என் நிலா உடைந்து போனதே….

 

-விசாலம்

பௌர்ணமி நிலவில்moon
பளிச்சென்ற வெளிச்சம்
ஆலமரத்தின்கீழ் ஒரு நாள்                                                                      
ஆடிக் குதித்த  வானரப் பட்டாளம்
தாவித் தாவிக் களித்தன
தமக்குள்  சண்டை போட்டன
வாலைப் பிடித்து இழுத்தன
வண்டிபோல் முதுகில் சவாரி செய்தன
பழங்களைப் பிடுங்கின
பச்சைக் கிளைகளை உலுக்கின.

ஒரு  குட்டிக்குரங்கு
ஓட்டத்துடன் கிணற்றில் தாவ
கண்டது முழுநிலவைத்தான்
“காப்பாற்றுங்கள்! ஐயோ…காப்பாற்றுங்கள்!
ஆகாய நிலா விழுந்து விட்டது நீரில்”
அலறிப் புடைத்துக்கொண்டு
வந்தது ஒரு பட்டாளம்
நீரிலிருந்து எடுத்தது நிலாவை
நிலவும் கலைந்து போனது
குட்டிக்குரங்கின் அழுகை
வானத்தை எட்டியது
“ஐயோ என் நிலா
இப்படி உடைந்து போனதே!”

வந்தது அங்கு வயதான வானரம்
வருடியபடி  வானரத்தை… 
”அட முட்டாள்!
அதோ வானத்தைப் பார்
நிலா உடையவில்லை
நிலா மாறவில்லை
நிலா அழியவில்லை
பார்! பார்! அதோ பார் வெண்ணிலா!
பவனிவரும் அதன் அழகைப் பார்!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *