‘என் பெயர் என்ன?’

விசாலம் icalf-ndex
சிறு வயதில் என் பாட்டி எனக்குச் சொல்லியக் கதை ஞாபகம்  வந்தது நான் ஐந்து வயதில் கேட்ட கதை ,இதிலிருந்து  என்ன தெரிகிறது என்றால் சிறுவயதில் எது  மனம் ஒன்றி கேட்டாலும் செய்தாலும் அது மனதிலே அப்படியே படிந்து விடுகிறது  அதற்கு தான் நல்ல பழக்கங்களை  சிறு வயதிலிருந்தே பழக்கிக்கொள்ளவேண்டும்  சரி   கதைக்குப்  போவோமா?

“என் பெயர் என்ன ?”

ஒரு  ஈ பறந்து வளைய வளைய வந்துக் கொண்டிருந்தது. திடீரென்று அதன் பெயர் அதற்கு மறந்து விட்டது  சரி   யாரைப்போய்க் கேட்கலாம் என்று பார்த்தது
அங்கு ஒரு கன்றுக்குட்டி நின்றுக்கொண்டிருந்தது  அதனிடம் போய்  “கொழு கொழு கன்றே என் பெயர் என்ன?” என்று கேட்டது ,அதற்கு கன்று  “எனக்கு  தெரியாது என் அம்மா பசு அங்கு புல் மேய்ந்து கொண்டிருக்கிறாள் . அவளிடம் போய் கேள்”
பசுவினிடம் ஈ போயிற்று  “கொழுகொழு கன்றே கன்றின் தாயே ,,என் பெயர் என்ன?
பசுவும்  “எனக்குத் தெரியாது என்னை மேய்க்கும் இடையனிடம் போய் கேள்”என்றது. இதுவும் விர் என்று பறந்து “கொழுகொழு கன்றே கன்றின் தாயே  தாய் மேய்க்கும் இடையா என் பெயர் என்ன”? என்று வினவியது  அவனும்  சிறிது யோசித்து “உஹூம் எனக்குத்  தெரியவில்லை. என் கையில் இருக்கும்  கோலைக் கேள். நான் இது மேய்க்க  வைத்துக் கொள்வேன் ”
ஈ திருமப அவன் கோலிடம் கேட்டது “கொழுகொழு கன்றே,  கன்றின் தாயே,தாய் மேய்க்கும் இடையா,  இடையன் கைக்கோலே என் பெயர் என்ன”?
அதுவும் தெரியாமல் “எனக்குத் தெரியாது  நான் வளரும் கொடி மரத்தைக்கேள் “என்றது. ஈயும் கொடி மரத்திற்குச் சென்று
“கொழுகொழுகன்றே,கன்றின் தாயே, தாய் மேய்க்கும் இடையா, இடையன் கைக்கோலே,,கோல் வளரும் கொடி மரமே  என் பெயர் என்ன”?
கொடி மரம் ஒன்றும் புரியாமல் “எனக்குத் தெரியாது என் கீழ் வந்து நிற்கும்  கொக்கைக் கேள் “என்றது ஈயும்  கொக்கிடம் சென்றது பின் கேட்டது.
“கொழுகொழு கன்றே,  கன்றின் தாயே, தாய் மேய்க்கும் இடையா, இடையன் கைக் கோலே,  கோல் வளரும் கொடிமரமே, கொடிமரத்தின் கீழ் கொக்கே என் பேயர் என்ன”?
கொக்கிற்கும் தெரியவில்லை” நான் தின்னும்  மீனுக்குத் தெரிந்திருக்கும்  அதனிடம் கேள்” என்றது
ஈயும் மீனிடம் போய்   “கொழுகொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கும்  இடையா, இடையன் கைக் கோலே, கோல் வளரும் கொடி மரமே, கொடி மரத்தின் கீழ் இருக்கும் கொக்கே,  கொக்கு தின்னும் மீனே என் பெயர் என்ன”? மீன் ஒன்றும் புரியாமல் “எனக்குத் தெரியாது என்னைப் பிடிக்கும்  வலையனைக் கேள்” என்றது
“கொழுகொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கும் இடையா,இடையன் கைக் கோலே, கோல் வளரும் கொடி மரமே,
கொடி மரத்தின் கொக்கே, கொக்கு தின்னும் மீனே,   மீன் பிடிக்கும் வலையா என் பெயர் என்ன”?
அவனுக்கும் தெரியவில்லை “என் கையில் இருக்கும் கலயத்தினிடம் கேள்”என்றான்  அதுவும்  கலயத்தைப்பார்த்து ” கொழுகொழு கன்றே, கன்றின் தாயே,  தாய் மேய்க்கும் இடையா,   இடையன் கைக் கோலே,  கோல் வளரும் கொடி மரமே,கொடி மரத்தின் கொக்கே,       கொக்கு தின்னும்   மீனே,  மீன் பிடிக்கும் வலையா,  வலையன் கைக் கலயமே, என் பெயர் என்ன”?
கலயம் ஈயைப் பார்த்து  “எனக்கும் தெரியவில்லை  என்னைச் செய்யும் குயவனிடம் கேள்”என்றது  ஈயும்  குயவனிடம் போய்
“கொழுகொழு கன்றே, கன்றின் தாயே, தாய் மேய்க்கும் இடையா,   இடையன் கைக்கோலே,    கோல் வளரும் கொடி மரமே, கொடி மரத்தில் இருக்கும் கொக்கே    கொக்கு தின்னும் மீனே,  மீன் பிடிக்கும் வலையா,  வலையன் கைக்கலயமே,  கலயம் செய்யும் குயவா,  என் பெயர் என்ன”?
அவனும் தனக்குத் தெரியாது என்றுச்  சொல்லி  “நான் கலயம் செய்யும் மண்ணைக் கேள்”என்றான்  அது மண்ணிடம் சென்று  தன் பெயரைக் கேட்டது.
மண்சொன்னது  “உன் பெயர் எனக்குத் தெரியாது என் மேல் வளரும் புல்லைக் கேள் ” என்றது  அந்த ஈ பறந்து புல்லிடம் சென்றது “புல்லே என் பெயர் என்ன”
“எனக்குத் தெரியாது  என்னைத் தின்னும் குதிரையை கேள் என்றது.  ஈ பறந்து குதிரையிடம்  சென்றது
“கொழுகொழுகன்றே
கன்றின் தாயே தாய் மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே,
கோல் வளரும் கொடி மரமே,
கொடி மரத்தின் கொக்கே,
கொக்கு தின்னும் மீனே,
மீன் பிடிக்கும் வலையா,
வலையன் கைக் கலயமே,
கலயம் செய்யும் குயவா,
குயவன் கையின் மண்ணே
மண்ணில் வளரும்  புல்லே,
புல்லைத் தின்னும் குதிரையே ,,,என  பெயர் என்ன”?
குதிரைப் புல்லைத்  தின்று விட்டு   ஹீஹீ ஹீ என்று கனைத்தது

