Archive for the ‘பத்திகள்’ Category

Page 11 of 25« First...910111213...20...Last »

விநோதமான சந்திப்பு, விசித்திரமான நட்பு

(நினைவுகளின் சுவட்டில் - பாகம்  II - பகுதி 20) வெங்கட் சாமிநாதன் சீனுவாசன் மாத்திரமில்லை. ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதை எனக்குக் காட்டியவர்கள் பலர். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில், வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார், அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல. என்னோடு அறையில் இருந்த நண்பர்கள் அனைவரையும், அவர் தன் அன்பாலும் அக்கறையினாலும் பாதித்தார். வெளித் தோற்றத்தில் ... Full story

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 9

இன்னம்பூரான் தணிக்கையறிக்கை எனப்படுவது...! தமிழிலக்கணத்திற்குத் தொல்காப்பியம் அரியதொரு மூலமாக விளங்குவது போல், தணிக்கைக்கு ஆடிட் கோட் ஒரு தொல்காப்பியம் என்க. அது தான் எங்கள் பால பாடம். அந்தச் சிறிய கையேடும் அதன் துணை நூல்களும் பயிற்சி மன்றங்களும், தலைமுறை தலைமுறையாக விளங்கும் குரு-சிஷ்ய பரம்பரை திண்ணைப் பள்ளிகளும், தணிக்கைத் துறையின் தூண்கள் எனலாம். தொடக்கத்துடன் முரணில்லா முடிவும், தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும் திறனும், விரிய உரைக்கும் வகையிலான பொருத்தமும், நுண்ணிதாகப் பொருளை விளக்கும் தன்மையையும் ... Full story

ஆராயப்படாமல் காத்துக் கிடக்கும் சித்தர்களின் அறிவியல் உண்மைகள்!

அண்ணாமலை சுகுமாரன் சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது.   தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது. சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை ... Full story

அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 5

கீதா சாம்பசிவம் கொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?? இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச் செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே ... Full story

அன்பே சிறந்த மருந்து

விசாலம் தொன்று தொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத் தெருவிலும் வியாபித்து, பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்..... அப்பப்பா.. என்ன இன்பம்... நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைம்மாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். அன்பே கடவுள் என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் இறைச்சக்தியை ரஹீம் என்று அழைக்கிறார்கள். ... Full story

விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி இன்றைய குழந்தைகளுக்குக் கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன. அதே கணினியும் தொலைக்காட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது. பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மன வலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்க வழக்கங்களை ... Full story

நிலவொளியில் ஒரு குளியல் – 30

ஸ்ரீஜா வெங்கடேஷ் பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நிலையில் புத்தகப் பைகள், சாப்பாடு டப்பாக்கள் முதலிய பொருட்கள் வாங்குவதில் முனைந்திருப்பீர்கள். இந்தக் கல்வியாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வி இல்லை  என்ற செய்தியோடு தொடங்குகிறது. கல்வி முறை எதுவாக இருந்தாலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடி வாங்காமல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமே என்பது தான் என் கவலையெல்லாம். கல்வியாண்டு தொடங்கி சில மாதங்களுக்கெல்லாம் ... Full story

ராகு – கேது தோஷம் போக்கும் மணல்மேடு நாகநாதர் கோவில்

விசாலம் வைத்தீஸ்வரன் கோயில், அங்காரக க்ஷேத்ரமாக விளங்குகிறது. செவ்வாய் தோஷத்திற்குப் பரிகாரம் தேட, இங்கு பலர் வருகின்றனர். இதே போல் ராகுவுக்குப் பரிகார ஸ்தலமாகத் திருநாகேஸ்வரமும் கேதுவுக்குக் கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் கூறப்பட்டுள்ளது. திருநாகேஸ்வரம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இதே போல் ராகு, கேது பரிகார ஸ்தலமாகக் காளஹஸ்தியும் சொல்லப்பட்டிருக்கிறது. ராகு, கேது பெயர்ச்சி 16.05.2011இல் திங்கட்கிழமையன்று ஏற்பட்டு, தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு ராகுவும் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்குக் கேது பகவானும் பெயர்ச்சியடைந்து விட்டன. இந்த ... Full story

பெரிய இடத்தில் சின்னப் புத்தி

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை 2011 மே மாத மத்தியில் சர்வதேச நிதி அமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் என்பவர், நியுயார்க் நகரில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது அவர் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் பாரிஸுக்குப் போகும் விமானத்திலிருந்து விமானம் கிளம்பப் பத்து நிமிஷங்களே இருந்தபோது, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். நேரே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிபதி அவர் மேல் ஒரு வழக்குப் ... Full story

காதுகளைத் தீட்டிக்கொண்டு…

இன்னம்பூரான் இங்கிலாந்தின் பெரிய எஃகு தொழிற்சாலைக்கும், புகழ் வாய்ந்த மோட்டார் வாகனத் தொழிற்சாலைக்கும் ஏகபோக உடைமையாளரும், அந்த நாட்டின் முதன்மைத் தொழிலதிபரும் பிரதமரின் ஆலோசகருமான ஒரு பிரபலம், தடாலடியாக 1,500 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். அத்தருணம் அவர் கூறிய காரணங்களை, எத்தருணமும் தன்னை இறக்கியே பேசிக்கொள்ளும் இந்தியர்கள், காதுகளை தீட்டிக்கொண்டு கேட்கவேண்டும். ‘இது ஊழிய நேர்மை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று தன்னுடைய தீர்மானத்தை நியாயப்படுத்திய அவர், இங்கிலாந்து மேலாளர்களின் தரத்தைக் குறை கூறி விளாசினார். இரு தொழிற்சாலைகளிலும், ... Full story

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 8

இன்னம்பூரான் முள்ளுப்பொறுக்கியார் ஒரு உரையாடல்: ராஜூ: ‘பாட்டி! பாட்டி! முள்ளுப்பொறுக்கி சாமி ஓடியாச்சு. கிடுகிடுன்னு என்னமா ஓட்றார்!’ பாட்டி: ‘கோமளம்! என் மடிப்புடவை எடுத்துண்டு வா. கம்பு வச்சுருக்கேன், பார், மூலைலே. அடியே வேதா! நல்லதாப் பாத்து தேங்காய், பழம், வெத்தலை எல்லாம் அந்த வெள்ளித் தட்டுலெ எடுத்து வை. பெருமாள் வந்திண்டே இருக்காராம். டேய் ராஜூ! தாத்தாட்டே சொல்லு. எப்ப பாத்தாலும் அரட்டை, பக்கத்தாத்து பாவி பிராமணனோட. கொஞ்சம் விட்டாக்க, ... Full story

நிலவொளியில் ஒரு குளியல் – 29

ஸ்ரீஜா வெங்கடேஷ் இன்னும் கோடைக் காலத்தை விட்டு நாம் வெளியேறவில்லை. கோடையில் நடக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் பயணங்கள். இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ரயில் வண்டியிலேயே தான் அமைகிறது. சொந்த ஊருக்கு வெகு அருகிலிருக்கும் பேறு பெற்றவர்கள் ஒரு பேருந்தைப் பிடித்துச் சில மணி நேரங்களில் ஊரைச் சென்று அடைந்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை மிக நீண்ட ரயில் பயணம் என்பது சாயங்காலம் தொடங்கி மறு நாள் விடியலில் முடிந்து ... Full story

இரண்டாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

அண்ணாகண்ணன் (ஆசிரியர், வல்லமை மின்னிதழ் | vallamaieditor@gmail.com) 2010 மே 16ஆம் நாள், பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களின் இ-நேர்காணலை வல்லமையின் முதல் இடுகையாக வெளியிட்டோம். இதன் தொடர்ச்சியாக, மின் தமிழ் இணையக் குழுமத்தில் எழுதிய செய்தியில், ‘தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த இதழ் இயங்கும்’ எனக் குறிப்பிட்டோம். படிப்படியாகப் பலரும் வல்லமையில் எழுதத் ... Full story

அமெரிக்காவில் வசந்த காலம்

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை சிறு பிள்ளையாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது வசந்த காலம் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் வசந்த காலம் என்ற ஒன்றை அனுபவித்ததில்லை. தமிழ்நாட்டின் தென்பகுதியில் வளர்ந்து வந்தபோது அனுபவித்ததாக இப்போது நினைவிற்கு வருவதெல்லாம் கொளுத்தும் கோடை காலமும் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கும் தெருவில் நடப்பதற்கே பயந்த மழைக் காலமும்தான். வசந்த காலம் என்பதெல்லாம் புத்தகத்தில் படித்ததோடு சரி. வசந்த காலம் மட்டுமல்ல, மற்ற எந்தப் பருவ காலத்தையும் இந்தியாவில், அதுவும் ... Full story

தமிழ்நாடு நாடுவது பாடாண் திணை

இன்னம்பூரான் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், மணிமேகலையின் மைய செய்தியையும் பாடாண் திணையின் ஈகையையும் கொடையையும் அறிவுரையையும் இணைத்து, யான் எழுதிய கட்டுரை ஒன்றின் பகுதி இது: => " ...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்..." => “இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண் திணை இலக்கியத்தில் மட்டும்தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கியச் சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ... Full story
Page 11 of 25« First...910111213...20...Last »
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.