மண் மணக்கும் பூமியில் மலர் மணக்கும் கோலங்கள்.

கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் ஓணம் திருவிழாவைமுன்னிட்டு மகாபலியை வரவேற்க மெகா கோலம் உருவாக்கப் பட்டதை கோவை மக்கள், புருவம் விரிய பார்வையிட்டனர். முப்பது அடி நீளம் மற்றும் அகலம் கொன்ட மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய……… கோலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் பல்வேறு வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன், பள்ளிச் செயலாளர் மோகன்தாஸ், மற்றும் பெற்றோர்கள் பாராட்டியதுடன் ஓணம் திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்கள்.

-தூரிகை சின்னராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *