சினிமா

 

வெ. மீரா ஜனனி


சினிமா என்னும் சிறைச்சாலையில் நாம் அடைபட்டுள்ளோம்
தப்பிக்க விரும்பாமல்

பாட்டு புத்தகங்களை வாங்கி , மனப்பாடம் செய்கின்றோம்
பாடப் புத்தகங்களை மறந்து

பன்ச் டயலாக் என்றால் விசிலடிக்கிறோம்
கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு

ஒய் திஸ் கொல வெறி? என்று பாடி கொலையே செய்கிறோம்
மனசாட்சி துறந்து

குழந்தைகளைக் குறைந்த… Continue reading

பள்ளி என்பது…

வெ.மீரா ஜனனி

பத்தாம் வகுப்பு மாணவி. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த் ஆர்வம் உள்ளவர். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் கவிதை புனையும் ஆற்றல் உள்ளவர். மிகப் பெரிய இரு மொழி எழுத்தாளர் ஆவதே இவரின் லட்சியம்.

 

பள்ளி என்பது ஒரு கலைக் கூடம்
அக்கலையை நாம் கற்றல் வேண்டும்.

பள்ளி என்பது நம்… Continue reading

சித்தார்த்தா பள்ளியில் இலவச மனநல ஆலோசனை மையம் துவக்கம்

Share

செல்லக் குட்டிப் பாப்பா!

கவிநயா

குட்டிக் குட்டிப் பாப்பா பார்!
கட்டி வெல்லப் பாப்பா பார்!
கிட்டச் சென்று தொட்டுப் பார்!
பட்டுப் போல இருக்கும் பார்!

கையைக் காலை உதைக்கும் பார்!
காந்தம் போல இழுக்கும் பார்!
பையப் பையப் பேசும் பார்!
பொக்கை வாயில் சிரிக்கும் பார்!

கையில் விரலைக் கொடுத்துப் பார்!
கெட்டி யாகப் பற்றும்… Continue reading

புதிர்

பவள சங்கரி

அன்புச் செல்லங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

இந்தக் கணிணி யுகத்தில் என்னதான் வீடீயோ கேம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம் என்று எண்ணிலடங்கா பொழுது போக்குகள் இருந்தாலும், நம் பழமையான மரபுக் கதைகள் கேட்பதென்றால் ஒரு தனிப்பட்ட ஆனந்தம்தானே! அதுவும் ராஜா கதை என்றால் மேலும் சுவைதானே? இதோ அப்படி ஒரு கதை உங்களுக்காக இந்த குழந்தைகள் தின பரிசாக!

புதிர்

அந்தக்காலத்தில் அரசன் என்றாலே மக்கள் தெய்வமாகக் கொண்டாடுவார்கள். அவரும் அதற்கேற்றார் போன்று மக்களிடம் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார். தன் நாட்டு மக்களை தம் குடும்ப உறுப்பினர்களாகவே கருதி அவர்களின் நலனிலும் இயன்றவரை அக்கறை கொள்ளுவார். தம் குதிரையில் ஏறி நாட்டையும், காட்டையும் கூட அடிக்கொரு முறை வலம் வந்து மக்களின் குறைகள் தீர்ப்பதையே கடமையாகக் கொண்டிருப்பார்.

அது போன்று ஒரு முறை ராஜா மதிவர்மன் ஒரு காட்டிற்குச் சென்றார். மதிவர்மனுக்கு எப்போதும் பெண்கள் என்றால் தனி மதிப்பும், மரியாதையும் உண்டு. காரணம் பெண்களுக்கு மட்டுமே எசமானர் விசுவாசம் அதிகம் என்பது அவர் கனிப்பு!அதனாலேயே அவர்கள் பூசைக்குரியவர்கள் என்ற திடமான நம்பிக்கையும் கொண்டிருந்தார். Continue reading

Share

புத்தம் புது மலரே!

அன்பு நண்பர்களே,

நம் வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினருக்கு 2011 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஹாங்காங் நேரப்படி புதன் கிழமை விடியற்காலை 2.50 மணிக்கு (இந்திய நேரப்படி 0.20 மணி) சைனா நாட்டில் மிக அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்… Continue reading

வளர்ந்த குழந்தைகளின் கொண்டாட்டம்

தூரிகை சின்னராஜ்

குழந்தைகள் தினவிழா என்றாலே குழந்தைகள் மட்டுமே பங்கேற்று கொண்டாடிவரும் வேளையில், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வளர்ந்த குழந்தைகளான ஆசிரியர்கள் கொண்டாடிய வண்ணமயமான குழந்தைகள் தினவிழா நம்மை வியக்க வைத்தது.

தஞ்சையில் அமைந்துள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்கள் மேடை ஏறி அசத்தினார்கள். தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டு , நடனம்,… Continue reading

கண்ணைப் போல காப்போம்

உயிரினம் இல்லா உலகை – நாமும்
நினைத்துப் பார்க்க முடியுமா?
உண்மை இல்லா வாழ்க்கையை – நாமும்
வாழ்ந்து காட்ட முடியுமா?
புழுக்களும் பூச்சிகளும் இல்லா – உலகில்
நாமும் வாழ முடியுமா?
பூக்களும் செடிகளும் இல்லா – உலகை
நினைத்துப் பார்க்க முடியுமா?
புல்லும் மரமும் இல்லா – நாட்டை
எண்ணிப்பார்க்க முடியுமா?
விலங்கும், பறவையும் இல்லா – காட்டை
யோசித்துப் பார்க்க முடியுமா?
காடுகள் இல்லா நாடுகள் – ஏது
கண்ணால் காட்டு பார்க்கலாம்… Continue reading

நூறு சத உறுப்பினர்கள் கொண்ட நேரு தபால் தலை மன்றம்


\தூரிகை சின்னராஜ்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் நகரில் உதகை சாலையில் இருக்கும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களும் நேருவின் பெயரில் அமைந்துள்ள தபால் தலை சேகரிப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1999 இல் தொடங்கப்பட்ட நேரு தபால் தலை மன்றம் ஆண்டுதோறும் தபால் தலை கண்காட்சியை நடத்தி வருகிறது.

பள்ளி மாணவர்கள் இதை பொழுது போக்காக… Continue reading

இல்லை….. இல்லை.

தூரிகை சின்னராஜ்
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி இல்லை.
ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே உயிருடன் இருப்பது இல்லை.
நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் இல்லை.
கிவி பறவைக்கு இறக்கை இல்லை.
உயிரினங்களில் ஈசலுக்கு  வயிறும், ஜீரண உறுப்பும் இல்லை.
பறவை இனத்தில் குயில் கூடு கட்டுவதில்லை.
பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே உயிர் வாழ்வதில்லை.
Share