- Wednesday, January 18, 2012, 18:06
- இலக்கியம், தொடர்கதை
எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன் - சுவாமி விவேகானந்தர்.
தந்தையிடம் மிக எளிதாக தன் நிலையைப் புரிய வைத்துவிட முடியும் என்ற தன்னுடைய நினைப்பு சரியில்லையோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. தன் மகளை ஜோசியம், ஜாதகம் என்ற காரணம் காட்டி நிராகரித்த ஒரு குடும்பத்தில் திரும்ப வலிய சென்று , தன் பெண்ணைக் கொடுக்க எந்த தந்தைக்குத்தான் மனம் வரும்? அந்த வகையில் அவந்திகாவின் தந்தை தன் மகளுக்காக , அவளுடைய மகிழ்ச்சிக்காக, விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை ...
Full story
- Tuesday, December 13, 2011, 17:03
- தொடர்கதை
பவள சங்கரி
ஒரு சமீபத்திய சர்வேயின்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் 50 சதவிகிதம் பெண்களுக்கு மட்டுமே , தங்கள் குழந்தைகளுடன் முழுமையாக நேரம் கழிக்க இயலாததன் குற்ற உணர்ச்சி இருக்கிறதாம். 80 % பெண்கள் ஆண்களைவிட மிக திறமைசாலிகளாகவும், ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய திறன் படைத்த சகலகலாவல்லிகளாக இருக்கின்றனராம். 45% பெண்கள் தங்கள் ஓய்வு நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் கழிப்பதே சுகம் என்கிறார்களாம்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள், நினைவுகள் திசை ...
Full story
- Sunday, November 20, 2011, 23:16
- இலக்கியம், தொடர்கதை
பவள சங்கரி
ஒரு மனிதனின் அடிப்படைக் குணத்தையே மாற்றக்கூடிய வல்லமை காலத்திற்கு உண்டு. அவரவரின் சூழ்நிலைகளே பல நேரங்களில் அவர்களை ஆளுகின்றது என்பதுமே நிதர்சனமாகிறது. அதனை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும், அதன் போக்கிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு போகும் போது அந்த வெப்ப வீச்சின் கடுமை சற்று குறையவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் ரிஷி விதியின் போக்கிலேயேப் போக பழகிக் கொண்டதாகவே நினைத்துக் கொண்டிருந்தான். வந்தனா என்ற ஒரு மென்மை மனம் படைத்த தேவதை , தனிமைச் சிறையில் அகப்பட்டு வதை படக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ...
Full story
- Monday, November 14, 2011, 1:53
- இலக்கியம், தொடர்கதை
பவள சங்கரி
அனு அன்று அலுவலகத்தில் நுழைந்தவுடன், அவள் வரவிற்காகவே காத்திருந்தவள் போல உடன் பணியாற்றும் அவள் தோழி கிருத்திகா, தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு இருக்கைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு நேரே கிருத்திகாவை நோக்கிச் செல்லலானாள். முதல்நாள் தான் அவளுடைய விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வந்திருக்கும். அவள் முகத்தைப் பார்த்தவுடன் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது புரிந்தும் விட்டது அவளுக்கு.
ஏன் இன்னும் நம் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? ...
Full story
- Monday, October 31, 2011, 21:53
- தொடர்கதை
பவள சங்கரி
" என்றும் மறவாதே....... நீண்ட காலம் நாம் பிரிந்திருக்க நேர்ந்தாலும் என்றும் மறவாதே...!” - தலைவர் தேஜூன் பார்க் மற்றும் யாசௌகா” என்ற கட்டுரையில் தங்கள் இருவரின் உண்மையான நட்பைப் பற்றி தேஜூன் பார்க் சுவைபட எழுதியதை வாசித்துக் கொண்டிருந்தாள் அவந்திகா இரவு வெகு நேரம் உறக்கம் வராமல். “மாற்றம் என்ற நூலில், உண்மையான சிறந்த நட்பு பொன்னினும் உறுதியானதும் மற்றும் ஆர்க்கிட்டை விட அதிக மணம் ...
Full story
- Thursday, October 13, 2011, 7:55
- தொடர்கதை
பவள சங்கரி
பொதுவாக காதலில் ஏமாற்றப்பட்டவர்களைவிட, ஏமாற்றியவர்களுக்கே, வலியும், வேதனையும் அதிகம். காரணம் நியாமானதாக இருப்பினும், ஏமாற்றம் என்பதின் நிறம் ஒன்றுதானே. அந்த வகையில் நொந்து போன ஒரு ஆத்மாவிற்கு வாழ்வு கொடுப்பது தியாகம் என்றால், நம்பிக்கையும், உயிரும் ஒரு சேர வைத்திருக்கும் ஒரு உன்னதமான இதயத்தை நோகச் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே. காலம் கடந்த யோசனையால், நிம்மதி குலைந்து போனதும் தவிர்க்க முடியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரிஷி. ரம்யாவை ...
Full story
- Tuesday, October 4, 2011, 0:16
- தொடர்கதை
பவள சங்கரி
துலிப் மலர்களின் குளிர்ச்சியான நினைவுகள் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டதோடு அன்று மாறனின் குரலும் ஏனோ அவளுக்கு உற்சாகமும் கொடுத்தது. வாய் பேச மறந்து மோனத்தில் இருந்தாளோ அப்பேதை!
மாறன் மறுபடியும், “ஹலோ, லைனில் இருக்கிறீர்களா....... என்று கேட்டவுடன் தான் விழிப்பு நிலை ஏற்பட்டவளாக , “ சாரி, அவசியம் வருகிறேன். நானும் பொழுது போகாமல்தான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் தூரிகையும் மலர் சொந்தங்களின் உறவை நாடி காத்துக் ...
Full story
- Sunday, September 25, 2011, 21:47
- தொடர்கதை
பவள சங்கரி
அன்னபூரணி ஓரமாக அந்த மலர் மஞ்சத்தில் சுருண்டு கிடந்தாள்!
திருமண அலைச்சலும், களைப்பும் கூட அவளுக்கு தூக்கம் வரவழைப்பதாக இல்லை. மனதில் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே இருந்ததால் ஒரு படபடப்பும் தொற்றிக் கொண்டது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை கணவனின் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய ஒரு சிறு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் வலி நிவாரணிகள் கொடுத்த மெல்லிய மயக்கத்தில் கண்ணயர்ந்திருந்தாலும் ஏனோ அவளுக்கு ...
Full story
- Thursday, September 15, 2011, 11:58
- இலக்கியம், தொடர்கதை
பவளசங்கரி
அன்பு நண்பர்களே,
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் சில வாரங்களாக சிறு தடை ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து வரும். நன்றி.
கதை தொடர்கிறது...
தோட்டம் முழுவதும் வண்ண வண்ண மலர்கள்! ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான மணம். குணமும் தான். சில மலர்கள் மூன்று நாட்கள் வரை வாடாமல் அப்படியே பசுமையாக இருக்கும். ஆனால் சில மலர்களோ மலர்ந்த சில ...
Full story
- Wednesday, August 10, 2011, 20:33
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
முன் கதை:
00,
01 ,
02,
03,
04,
05,
06,
07,
08,
09,
10
இனி ….
புத்தாலயம்.
”ஆரா...வானோ பிந்திசாரம்...போதிசத்வா…தந்திரம் ப்ரஸ்ன்னா….” என்ற அந்தப் புகழ்வாய்ந்த பாடலினைப் பாடிக்கொண்டிருந்தனர்.
நித்ய சாந்தி பிக்கு தவத்திற்கு வந்த அப்சியாசிகளின் கேள்விகளுக்கு விடையளிக்கும் நேரம் வந்தது.
“Enlightenment என்றால் என்ன…..?” என ஒரு பயிற்சியாளர் கேட்க,
”ஞானம் அல்லது Enlightenment ...
Full story
- Wednesday, August 3, 2011, 23:11
- தொடர்கதை
நிர்வாண நேனோ செகண்ட்ஸ்... -10
முன் கதை:
00,
01 ,
02,
03,
04,
05,
06,
07, ...
Full story
- Sunday, July 31, 2011, 14:11
- தொடர்கதை
பவள சங்கரி
பொதுவாக பெரும்பாலான பெண்கள், தங்கள் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளத்தில் எண்ணுவதையெல்லாம் குறிப்பாக தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூட வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவது இயற்கை.அதுவே பல நேரங்களில் அப் பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு சாதகமாகிப் போவதும் உண்டு. அவர்களுடைய முகத்திரை கிழிக்கப் படாமல் காக்கப் பட்டும் விடுகிறது. 21ம் நூற்றாண்டில் எண்ணற்ற சாதனைகள் பல புரிந்து கொண்டிருந்தாலும், அடிப்படையில் உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அந்த நால்வகை குணமும் அவளுக்குள் ஒளிந்து ...
Full story
- Wednesday, July 27, 2011, 23:20
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
கோபால்சாமித் தாத்தா வெல வெலத்துப் போனார்.
இந்த விஞ்ஞான உலகில் பில்லி சூன்யம் இதெல்லாம் எப்படி நம்புவது….? என மிகவும் குழம்பிப் போனார். யார் ரங்கராஜின் மீது பில்லி சூன்யம் ஏவியிருப்பர்….? யாரும் அப்படி பகைவர்கள் இல்லையே….? எல்லோரையுமே நாங்கள் நண்பர்களாகத்தானே பாவிக்கின்றோம்….? ஏன் வஞ்சம்…? ஏன் பழியுணர்ச்சி….? மனிதர்களில் இத்தனை நிறங்களா….? தாயுறவுள்ள ஒருத்தி…? யார் அவர்….? இரத்த உறவினில் அப்படி யாரும் இல்லையே….?
‘சரி சுவாமிஜி…. இந்த பில்லி சூன்யம் ...
Full story
- Monday, July 25, 2011, 0:57
- தொடர்கதை
பவள சங்கரி
ஞாயிற்றுக் கிழமை என்றாலே காலைக்கதிரவனின் மெல்லிய வெப்பக் கிரணங்கள் மேனியைத் தழுவத் துவங்கும் நொடி வரை சுகமான நித்திரை கொண்டு நிதானமாகக் குளித்து,பொறுமையாக அம்மா கையால் ஆன உணவமுதுடனும், மறு கையில் பாரதியின் கவியமுதுடனும் அன்றைய பொழுதைத் தொடங்குவதில் பேரானந்தம் அனுவிற்கு.மாலையில் சென்று மாமாவைப் பார்த்து வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அப்பா கணிணியில் முகம் புதைத்திருக்க அம்மா சமயலைறையில் பணி மும்முரத்தில் இருக்க,தொலைபேசியின் தொல்லை ஆரம்பமானது....
தேடிச் ...
Full story
- Tuesday, July 19, 2011, 23:27
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
ரங்கராஜின் உடல் மெல்ல மெல்ல அந்தரத்தில் உயர்ந்து கொண்டிருந்ததைக் கண்டு டாக்டர் பால சுப்ரமணியன், டாக்டர் ராதாகிருஷ்ணன், கோபால்ஜி, ஐஐடி சிவா, தாத்தா, பாட்டி மற்றும் அனைவரும் வெல வெலத்துப் போயினர். டாக்டர் பாலாவின் உடல் உரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. முகமெல்லாம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது.
ரங்கராஜின் உடல் மூன்று நான்கு அடிகளுக்கும் மேலெழும்பியது.
ஐஐடி சிவா தன் பலமனைத்தையும் ஒன்று திரட்டி ரங்கராஜின் வலக்கையைப் பிடித்துக் கீழ்நோக்கி இழுக்க…. கோபால்ஜி இடக்கையை ...
Full story
- Sunday, July 17, 2011, 13:20
- தொடர்கதை
பவள சங்கரி
ராமச்சந்திரன் குளித்து, காலை உணவருந்தி இரண்டாவது முறையாக ஒரு வாய் காப்பியும் அருந்திவிட்டு திண்ணையில் வந்து உற்சாகமாக அமர்ந்து விட்டார். இன்று அவருடைய உற்ற தோழர் ராகவன் வருகிற நாள். ஆம் ஒவ்வொரு மாதமும் 4 ஆம் தேதி தவறாமல், அருகிலிருக்கும் இந்தியன் வங்கியில் ஓய்வூதியம் எடுப்பதற்காக காலை பத்து மணிக்கெல்லாம் வந்து விடுவார். விடுமுறை நாளாக இருந்தால் ஒரு நாள் முன் பின் எப்படியும் வந்து விடுவார். வங்கி வேலை முடிந்தவுடன் நேரே ராமச்சந்திரனைப் பார்க்கத் தான் ...
Full story
- Wednesday, July 13, 2011, 21:18
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
நாரணாபுரம். ரங்கராஜின் கிராமம். சிவகாசியிலிருந்து கிழக்கே இரண்டு மைல் தொலைவு.
கிருஷ்ணன் கோவில். திறந்த வெளி மைதானம். மடைப்பள்ளியையொட்டி ஒரு மேடை. மேடையில் கோபால்ஜி பிரசங்கம் ஆரம்பிக்கும் முன் அருகிலிருந்த பட்டாபி ராமர் கோலத்திலிருக்கும் ராமரையும் சீதாப் பிராட்டியையும் வணங்கிவிட்டு…..
ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம ஹரே ஹரே….
ஹரே க்ருஷ்ண… ஹரே க்ருஷ்ண… க்ருஷ்ண……க்ருஷ்ண ஹரே ஹரே…..
ஹரே ராமா…. ஹரே ராமா…. ராம ராம ஹரே ஹரே…. ...
Full story
- Sunday, July 10, 2011, 21:35
- தொடர்கதை
பவள சங்கரி
கொட்டும் பனியின் வெட வெடக்கும் குளிரும், ஆளையே அசத்தும் பனிப் புயற் காற்றும் எல்லாம் ஓய்ந்து சுகமான வசந்த காலம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தும் பசுமையான புல் வெளிகளில் அழகிய புள்ளினங்களின் சுகமான ராகங்கள்! புதிய மலர்கள் புத்துணர்வுடன் துளிர்க்கும் அழகு! வ்சந்தம் மலர்ந்ததை பறைசாற்றும் டேஃபோடில் மற்றும் அரோரா மலர்களின் அணி வகுப்பு. வசந்த காலப் பறவைகளின் இன்ப நாதம். ...
Full story
- Wednesday, July 6, 2011, 22:27
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
ஐஐடி. கெளஹாத்தி.
பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
சிறப்பு விருந்தினர்கள். சோடா புட்டிக் கண்ணாடிகளில் மொசைக் தலை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள். கெளஹாத்தி ஐஐடியின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா சந்தன நிற ஜிப்பாவினுள் ஐக்கியமாகி நீண்ட துண்டு ஒன்றினைத் தன் முழங்காலினைத் தொடும்படித் தொங்க விட்டிருந்தார்.
அரங்கம் இருட்டாக்கப்பட்டு மேடையின் மீது ஒளிக் குவிப்பான் விளக்குகளை ஒளிர விட்டு ப்ரஜக்ட்டர் ஓட விடப்பட்டது.
புரஜக்டரில் பட்டம் வாங்கும் மாணவர்களின் பெயரினையும் துறையினையும் ஓட விட்டனர். ஒவ்வொரு ...
Full story
- Sunday, July 3, 2011, 14:04
- தொடர்கதை
பவள சங்கரி திருநாவுக்கரசு
சென்னையின் காலை நேரம் மிகச் சுறுசுறுப்பான அவசர நேரம்.... இடைவெளியே இல்லாமல் செவ்வெறும்பின் வரிசை போல வாகனங்களின் அணிவகுப்பு. அதிலும் லாவகமாக வளைந்து நெளிந்து உட் புகுந்து வெளிவரும் மூன்று சக்கர வாகனம்.(ஆட்டோ) ஆக மக்கள் அனைவரும் ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போகும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இன்றாவது சரியான நேரத்தில் அலுவலகம் சென்று சேர வேண்டுமே என்ற கவலையுடனான பரபரப்புடன் தலையில் தலைக்கவசத்தின் பாரமும் கசகசப்பும் சேர்ந்து கொள்ள எரிச்சலுடன் இரு ...
Full story
- Wednesday, June 29, 2011, 20:34
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
குழாயினுள்ளிருந்து ரத்தம் வருவதைக் கண்ட பாட்டி ‘வீல்’ என அலறி மயக்கமாகிக் கீழே விழுந்தார்.
ரங்கராஜ் திடுக்கிட்டான். அதிர்ச்சியில் கை கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இனம்புரியா ஒருவித பய உணர்வு அட்ரிலினை ஆட்டிப்படைத்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை ஜிவ்வென பய உணர்வுகள் பீரிட்டன. இதயம் மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பின் ஓசையை நன்றாக உணரமுடிந்தது.
ஆழமாய் மூச்சினை உள்ளிழுத்து மூச்சினை மெதுவாய் வெளியேற்றி சில நொடிகளில் தன் நிலைக்கு வந்தான்.
மூளையின் நியூரான்கள் வேகமாக ...
Full story
- Sunday, June 26, 2011, 12:01
- தொடர்கதை
பவள சங்கரி திருநாவுக்கரசு
இல்லறம் என்ற இனிய பந்தத்தின் அடித்தளமாக இருப்பது, சம்பந்தப்பட்ட அந்த இரு இதயங்களின் இடையே ஓடும் மெல்லிய நூலிழை போன்ற சுயநலமற்ற அன்பு மட்டுமே. தன்னுடைய சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளும் அந்த நேசம் மிக அவசியம். ஒரு இதயம் வலியால் துடிக்கும் போது அதை உணர்ந்து அதற்கான மருந்தாக இருககக் கூடிய பாசமாக இருக்க வேண்டும் மற்றொரு இதயம். இதில் ஏதேனும் தடுமாற்றம் வரும் ...
Full story
- Thursday, June 23, 2011, 12:34
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்
பாட்டி வேங்கடம்மாள் பெரும் கவலையிலாழ்ந்தார்.
இது எதோ தோஷம் எனவும் என்னவோ கெட்ட காரியம் ஒன்று நடப்பதற்கு ஒரு சகுனம் என்றும் கூறிக்கொண்டிருந்தார். ஜீயரிடம் இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும் என்றார்.
‘ம்…. இதெல்லாம் மூட நம்பிக்கைகள்….’ தாத்தா.
‘இப்டி வியாக்யானம் பேசாம அடுத்து என்ன செய்யணும்..னு யோசிங்க….’
ரங்கராஜின் தாத்தாவும் பாட்டியும் நேரெதிர் துருவங்கள்.
பாட்டி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை. தாத்தா எதையும் அலசி ஆராயும் சுபாவம். வட தென் துருவங்கள்.
‘நல்ல சகுனம்….கெட்ட சகுனம்….. அப்படி எதுவும் இல்லை… இதெல்லாம் மனிதனாய் கற்பித்துக்கொண்டது….’ தாத்தா.
’பூனை குறுக்கே போவதும்…. சிலர் எதிரே வருவதும்… இன்னும் இப்படி எத்தனையோ கெட்ட சகுனங்கள் என நாம் குறிப்பிடுகின்றோமே….?’ ரங்கராஜ்.
‘பூனை, பன்றி, நாய்… இவைகளுக்கெல்லாம் உயிர்ச்சுழல் ஆண்ட்டி க்ளாக்வேய்ஸ் டைரக்ஷன்ல இருக்கும்…. மனிதனுக்க்கு க்ளாக் வேய்ஸ் டைரக்ஷன்…. இதனால் நம் உயிராற்றலில் மின்காந்தக் கலத்தில் ஒரு Short Circuit ஏற்படுகின்றது….. இதனால் மனத்தின் சமநிலையில் சிறு மாற்றம்.
