தகர டப்பா கார்

 

விசாலம்

 

எங்க வீட்டு மாருதி  கார் ஒன்று,
விபத்தில்  வேகமாய் மோதி நின்று ,
முகமும் ஒரே சப்பையாகி
பரிதாபமான தோற்றமாகி  ,
வீட்டின்  முன் புறம் நின்றது  ,
தூசி படிந்து    அழுதது.
எங்கள்  விட்டு  சுட்டிப் பிள்ளை ,
ராமு. அவனுக்கு படு மூளை ,
குழந்தைகளுக்கு ஒரு கார் ஆக்கி ,
ஓடவைத்தான், உருப்படியாக்கி.
பெட்ரோல் இல்லை  , செலவும் இல்லை
தள்ளத் தள்ள  ஓட்டம்  பிடிக்கும்
ஒரு நாள் ஒலித்தது   அவன் குரல்
“வாருங்கள், காரை ஓட்டலாம்  ,
உத்சாகமாகப்    பாடலாம் ,
விழுந்தது அழைப்பு  பலர்  காதில் ,
கிட்டு வந்தான்  கமலி வந்தாள் ,
ராமு வந்தான் ராதா வந்தாள் ,
“பீம் பீம்” என்ற  சத்தம் வந்தது  ,
காரை பலர் பலத்துடன்  தள்ள,
அதுவும் மெள்ள ஊர்ந்தது ,
அந்த ஆனந்தம்  குறைந்து நிலைக்க
“டபார்”   என்று டயரும்  வெடித்தது  ,
ராமு   குரல் மீண்டும் ஒலிக்க  ,
“தகர டப்பா  காரு டோய் இது
மக்கர் பண்ணி நிக்குது.
சேகர்  ராதா  வாருங்கள்,
சேர்ந்து தள்ளலாம்  ஷெட்டுக்கு “
முக்கி முனகி யாவரும் தள்ள ,
பழைய இடத்தில் வந்தது ,
“போன மச்சான் திரும்பி வந்தான் ,
உடைந்த டயரோட”
கோரஸாக குரல் சேர்ந்துகொள்ள
குழந்தைகளின் ஒலி  காற்றில் மிதந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *