பவள சங்கரி திருநாவுக்கரசு

பாப்பா .. பாப்பா கதை கேளு! (48) நம்பிக்கை!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா? இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு… Continue reading

ஔவையும் அதியமானும்

பவள சங்கரி

800px-adhiyaman_avvaikku_nellikani_vazhanguthal

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக… Continue reading

பிள்ளையாரும் ஔவையாரும்

பவள சங்கரி

dsc00084
ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா? இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா?

விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா?

சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை.

விநாயகரை வணங்கும் முறை… Continue reading

பாப்பா பாப்பா .. கதை கேளு! (38)

பவள சங்கரி

மனம் ஒரு குரங்கு

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.

19

ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால்… Continue reading

The Ugly Duckling – அசிங்கமான வாத்து!

பவள சங்கரி

ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா..

இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது..

கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு… Continue reading

வாழ்க்கைப்பாடம்!

பவள சங்கரி

images (12)

பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம்… Continue reading

பாப்பா.. பாப்பா கதை கேளு! (1)

பவள சங்கரி

https://www.youtube.com/channel/UC3TqhE5JM428pcUm7mp7FWA

பாப்பா.. பாப்பா கதை கேளு!

 

எச்சரிக்கை!

பவள சங்கரி

Alcohol_Abuse_Project_by_TomBod

நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் என் தோழி ஒருவரை சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், அவள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. இணையம் குழந்தைகளுக்கு இன்று பரந்துபட்ட ஞானத்தை, நன்றும், தீதும் என அனைத்தையும் குறைவின்றி வழங்குகிறது. பல பெற்றோர் அவர்களின் படிப்பை மட்டும்… Continue reading

பிரெஞ்சு மொழி மாற்றுக் கதை – கோல்டிலாக்சு மற்றும் மூன்று கரடிகள்

பவள சங்கரி

images (1)

முன்னொரு காலத்தில், அம்மா, அப்பா, குட்டி என்று மூன்று கரடிகள் இருந்தது. அவை மூன்றும் ஒரு பெரிய காட்டின் நடுவே ஒரு மஞ்சள் வீட்டில் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள், அம்மா கரடி காலை உணவிற்காக ஒரு பெரிய பானை வழிய மிகச் சுவையானதொரு கஞ்சியைத் தயாரித்து முடித்திருந்தது. அது கொதித்துக் கொண்டிருந்ததால்,… Continue reading