அமைதியற்ற மனதினிலிருந்து வெளிப்படும் செயல்களின் விளைவுகள் நாம் விரும்பும் பலனைத் தரா. அதனை சமன் செய்யவே நாம் சிறிது நேரம் அமர்ந்து… உயிராற்றலின் சுழலை சீரமைக்கின்றோம்….
இதனையே ஒரு குண்டலினியோகம் தெரிந்தவர் மூலாதாரத்தினில் உயிராற்றிலினை கண நொடியில் நிறுத்தி…. மின்காந்தக் கலத்தில் ஏற்படும் Magnetic Flux ஐ நிலைப்படுத்தலாம்…’
‘பாம்பு….?
’பாம்புகளின் தகவமைப்புகளின்படி அவை உஷ்ணப் ப்ரதேசங்களை நாடிச் செல்கின்றன. அவைகளுக்கு எங்கே உணவு கிடைக்கின்றதோ அதை நோக்கி நகரும்…. மேலும்
ஒரு பாதுகாப்பான இருப்பிடத்தினைத் தேடிக்கொள்ளும்… இவைகளெல்லாம் டார்வினின் Survival of Fittest தியரிப்படி சரியே….’
”சரி தாத்தா… மனிதர்கள் எதிர் வருவது எப்படி கெட்ட சகுனமாகும்….?”
“ஒரு புத்தரோ… ஒரு வள்ளுவரோ… ஒரு ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எதிரே வந்தால் அதனை கெட்ட சகுனமாக யாரும் நினைப்பதில்லையே….? அது அவரவர்களின் காந்தக் கலனைப் பொறுத்த விஷயம்…. ”
“………………………………….”
நீண்ட மெளனம்….
ரங்கராஜ் குடுகுடுப்பைக்காரன் சொன்ன விஷயத்தினை இப்பொழுது பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
பாட்டி மிகவும் படபடப்பானார். தாத்தாவை உடனே ஜீயரிடம் விரட்டினார்.
சகுனங்கள்… வேதங்கள்… கடவுள்கள்….. இதெல்லாம் மனிதனால் கற்பிக்கப்பட்டவை… சாமியும் இல்லை…. பூதமும் இல்லை… எல்லாம் விஞ்ஞானமே…!
இதெல்லாம் மனம் சார்ந்த நம்பிக்கைகள். உண்மையில் ஒருவன் மனோ வலிமையுடன் இருக்கும்பொழுது எதுவும் ஒன்றும் செய்ய முடியாது.
அப்படியானால் நல்லவர்கள் வந்தால் நல்ல சகுனம். கெட்டவர்கள் வந்தால் கெட்ட சகுனமா…? நல்லவர் கெட்டவர் என்றால் என்ன….? எண்ணங்களோ….? ஆக எண்ணங்கள் எது வலுவாகின்றதோ… அது ஜெயிக்கும்….
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தன் எண்ணங்கள் என்ற புத்தகத்தில் சொன்னது ஞாபகம் வந்தது… “வாழச் சொன்னது வாழ்ந்தது…. “ என இரு பாக்டீரியாக்களை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் நடத்திய சோதனைகளில் குறிப்பிட்டிருப்பார்.
வலிமையான எண்ணங்களால் எதையும் சாதிக்கலாம்.
நீ இக்கணத்தில் எங்கே இருக்கின்றாய் என்பது முக்கியமில்லை. நீ இக்கணத்தில் யாராய் இருக்கின்றாய் என்பது முக்கியமில்லை…. நீ இக்கணத்தில் என்னவாய் இருக்கின்றாய் என்பது முக்கியமில்லை…. எந்த ஒரு குறிக்கோளையும் வலிமையான எண்ணங்களால் நாம் அடையலாமோ…?
இப்படியாக இப்பொழுது ரங்கராஜின் Magnetic Fieldல் பல Fluxகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன.
எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன….?
மனதிலிருந்து….
மனம் என்றால் என்ன….?
அது எங்கிருக்கின்றது….?
மருத்துவ அறிவியல் என்ன சொல்கின்றது….?
எண்ணங்கள் உற்பத்தியாகுமிடம் மனம் என்கின்றனர்….
சிலர் இதயத்தினைக் காட்டுவர். அறிவியல் மூளையைக் காட்டுகின்றது….
அப்படியானால் மூளை இறந்துவிட்டால் மனம் இறந்துவிடுமா….? ஆனால் இறந்தபின்னும் சிலர் இதே கிராமத்தில் ஆவியாக இன்னொரு உடலில் இறங்கி தான் கொலைசெய்யப்பட்ட விதம் பற்றி விளக்குகின்றனரே…? அது எப்படி….? ஒரே கிராமத்தில் பார்த்த மனிதன் என்பதனாலா…? மல்டிபிள் பெர்சனாலிட்டி…? இல்லை .. இல்லை…
இன்னும் சில நேரத்தில் புரியாத ஒரியா பாஷையில் பேசி தான் இன்னவிதமாகக் கொலைசெய்யப்பட்டேன் என அந்த ஆவி இறங்கிய உடலிலிருந்து பேசுகின்றதே….? ஒரியா சென்று தகவலை சோதித்தால் மிகத் துல்லியமாக இருக்கின்றதே…?
இறந்த பின்னும் மனம் இறக்கவில்லையோ…? இதுதான் ஆன்மா என்பதா…?
ஆன்மா என்றால் என்ன….? உயிர் என்றால் என்ன….? அது எங்கிருந்து வருகின்றது…? மரணம் என்றால் என்ன….? இதயம் நின்றுவிடுவதா…? மூச்சு நின்றுவிடுவதா…? மூளை இறந்துவிடுவதா…? அப்படியெனில் இவைகளெல்லாம் செயலிழந்தாலும்கூட அனன்ஸெஃபாலிக்காய் இருக்க முடிகின்றதே….?
நாம் பிறப்பதற்கு முன் நம் நிலை என்ன…? இறந்த பின் நம் நிலை என்ன….? இடையில் இத்தனை அறியாமையா…? ஆனாலும் இந்த அறியாமையில் எத்தனை அதிகாரங்கள்…? எத்தனை அக்கிரமங்கள்….? எத்தனை தத்துவங்கள்….? எத்தனை ஆர்ப்பாட்டங்கள்….? நான் பெரியவன்…? எல்லாம் எனக்குக் கீழே…. இது என் சொத்து…. இது என் வீடு….
ஒன்றுமே புரியாமல் குழம்பி குழம்பி ரங்கராஜ் அயர்ச்சியானான்.
தன்னறையில் படுத்துக்கொண்டு இப்பொழுது யோசிக்கலானான்.
எண்ணங்கள் எவ்வளவு வலிமையானவை என்பதனைத் தன் அனுபவத்திலிருந்து அசைபோடலானான். இந்தியாவின் ஒரு பிரபலமான பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்திலிருந்தே பெளதிகத்தில் பெயர் சொல்லிக்கொள்ளும்படியான பல விஞ்ஞானிகள் வெளிவந்திருந்தனர்… அதில் ரங்கராஜ் பெளதிகம் பயின்றபொழுது நிகழ்ந்த ஒரு நிகழ்வு,
ஒரு முறை தான் ஒரு முக்கியமான இறுதி பல்கலைக் கழகத் தேர்விற்குச் செல்லும் பொழுது பூனை குறுக்கேச் சென்றது…. அது மட்டுமின்றி அங்கிருந்த ஒரு பாம்புடன் அது சண்டையிட்டுக் கொண்டிருந்தது…
மிகவும் கெட்ட சகுனம் என எண்ணி சக மாணவ நண்பர்கள் தங்களது அறைக்குத் திரும்பிச் சென்று நீர் அருந்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தனர். அப்பொழுது ரங்கராஜ் தன் மனதினில் பலமுறை ஆழமாய் சொல்லிக்கொண்டான்….
“இன்று எனக்கு நல்ல நாள்… நான் எக்ஸாமில் சிக்ஸரும், ஃபோருமாய் விளாசி விளையாடுவேன்….”
இத்தனைக்கும் அந்த தேர்வினை எழுத இயலா நிலை. நல்ல காய்ச்சல், தலைவலி, இரத்தப் போக்கு எனப் பல சிக்கல்கள்…. எழுந்து நடமாட முடியா நிலை…..
ஆனால் எண்ணங்களின் வலிமையினால் எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது.
யோகா, தவம், ப்ரணாயாமம் என அதிகமாய் பரீட்சைக்காகப் பண்ணியதால் இப்படி உடல்நிலை பாதித்தது. அனைவரும் பரீட்சைக்காக இரவு பகலாய் மூன்று மாதங்களாய் மும்முரமாய் படித்துக்கொண்டிருந்தால் இவன் மட்டும் இரவு பகலாய் பரீட்சைக்காக Mind Concentration & Memoryக்காக யோகா,தவம், ப்ரணாயாமம் என பண்ணிக்கொண்டிருந்தான்.
பொதுவாக அந்த வருடம் முழுதும் விளையாடிவிட்டு பரீட்சைக்கு ஒரு நாள் இரவு மட்டுமே படிப்பது ரங்கராஜின் வாடிக்கை. ஆனால் இம்முறை அதுவும் முடியாமல் போனது. இந்த ஒரு பேப்பர் மட்டுமே மிகவும் கடினமான பரீட்சை. இதை மட்டும் பாஸ் பண்ணினால் போதும். M.S Degree வந்துவிடும்.
சிலபஸ் ஒன்று இருக்கும். பேராசான்கள் ஒன்று பாடம் நடத்துவர். Prescribed புத்தகங்களையும் வேறு சில புத்தகங்களையும், அந்தத் துறையிலிருந்து வெளிவரும் Latest Journals என எல்லாம் Integrate பண்ணி படித்துவிட்டு எக்ஸாமுக்கு சென்றால் இதிலிருந்து ஒரு வினா கூட கேட்கப்படுவதில்லை. இரண்டு வெவ்வேறு மிகப்பெரிய இண்ஸ்டிட்யூட்/யுனிவர்சிடிகளில் தனித்தனியே Valuations. யாரையும் எளிதில் பாஸ் ஆக்கிவிடமாட்டார்கள். கல்வித் தர நிர்ணயம்.
Full story
- Sunday, June 19, 2011, 19:59
- தொடர்கதை
பவள சங்கரி திருநாவுக்கரசு
காலம் என்பது சில நேரங்களில் மின்னல் வேகத்திலும்,பல நேரங்களில் ஆமை வேகத்திலும் கடந்து செல்வது அவரவர் மன நிலையைப் பொறுத்ததுதானே! மனது உற்சாகமாக இருக்கும் வேளையில் நேரம் துள்ளிக் கொண்டு தன்னையறியாமலேயே சென்று விடும் ஆனால் குழப்பமும், சலிப்பும் இருக்கும் நேரத்தில் நேரம் எப்படி விரைவாக கடக்கும்? அப்படித்தான் மாறனுக்கும் ஒவ்வொரு நொடி போவதும் ஒரு யுகம் போவது போல பாரமாக இருந்தது. சில ...
Full story
- Thursday, June 16, 2011, 7:51
- தொடர்கதை
ரிஷி ரவீந்திரன்.
ரங்கராஜ் நகைத்தான்.
பில்லிசூனியமாவது மண்ணாங்கட்டியாவது.... இந்த விஞ்ஞான உலகில் இதெல்லாம் வெறும் புரூடா. வேலையற்ற வீணர்களின் வீண் பயமுறுத்தல்.
பில்லிசூனியம் பலிக்கட்டும். வா... நீ என்னிடம் வா...? எப்படி என்னிடம் நெருங்குகின்றாய் எனப் பார்க்கின்றேன். அதனை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ச்சி செய்யவேண்டும். என்ன நடந்துவிடும்...? மிஞ்சி மிஞ்சிப் போனால் மரணம்தானே...? அதையும் ஒரு கை பார்த்துவிடலாம்.
மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும். The Art of Dyeing ...
Full story