- Tuesday, February 21, 2012, 11:36
- இலக்கியம், சிறுகதைகள்
பர்வதவர்தினி
“அழாதே கீதா! என்னாச்சுன்னு சொன்னாத்தானே தெரியும்? இந்தா கொஞ்சம் தண்ணி குடி!. குடிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு” என்றாள் கல்யாணி.
கீதாவும் கல்யாணியும் கல்லூரித் தோழிகள். இருவரும் மாலைக் கல்லூரியில் படித்து வந்தார்கள். இவர்கள் முதன்முறை சந்தித்ததே தியாகராய நகர் பஸ்நிலையத்தில் தான்; அதுவும் கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கும் போதுதான். கீதா பி.ஏ வும், கல்யாணி பி.காமும் படித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் ...
Full story
- Saturday, February 18, 2012, 18:44
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
வே.முத்துக்குமார்
சண்முகம் மாமா இறந்த செய்தியை முதலில் அப்பாவிடம் சொன்னது காந்தி அக்கா வீட்டு அத்தான் தான். எதுவும் பேசாமல் அப்பா அமைதியாக இருக்க கையிலிருந்த அன்றைய தினசரியை விரித்துப் பிடித்தவாறு சொன்னார்.
'மாணிக்க வாசகர் மன்றத்துலேர்ந்து திருவாசக முற்றோதுதலுக்காக திருநெல்வேலியிலிருந்து பன்னிரெண்டு பேரு தஞ்சாவூருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போயிருக்காங்க. அதுல நம்ம சண்முகம் அண்ணாச்சியும் கூட போயிருக்காங்க. முற்றோதுதலை முடிச்சுகிட்டு ராத்திரி ஏழு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பியிருக்காங்க. அதிகாலையில கங்கைகொண்டான் ...
Full story
- Saturday, February 4, 2012, 13:53
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
தமிழ்த்தேனீ
காலையிலிருந்தே கூட்டம் கூட்டமாய்க் காக்காய் கத்திக் கொண்டிருந்தது. பல வேலைக்கு நடுவே இந்தக் காக்காய்க் கூச்சலும் அவரை அலுப்பாக்கியது, ஒரு நிமிடமும் ஓய்வு கிடைக்காத அளவுக்கு வேலை. நாற்காலியில் வந்து அப்பாடா என்று உட்கார்ந்து சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டார் ரங்கநாதன். உள்ளே இருந்து லக்ஷ்மி, “ஏங்க, இந்தத் துளசி மாலையைக் கொஞ்சம் கட்டிக் குடுங்களேன். நம்ம வீட்டிலேயே இருக்கேன்னு பறிச்சுட்டேன், ...
Full story
- Tuesday, January 31, 2012, 17:45
- இலக்கியம், சிறுகதைகள்
தமிழ்த்தேனீ
ஆகாஷ் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தெளிவான பார்வையுடன் நின்றிருந்தான். “ஏண்டா, உங்க டீச்சர் உன் மேலே புகார் குடுக்கறாங்க, நீ அதிகப் பிரசங்கித் தனமா நடந்துக்குறியாமே?” என்று அதட்டினான் ரமேஷ்.
“இல்லேப்பா நான் சரியாத்தான் நடந்துக்கறேன். டீச்சர் என்னை ஆஃல்பாபெடிக் ஆர்டர்லே ஏ பீ சீ டீ எழுதச் சொன்னாங்க, எழுதினேன். மறுபடியும் அதையே தலைகீழா எழுதச் சொன்னாங்க, எனக்கு கையெல்லாம் வலிச்சிதுப்பா. அதுனாலே ஒரு ஐடியா பண்ணேன், நான் ...
Full story
- Wednesday, January 25, 2012, 12:44
- இலக்கியம், சிறுகதைகள்
தமிழ்த்தேனீ
தம்பதி சமேதரரா சாஷ்டாங்கமாக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்து கை கூப்பி நின்ற ராமசேஷன் பக்கத்தில் குனிந்து நமஸ்காரம் செய்து விட்டு எழுந்த அம்புஜத்தின் காதில் கிசுகிசுப்பாக, “நிதானமா எழுந்திரு, முதுகு பிடிச்சிக்கப் போறது” என்றார். “என்ன திடீர்ன்னு இவ்ளோ கரிசனம் என் மேலே? என்னிக்கும் இல்லாத அதிசயமா?” என்று முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு கேட்டாள் அம்புஜம்.
“முதல்லே கழுத்தை இப்பிடியெல்லாம் நொடிக்காதே, சுளுக்கிக்கும். சாதாரணமாப் பேசேன், ...
Full story
- Wednesday, January 25, 2012, 10:00
- இலக்கியம், சிறுகதைகள்
டி. என். இளங்கோவன்
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கும் முதல் நாள்.
காலையில் ப்ரேயர் முடிந்தவுடன், தலைமை ஆசிரியர் உரையாற்றும் போது, எல்லா மாணவர்களையும், கடந்த வருடம் ஆண்டுத் தேர்வின் போது அமர்ந்து இருந்த அறையில், அதே இருக்கையில் அமருமாறு பணித்தார்.
எதற்காக இந்த உத்தரவு என்று புரியாமல் எல்லா மாணவர்களும், குழப்பத்தோடு அவரவர் இடத்தை தேடி சென்றனர்.
”தட்டுத் தடுமாறி போன வருசம் பாஸ் ...
Full story
- Thursday, January 19, 2012, 15:50
- இலக்கியம், சிறுகதைகள்
அருண் காந்தி
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் சாமம் அது. நிலவு உச்சந் தலைக்கு நேரே நகர்ந்த வேளையில் சமரன் மெல்ல சாரட்டை வீட்டின் பின்பக்கம் மதிலுக்கு வெளியே அவளது அறைக்கு நேரே நிறுத்துகிறான். நளாயினி ஜன்னலைப் பார்த்துக் கொண்டே மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அசையாது அமர்ந்திருக்கிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். அறையில் விளக்கு அணைக்கப்படுகிறது. மாடத்தில் வந்து நின்று பார்க்கிறாள். அந்த இடம் அமைதியின் உச்சமாகத் திகழ்கிறது. அவனது இதயப் படபடப்பு மட்டுமே அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் குதிரையொன்று ...
Full story
- Friday, January 13, 2012, 12:44
- இலக்கியம், சிறுகதைகள்
நாகை.வை. ராமஸ்வாமி
ஆலகால விஷத்தை அருந்தி அது கழுத்திலேயே தங்கி, அதனால் நீலகண்டன் என்ற நாமமும் தரித்த அந்தப் பரமனின் கதையல்ல இது. அது தான் பாமரனுக்கும் தெரியுமே. இது வேறு ஒரு நீலகண்டன்.
நீலகண்டன் சர்வராக அந்த ஹோட்டலில் சேர்ந்தது முதல், கஸ்டமர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்தது. அது முதலாளிக்கு நீலகண்டன் மீது நம்பிக்கையை வளர்த்தது. நீலகண்டனுக்கு டிப்ஸ் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. மற்ற சர்வர்களுக்குப் பொறாமையை ...
Full story
- Thursday, January 5, 2012, 12:36
- இலக்கியம், சிறுகதைகள்
தமிழ்த்தேனீ
பிரபலமான நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் வழக்கம் போல் காலையில் சீக்கிரமே எழுந்து நடைப்பயிற்சியை முடித்து விட்டு துண்டை எடுத்து முகத்தையும் துடைத்துக் கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்து மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டு இறைவனைக் கும்பிட்டு விட்டு, கையில் எடுத்த மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி அன்றைய தினசரியைப் பிரித்தார்.
ஆனால் அவரது கவனம் செய்தித்தாளில் பதியவில்லை, இனம் புரியாத குழப்பம் அவருள் நிறைந்திருந்த்து. இது ...
Full story
- Sunday, January 1, 2012, 0:40
- Featured, சிறுகதைகள்
புதுவை எழில்
நெட்டையும் குட்டையுமாக மலைகள்....
அவற்றின் முதுகுப் பக்கம் சரசரவென இறங்கிக்கொண்டு இருந்தான் சூரியன்.
” போ, போ! என்னைய பாத்த அறுவறுப்பு. அதான் இப்படி மேகத்தாலே மூஞ்ச மூடிக்கிட்டு ஓடற.... இந்த மனுசங்களைப் பாத்துப் பாத்து ஒனக்கும் அவுங்க புத்தியே வந்துருக்சு.....” -
விரக்திச்சிரிப்போடு அவள் கையைத்தூக்கினாள், சூரியனையே சுட்டுவிடும் ஆவேசம்!
அழுகிப்போன வெண்டைக்காய்களாக விரல்கள்.” அடக் கடவுளே, சுட்டு விரல்ல பாதி; காணலியே, எங்க, எப்போ விளுந்து தொலச்சதோ! ...
Full story
- Sunday, January 1, 2012, 0:37
- Featured, இலக்கியம், சிறுகதைகள்
சு.கோதண்டராமன்
“நண்பர்களே, இன்று நம் பல்லிக்கூடத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் நம் இளம் மாணவனுக்கு நாம் அனைவரும் உற்சாகமான வரவேற்பு அளிப்போமாக.”
பல்லி ஆசிரியர் சொல்லி முடித்ததும், ஆங்காங்கிருந்த உறவினர்களும் நண்பர்களும் ஒரே நேரத்தில் டக் டக் என்று ஒலி எழுப்பினர்.
ஆசிரியர் மாணவனை அருகில் அன்போடு அழைத்துப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்.
“தம்பி, நீ இன்று தான் முதல் முதலாக வெளி உலகிற்கு வந்திருக்கிறாய். இந்த உலகத்தைப் ...
Full story
- Monday, December 26, 2011, 13:12
- இலக்கியம், சிறுகதைகள்
பெருவை பார்த்தசாரதி
‘டேய் சூரி என்னடா இன்னும் வெங்கியக் (வெங்கட்) காணும்.’
‘அவன் எப்போதுமே இப்படித்தான் கடசீ நேரத்துலே வந்து கழுத்தறுப்பான்’.
‘ஷார்ப்பா ட்ரெய்ன் வந்துரும். டிக்கெட்டு வேறே அவங்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்குது’
‘ஜரா(ஜெராமன்) ஓடிப்போய் ஏறு, அவன் வந்துட்டான் மூடி டைப் வெங்கி. போன வாட்டியும் இதேமாறி ஓடுற வண்டியிலதான் ஏறினான். எந்த நேரத்தில எத செய்வான்னு யாருக்கும் புரியாது’
‘ட்ரெய்ன விட்டு இறங்கினதும், ஆறு ...
Full story
- Sunday, December 25, 2011, 0:20
- Featured, இலக்கியம், சிறுகதைகள்
ஆல்பர்ட் பெர்னாண்டோ
அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை! பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.
பகல் முழுக்க நகரின் பல பகுதிகளில் ...
Full story
- Friday, December 23, 2011, 21:30
- இலக்கியம், சிறுகதைகள்
கவிஞர் தேவா
'பழனி அண்ணே ' - இந்த பெயர் காஞ்சிபுரத்தின் அருகிலுள்ள பாலுசெட்டிச் சத்திரம், என்ற ஊரில் மரியாதைக்குரிய பெயர்! காரணம் அவசர ஆபத்துக்கு இவர் தயவு ,108 ஆம்புலன்சு போன்றது. இவர் அந்த காலத்திய 5 ஆம் வகுப்பு ஆங்கில வழியில் படித்தவர்
ஊரில் பஞ்சாயத்துக்காரர்கள் இருந்தாலும் ,இவருடைய தீர்ப்பிற்கும் பெரும் மரியாதை இருந்தது. அதனை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.
மெலிந்து உயர்ந்த உருவம் தொள, தொளவென வெள்ளை கதர் ...
Full story
- Monday, December 12, 2011, 14:12
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
சாகர்
காலை இருளைக் கிழித்துக் கொண்டு அலுமினியப் பறவையாய்ச் சென்னையில் தரையிறங்கியது அந்த எமிரேட்ஸ் விமானம். ஜன்னல் வழியே தூங்கி விழிக்கும் சோடியம் வேபர் விளக்குகளைப் பார்த்தான் விக்ரம். மெட்ராஸ் காலையில் எவ்வளவு அழகா இருக்கு! அவனுக்கு இன்னும் மெட்ராஸ்தான், பேர் மாத்துவதுன்னா வெள்ளக்காரன் வரும் முன்னே இருந்த கிராமத்தில் நல்ல பேரே கிடைக்கலையா மயிலை இல்லை! சோழ காலத்தில் இருந்து நிக்கும் திருவொற்றியூர் இல்லை! மௌன்ட் ரோட்டில்ஆம்னி பஸ்களும் லாரிகளும் விளக்குகள் பளீரிட ...
Full story
- Sunday, December 4, 2011, 17:19
- சிறுகதைகள்
பவள சங்கரி
இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது... மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தும் வாரம் ஒரு முறைதான் பேரக்குழந்தைகளையும்,மகளையும் பார்க்க முடியும்.
அப்படித்தான் மகள் மகிழ்ச்சியாகவா வருகிறாள்? வரும்போதெல்லாம், என் கணவர் இதை வாங்கிவரச் சொன்னார்... அதை வாங்கி வரச்சொன்னார் என்ற புலம்பல் வேறு. ...
Full story
- Saturday, December 3, 2011, 8:07
- home-lit, இலக்கியம், சிறுகதைகள்
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அந்தத் தனியார் மருத்துவமனை பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது. நல்ல பணம் படைத்தவர்கள் மட்டுமே வந்து போகக் கூடிய மருத்துவமனை அது. ஆறு மாடிகளும், நான்கு தானியங்கி மின் தூக்கிகளும் சதா இயங்கிக் கொண்டேயிருக்கும். அரசு மருத்துவ மனைகளைப் போலில்லாமல், இங்கு நோயாளிகளைக் காண வருபவர்களின் கூட்டம் சற்றுக் குறைவு தான். ஆனால் வருபவர்கள் ஒரு கிலோவுக்குக் குறையாத ஆரஞ்சும், ஆப்பிளும் வாங்கி வருவார்கள்.
அந்த மருத்துவமனையில் பொதுப்பிரிவில் டீலக்ஸ் வார்டில் ...
Full story
- Wednesday, November 23, 2011, 17:15
- home-lit, newsletter, இலக்கியம், சிறுகதைகள்
பவள சங்கரி
நான் உன்னைக் காதலிப்பேன்.
மரணமற்ற நித்ய காதலாகும் அது.
கதிரவன் குளிர்ந்துபோகும் வரை
நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை
நான் நித்தம் உன்னைக் காதலிப்பேன்
–ஷேக்ஸ்பியர்
அற்றைத் திங்களில், நிலவொளியில்நீயிருந்தாய் என்னோடு இற்றைத் திங்களில்நிலவு மட்டுமே என்னோடு... எங்கே சென்றாய் என் இனிய இதயமே என்று தொலைந்த தன் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்த மூன்று ஆண்டு காலமும் தோல்வி மட்டுமே மிஞ்சிய சூழலில் ...
Full story
- Wednesday, November 23, 2011, 15:55
- home-lit, newsletter, இலக்கியம், சிறுகதைகள்
வை.கோபாலகிருஷ்ணன்
அந்தப் பரபரப்பான பஜாரில் 15 நிமிடங்களாக டிராபிக் ஜாம். வாகனங்கள் ஏதும் நகர்வதாகவே தெரியவில்லை. கார் ஓட்டி வந்த நந்தினிக்குக் கடுப்பாக வந்தது.
கைக்குழந்தையுடன் கடைவீதிக்கு ஏதோ பொருட்கள் வாங்க வந்த மல்லிகா போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டதால் ரோட்டைக் கிராஸ் செய்து விடலாம் என்று போகும் போது, தன் அக்கா நந்தினியைக் காரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் “அக்கா, எப்படியிருக்கீங்க, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?” என்று ஆசையுடன், பேச வந்தும், ...
Full story
- Saturday, November 19, 2011, 13:32
- இலக்கியம், சிறுகதைகள்
பிரகாஷ் சுகுமாரன்
"என்ன சார் சாப்பிடறீங்க ? ” எனக் கேட்ட சர்வரிடம்,
"எண்ணெய் அதிகமில்லாம ரெண்டு சப்பாத்தி, அப்புறமா ஒரு பிளாக் டீ” எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதியினர் மீதிருந்து கண்களை எடுக்காமல் அவன் பதிலளித்தான்.
நெத்தி நிறையப் பொட்டும், வாய் நிறையச் சிரிப்புமாக இருந்த அந்தப் பெண்மணியும், நரைத்த கேசத்துடன், குர்தாவை மீறி வெளியே தெரிந்த வயிறுடன் இருந்த பெரியவரும் சுற்றி நடப்பவற்றை பற்றிக் கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.இந்த வயதிலும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் அப்படி அன்னியோன்னியமாகப் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.திருமணமாகி முழுதாக ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் தானும் தன் மனைவியும் இப்படி ஒரு முறை கூடப் ...
Full story
- Wednesday, November 16, 2011, 1:16
- இலக்கியம், சிறுகதைகள்
ஸ்ரீஜா வெங்கடேஷ்
இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீட்டைத்தான் இப்போது காலி செய்து கொண்டிருக்கிறேன். அதை விற்பதா? இல்லை வாடகைக்கு விடுவதா என்பன போன்ற விஷயங்கள் இன்னும் தீர்மானிக்கப் படாத நிலையிலிருந்தன. போன மாசம் தன்னுடைய தொண்ணூறாவது வயது வரை அப்பா இந்த வீட்டில் தான் இருந்தார் அம்மாவோடு. இப்போது அம்மா தனியாகி ...
Full story
- Tuesday, November 15, 2011, 9:32
- newsletter, இலக்கியம், சிறுகதைகள்
வை.கோபாலகிருஷ்ணன்
நீண்ட நாட்களாக வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு, ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளரான பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகிவிட்டது.
சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு, ஊரில் ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் அதிசயமாக இருந்தன. புதிய பலமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட் தொகைக்குப் போட்டி போட்டுப் பெருகியுள்ள ...
Full story
- Monday, November 14, 2011, 17:44
- Featured, இலக்கியம், சிறுகதைகள்
திவாகர்
அவள் ஆவலோடு கொடுத்த அக்கடிதத்தைச் சற்று அதிர்ச்சியுடன் தான் படித்தேன். அதிர்ச்சியோடு என் முகத்தில் காணப்பட்ட சோகமும் அவளை இன்னமும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோ என்னவோ, அந்த மகிழ்ச்சி அவள் குரலில் நன்றாகவே தெரிந்தது.
“ஆனு எப்படியெல்லாம் யோசிக்கறார் பாரு ராம்!.. அதனாலதான் எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சுருக்கு.. பாரேன்.. ஒரு பெண்ணோட குறையைக் கூட பெரிசா எடுத்துக்காம அது நீங்கணுமேன்னு ஆறுதல் சொல்றது எத்தனை பேருக்கு ...
Full story
- Thursday, November 10, 2011, 2:42
- இலக்கியம், சிறுகதைகள்
பிரகாஷ் சுகுமாரன்
"உனக்கென்ன பைத்தியமா ??" கேள்வி கேட்டவர்களை நோக்கி அவன் சிரித்தான். கடந்த சில ஆண்டுகளாக அவனைப் பார்த்து வழக்கமாகப் பலர் கேட்கும் அதே கேள்விதான். எப்போதும் அந்தக் கேள்விக்கு அவனுடைய பதில் மௌனமும் சிரிப்பும்தான். அவனைச் சுற்றி வளைத்திருந்த கூட்டத்தில் அத்தனை பேரின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது. ஓரளவு அவனைப் பற்றி தெரிந்திருந்தாலும் முழுமையாகத் தெரியாததால் என்ன செய்வதென்று புரியாமல் அவர்கள் விழித்தனர்.
ஊரில் இதுவரை யாரும் செய்யாத விசித்திரச் செயலில் அவன் ஈடுபட்டிருந்தான். ...
Full story
- Wednesday, November 9, 2011, 18:49
- இலக்கியம், சிறுகதைகள், பொது
விசாலம்
"வா முரளி வா ...... என்ன ... கரெக்ட் டயத்துக்கு பிளேன் வந்துடுத்தா ?" எனக் கேட்டபடியே தன் அன்பு மகனை அணைத்து வரவேற்றாள் கமலா . முரளி அவளுக்கு ஒரே மகன். அன்பும் பாசத்துக்கும் கேட்கவா வேண்டும்.
"ஆமாம் அம்மா" எனக் கூறியபடியே தன் அப்பாவைத் தேடினான் முரளி. அப்பா என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவனுக்கு டென்னிஸ் , கிரிக்கெட் எல்லாம் சொல்லிக் கொடுத்து ஆதரித்தவர் அவர்தானே!
அவன் ...
Full story