Monthly Archives: June 2012

ஆரிரரோ

 
கவிநயா

என்னுலகே என்னுயிரே ஆரிரரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோ
பொன்னழகே பூவிழியே ஆரிரரோ
பூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ

உன் முகத்தைப் பார்த்திருப்பேன்
ஊனுறக்கம் மறந்திருப்பேன்
உலகாள வந்தவளே ஆரிரரோ
அந்த உமையவளே நீதானோ ஆரிரரோ

மூச்சு விடும் முழு நிலவே
முத்தமிடும் முத்தமிழே
முத்து முத்துப் புன்னகையில் ஆரிரரோ
மூவுலகும் மயங்கிடுமே ஆரிரரோ… Continue reading

பலூன் சொன்ன பாடம்

 

யோகேஷ் மித்ரா


ஊத ஊத விரியுது
உப்பி உப்பிப  பருக்குது
கன்னம் கூட வலிக்குது
விம்மி விம்மி வீங்குது
வாயும் கூட வலிக்குது
வண்ண வண்ண பலூன் பாரு
பச்சை பலூன் நீல பலூன்
செம்பருத்திப் பூவு போலே
சிவந்திருக்கும் சின்ன பலூன்
மஞ்சள் பூசிக் குளிச்சது போல்
மங்கலமாய்ச் சிரிக்கும் பலூன்… Continue reading

தேடிப் பாரு!

 

கவிநயா

மழை மழை மழை மழை பாரு!
மேகத்துல போயி ஓட்டை போட்டதாரு?

சிலு சிலு சிலு சிலு காத்து பாரு!
காத்துக்குள்ள ஏசியை வெச்ச தாரு?

பள பள பள பள மின்னல் பாரு!
வானத்துல வெள்ளிக் கோடு போட்டதாரு?

டம டம டம டம இடி பாரு!
மேலே போயி பட்டாசு… Continue reading

எழுத்துப்பாட்டு

 யோகேஷ் மித்ரா

அ ஆ சொல்லு
வாயைத்திறந்தான்
இ ஈ சொல்லு
பல்லை இளித்தான்
உ ஊ என்றாள்
சூடு பறக்கும்
எ ஏ
என்றாள்
கேலிகள் வேண்டாம்
ஒ ஓ என்பது
எத்தனை உயரம்
அ ஆ என்பது எத்தனை பெரிசு?
ஆனை போலே அத்தனை பெரிசு.
ஆலமரம் போல்
அத்தனை பெரிசு.… Continue reading

செல்லத்தின்..