- Saturday, July 30, 2011, 17:20
- சிறுகதைகள்
- 0 views
அமைதிச்சாரல் (சாந்தி மாரியப்பன்)
வணக்கங்க.. எல்லாரும் நல்லாருக்கீங்களா??.. உங்களுக்கென்ன!! நல்லாத்தான் இருப்பீங்க. நான் இப்ப இருக்கிற நிலையில, யாரைப்பாத்தாலும் என்னைவிட சந்தோஷமா இருக்காங்கன்னே தோணுதுங்க.
இவ்வளவு நேரம் எம்பேரைச்சொல்லலைல்லே.. பேருக்கென்னங்க. உங்களுக்கு எந்தப்பேரு புடிச்சிருக்கோ அந்தப்பேருல கூப்பிட்டுக்கோங்க. ஆனா, தயவு செய்து எம்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முடிவு சொல்லிடுங்க..
தைப்பூசம்.. முருகனுக்கு உகந்த நாள். காவடியெடுத்தும், அலகு குத்தியும், இதெல்லாம் செய்யாம பிரார்த்தனை மட்டுமே செய்யும் பக்தர்களுக்கும், இது எதுவுமே செய்யாம சும்மா..'முருகா..' அப்படீன்னு ஒரு தடவை ...
Full story
- Thursday, July 28, 2011, 17:04
- சிறுகதைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு மட்டும் தனியாக ஒரு கால வாகனம் செய்து கொடுத்திருக்கிறார். நான் அதில் பலமுறை பயணித்திருக்கிறேன். உங்களையும் சில முறை அழைத்துச் சென்றுமிருக்கிறேன் எனவே தயக்கமின்றி ஏறுங்கள.
திருநெல்வேலி மாவட்டம்.ஆழ்வார்குறிச்சி கிராமம். கீழத்தெரு எனப்படும் அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பிராமணர்கள் தான் ...
Full story
- Monday, July 25, 2011, 13:39
- சிறுகதைகள்
- 0 views
திவாகர்
(பிரகிருதி என்பதற்கு இயல்பு, இயற்கை, விசித்திரம், காரணம், பகுதி மொழி, பிரபஞ்ச மாயை, மிருகம், பெண், பஞ்சபூதம் என பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளன))
’எல்லா விவரங்களையும் சொல்லியபின் என் மாமனாரைப் போன்ற இன்னொரு பிரகிருதியை நீங்கள் யாரேனும் பார்த்திருக்கிறீர்களா’ என்று ஒரு கேள்வி உங்களையெல்லாம் கேட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.. இல்லவே இல்லை என்றுதான் உங்களிடமிருந்து பதில் வரும் என்று முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்..
என்ன வகைப்பட்ட ஆசாமி இவர் ...
Full story
- Friday, July 22, 2011, 15:16
- சிறுகதைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
‘
என்னைப் பற்றி :
. நான் அமைதிச்சாரல் என்ற புனைபெயரில் எழுதிவருகிறேன்.அதே பெயரில் 2009 டிசம்பர்23லிருந்து வலைப்பூ எழுதிவருகிறேன். தமிழ்நாட்டில் பிறந்து தற்சமயம் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்துவருகிறேன். மும்பைவாசம் கொஞ்சம் முடக்கிப்போட்டிருந்த,.. வாசிப்பதில் உள்ள ஆர்வத்தை வலைப்பூக்கள் ஈடுகட்டுகின்றன. கதைகள்,கவிதைகள் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நாட்டமுண்டு.
என்னுடைய படைப்புகள், திண்ணை, கீற்று,வார்ப்பு, அதீதம்,லேடீஸ் ஸ்பெஷல்,இவள் புதியவள், அப்புறம் வல்லமை போன்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. 'கவிதை நேரமிது' என்ற என்னுடைய இன்னொருவலைப்பூவில் கொஞ்சம் கிறுக்கித்தள்ளியிருக்கேன். ...
Full story
- Thursday, July 14, 2011, 12:28
- சிறுகதைகள்
- 1 views
அருண் காந்தி
நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி.
அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது பற்றி அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது.அதன்படி வரும் டிசம்பர் இறுதியில் முப்பது நாட்கள் விடுப்பில் அப்படியே பொங்கலையும் சேர்த்துக் கொண்டாடும் நோக்கில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன்.
"என்ன சார் காலைலயே பிஸியா? வாங்க கோப்பிக்கு போகலாம்"என்று நாற்காலியின் பின்புறம் ...
Full story
- Wednesday, July 13, 2011, 11:43
- சிறுகதைகள்
- 0 views
ஷைலஜா
கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. சின்ன உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசையை அழகு பார்த்துக் கொண்டு , அழகு காட்டிக் கொண்டு என்னவோ செய்து கொண்டு, இருந்தேன். 'அம்மாடா தப்பினோம்' என்று வெளியே வந்தால்....
"ஹலோ ஸார்!" ரதனசாமி நிற்கிறார்! அசடு வழிந்தது எனக்கு. யாரிடமிருந்து தப்ப வேண்டும் என்று நினைத்தேனோ ...
Full story
- Wednesday, July 6, 2011, 16:02
- சிறுகதைகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஒரு ஆரவாரமற்ற அழகிய கிராமத்தின் அரசு மருத்துவமனை. தூய வெண்மையான மேலங்கியில் தேவதை போல் நின்றிருந்தார் மருத்துவர் மாலதி. சிக்கலான கேஸ்களை எல்லாம் குணப்படுத்திவிடும் கைராசிக்காரி என்ற பெயர் பெற்றிருந்தார் அவர். வெள்ளைக் கோட்டில் கம்பீரமாக இருந்த அவரை ஒரு குடும்பம் சூழ்ந்து கொண்டு "அம்மா நீங்க தான் தாயீ எங்க குல தெய்வம். எல்லா டாக்டருங்களும் கைவிட்ட என் புள்ளய பத்து காசு செலவில்லாமே காப்பாத்திக் கொடுத்துட்டீங்க அம்மா. உங்களுக்கு நாங்க என்ன கைம்மாறு செய்வோம் ...
Full story
- Tuesday, July 5, 2011, 11:34
- சிறுகதைகள்
- 0 views
திவாகர்
என்ன சொல்லி எப்படிப் புரிய வைத்தால் இவளுக்குப் புரியவைக்கமுடியும் என்பது புரியாமல் முழிக்கிறேன்.. யார் மூலமாவது இவளுக்கு விளக்கிச் சொல்லமுடியுமா என்றால்.. யார் மூலம் சொல்வது.. அப்படியே யாராவது போய் சொன்னாலும், சொன்னவர்களை வெகு எளிதாக தன் வழிக்குக் கொண்டுவந்து விடும் சாமர்த்தியம் உள்ளவள் மாதுரி.
இத்தனை புத்திசாலி இப்படி ஒரு முடிவு எடுப்பாளா.. யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே.. அது இதுதானோ.. இருக்கலாம். இல்லாவிட்டால் இப்படியே ...
Full story
- Tuesday, June 28, 2011, 13:45
- சிறுகதைகள்
- 0 views
பவள சங்கரி
பாரதி ராஜாவின் கேமராக் கண்களுக்குத் தப்பிய அழகிய பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்று அப்படி ஒரு பசுமை, நிறை மாத கர்ப்பிணியாக துவண்டு நிற்கும் நெற்கதிர்கள்!வரப்பு மேட்டு மேலேயே போய் நெல் வயலைத் தாண்டியவுடன் ஒரு புறம் தாயும், கன்றுமாக வாழைத்தோப்பும், மறு புறம் நெடிதுயர்ந்து கொத்துக் கொத்தாக குலையுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு.இந்தக் காட்சியெல்லாம் சாமான்யரையே கிறங்கச் செய்யும் போது கவிஞரொருவரின் ...
Full story
- Wednesday, June 22, 2011, 15:23
- சிறுகதைகள்
- 0 views
புவனா கோவிந்த்
"இந்த மனுசன எங்க இன்னுங்காணோம்... வெய்ய நேரத்துல செவனேன்னு ஊட்டுல இருக்கறத உட்டுப்போட்டுக் களத்து மேட்டுக்கு போகலைனு யாரு அழுதா? " என புலம்பியபடி வாசலில் நின்றிருந்தார் ராஜம்மாள் பாட்டி
கண் பார்வை மங்கி விட்டபடியால் நெற்றியில் கை வைத்து வெய்யிலை மறைத்து தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ராஜம்மாள் பாட்டியை நெருங்கிய அவள் கணவர் ராமசாமி தாத்தா "என்னத்துக்கு இப்படி காயறவ... முன்னியே தொட்டு பொட்டு வெச்சுக்கற ...
Full story
- Saturday, June 18, 2011, 11:18
- சிறுகதைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
“கார்லேருந்து எல்லாத்தையும் எடுத்திடேன்.” என்றபடி சுப்புலட்சுமியும் சிவாவும் உள்ளே வந்தனர். “சரி. நானும் கிளம்பறேங்க. வீட்டிலே அம்மா காத்துகிட்டு இருப்பாங்க சார் ரிடையர் ஆற நிகழ்ச்சியைப் பாக்கணும்னுதான் வந்தேன்”
“இரு சிவா, கைகால் ஓடவிடாம ஆக்காதே! ஒருவாய் காப்பிதண்ணி குடிச்சிட்டு, அப்புறமா போ!” என்றபடி உள்ளே போய் காப்பியை எடுத்திட்டு வந்து கர்த்திகேயனுக்கும்..சிவாவுக்கும் கொடுத்தாள்.
“காலைலே 7 மணிக்கெல்லாம் கிளம்பி ஆபீசுக்கு போய்ட்டீங்கன்னா சாயங்காலம் 7 மணியாவும் வரதுக்கு….., இனிமே எப்பிடி பொழுது போகும் உங்களுக்கு? ஏதாவது ...
Full story
- Tuesday, May 31, 2011, 10:11
- சிறுகதைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
"15 நாளா நினைவில்லை, டாக்டர் வந்து பாத்துட்டு, இந்த அம்மா கோமா ஸ்டேஜுக்குப் போயிட்டாங்க, ஜாக்கிரதையா பாத்துக்கோங்க. வேற ஒண்ணும் பண்ண முடியாது,. ஒரு வேளை நினைவு வரலாம். அல்லது வராமலே இருக்கலாம். ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டுப் போனார்."
நினைவில்லாமல் படுத்திருந்த கமலத்துக்கு இதுவும் காதில் விழுந்தது. ஆனால் ஒரு உணர்ச்சியையும் காட்ட முடியலை. உணர்ச்சியை காட்ட முடியலை. ஆனா உள்ளே ஓடற நினைவுகளை நிறுத்த முடியலை. கோமா ஸ்டேஜிலே இருக்கேன்னு டாக்டர் சொன்னது, எனக்குக் ...
Full story
- Monday, May 30, 2011, 12:36
- சிறுகதைகள்
- 0 views
திவாகர்
"அகராதியைப் புரட்டி 'நாய்' என்ற பதத்திற்கு அர்த்தம் பார்க்கும்போது 'ஒரு விலங்கு; ஞமலி; குரைக்கும் தன்மையுடைய ஒரு மிருகம்' என்று பொருள் கொடுத்திருப்பது தெரிய வரும்"
-'மிஸ் ஜானகி'யில் எழுத்தாளர் தேவன்.
புஸுபுஸுவென வெள்ளைப் பஞ்சுப் பந்து போல அந்த நாய்க் குட்டி பார்ப்பதற்கு அழகாகவே இருந்தது. வாயைச் சுற்றி டிசைன் செந்திருந்தது போல இருந்த அந்தக் கறுப்பு நிறம் கூட யாருக்குமே சட்டெனப் பிடிக்கும்தான். வாசுகி தன் கையில் பிடித்தபடி என்னருகே ...
Full story
- Saturday, May 28, 2011, 11:41
- சிறுகதைகள்
- 0 views
விசாலம்
"மியாவ் மியாவ்" என் வீட்டுக் கதவின் பின்னாலிருந்து அழகான சத்தம்.
அந்த "மியாவ் மியாவ்" பூனைக் குட்டிகளின் இனிய குரல் என்னைக் கதவைத் திறந்து பார்க்கச் செய்தது. மெல்ல கதவைத் திறந்தவுடன் கண்ணிற்பட்டது ஒரு அழகான காட்சி. தாய்ப்பூனை தன் குட்டிகளை நக்கிக் கொடுக்க, மற்ற குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. "சாம்பல் நிறம் ஒரு குட்டி, வெள்ளைச் சாந்து நிறம் ஒரு குட்டி” என்று அழகோ அழகு.
நான் ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் ...
Full story
- Wednesday, May 25, 2011, 12:50
- சிறுகதைகள்
- 0 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
ரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான். முன்பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக்கொண்டு, நல்ல பொழுதுபோக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக்கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி. இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்....?
பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர். ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் ...
Full story