Archive for the ‘இ. அண்ணாமலை’ Category

Page 1 of 212

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 35

  இ.அண்ணாமலை   கேள்வி: பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை இலக்கணக் கூறுகளைக் கொண்டு நிறுவ இயலுமா? காலப்போக்கில் இவ்வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றனவா? -- விஜயலக்ஷ்மி   பதில்: இலக்கிய மொழி நடைக்கும், முக்கியமாகக் கவிதை மொழி நடைக்கும், பேச்சு மொழி நடைக்கும் எந்த மொழியிலும் வேறுபாடுகள் இருக்கும். தொல்காப்பியர் துவங்கி நம் இலக்கண ஆசிரியர்கள் செய்யுள் வழக்கையும் உலக வழக்கையும் வேறாகப் பார்க்கிறார்கள். கவிதை மொழி நடை எழுத்து மொழி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 34

இ. அண்ணாமலை கேள்வி:அல்ல என்ற சொல்லைப் பன்மையில் மட்டுமின்றி, ஒருமையிலும் பலர் பயன்படுத்துகிறார்கள் (அப்படி அல்ல, நான் சொல்வது அது அல்ல); இல்லை, அல்ல, அன்று ஆகிய சொற்கள், எந்தெந்த இடங்களில் இடம் பெற வேண்டும்? - அண்ணாகண்ணன் பதில்: தமிழ் வாழும் மொழி. உயிருள்ள எதுவும் வளரும்; மாறும். மொழியில் தோன்றும் மாற்றங்களும் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. நம் வீட்டுப் பையனுக்கு மீசை வளருவது தடுக்க முடியாத இயற்கையான வளர்ச்சி. மீசை வளர வேண்டாம் என்று மனிதன் விதி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 33

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி? –அண்ணாகண்ணன் பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   திரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி : செம்மொழியின்  இன்றைய பயன் அதிலமைந்த  செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு  ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய  பங்கு வகிக்கிறது. ஆதர்சம்  வெளிப்பட இலக்கியம் ஒரு  இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 31

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 5: செம்மொழித் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய பணிகளைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒரு செம்மொழிக்குச் செவ்விலக்கியம் இருக்கும். தமிழ் எழுதப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்ட சில மேற்காசிய மொழிகள் செம்மொழிகள் என்று கருதப்படுவதில்லை. இவற்றில் செவ்விலக்கியம் இல்லாததும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 30

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:   செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 4: உலக நாடுகளில் தாய்மொழி வழிக் கல்வியினால் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளைத் தமிழ்நாட்டின் தமிழ்வழிக் கல்வியோடு ஒப்பிட்டுக் கருத்துரைக்க வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஆராய்ச்சி வளர்ச்சி ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 29

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 3: உலகளாவிய நிலையில் ஒப்பியல் துறைகளில் நடைபெறும் தமிழ் ஆய்வுகள் குறித்துத் தங்கள் மதிப்பீடு என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஒப்பியல் இலக்கியத் துறையை மட்டும் இந்தப் பதிலில் எடுத்துக்கொள்கிறேன். இலக்கிய ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 28

சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி - 2: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் Area Studies வழியாக நடைபெற்ற மொழிசார் ஆராய்ச்சி வளர்ச்சி நிலைகளை மதிப்பிட வேண்டுகிறேன். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: காலனிய காலத்தில் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காலனிகளின் சமூகம், ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 27

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி -1: தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: ஐரோப்பிய அரசுகள் இந்தியாவோடு கொண்ட ஆதிக்க உறவின் ஒரு விளைவு, இந்தியவியல் (Indology) என்னும் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 26

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முக்கியமாக T, D ஆகியவற்றை ர, ற என்ற எழுத்துகளால் ஈழத் தமிழர்கள் ஒலிபெயர்க்கின்றனர். நெடிலைக் குறிலாக எழுதுகின்றனர். http://tamilcnn.com தளத்திலிருந்து 2011 மார்ச்சு 29 அன்றைய தேதியில் எடுத்த சில சான்றுகள்: ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 25

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: அண்மையில் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பா.சசிரேகா ஆகியோருடன் உரையாடுகையில் சென்னை என்பதை ஆங்கிலத்தில் CHENNAI என எழுதுவது தவறு என்றும் ‘ச்செ‘ என்ற ஒலி, தமிழில் மொழிமுதலில் வராது என்றும் குறிப்பிட்டனர். இதே திசையில் சிந்தித்தபோது, சேப்பாக்கம் என்பதை Chepauk என்றும் சித்தூர் என்பதை  Chittoor என்றும் எழுதுவது நினைவுக்கு வந்தது. ஆனால், செம்பனார்கோவில் என்பதை ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 24

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: இலண்டன் பள்ளியில் தமிழ் படிக்கும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் (இலண்டனிலிருந்து அனுப்பியர், தமிழாசிரியர் ரீட்டா ஃபற்றிமாகரன்): 1.குறிலின் நீட்சிதான் நெடில் என்றால் ஓசையில் மட்டும் அல்ல, வரிவடிவத்திலும் தொடர்பு இருப்பது தானே பொருத்தம்? ஆனால் (இ-ஈ), (உ-ஊ) ஆகிய வரிவடிவங்களில்  ஓசையில் மட்டும்தான் தொடர்பு இருக்கிறது; வரிவடிவில் தொடர்பு இல்லை. இது ஏன்?... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 23

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: விஜயராகவன் எழுப்பிய கேள்வி: “பேச்சுத் தமிழில் வந்துவிட்ட சில புதிய ஒலியன்களை எழுதத் தமிழுக்குச் சில புதிய எழுத்துகள் தேவை என்பது என் நிலைப்பாடு” என்னும் உங்கள் கருத்தைப் பற்றி விரிவாக எழுதுங்கள். பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: தமிழ் நெடுங்கணக்கில் முப்பது எழுத்துகள் என்று தொல்காப்பியம் வரையறுத்தது. புள்ளியால் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படும் மூன்று சார்பெழுத்துகளை (குற்றியலுகரம், ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 22

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: விஜயராகவன் எழுப்பிய கேள்வி: க்ரியாவின் தற்கால அகராதியில் சொற்களின்  வழக்கு பற்றிக் குறிப்பு உள்ளது. சில சொற்கள் 'அருகி வரும்', சில சொற்கள் 'பெருகி வரும்' எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இது ஆர்பிட்ரரியாகவும் சப்ஜெக்டிவ் ஆகவும் உள்ளது. இதற்கு புறவய மதிப்பீட்டைப் பிரயோகித்தார்களா? அப்படியானால், அது என்ன? 'அருகி வரும்' என்று கூறும் சொற்கள், இன்றும் கூட பலரால் உபயோகிக்கப்படுகின்றன. பேராசிரியர் இ.அண்ணாமலையின் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 21

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: பேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் மறுகேள்வி: ஒருங்குறியில் கிரந்தப் பிரச்சினையில், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று, கிரந்தமே கூடாது. மற்றொன்று கிரந்தத்திற்கு இடம் அளிப்பதை எதிர்க்கவில்லை, மாறாக, சமசுகிருதத்தில் இல்லாத ஒலிகளுக்கு அல்லது ஒலியன்களுக்கு, கிரந்தத்தில் ஏன் இடம் அளிக்கவேண்டும்? அதுவும் தமிழில் உள்ள வரிவடிவங்களை ஏன் சேர்க்கவேண்டும் என்பதே கேள்வி. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: இந்தக் கேள்விக்கு நான் ஏற்கெனவே எழுதிய பதில்களில் விடை இருக்கிறது. ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 20

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: பேராசிரியர் ந. தெய்வசுந்தரத்தின் மடலின் பகுதிகள்: .....யாரும் கிரந்தத்திற்கு யூனிகோடில் இடம் அளிக்க வேண்டாம் என்று கூறவில்லை. கிரந்தத்தில் ஏற்கனவே உள்ள எழுத்துகளுக்கு, சமஸ்கிருதத்தை அதில் எழுத விரும்புவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இடம் அளியுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். அதில் இல்லாத எழுத்துகளுக்கு, தமிழில் உள்ள எழுத்துகளுக்கு, கிரந்தத்தில் இடம் கொடுத்தால், சமஸ்கிருதச் சொற்களின் வரவு தமிழில் அதிகரித்துவிடும் என்ற அச்சமும் இருக்கிறது. அச்சத்தில் நியாயமும் இருக்கிறது. ..... இந்திய நடுவண் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 19

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: மின்தமிழ் இணையக் குழுமத்தில் விவாதித்த கேள்வியை அண்ணாகண்ணன் வழி பெற்றுப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி: கட்டாயமா, அவசியமா, நிச்சயமா, கண்டிப்பா முதலான சொற்களைப் பெருமளவில் யாருமே சரியாப் புழங்குறது இல்லை. ‘கட்டாயம்’ன்னா, நிபந்தனையின் பேரில் செய்வது; ‘அவசியம்’ன்னா, தவிர்க்க முடியாமையினால் செய்வது; ‘நிச்சயம்’ன்னா, நிர்ணயத்தின் பேரில் செய்வது; ‘கண்டிப்பா’ன்னா, நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வது.... compulsorily, necessarily, certainly, surelyன்னு ஆங்கிலத்துல மட்டும் சரியாப் பாவிக்கிறீங்களே?... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஆகியவை சேர்ந்து கிரந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமாக, பொதுக் கூட்டத்துக்கு அழைத்த பிரசுரத்தின் சுருக்கம்: “..........செம்மொழி தமிழுக்கு அரசால் பெறப்பட்டுள்ள குறியீடுகள் வெறும் 48 குறியீடுகளே. மொத்த ஒதுக்கீடு 128 இடங்கள். இந்த 48 குறியீடுகளில் 41 குறியீடுகள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுவன. .......... தமிழுக்கேயான ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 17

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறை மாணவி வெ.ஜனனி எழுப்பிய கேள்விகள்: 1) பல துறைகளில் இன்னும் தமிழ் நூல்கள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? குறிப்பாக மானுடவியல், சமூகவியல், சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் கணக்கிடும் அளவிற்குத்தான் நூல்கள் இருக்கின்றன. மேலும் நம்மிடையே கலைச்சொற்கள் இன்னும் புதியதாக வரவில்லை. கலைச்சொல் அகராதியையும் பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை. 2) தமிழில் encyclopedia போன்ற நூல்கள், மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதுபோன்ற துறையில் நூல்கள் எழுதுவதன் மூலம், தமிழை அடுத்த ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 16

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி: வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின்........ தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்க முடியாது. தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி.............. ஈழத் தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 15

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்குத் தந்த என் பதிலுக்கு வந்த எதிர்வினைகள் (கொஞ்சம் சுருக்கப்பட்டுள்ளன): பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்: தமிழ் வாழ, வளர என்ன தேவை என்பது பற்றிய என்னுடைய நிலைப்பாட்டின் அடிப்படையில் என் பதில்கள் அமைகின்றன. தமிழ் வாழ்வு, வளர்ச்சி பற்றிய எதிர்வினை ஆற்றுபவர்களும் தமிழ் வாழ, வளர விரும்புவர்களே. ஆனால் அவர்களுடைய நிலைப்பாடு என்னுடையதிலிருந்து வேறுபட்டது. இந்த வேறுபாட்டுக்கு விவாதத்திற்கு உட்படுத்தக்கூடிய ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 14

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: தமது முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் மீண்டும் எழுப்பியுள்ள கேள்வி. “எழுத்து குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே.” இந்த எனது கூற்றினைத் திரும்பவும் ஆய்ந்து பதில் தாருங்கள். உலகில் மனிதர்களினால் எழுப்பக்கூடிய ஒலிகளில் அதிக எண்ணிக்கையானவை பேச்சுத் தமிழில் உண்டு. இது ஏன்? எங்களுக்கு தமிழ் ஏன் சரியாகப் புரியவில்லை? தமிழ் இலக்கணம் என்ன கூறுகின்றது? பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்: எழுத்து குறிப்பது ஒலிகளை. ஒலிகள் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 13

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: கணேசனின் கேள்வி: கிரந்த எழுத்துகளை ஒருங்குறியில் (Unicode) சேர்ப்பது பற்றி அரசு தலையிடும் அளவுக்குச் சர்ச்சை எழுந்துள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்: பிராமி எழுத்து முறையிலிருந்து சிங்கள, திபேத்திய, பர்மிய, தாய் எழுத்துகளோடு, தமிழ் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மொழிகளின் எழுத்துகள் தோன்றியது போல கிரந்த எழுத்துகளும் தோன்றின. தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தை எழுதவும் சமஸ்கிருதம் மிகைபடக் கலந்த மணிப்பிரவாளத் தமிழ் நடையை ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 12

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: மின்தமிழ் இணையக் குழுமத்தில் complex number என்ற கணிதவியல் கருத்துக்குத் தமிழ்ச் சொல் என்ன என்ற விவாதத்தில் கலப்பெண், செறிவெண், சிக்கலெண் என்ற மூன்று சொற்கள் வழக்கில் உள்ளன என்று சொல்லி, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த சொல் எது என்று சொன்னார்கள். இந்தச் சொல், கணிதக் கலைச்சொற்களில் அடிப்படை நிலையில் உள்ள ஒன்று. இந்த விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட ஃழான்-லூய்க் செவ்வியார் (Jean-Luc Chevillard) என்னும் பிரெஞ்சுத் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 11

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: மின் தமிழ் இணையக் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலை மேற்கோள் காட்டி, அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி: மின் தமிழ்க் குழுமத்தில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி இது - பாலமுரளி: பவர் பாய்ண்ட் = தமிழ்ப் பதம் என்ன? அண்ணாகண்ணன்: திரை விரித்து உரை நிகழ்த்திய போது, 'திரையுரை' என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். திரை இல்லாமல் ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.