வேதா.இலங்காதிலகம்.

மழையே!.. மழையே!…

images (2)

 

மழையே மழையே வருவாய்
குழைகள் நனைக்க வருவாய்
குழிகள் தோண்டி நாமும்
குசும்பாய் விளையாட வருவாய்! (மழையே..)

மண்ணை நனைத்துக் கூழாக்கி
சின்ன விரல்களில் அப்பிட
குழைத்து மண்ணைப் பிசைந்திட
மழையே மழையே வருவாய்! (மழையே..)

மழைநீர் குழியுள் நிறைய
மகிழ்வோம் எமது கிணறென்று
கவட்டைக் கம்புகள் இரண்டு
கிணறு அருகில் ஊன்றுவோம். (மழையே..)… Continue reading