மழையே, மழையே! வா… வா!

 

-விசாலம்

கருத்த வானம்
வரிசையில் பறவைகள்
தேடல் ஒரு பாதுகாப்பான இடம்.
மக்களின் துரித நடை.
ஆரம்பித்தது சிறு துளிகள்.
மகிழ்ந்த சிறுவர்கள்,
கைக்கொட்டி வரவேற்பு
உடைகள் நனைந்தன,
உள்ளமும் மலர்ந்தன.
இடியுடன் மின்னல்,
“சோ’என்று எங்கும் சத்தம்.
தெருவெல்லாம் தங்கும் வெள்ளம்.
ஒரு குடிசையில் நுழைந்தது.
மேல் கூரையும் தொப்பல்
கிழே சொட்டும் பல துளிகள்,
பாத்திரங்களை நிரப்பின .

ஒரு சிறுமி வந்தாள்.
அவள் கையில் ஒரு புத்தகம் .
அமர இடமில்லை
அவள் முகத்தில் ஒரு சுளிப்பு .
“அம்மா நாளை பரீட்சை…..
இந்தப்பாழாப் போன மழை ……..’
தாயின் கரம் நீண்டது
அவள் வாயைப்பொத்தியது .
“மழை வேண்டும் செல்லமே,
நாடு செழிக்க மழை வேண்டும் செல்லமே .
மழை நீர் சேகரிக்க வேண்டும்.
விவசாயிகள் மகிழ வேண்டும்.
அதிக விளைச்சலைக் காண வேண்டும்.
மழையை வரவேற்போம்
பசுமையில் மகிழ்வோம் ”

“ஆமாம் அம்மா “என்றாள் சிறுமி
மழைத்துளிகளில் கையை நீட்டினாள்.
இயற்கையை அனுபவித்தாள்.
“நன்றி அம்மா” என்றாள் .

 

படத்துக்கு நன்றி: http://cinema.maalaimalar.com/2011/06/05170711/heavy-rain-in-papanasam-area-c.html

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *