- Wednesday, April 4, 2012, 6:06
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
இன்னம்பூரான்
‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று அமைச்சரை வினவிய அரசனை அரியணையிலிருந்து இறக்கி விடவேண்டும். நிரந்தரமாக, அந்தப்புரத்துப் பள்ளியறை வாசியாக இருக்கும் மன்னனுக்குத் தான் இந்த அளவு நாட்டு நடப்பு பற்றிய அறியாமை இருக்க முடியும். அவனால் மக்களுக்கு பயன் யாதும் இல்லை. கெட் அவுட்.
டில்லி முனிசிபாலிட்டி அத்தகைய கண்மூடி ராஜாங்கம் போல. இல்லாவிடின், கிட்டத்தட்ட 5 லக்ஷம் சைக்கிள்-ரிக்க்ஷாக்கள் ஓடும் டில்லி நகரில், ஏதோ ஒரு குருட்டாம்போக்குக் கணக்கில் 99 ஆயிரம் வண்டிகளுக்குத் ...
Full story
- Wednesday, April 4, 2012, 5:07
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்
சேதாரமாகும் நுண்மான் நுழைபுலம்
சென்ற பகுதியில் நாம் கண்டது: கணக்கு போடும்போது ஒவ்வொரு தனி மனித மூளையும் தனித்துவ வழியில் இயங்குகின்ற இயற்கையைப் புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்கள் தாம் விரும்பும் வகையில் கணிதச் செயல்பாட்டை தமது மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதில் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவியின் மூளைக்குள்ளே கணக்கு நிகழ்த்துகிற இரசாயன மாற்றங்களை - உளப்பாங்கு பேதங்களை – உணர்ச்சி நிலைகளை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை!
எனது மகன் எல்கேஜி வகுப்பில் படித்தபோது நடந்த நிகழ்ச்சி இது. சென்னையில் ஒரு பள்ளி. அவ்வப்போது ...
Full story
- Monday, April 2, 2012, 12:31
- இலக்கியம், பத்திகள்
- 0 views
மலர் சபா
புகார்க்காண்டம் - 3. அரங்கேற்று காதைமுத்தமிழ்ப் புலவன்
அலையோசைமிகு கடல்சூழ் புவிதனில் தமிழ் நாடு வாழ் மக்கள் அறிந்த தன்மையன்;முத்தமிழ் முற்றும் அறிந்தவன்.
வேத்தியல் பொதுவியல் என்றிருநாட்டிய நாடக நூல்களின் விதிக்கூறுகள் நன்கறிந்துஅந்நெறிகள் தவறிடாமல்கடைப்பிடிப்பவன்.
இசைப்புலவன் வரித்து வைத்திட்டநீர்மைகளின் நியதிகளின்போக்கறிந்தவன்.
இசைப்புலவன் தாளத்தில்எய்துவைத்த அழகனைத்தும்தம் கவியதனில்அறிந்தது அறிந்த வண்னம்மரபுகள் மீறாமல்வடித்து வைக்கும் கவிஞன் தானவன்.பகைவர்கள் ...
Full story
- Monday, April 2, 2012, 5:42
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
நாகேஸ்வரி அண்ணாமலை
இன்னும் அமெரிக்காவில் இனத்துவேஷம் இருக்கிறது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துக்கொண்டே
இருக்கின்றன. ஜனாதிபதி ஒபாமா கருப்பர் என்பதற்காகவே அவர் இரண்டாவது தடவையும் ஜெயித்து ஜனாதிபதி ஆகிவிடக் கூடாதென்று குடியரசுக் கட்சியில் பலர் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கைகள் சரி இல்லையாதலால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை, அதனால் அவர் இன்னொரு முறை தேர்ந்தெடுக்கப்படாமல் ...
Full story
- Saturday, March 31, 2012, 6:21
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
திவாகர்
நாடகம் - 6, காதல் கடிதம்-2
காதல் கடிதம் - 1
வனஜா: அது சரி, ராமா.. உங்களை ஒரு கேள்வி கேக்கலாமா?
ராமர்: கேள்விதானே.. எது வேண்டுமானாலும் கேளேன்..
வனஜா: நீங்க சீதையை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா! அப்படியெல்லாம் இல்லியே.. அப்ப நீங்க எப்படி இப்போ மட்டும் இந்த தாஸுக்கு
சப்போர்ட் பண்றேன் பேர்வழின்னு காதலை போற்றமுடியறது?
ராமா: நானும் சீதையும் என்றுமே காதலர்கள்தான் வனஜா?
வனஜா: அது எப்படி?...
Full story
- Saturday, March 31, 2012, 5:00
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
மூவலூர் இராமாமிர்தம் - (1883-1962)
திருவாரூர் கிருஷ்ணசாமிக்கும் சின்னம்மாளுக்கும் பிறந்த இவர், ஏழ்மையின் காரணமாக, மாயவரம் மூவலூர் ஆச்சிக் கண்ணு என்னும் தாசியால் வளர்க்கப்பட்டார். சாதியின் பெயரிலும் பிறப்பின் அடிப்படையிலும் கடவுளின் பெயரில், பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கிய ஒரு சமூகக் கொடுமைக்கு எச்சரிக்கை மணி அடித்தவர் இவர். இதற்காக 1925இல் இசைவேளாளர் சங்க மாநாடு கூட்டினார்; தேவதாசி முறை ஒழிப்பைப் பிரகடனப்படுத்தினார்.
தேசவிடுதலையுடன், சமூக இழிவிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் சமூகப் போராளியான இவரை மகாத்மா காந்தியடிகளும் அண்ணாதுரை அவர்களும் பெரிதும் பாராட்டியுள்ளனர். ...
Full story
- Friday, March 30, 2012, 10:33
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பிச்சினிக்காடு இளங்கோ
முன்னுரை
என் முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்”படித்து விட்டு மறைந்தும் மறையாத டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்றார். இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய வைரமுத்து” உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றார்.
இவர்களின் முடிவைச் சாதகமாக்கிக்கொண்டு ஒரு மின்னலைப்போல் வந்து போன ஓர் உண்மைச்சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.
சம்பவம் நிகழ்ந்த காலத்திற்கும்சம்பவத்தை எழுதும் காலத்திற்கும்இடைவெளி இருபது ஆண்டுகள்.
அதே வேகம்,துடிப்பு,வெப்பம்,...
Full story
- Friday, March 30, 2012, 4:35
- Featured, இலக்கியம், பத்திகள்
- 1 views
சீதாம்மா
காதல் உலகம் ஓர் மாய உலகம் மயக்கும் உலகம். உணர்வைச் சுழற்றும் உலகம் இந்த உலகிற்குள் நுழைந்து விட்டால் அறிவு வேலை செய்யாது. எண்ணம், பேச்சு , எழுத்து எல்லாம் புலம்பல் மயம். அபூர்வ சக்தி படைத்தது காதல். இரு உயிர்களின் இணைப்பு - பிணைப்பு!
ஓர் நந்தவனம். வித விதமான வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா. அதற்குள் ஓர் கவிஞன் நுழைகின்றான். ரோசாப்பூ அவனை ஈர்க்கின்றது. பூவில் மங்கையின் முகமும், பூவின் இதழ்களில் அவளின் ...
Full story
- Thursday, March 29, 2012, 22:34
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
மேற்கே பகலவன் மறையும் நேரம். ஒரு சிறிய மேடை. அதன் மீது நான். எதிரே..
நீண்டு நீண்டு விரிந்து விரிந்து செல்லும் நீலக் கடல்; அதன் முடிவில், கரலை முத்தமிடக்
கீழிறங்கி வரும் பரந்து பட்ட நீல வானம்; காணுதற்கரிய கவின்மிகு காட்சி. கண்களில் உறைந்துவிட்ட,
கருத்தில் நிலைத்துவிட்ட காட்சியில் லயிட்துவிட்ட போழ்தில் நேரம் நகர்வதே தெரிவதில்லைதான்.
தன்னை மறந்த நிலையில் ஒருவனுக்கு காலமும் இடமும் என் பொருட்டு? ...
Full story
- Wednesday, March 28, 2012, 13:04
- இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்
சென்ற பகுதியில் இரண்டு முக்கிய வினாக்களை எழுப்பினோம். அவையாவன:
நூற்றுக்கு நூறு வாங்குகிற மாணவர் உண்மையிலேயே , அறிவாளியா? நூற்றுக்கு நூறு வாங்காத மாணவர் அறிவிலியா?
இவ்வினாக்களுக்கான விடையின் விவாதத்திற்கு மீண்டும் வருவோம்.
உலக இயக்கத்திற்கு உந்து சக்தியாய் அமைய ஆலைகளும், தொழிலும், வணிகமும், கலைகளும், நூலும், ஆன்மீகமும், இலக்கியமும், அரசியலும், ஜோசியமும், காவலும், இராணுவமும், கப்பலும், வானூர்திகளும், சட்டமும் தேவை. இவை யாவும் சாதாரணத் தேவைகள் ...
Full story
- Wednesday, March 28, 2012, 7:58
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
வெங்கட் சாமிநாதன்
நினைவுகளின் சுவட்டில் பாகம் - II (பகுதி - 41)
ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை....
Full story
- Monday, March 26, 2012, 16:22
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
பெருவை பார்த்தசாரதி
‘ஆசு’ என்றால் அய்யம், குற்றம் என்ற பொருள்படும். ‘இரியன்’ என்ற சொல்லுக்கு அகற்றுதல், நீக்குதல் என்ற பொருள். மாணவர்களின் மனதில் தோன்றும் சந்தேகங்களுக்கு விடையளித்து, அறியாமையைப் போக்குகின்றவர் “ஆசிரியர்” ஆவார். “மாணவன்” என்ற சொல்லுக்கு மாண்பு பொருந்தியவன், மாட்சிமை அமைந்தவன் என்ற அர்த்தம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்று சொன்னாலே, அழுது அடம் பிடிக்கக்கூடாது. விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் பள்ளிக்குச் செல்லுகின்ற சூழ்நிலையை, அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உருவாக்கித் ...
Full story
- Monday, March 26, 2012, 15:25
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
மலர் சபா
புகார்க்காண்டம்- 2, மனையறம் படுத்த காதை
தம்பதியரின் இனிய இல்லறம்
பின்னிக் கொள்ளும்பாம்புகள் இரண்டாய்ப்பிணையல் இன்பத்தில்மூழ்கித் திளைத்தனர்காதல் தம்பதியர்.
காமதேவனும்அவன் மனைவி ரதியுமாய்க்காம இன்பங்களனைத்தும் கண்டே அவர் களித்தனர்.
நிலையாமையுடைத்துஇவ்வுலகம்அழியும் தன்மையுடைத்து.
இவ்வுண்மை உணர்ந்தவராய்உடல்தனில் உயிர் இருந்திடும் போதேஇன்பங்கள் முழுதும்துய்த்திடும் நோக்கில்காதல் இன்பத்தில்இடைவிடாது ஆழ்ந்துகளித்திருந்தனர்.
அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள்
இங்கே 91-94...
Full story
- Saturday, March 24, 2012, 16:56
- இலக்கியம், பத்திகள்
- 0 views
தி.சுபாஷிணி
தமிழ் நாட்டை ஆண்ட நாயக்கர் வழி வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள் ஆவார். இவரது ஆட்சி போர்க்களமும் குழப்பங்களும் நிறைந்திருந்ததால், 1682இல் மன்னர் இறந்தார். உடனே தன் மகன் முத்து வீரப்பநாயக்கரை மன்னராக்கினார் மங்கம்மாள். ஆனால் நாட்டை ஆண்டது மங்கம்மாள்தான்.
கி.பி. 1686இல் தஞ்சை மராட்டிய மன்னர் எக்கோஜியும், இராமநாதபுரம் சேதுபதியும் படையெடுக்க முயன்றபோது,மங்கம்மாள் அவர்களைத் தம் இராஜ தந்திரத்தால் முறியடித்தார். எதிர்பாராதவிதமாக 1687இல் தம் மகன் இறந்த உடனே அவனது மனைவியும் ...
Full story
- Thursday, March 22, 2012, 12:07
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 0 views
பாஸ்கர பாரதி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! மனிதன் ஆயிரம் பேசட்டுமே!
எந்த மனிதனையும் இந்த உலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வா வா என்று வரவேற்பதில்லை. நாம்தான் உழைத்து உழைத்து உழைத்து, தடைகளை உடைத்து உடைத்து உடைத்து, எதிர்த்து எதிர்த்து எதிர்த்து முன்னேற வேண்டியதிருக்கிறது. இதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டிருக்கிற விதி.
இதிலே அச்சப்பட ஏதுமில்லை. இந்த வையத்து மாந்தர் எல்லோரும் ஒருமித்து எதிர்த்து நிற்பினும் அச்சம் கொள்ள அவசியமில்லை. ஊர் ...
Full story