ஓ ஞாபகம் வந்து விட்டது  எனக்கு  நீ சொல்லி விட்டாய் என் பெயரை. என் பெயர் ஈ”   என்றுமகிழ்ச்சியுடன் பறந்துச் சென்றது  ,,

குழந்தைகளே எப்படி இந்தக் கதை ,,,இந்தக் கதையில் பல தடவைகள் வாக்கியங்கள் திரும்பத் திரும்ப வருவதால் அப்படியே மனப் பாடம் ஆகி விடுகிறது மேலும் கன்றைப்பற்றியும்  தாய் பசுவைப் பற்றியும்,  கால் நடைகளை மேய்க்கும் இடையன் பற்றியும், அவன் கையில் இருக்கும் கோல் பற்றியும்,  கொக்குவுக்கு உணவு மீன் என்பது பற்றியும்   சொல்லப்படடிருக்கிறது. தவிர  பல வேலை செய்பவர்கள் குயவன், வலையன், இடையன்  என்பதையும்,  மண்ணினால் மண்பாண்டம் செய்யலாம் என்றும்,  மண்ணின் மேல் பல செடி கொடிகள் வளர்கிறது என்றும், குதிரை புல்    தின்னும் என்பதும்  விளக்கப் பட்டிருக்கிறது   சின்ன வேடிக்கைக் கதையினால் அறிவையும்  அந்தக் காலத்தில் தாத்தா பாட்டிகள் வளர்த்திருக்கிறார்கள் இல்லையா ?எங்கே  இந்தக் கதையைப் படியுங்கள்.  தானாகவே மனப் பாடம் ஆகிவிடும். எனக்கு  40 வயதில் படித்த   சில பாடலக்ளில் சில இடங்கள் மறந்து விட்டன்  ஆனால் ஐந்து வயதில் படித்த,    பாட்டிச்சொல்லிக் கொடுத்த இந்தக் கதை அப்படியே ஞாபகம் இருக்கிறது

,,,ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

படத்துக்கு நன்றி

http://www.123rf.com/photo_3417583_a-dutch-belted-cow-with-a-calf.html

One Response to ‘என் பெயர் என்ன?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *