- Monday, April 9, 2012, 10:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
வான வீதியில்வண்ணக் கோலமிடவிண்மீன் புள்ளியிட்டவெண்ணிலாப் பெண் மகளின்மேனி எழில் கண்டு,மோகம் தலைக்கேறிச் சுற்றி வந்தனமேகக் கூட்டங்கள்..
போதும் கோலமெனப்பாதியில் போட்டு விட்டுப்போய் விட்டாள் பாவையவள்..
கண் விழித்துப் புள்ளிகள்காத்திருக்கின்றன..
வருமா அவைகோலமாகும் காலம்...!
படத்திற்கு நன்றி:
http://writingcreativenonfiction.wordpress.com/2011/06/09/poem-star-gazing Full story
- Sunday, April 8, 2012, 8:45
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
முகில் தினகரன்
மட்கிப் போன காகிதமானாலும்மதிப்பு மிக்க நிலப் பத்திரம்…
இந்த முன்னோர்கள் பரம்பரை பூமியைப்பண்படுத்தி ஓய்ந்த முன் ஏர்கள்….
காலதேவனின் காலண்டர் சுருக்கத்தில்மேனித் தோல் சுருங்கியமாதிரி மனிதர்கள்…
மூப்பைத் தொட்டு விட்ட காரணத்திற்காய்முதியோரில்லக் கிடங்கினுள்முடக்கப்பட்ட முற்றல் கொப்பரைகள்…
ரேஷனுக்குப் போய் வர உதவும்ரத்தமுள்ள ரோபோட்கள்…
எலக்ட்ரிக் பில் கட்டித் தரும்இரைச்சலில்லா எந்திரங்கள்..
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்குறைந்த விலை ஆயாக்கள்…
அவசர உலகின்அரத்தமில்லா அசைவுகளைஅவஸ்தையாய் ஜீரணிக்கும்அஹிம்சைப் பூக்கள்..
கொள்ளி போடுவான் என்பதற்காய்த்தள்ளி வைத்த ...
Full story
- Saturday, April 7, 2012, 8:38
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வருணன்
தனிமையின் கீர்த்தனைகளைநீங்கள் கேட்டதுண்டா ?அறையின் சுவர்களில் மோதிமென் அதிர்வுகளால் தமதிருப்பைப்பறை சாற்றியபடி அனுதினமும்கசிந்தபடி இருக்கும்.
முயன்றதனைக் கற்க வேண்டிநிர்ப்பந்திக்காதுகல்லாமலேயே தம்மை நம்முள்ஸ்தாபிக்க வல்லவை அவை.
பின் மாலை கழிந்து முன்னிரவாகுகையில்குரல்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும்.
முன்னிரவு கரைந்து பின்னிரவாகுகையில்வெறும் விசும்பல்கள் மட்டும் மிஞ்சும்.
களைத்துறங்கும் உடலதனைக்கேட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்துஞ்சாது அரற்றும் மனம்... ?
படத்திற்கு நன்றி:
http://alone-alone-alone.blogspot.in Full story
- Friday, April 6, 2012, 15:53
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பாகம்பிரியாள்
நமக்குள் முகிழ்த்த காதலை,மூன்றாம் பேருக்குத் தெரியாமல்,மறைக்க வேண்டும் என்ற தவிப்பில் முன்னூறு வழிகளை நாம் தேட,முளை விட்ட நினைவுகள், பிறர் கண் பட்டதாலும்நம் கை பட்டதாலும் முதிர்ந்து போய்முந்திரிக் கொட்டை போல், முன்னால் காதலைக் காட்டிக்கொடுத்த பின், மெல்ல உதிர்கின்றன கவிதைச் சருகுகளாய்,மேலும் நம் காதலுக்கு உரமாகி வலுவேற்ற!
படத்திற்கு நன்றி:
http://www.orkutlover.com/2009/09/love-romance-orkut-scraps.html Full story
- Friday, April 6, 2012, 14:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
முதல் பாகம் இதோ
திருவரங்கம் நிறுத்தம்-2 உண்மையில் கவிதையை
உணர்ந்து படித்ததும் படித்து ரசித்ததைஎன்பார்வைக்கு வைத்ததும்நேர்மையாக இருந்தது கவிதை மனதைக்கண்டுகொள்ள முடிந்தது கவிதை உள்ளம்தான்கவிதையைக் கண்டுகொள்ளும்கவிதை உள்ளம்தான்கவிதையைக் கண்டுசொல்லும் கவிதையே கவிதையைக்கண்டது கண்டேன்கவிதையும் கவிதையும்கலந்தது கண்டேன்கவிதையே கவிதையில்கரைந்ததும் ...
Full story
- Thursday, April 5, 2012, 12:19
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
எஸ்.நெடுஞ்செழியன்
அன்புத் தோழியே !
யாராலும் மறக்க முடியாது தாய்ப் பாசத்தையாராலும் மறுக்க முடியாது அவள் கேட்பதைமறக்க முடியுமா? அல்ல மறுக்க முடியுமா?குழந்தையாக இருந்த என்னை எடுத்துத் தன் இடுப்பில் வைத்து மொட்டை மாடிக்குச் சென்று நிலவைக் காட்டி பால் சாதம் ஊட்டி விடுவாளே.. என் தாய் அந்தப் பாசத்தை .... அன்பை... சுகத்தை மறக்க முடிமா?அறியாப் பருவத்திலே படுக்கையிலே அசிங்கம் ...
Full story
- Tuesday, April 3, 2012, 11:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
ஓட்டை விழுந்த பாத்திரத்தில்நீர் நிரப்ப முயல்கிறீர்கள்
துவாரங்கள் இருப்பது அறியாதுகன்னம் புடைக்க ஊதுகிறீர்கள்
பழுதடைந்ததில்பயணிகளை அமர்த்துகிறீர்கள்
அமாவாசை இருட்டில்அளவற்ற ஆசைநிலாவைத்தேடி
மயக்கம்அறுவைச்சிகிச்சைக்கு மட்டுமல்லஅன்றாட வாழ்க்கைக்கும்இனி அவசியம்.
உளைச்சலில் மிதக்கும்மூளைவியர்வை தீர்ந்தசடலம்கட்டாயம் அதுதான்நிவாரணி
எலிகளாய் சுரண்டாமலும்பேய்களாய் மிரட்டாமலும்முதலைகள் விழுங்காமலும்நச்சரிப்பு இல்லாமலும்ஒரு சின்ன மரணம்தற்காலிகமாய்
விடிந்து இருண்டுவிடிந்து விரட்டுமிந்தமூச்சுப் பயிற்சியின் முடிவென்ன?
முற்றுப்புள்ளிக்குமுன்சற்றே ஒரு சின்ன மரணம்
‘சாதியை ஒழிப்போம்’போன்றது ...
Full story
- Monday, April 2, 2012, 12:48
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
எங்கும் சாந்தி நிலவுதுஏற்றத் தாழ்வு மறையுது,மங்கல ஒலிதான் கேட்குதுமாநில ஒற்றுமை ஓங்குது,சங்கச் சண்டைகள் தீருதுசகலவும் மலிவாய் ஆனது,பொங்கும் இன்பமே காணுதுபாரு ஏப்ரல் ஒண்ணிது...!
போட்டி பொறாமை போனதுபொழுதெலாம் மின்னொளி யானது,வாட்டும் வறுமை தீர்ந்ததுவளமெலாம் வந்து சேர்ந்தது,ஓட்டும் ஏய்ப்பும் நின்றதுஒற்றுமை எல்லாம் வென்றது,நாட்டில் நலமே நிலைத்ததுநாளாம் ஏப்ரல் ஒண்ணிது...!
படத்திற்கு நன்றி:
http://open.salon.com/blog/kikstad/2011/03/31/never_trust_a_pop_culture_story_on_april_fools_day Full story
- Saturday, March 31, 2012, 8:10
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
புயற்காற்றேபெருமிதம் கொள்ளாதே,பூக்களையும் செடிகளையும்பூண்டோடு அழித்து விட்டாய்..
மாண்டு விடவில்லை நாங்கள்,மீண்டும் வருவோம்..உன்னால் முடியாதுஎங்கள்விதையை அழித்திட..அது,விதித்தவன் கட்டளை...!
படத்திற்கு நன்றி:
http://www.csiro.au/en/Outcomes/Climate/Understanding.aspx Full story
- Friday, March 30, 2012, 10:48
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்தகூட்டுக்குடும்ப விழுதுகள்அற்றும் இற்றும் போன பின்தனிமை கொன்று கொண்டிருக்கும்அந்த ஒற்றை மரத்தில்மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,மனித நேயத்தைப் போலவே.
சென்றவர்களெல்லாம் மீண்டும் வரக்கூடுமென்றமீதமிருந்த நம்பிக்கையுடன்ஆகாயத்துடன் உரையாடியபடிமேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறதுபறவைகளின் தாலாட்டுக்குரல்,இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.
தனிமைக்கடத்தியாய்ஏகாந்தம் கலைத்த தென்றலோவனமெங்கும் பூச்சொரிகிறதுஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி...
Full story
- Thursday, March 29, 2012, 9:55
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
என் கவிதைஎளிமையானதால்எனக்குக் கிடைத்ததுஓர் அரிய கவிதை
ஒவ்வொரு நாளும்நான்கவிதை எழுதுகிறேன்
ஒவ்வொரு நாளும்என்கவிதை பேசுகிறது
என் கவிதையைப் பேச வைத்ததுதான்நான் எழுதிய கவிதையின் சாதனை
இவ்வளவு கவிதைகளும்சேர்ந்துதான்அந்தக் கவிதையைத் தந்தது
என்கவிதைகளின் செவிலித்தாயாய்அந்தக் கவிதை
அதுஎன்காதுகளறிந்த தேவதை
என்கண்ணருகேஎத்தனையோ கவிதைகள்
என்காதருகேஅந்தஒரே கவிதைதான்
கவிதைதான்கவிதையைத் தரும்உண்மைஉண்மையாகி விட்டது.
படத்திற்கு நன்றி:
http://blog.pshares.org/2011/05/06/for-the-young-who-want-to Full story
- Wednesday, March 28, 2012, 21:19
- English, இலக்கியம், கவிதைகள்
- 0 views
சோதிவடிவே தயைகூர்ந்து வழிநடத்து!
ஜான் எச்.நியூ-மேன் - 1833
இளம் துறவியாக, இத்தாலி நாட்டில் பயணம் மேற்கொள்ளும் வேளையில், ஜான் நியூமேன் நோய்வாய்ப்பட்டு, மூன்று வாரங்கள் ஜியோவானியில் ஒரு குடிலில் தங்க வேண்டியதாகிறது. உடல் நலம் பெற்று பேலர்மோவிற்குத் தம் பயணத்தை தொடர்ந்தார்.
”என் தங்குமிடத்திலிருந்து புறப்படும் முன் என் படுக்கையின் மீது அமர்ந்து கொண்டு வேதனையுடன் தேம்பியழ ஆரம்பித்தேன். என் செவிலியராக பணியாற்றிய உதவியாளர் அதற்கான காரணத்தைக் கேட்டார். உடல் நலனில் ஏதேனும் ...
Full story
- Wednesday, March 28, 2012, 12:14
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
வருணன்
யாமறிந்த பேரண்டத்தின்ஒற்றை உயிர்த் துளியே!
நின் இல்லமெங்கும் அலங்கரிக்கிறாய்இயற்கை வரைந்த சுவரொட்டிகளால்,மாண்பு தெரியாதுகிழித்தெறிகின்றன மானுட மாடுகள்.
மூங்கில் புகுந்து இசை ஈனுமுன்நற்காற்றை வன்புணர்கிறதெங்கள்ஆலைகளுமிழும் கரிப் புகை.
ஆர்டிக்கின் உறைகுளிரும்சகாராவின் உருக்கும் வெம்மையும்அமேசானின் அடர் ரகசியங்களும்அத்தனையும் நலமிங்கேஅதனதனிடத்தில் உறைகையிலே.
அழகிய பாடலிதைஅபசுரத்தில் பாடிடும்மாசு பாட்டு மகவுகளைவளர்த்தெடுக்கும்மனுக்குல மங்கையவளைஉக்கிரமாய் எச்சரிக்கிறாய்அவ்வப்போதுபருவநிலைப் பகடைகளை எக்குத்தப்பாய் உருட்டி விட்டு
கண்ணிழந்து காதலிலுருகும்பருவப் பேதையவள்தாய் ...
Full story
- Tuesday, March 27, 2012, 13:09
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
செண்பக ஜெகதீசன்
மாறி வருகிறது மனித இனம்மனிதம் மறந்த சமுதாயமாய்..இதயம்இடம்பெயர்ந்தோ..ஜடமாகியோ,நிஜப் பிணங்களுடன் நிலைகொள்ளும்நடைப் பிணங்களாய்..எல்லைக் கோடுகள்தொல்லைக் கேடுகளாய்..இரத்த ஆறுகள்ஏன்றும் ஜீவநதிகளாய்..இனம் மொழி தேசம்ஏல்லாம் கடந்த ஒன்றாய்-வன்முறையாய்...
ஓ,இதுதான்கற்காலத் தொடக்கத்திற்குக்கால்கோள் விழாவா...!
படத்திற்கு நன்றி:
http://paradise7.hubpages.com/hub/Is-Violence-Necessary Full story
- Monday, March 26, 2012, 15:40
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
வெட்டி வெட்டிஎடுத்த நிலவுஒருநாள்-முழுதும் காணாமல் போகும்!அமாவாசை அன்று.
அது போல்
மனிதன் வளர வளரஒரு நாள்திடீரென்று காணாமல் போகிறான்!மரணத்தின் பிடியில்.
நிலவு காணாமல் போனஇருளை விடமனிதன் காணாமல் போனமரணம் கொடியது !
படத்திற்கு நன்றி:
http://www.free-hdwallpapers.com/wallpaper/space/half-moon/49336 Full story