உலக புகைப்பட தினம்

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூயிஸ் டாகுரே “டாகுரியோடைப்’ எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயன்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு “டாகுரியோடைப்’ செயல்பாடுகளை “”ப்ரீ டூ தி வேர்ல்டு” என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

 

Share

One Comment on “உலக புகைப்பட தினம்”

Write a Comment [மறுமொழி இடவும்]


3 + = 11


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.