- Thursday, January 5, 2012, 5:27
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
முப்பத்து மூவர் அமரர் முன்சென்று
கப்பம் தவிர்த்தவனை எப்போதோ அடைந்திட்டாய்!இப்போது வாராயேல் எப்போது வருவாய்!நப்பின்னை நங்காய்! யாம் பெற்றதிருவே!நடுங்கும் குளிரே! நீபோய் கூறாய்!நட்புடன் இறைஞ்சுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.srivilliputtur.com/images/a2.jpg Full story
- Wednesday, January 4, 2012, 14:17
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
வளரும் செடியின்
வேரிலோ, தண்டிலோ,
தளைக்கும் கிளையிலோ,
துளிர்க்கும்
இலையிலோ, மொட்டிலோ
இல்லாத அழகை,
மணத்தைக்
கொண்டு வந்து
மலரில் வைத்து,
மயக்க வைத்து
மகத்துவம் செய்தவனை
மனத்தினில் கொள்..
அவன்-
இறைவன்...!
Full story
- Wednesday, January 4, 2012, 5:22
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தெனப் பஞ்ச சயனத்தில் மேலேறிமென்னெஞ்சில் பள்ளிக் கிடத்தியோ பாவாய்!மெல்ல எழுந்தே எங்களைப் பாராய்!மைத்தடங் கண்ணினாய்! மணவாளனின் பிரிவன்னநாங்களும் துடிக்கின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.srivilliputtur.com/images/a9.jpg
Full story
- Tuesday, January 3, 2012, 14:14
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
என் ஒற்றைச் சொல்லொன்று
உரசிப் பார்த்ததால்
கொப்பளித்துத் துப்பிய
உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம்,
இதழோரம் கசியவிட்ட
தேய்பிறைப் புன்னகை மூலம்
கழுவிச் சுத்தப் படுத்த முயன்று,
இன்னும் அழுக்காகி நிற்கிறாய்.
மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும்
உன் பேதமை எழுப்பிய
அவநம்பிக்கை அலைகளில்
கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து
காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ
ஆட்டத்திலிருந்து
நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே..
உன் மனப்பூட்டைத்
திறந்த சாவி
இப்போதேனும் கிடைத்ததேயென்ற பூரிப்புடன்
அகல விரித்த என் கைகளில்
நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின்
நிர்மலமான நீல வானில்
இறக்கையற்றுப் பறக்கிறோம்
நானும்
என் தக்கை மனசும்,
விடுதலையைச் சுவாசித்தபடி
படத்திற்கு நன்றி:
http://stockfresh.com/image/828729/hand-holding-heart-shape-cloud-and-blue-sky Full story
- Tuesday, January 3, 2012, 8:23
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன் என்னும்உயிர்த் தத்துவம் உவந்த ளித்தபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் கொடியே!சூடிக் கொடுத்த சுடர் கொடியே!சூதுகளைந் திட்டோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.srivilliputtur.com/images/a7.jpg Full story
- Monday, January 2, 2012, 12:54
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
மனிதர்கள் யாரும் இல்லா வீட்டுக்குப் போடுகிறோம் பூட்டு!
கெட்ட எண்ணங்களையும் சேர்த்துப் போடுகிறோம் மனதில் பூட்டு!
உனது எனது என அபகரித்ததைக் கணக்கில் காட்டாது போடுகிறோம் கருப்புப் பூட்டு!
ஆணும் பெண்ணும் இணைய சமுதாயம் போடும் திருமணப் பூட்டு!
ஆண்டவன் பெயரில் சந்நியாசி போடும் காவி பூட்டு!
இன்னும் பலப்பல பூட்டு இருந்தும் - இன்றோ என்றோ பிரிய இருக்கும் உயிர்க்கு இல்லையே ஒரு பூட்டு?
படத்திற்கு நன்றி:
http://www.yenra.com/security/word-lock.html Full story
- Monday, January 2, 2012, 8:35
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
நாயகனாய் நின்ற நந்தகோபன் தனக்கு
நந்தவனம் உவந்த ளித்த நறுமலரே!கூர்வேல்கொடுந் தொழிலன் கூடிடும் வண்ணம்வட்டம் வரைந்து சுழிகள் எண்ணதிட்டம் தெரியாப் பேதையாய்த் தவித்தாய்நீ!
தட்டுத் தடுமாறுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.hindumandirmn.org/AboutTemple/SRIBHUDEVIANDAL.aspx Full story
- Sunday, January 1, 2012, 1:29
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
அறிவொன் றுமிலாத ஆயர்ச் சிறுமியர்
அமைத்தபல் சிற்சிறு சிற்றில் சிதைத்துஆடியஉன் ஆட்டத்தில் சிதறிய சிந்தைஅல்லல் அன்ன அளித்து விடாதே!அருந்துயர் தாங்கேள்! ஆழியங்கை கொண்டவனே!
அரற்றிய அணங்கே! எழுவாய்நீ நாச்சியாரே!
Full story
- Saturday, December 31, 2011, 23:59
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
சக்தி சக்திதாசன்
பறந்தோடியது ஒரு வருடம்
பாய்ந்து வந்தது புது வருடம்புதுப் புது நம்பிக்கைகளைபொலிவிக்கும் புத்தாண்டு
கடந்து செல்லும் வருடத்தினுள்புதைந்து போன கனவுகள்புதிதாய் மீண்டும் அரும்பாகிபுதுமலர்களாய் புத்தாண்டில்
மாற்றம் காண்பது இயற்கை நியதிமாற்றி வைப்பது இறையின் கணக்குமனிதன் மனதில் கொள்வது ஒன்றேமங்கா விளக்காய் நம்பிக்கையை
கேட்டது கிடைக்கவில்லை என்றுகொடுத்தது திரும்பவில்லை என்றுஎடுத்தது நிலைக்கவில்லை என்றுஎத்தனையோ ஏமாற்றங்கள் இருந்தாலும்
அடுத்தொரு வருடம் பிறந்திடும் போதுஅதற்குள் கிடைத்திடும் மகிழ்ச்சிகள் எனும்அசைக்க ...
Full story
- Saturday, December 31, 2011, 23:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சென்ற ஆண்டில் சிறப்புடனே
சேர்த்த நல்ல அனுபவங்கள்என்றும் இனிதாய்த் தொடர்ந்திடவும், ஏற்றம் வாழ்வில் பெற்றேவுயர்குன்றின் மேலே தீபமதாய்க் குறையாப் புகழைப் பெற்றிடவும்,வென்றிடும் வல்லமை நிலைத்திடவும், வாழ்த்துவேன் புதிய ஆண்டினிலே...!
அன்புடன், -செண்பக ஜெகதீசன்...
http://www.123greetings.com/tags/success.html Full story
- Saturday, December 31, 2011, 6:24
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
எல்லே! இளங்கிளியே! இன்னமும் உறங்குதியோ!
அம்மே! அனைவரும் நின்இல்லில் நிற்கின்றோம்!முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து எப்போதும்முகிலோன்கண் இணைய முயன்ற செய்தவம்முற்றுப்பெற மற்றும் அற்ற மங்கையாய்மூடுதிரை விலக்காய்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.eprarthana.com/html/azhvarimage.asp?elid=eplp1azh&igname=Andal%20-%20Srivilliputhur&tdid=IG_TTL Full story
- Friday, December 30, 2011, 20:02
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
புமா
ஐந்துவிழுக்காடு
தவறுக்குஅவசரநிலை பிரகடனம்வன்கொடுமை வார்த்தைச்சூட்டில்வாடும் குழந்தை.
பொருளாதார அழுத்தத்தில்புதையும் வீடு.சதமே நிதர்சனமெனக்கருதும் கல்விமுறைப்பிழைகள்.
மானுடத்தின் யதார்த்தங்கள்பிள்ளைகள் அறிவதில்லை.அறிந்திருந்தால் கேள்விவரும்“ஏற்கும் பணிகளில்ஐந்துசதவிகிதம் கூடதவறிழைக்காதவர் உங்களில் யாரென்று?”
படத்திற்கு நன்றி :
http://sundaytimes.lk/070909/Plus/plus0001.html Full story
- Friday, December 30, 2011, 16:58
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பாகம்பிரியாள்
பந்தாய் முடிந்த கொண்டையை, பாங்காய்க் கட்டி வைக்க, நீ பயன்படுத்துவது ஒற்றைக் கற்றையான கூந்தல் மட்டுமே ! அதிலேயே அது ஒய்யாரமாய் நிற்கிறது. இதைப் போன்றே நம் காதல் பந்தை , இலகுவாய்க் கட்டி வைக்க நீ பயன்படுத்துவது உறுதியான ஓரிழை அன்பு மட்டுமே ! நீ தைரியமாகத்தான் இருக்கிறாய் , நான் தான் பயம் உந்த அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
படத்திற்கு நன்றி:
http://digitaljournal.com/article/271661 Full story
- Friday, December 30, 2011, 6:46
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
செங்கண் எழவே திங்கள் உறங்கியது
செங்கழுநீர்வாய் நெகிழ ஆம்பல்வாய் கூம்பியதுவான் வெளுக்குமுன் தான் எழுந்துதண்பூக் கொய்து மலர்க்கணைத் தொடுத்துகாமனையும் சாமனையும் துதித்துப் போற்றியகண்ணனின் காதலியே! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.srivilliputtur.com/images/a6.jpg Full story
- Thursday, December 29, 2011, 16:11
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
இப்பொழுதெல்லாம் அவள்தற்கொலை குறித்துப் பேசுவதில்லைமுன்பெல்லாம்நேரிலோதொலைபேசியிலோ பேசினால்தற்கொலையில்தான் முடிப்பாள்.தற்கொலைதான் துயரங்களிலிருந்துதன்னைப் பூரணமாக விடுவிக்குமெனநம்பினாள்.முன்னெப்பொழுதும் காணாத சிரிப்புகள்அவள் முகத்தை அலங்கரிக்கின்றன இப்போது.உண்மையில்இப்போதுதான் இந்த உலகம்அவள் காலின்கீழ் இருப்பதை உணர்கிறாள்.இப்பொழுதுதான் அவள்தன் இருப்பைமுழுமையாய் உணர்கிறாள்.தளைகளை அறுத்தெறிந்த மகிழ்ச்சி அவள் நடையில்.சிறைச்சுவரைத் தகர்த்தெறிந்த பெருமிதம் அவள் பேச்சில்.ஊர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு திரிகிறதுஅவள் பாட்டுக்கு ...
Full story