சிறுவர் பாடல்

மழையே, மழையே! வா… வா!

 

-விசாலம்

கருத்த வானம்
வரிசையில் பறவைகள்
தேடல் ஒரு பாதுகாப்பான இடம்.
மக்களின் துரித நடை.
ஆரம்பித்தது சிறு துளிகள்.
மகிழ்ந்த சிறுவர்கள்,
கைக்கொட்டி வரவேற்பு
உடைகள் நனைந்தன,
உள்ளமும் மலர்ந்தன.
இடியுடன் மின்னல்,
“சோ’என்று எங்கும் சத்தம்.
தெருவெல்லாம் தங்கும் வெள்ளம்.
ஒரு குடிசையில் நுழைந்தது.
மேல் கூரையும் தொப்பல்
கிழே சொட்டும்… Continue reading

ரகசியம் என்ன?

 

-விசாலம்

 

என்னைக்கவர்ந்த அன்னமே ,

தூய்மையின் வெண்மை நிறமே,

என்னிடம் ஓடி வாராய் ,

ரகசியம் கற்றுத் தாராய்

உன் அன்னநடையே என்ன அழகு!

உன் வளைந்த கழுத்தும் கொள்ளை அழகு!

தமயந்தியும் உன் வசமானாள்!

தன் காதலுக்கு தூதும் விடுத்தாள்,

நீயும் நளனிடம் தூது சென்றாய்

இருமனம் ஒன்றாய் கலக்க வைத்தாய்… Continue reading

சமையலறையில் அட்டகாசம்

விசாலம்

பூனை   ஒன்று   நுழைந்ததாம்
சமையலறையில்  ஆட்டம் போட்டதாம்.
பால் பாத்திரம் உருண்டுதாம்..
மோட்டு எலிகள் ஒளிந்ததாம்.
அடுக்களையில் ஆட்டம் ஆரம்பம்
“மியாவ் “என்று பூனை பாடியதாம் .
தட்டுகள்  தாளம் போட்டதாம் .
உலைநீர் ‘தளதள’ வென கொதித்ததாம் ,

டிவியில் மூழ்கிய அம்மா எழுந்தாளாம்
‘மியாவ்’ சத்தம்… Continue reading

கிட்ட வாயேன் நிலவே!

 

-கவிநயா

 

வட்ட வட்ட நிலவே

கிட்டக் கிட்ட வாயேன்

குட்டிப் பிள்ளை உன்னைக் கொஞ்சம்

தொட்டுப் பார்க்கத் தாயேன்!

 

வெள்ளித் தட்டுப் போல

வட்டமிடும் நிலவே

வானம் விட்டு என்னைக் கொஞ்சம்

வட்டமிட வாயேன்!

 

அம்மா சுட்ட தோசை போல

வட்டமான நிலவே

சும்மா உன்னைத் தொட்டுக் கொஞ்சம்

பிட்டு… Continue reading

அனா ஆவன்னா…

 

 

விசாகை மனோகரன்


றியாமையை அகற்றி

க்கிரமிப்பை தகர்த்தி

யலாமையை விடுத்து

சனடி நாடி

யிர் பயம் துறந்து

ண் உறக்கம் மறந்து

ன்றென்றும் உனை உணர்ந்து

டுகள் பல புரிந்து

யம் என்ற சொல்லே

வ்வாத ஒரு வார்த்தையாய்… Continue reading

மரம் – பாப்பா பாட்டு

 

கவிநயா

ஓங்கி உயர்ந்து வளர்ந்திடுமாம்!

ஒதுங்க நிழலைத் தந்திடுமாம்!

பாடித் திரியும் பறவைகட்கு

கூடி வசிக்க இடந்தருமாம்!

 

வானந் தொட்டு வளர்ந்தாலும்

வளைந்தே காற்றில் அசைந்திடுமாம்!

மேகந் தொட்டு மழை நீரால்

மண்ணின் தாகம் தீர்த்திடுமாம்!

 

வளர்ந்து அடர்ந்து காடாகி

விலங்கு களுக்கும் புகல்தருமாம்!

இயற்கைத் தாய்க்கு உறுதுணையாய்

இயல்பாய் உதவி… Continue reading

உன்னைப்போல எவருண்டு!

 

 

கவிநயா

சின்னக் கண்ணே சிரிக்கும் முத்தே
சின்னப் பாப்பா வா
கண்ணின் மணியே கொஞ்சும் கிளியே
கண்ணே பாப்பா வா

அ, ஆ, இ, ஈ, கற்றுக் கொண்டு
அழகாய்ப் பேசிடணும்
நம்தாய் மொழியாம் தமிழை நீயும்
கண்ணாய்ப் போற்றிடணும்

உண்ணும்போது பிறர்க்கும் கொடுத்து
பகிர்ந்தே உண்டிடணும
உதவி வேண்டும் பேர்க்கு உடனே… Continue reading

பூஞ்சிரிப்பூ!

கவிநயா

சின்னச் சின்ன ரோஜாப்பூ!

வண்ண வண்ண ரோஜாப்பூ!

முள்ளின் நடுவே இருந்தாலும்

மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூ!

கொடியில் பாரு முல்லைப்பூ!

கொத்துக் கொத்தாய் முல்லைப்பூ!

கொஞ்ச நேரம் இருந்தாலும்

கொஞ்சிச் சிரிக்கும் முல்லைப்பூ!

குண்டு குண்டு மல்லிப்பூ!

செண்டு போல மல்லிப்பூ!

மனங்கள் மகிழ மலர்ந்தேதான்

மணம் பரப்பும் மல்லிப்பூ!

குளத்தில் பாரு தாமரைப்பூ!… Continue reading

ஆரிரரோ

 
கவிநயா

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ… Continue reading

பலூன் சொன்ன பாடம்

 

யோகேஷ் மித்ரா


ஊத ஊத விரியுது
உப்பி உப்பிப  பருக்குது
கன்னம் கூட வலிக்குது
விம்மி விம்மி வீங்குது
வாயும் கூட வலிக்குது
வண்ண வண்ண பலூன் பாரு
பச்சை பலூன் நீல பலூன்
செம்பருத்திப் பூவு போலே
சிவந்திருக்கும் சின்ன பலூன்
மஞ்சள் பூசிக் குளிச்சது போல்
மங்கலமாய்ச் சிரிக்கும் பலூன்… Continue reading