சிறுவர் பாடல்

உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !

-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

அன்புக் குழந்தைகளே
ஆசையுடன் கேளுங்கள்
அமுதான தமிழ்மொழியில்
அமைந்த ஒருநூல்பற்றி…

எல்லோரும் வாழ்வதற்கு
ஏற்றபல கருத்துக்களை                        … Continue reading

மழையே!.. மழையே!…

images (2)

 

மழையே மழையே வருவாய்
குழைகள் நனைக்க வருவாய்
குழிகள் தோண்டி நாமும்
குசும்பாய் விளையாட வருவாய்! (மழையே..)

மண்ணை நனைத்துக் கூழாக்கி
சின்ன விரல்களில் அப்பிட
குழைத்து மண்ணைப் பிசைந்திட
மழையே மழையே வருவாய்! (மழையே..)

மழைநீர் குழியுள் நிறைய
மகிழ்வோம் எமது கிணறென்று
கவட்டைக் கம்புகள் இரண்டு
கிணறு அருகில் ஊன்றுவோம். (மழையே..)… Continue reading

வண்ணமயிலே!

-விசாலம்

மயிலே மயிலே  அழகிய மயிலே
ஆடும் மயிலே தோகை மயிலே
உன் கழுத்தின் வண்ணம்தான்  என்ன !         Peacock
நீலம் பச்சை  கலவைதான் என்ன !

மயில் கழுத்துக் கலர்
காணக்காணச் சுண்டி இழுக்கும்
கழுத்தை ஆட்டி நடை அழகு… Continue reading

நல்ல பிள்ளை!

கன்னங் கரு மேகமே!
கண்ண நிற மேகமே!
செல்வதெங்கே மேகமே!
சொல்லிச் செல்வாய் மேகமே!

காற்று உனக்கு அன்னையோ!
கை பிடித்துச் செல்கிறாய்!
கூட்டிச் செல்லும் இடமெல்லாம்
கருணை மழை பொழிகிறாய்!

தாகத்துக்குக் கடலின் நீரைத்
தயக்கமின்றிக் குடிக்கிறாய்!
கரிக்கும் நீரைக் குடித்த போதும்
இனிக்கும் நீரைக் கொடுக்கிறாய்!

கன்னங் கரு மேகமுந்தன்
உள்ளம் மிக… Continue reading

என் நிலா உடைந்து போனதே….

 

-விசாலம்

பௌர்ணமி நிலவில்moon
பளிச்சென்ற வெளிச்சம்
ஆலமரத்தின்கீழ் ஒரு நாள்                               … Continue reading

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

விசாலம்kuruviindex

எங்கே காணாமல் போய்விட்டாய்?
என்னை ஏங்க வைத்து விட்டாய் .

உன் சிறிய தலையும் சின்ன மூக்கும்
உன் அழகை மேலும் கூட்டியதே !

நீ கோபம் கொண்டு பறந்தது ஏன் ?
நீ  கோயில் உச்சியில் அம்ர்ந்தது ஏன்?

இதோ பார் ! பாட்டி முறத்துடன்
இட்ட அரிசியைப் பொறுக்குகிறார்..

நெல்லைத்தூக்கி… Continue reading

மீனாவும் மைனாவும்

 

விசாலம்

 

“மைனாக்குருவி மைனாக் குருவி
அழகாய் வானத்தில் பறக்கிறாய்,
மலையின் உச்சிக்கும் போகிறாய்
சலசலக்கும் நதியும் கடக்கிறாய் ,
காட்டிலும் சிறகடித்து போகிறாய் ,
இயற்கை அழகை ரசிக்கிறாய் ,
உன்னைப்போல் பறந்து செல்ல
எனக்கும் ரொம்ப ஆசைதான்.
உன்னைப்போல் கவலையின்றி
சுற்றி வரவும் ஆசைதான் ,”
நீ போகும் இடம் என்னை… Continue reading

தகர டப்பா கார்

 

விசாலம்

 

எங்க வீட்டு மாருதி  கார் ஒன்று,
விபத்தில்  வேகமாய் மோதி நின்று ,
முகமும் ஒரே சப்பையாகி
பரிதாபமான தோற்றமாகி  ,
வீட்டின்  முன் புறம் நின்றது  ,
தூசி படிந்து    அழுதது.
எங்கள்  விட்டு  சுட்டிப்… Continue reading

பார்க்கலாமா?

 

கவிநயா

சிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்க்கலாமா?

வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப் பார்க்கலாமா?

காற்றுத் தேரில் உலகமெங்கும் சுற்றிப் பார்க்கலாமா?

ஆற்று நீரில் நீந்திக் கடலைச் சேர்ந்து பார்க்கலாமா?

 

மீனைப் போல நீரில் நீந்தி ஆழம் பார்க்கலாமா?

மானைப் போலத் துள்ளித் துள்ளி ஓடிப் பார்க்கலாமா?

வானம் பாடி கானம்… Continue reading

என் தோட்டம்

 

-விசாலம்

 

 

 

 

 

 

” ராமு அண்ணா .வந்தாச்சு
என் தோட்டம் பாக்க வந்தாச்சு
பரிசு கொண்டு வந்தாச்சு
பாசம் காட்ட வந்தாச்சு ”

‘கலகல’வென ஒரு சிரிப்பு
முகத்தில ஒரு பூரிப்பு .
என் கையை பிடித்து இழுத்தாள் தங்கை
தோட்டம் பக்கம் நடந்தாள். தங்கை

”… Continue reading