சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

விசாலம்kuruviindex

எங்கே காணாமல் போய்விட்டாய்?
என்னை ஏங்க வைத்து விட்டாய் .

உன் சிறிய தலையும் சின்ன மூக்கும்
உன் அழகை மேலும் கூட்டியதே !

நீ கோபம் கொண்டு பறந்தது ஏன் ?
நீ  கோயில் உச்சியில் அம்ர்ந்தது ஏன்?

இதோ பார் ! பாட்டி முறத்துடன்
இட்ட அரிசியைப் பொறுக்குகிறார்..

நெல்லைத்தூக்கி வீசுகிறாள்..
நெஞ்சில் நீ வந்து நிற்கிறாய்.

“ஏய்  மணி! என் குருவி எங்கேடா?
ஏன் நெல்லைக்கொத்த வரவில்லை?

மிக  அருகில் வந்து அமருமே!
மீந்த நொய்யைத் தின்னுமே !”

“ஆமாம் பாட்டி என் குருவி எங்கே போச்சு ?
ஆசையுடன் வரும் குருவிக்கு என்ன ஆச்சு?

அதன் “கீச் கீச் சத்தம் ஒரு இன்பமே
அதைக்கேட்காமல் மனம் துன்பமே .

“அது வராத காரணம் நாமே தான் ”
அம்மா  என்னை அணைக்கிறாள்

” ஒரு திண்ணை இல்லை ,
ஒரு திறந்த வெளியில்லை

கொல்லையில்லை மரங்கள் இல்லை
நீர்த்தொட்டி இல்லை தாவரம் இல்லை

கோபுர உயரம் வீடுகள் உண்டு ,
எங்கும் அசுத்த வாயுமுண்டு ,

பறவைகளுடன் பழக நேரமில்லை
இயறகையை ரசிக்க பொறுமையுமில்லை

முறமும் இல்லை புடைப்பதுமில்லை !
எல்லாம் இயந்திரம் .உடற்பயிற்சியுமில்லை.”

இயற்கையைத்தேடி சிட்டோ   பறந்தது
நாம் பறக்க வழி தெரியவில்லை ‘”

படத்துக்கு நன்றி

http://www.asiantribune.com/news/2010/03/18/march-20-be-celebrated-world-house-sparrow-day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *