வண்ணமயிலே!

-விசாலம்

மயிலே மயிலே  அழகிய மயிலே
ஆடும் மயிலே தோகை மயிலே
உன் கழுத்தின் வண்ணம்தான்  என்ன !         Peacock
நீலம் பச்சை  கலவைதான் என்ன !

மயில் கழுத்துக் கலர்
காணக்காணச் சுண்டி இழுக்கும்
கழுத்தை ஆட்டி நடை அழகு
காண்பவரை அசர வைக்கும் !

குனிந்து  உன் உணவைக் கொத்த
உன் கொண்டைகள் அசைந்தாடும்
மேகம் திரண்டு வர
உன் ஆனந்தம்தான் என்ன?

உன் உடல் சிலிர்க்கும்
உன்  தோகை விரியும்
எத்தனை மயிற்கண்கள் !
எத்தனை வண்ணக்குவியல் !

மழைத்துளியுடன் நடன சங்கமம்
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இன்பம்!
அந்தக் குமரனை நீ ஏற்றிக்கொண்டாய்
உலகத்தையே வலம் வந்தாய்
முருகனே ’மயில் வாகனன்’ ஆனான்
உன் பெயருக்குப் பெருமை சேர்த்தான்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *