Archive for the ‘திரை’ Category

Page 5 of 8« First...34567...Last »

ஆக்சன் கிங் அர்ஜுனின் ‘காட்டுப் புலி’

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் டினு வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படம் காட்டுப் புலி. இயக்குநர் டினு வர்மா, இந்தியில் சண்டைப் பயிற்சி இயக்குநராக இருப்பவர். கத்தார், பார்டர், வீர், குதா கவா உள்ளிட்ட 50 படங்களுக்கு மேல் ஆக்சனில் கலக்கியவர், டினு வர்மா. அதற்காக 7 பிலிம்பேர் விருதுகளையும் அள்ளியவர். இப்போது முதல் முறையாக அர்ஜுனுடன் இணைந்து, காட்டுப் ... Full story

ரஜினி நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கக் கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் 2011 மே 22 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா  தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, எழில், பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முகசுந்தரம், சசிமோகன், மேலும் பல இயக்குநர்களும், 1000 உதவி இயக்குநர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் சங்க ... Full story

மலேசியாவில் உருவாகிறது ‘கைதி’

அஞ்சனா பிலிம்ஸ் சார்பில், மலேசியத் தமிழ் நடிகர்கள் நடிக்க, மலேசிய நாட்டில் படமாக்கப்பட்டு வரும் படம், “கைதி”. பரமேஷ்வரின் திரைக்கதை, தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் காந்தி பெண், யாகு இருவரும் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வள்ளி, ஷாமு மற்றும் தமிழ் நடிகர் வரதராஜ் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒரு தாயின் பாசப் போராட்டம், வன்முறையைக் கையிலெடுக்கும் ஒரு இளைஞன், சட்டத்தைக் காக்கக் துடிக்கும் நாயகன்... என நவரசங்களும் இணைந்து ... Full story

ஆண்மை தவறேல் – படச் சுவரொட்டிகள்

  தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் Full story

சிநேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!

மலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் 2011 மே 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சிநேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார். மலேசியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட், நிஷா. மலேசியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் ... Full story

‘இயக்குநர் இளவல்’ அருண் வைத்தியநாதன்

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு இயக்குநர் இளவல் என்ற பட்டத்தை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கிப் பாராட்டியுள்ளது. பிரசன்னா, சிநேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படம் வெளியான பிறகு அனைத்துத் தரப்பு மக்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட இப்படம் ஷாங்காய், கெய்ரோ, கோவா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படமாக்கப்பட்ட இப்படம், தொழில்நுட்பத்தில் பல புது முயற்சிகளைக் கையாண்டு ... Full story

கரிகாலன்: விக்ரம் நடிக்கும் புதிய படம்

சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம், கரிகாலன். எல்.ஐ. கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார். கரிகாலன் என்கிற ராஜாவின் வாழ்க்கையைப் புனைவுக் கதையாகப் பதிவு செய்யும் திரைப்படம், கரிகாலன். இந்தப் பிரமாண்டமான திரைப்படம், Animatronics, Miniature, Computer Graphics போன்ற முதல் தர தொழில்நுட்பங்களால் உருவாகிறது. பல நாட்டு நவீன தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து படைக்கும் பெரும் பொருட்செலவு நிறைந்த கரிகாலன் படத்தை SilverLine Film Factory  தயாரிக்கிறது. ஜீவா ... Full story

வானம் – திரை விமர்சனம்

மோகன் குமார் 'தாய் மூகாம்பிகை', 'தேவரின் திருவருள்' போன்ற படங்கள் பார்த்துள்ளீர்களா? இத்தகைய படங்களின் காட்சிகள் பின்வருமாறு இருக்கும்: முதல் காட்சி: முத்துராமன்- கே.ஆர். விஜயா தம்பதிக்குக் குழந்தை இல்லை. இதற்கு மருமகளே காரணம் என்கிறார் மாமியார் ! மன வேதனை உடன் கே.ஆர் விஜயா சாமி படம் முன்பு அழுகிறார் . இரண்டாம் காட்சி: ஸ்ரீ காந்த் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. நம்ப வைத்துக் கழுத்தறுப்பது இவர் வேலை. கன்னத்தில் ... Full story

‘நான் சிவனாகிறேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

எம்.என் கிரியேஷன்ஸ் வழங்கும் “நான் சிவனாகிறேன்” படத்தின் இசை வெளியீட்டு விழா, 07.05.2011 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் கமலா திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாடல் குறுந்தகட்டை இயக்குநர் எம்.ராஜேஷ் வெளியிட, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பார் சங்கத் தலைவர் இராம நாராயணன் பெற்றுக்கொண்டார். படத்தின் டிரைலரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, இயக்குநர் “பூ” சசி பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், தயாரிப்பாளர் .சத்யஜோதி தியாகராஜன், நடன இயக்குனர் திருமதி கலா மாஸ்டர், கமலா ... Full story

கேன்ஸ் திரை விழாவில் ‘அம்மா’ தமிழ்க் குறும்படம்

பிரபல கலை இயக்குநர் பிரபாகரன் இயக்கியுள்ள ‘அம்மா’ என்னும் குறும்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளது. இந்தக் குறும்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குநரான பிராபாகரன் முதல் முறையாக ‘அம்மா’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌க் கொண்டு, இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படம், கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச குறும்படம் ஒன்றுக்கு இளையராஜா இசையமைத்துள்ளது இதுவே முதல் முறை. பியானோ, ... Full story

திரை இயக்குநர் கே. பாலசந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது

திரைப்படத் துறையில் அனுபவமும் சிறப்பும் புகழும் பெற்ற மிகப் பெரும் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தருக்கு 2010ஆம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தனது பங்கை வழங்கிய அனுபவம் மிக்க திரைப்பட இயக்குநருக்கு இந்த விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. தங்கத் தாமரை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பொன்னாடை ஆகியவை இவருக்கு வழங்கப்படும். கடந்த 45 ஆண்டுகளாக திரைப்படத் துறையின் இயக்குநராகவும், திரைக்கதை ... Full story

நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு

நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படமாக பிரபு சாலமன் இயக்கிய மைனா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக பயணம் படத்துக்காக ராதாமோகனும், சிறந்த நடிகராக விதார்த்தும் (மைனா), நடிகையாக அஞ்சலியும் (அங்காடி தெரு) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரஜினியின் எந்திரன் படத்துக்கு மூன்று விருதுகள் இந்த விழாவில் கிடைத்துள்ளன. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த மேக்கப் மற்றும் சிறந்த தயாரிப்புக்கான விருதினை இந்தப் படம் பெற்றது. விஜய் ... Full story

அரவான் படத்திற்காக ரூ.80 லட்சம் செலவில் மாதிரி கிராமம்

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடிக்க, வெயில், அங்காடித் தெரு வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஜி. வசந்தபாலன் இயக்கும் திரைப்படம் ‘அரவான்’. பின்னணிப் பாடகர் கார்த்திக் முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். அரவான், பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நிகழும் கதை. அந்தக் காலக்கட்டத்தினை நிஜமான காட்சிகளாய்க் கண்முன் நிறுத்த வேண்டி., படப்பிடிப்புக்கு இடம் தேடிய குழு, பாண்டியர்கள் ஆண்ட, போர்க்காலங்களில் ஒளிந்து வாழ்ந்த ஏராளமான மலைப் பகுதிகளைத் தேடினர். மூன்று ... Full story

தமிழ் இயக்குநர்கள் குழு, நார்வே பயணம்!

நார்வே தமிழ்த் திரைப்பட விழா’, 2011 ஏப்ர மாதம் 20 - 25ஆம் திகதி வரை ஓஸ்லோவில் நடைபெறுகிறது. இவ்விழாவின் போது 17 திரைப்படங்களும், 10 குறும்படங்கள் தமிழர் விருதுக்காகவும், பயிற்சி வகுப்புகளும், 8 குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சிறப்பு விருந்தினர்களாகப் பிரபல இயக்குநர், நடிகர் சேரன், பிரபல இசையமைப்பாளரும் ஏ.ஆர். ரகுமான் உறவினரும், இன்றைய இளைஞர்களின் இசையமைப்பாளருமான, G.V. பிரகாஷ் குமார், 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' புகழ் இயக்குநர் வெற்றிமாறன், அவருடன் ஆடுகளத்தில் ... Full story

ஷகி‌லா‌ பா‌டி‌ய குத்‌துப் பா‌ட்‌டு

சத்‌ய சா‌ய்‌ கி‌ரி‌யே‌ஷன்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ ஏ.லஷ்‌மண்‌ரா‌வ்‌, பி‌.சீ‌னி‌வா‌சரா‌வ்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ 'சண்‌முகி‌பு‌ரம்‌'. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ மனோ‌ஜ்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌க, அவருடன்‌ அந்த்‌ர வி‌ஸ்‌வா‌ஸ்‌, ஷா‌தி‌கா‌ இருவரும்‌ நா‌யகி‌களா‌க நடி‌க்‌க என்‌.ஆர்‌.என்‌. செ‌ழி‌யன்‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ பா‌டல்‌ பதி‌வு‌ ஏவி‌.எம்‌. ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ உள்‌ள ‘ஜி’‌ தி‌யேட்‌டரி‌ல்‌ 16.04.2011 கா‌லை‌ நடை‌பெ‌ற்‌றது. இந்‌தப் படத்‌தி‌ல்‌ இடம்‌ பெ‌றும்‌ "சொ‌டக்‌கு போ‌டு சொ‌டக்‌கு போ‌டு சொ‌ர்‌ணா‌க்‌கா....‌ மடக்‌கி‌ப் போ‌டு மடக்‌கிப்‌ போ‌டு மங்‌கா‌த்‌தா‌..." என்‌கி‌ற பா‌டலை‌ ... Full story
Page 5 of 8« First...34567...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.