-3d.com/3d-picture/3d-person---puppet-carrying-a-pile-of-books-000012166739 Full story
- Wednesday, May 2, 2012, 4:31
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
மின்னலைப் பிடித்துஒளி வாங்கியமின்மினிப் பூச்சிகள்ஜன்னலோரத்தில் பறக்கின்றன..
கேட்குமா கெட்டிமேளம்கூடிய விரைவில் -மூடிடும் ஜன்னல்களுக்காகக்காத்திருக்கும்கன்னி மலர்கள்...!
படத்திற்கு நன்றி
http://bestgallerytattoofor2012.blogspot.com/2011/09/sad-girl-face.html Full story