மீனாவும் மைனாவும்

 

விசாலம்

 

“மைனாக்குருவி மைனாக் குருவி
அழகாய் வானத்தில் பறக்கிறாய்,
மலையின் உச்சிக்கும் போகிறாய்
சலசலக்கும் நதியும் கடக்கிறாய் ,
காட்டிலும் சிறகடித்து போகிறாய் ,
இயற்கை அழகை ரசிக்கிறாய் ,
உன்னைப்போல் பறந்து செல்ல
எனக்கும் ரொம்ப ஆசைதான்.
உன்னைப்போல் கவலையின்றி
சுற்றி வரவும் ஆசைதான் ,”
நீ போகும் இடம் என்னை அழைத்துப்போவாயா ?
அருவி மீதும் வானம் மீதும் பறந்து போக வைப்பாயா ?

“மீனாக்குட்டி மீனாக்குட்டி,
எனக்கும் அழைத்துப்போக ஆசைதான்.
உன் ஏக்கம் எனக்குப் புரிந்ததே
எனக்கு இருக்கும் இறக்கைகள்
என்னைப் பறக்க வைக்கின்றன ..
சிறகுகள் விரித்து பறக்கின்றேன்.
சுதந்திரமாய் வளைய வருகின்றேன்.
உன்னிடமோ இறக்கைகள் இல்லை.
ஏரோப்ளேனில் நீ அமர்ந்துக்கொள்.
உலகம் முழுக்க சுற்றி வா .
பல இடங்களைப் பார்க்கலாம் நதியையும் கடக்கலாம்
என் ஐடியா எப்படி? கொஞ்சம் சிரி பார்க்கலாம்.”

“என்ன பேசுகிறாய் மைனாவே !
நீ பறக்கும் சுகம் இதில் வருமா?
பல்லாயிரம் கொடுத்தால் டிக்கெட்டு ,
உள்ளே நுழைய பல கெடுபடி….
இதையும் தாண்டி சீட்டில் அமர்ந்தால்.
இடுப்பில் கட்ட ஒரு பெல்ட் .
சுதந்திரமாய் நடக்க இடமில்லை
சிறை போல் தோணுது இது எனக்கு,
மேகம் இல்லை நதி இல்லை
மலையில்லை காடு இல்லை
வானத்தினூடே சுதந்திரமாய்
நீ சுற்றுவது போல் ஆகுமா ?”

 

படத்துக்கு நன்றி: http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *