தமிழகத்தில் 54,016 வாக்குச் சாவடிகள்

நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 54016 இடங்களில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 32 மாவட்டங்களில் அதிக சட்டப் பேரவைத் தொகுதிகளையும் வாக்குச் சாவடிகளையும் கொண்ட மாவட்டம் தலைநகர் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

16 தொகுதிகளை கொண்ட சென்னையில் அதிகப்படியாக 3225 வாக்குச் சாவடிகள் உள்ளன.

அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாவட்டம், வேலூர் மாவட்டமாகும். இதில் உள்ள 13 தொகுதிகள், 2902 வாக்குச் சாவடிகளைக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக 11 தொகுதிகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2811 வாக்குச் சாவடிகள் உள்ளன.

மிகக் குறைவாக வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாவட்டம், கடைசியாக உருவான அரியலூர் மாவட்டம் ஆகும். அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச் சாவடிகள் 519 மட்டுமே.

இரண்டாவது மிகக் குறைவான வாக்குச் சாவடிகளை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டமாகும். இரண்டு தொகுதிகளைக் கொண்ட இம்மாவட்டத்தில் 537 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட நீலகிரி மாவட்டம், 579 வாக்குச் சாவடிகளைக் கொண்டுள்ளது.

2000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாவட்டங்களாகத் திருவள்ளூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருவெல்வேலி ஆகும். 1000-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாவட்டங்கள் 17 ஆகும்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மக்கள் பயமின்றி தங்கள் வாக்குறுதியை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர் போலா நாத் தெரிவித்துள்ளார்.

============================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


1 + 9 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.