நாற்காலிக்காரர் – நாடக அழைப்பிதழ்

பரீக்‌ஷா தமிழ் நாடகக் குழு

(1978லிருந்து அரங்கில்

வழங்கும்

na.muthuswamy

ந.முத்துசாமி எழுதிய

நாற்காலிக்காரர்

இயக்கம்: ஞாநி

gnani


மே 29 ஞாயிறு மாலை 6.30 மணி.
இடம்: ஸ்பேசஸ், 1 எலியட் பீச் சாலை  பெசண்ட் நகர் சென்னை 90

நாற்காலிக்காரர்:

ந.முத்துசாமியால் 1970இல் எழுதப்பட்ட  நாற்காலிக்காரர் நாடகம், தமிழில் சென்னையில் முதன்முறையாக பரீக்‌ஷாவால் 1979இல் நிகழ்த்தப்பட்டது.  அபத்த நாடக வடிவில் எழுதப்பட்ட நாற்காலிக்காரர்,  எப்போதும் கடைசியில் சாதாரண மனிதனைப் பலிகடாவாக்கும்  தேர்தல் ஜனநாயகத்தின் அரசியல் விளையாட்டுகளைப் பற்றிய விமர்சன நாடகம்.

பரீக்‌ஷா:

1978இல் ஞாநியால் தொடங்கப்பட்ட பரீக்‌ஷா, கடந்த 33 வருடங்களில் தமிழில் நடத்தியுள்ள நாடகங்களை எழுதியவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, அம்பை, ஜெயந்தன், அறந்தை நாராயணன், பிரபஞ்சன், எஸ்.எம்.ஏ.ராம், ஞாநி, பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர், மகாஸ்வேதாதேவி, பெர்டோல்ட் பிரெக்ட், ஹெரால்ட் பிண்ட்டர், ஜே.பி.பிரீஸ்ட்லீ மற்றும் பலர். பல்வேறு வாழ்க்கை நிலைகளிலும் வெவ்வேறு பணிகளிலும்  இருக்கும் பரீக்‌ஷா உறுப்பினர்களை இணைப்பது நாடகம் மீதும் சமூகம் மீதும் இருக்கும் அன்பேயாகும்.

தொடர்புக்கு: ஞாநி 9444024947

====================================

படங்களுக்கு நன்றி – http://namuthuswamy.blogspot.com, http://actorprithviraj.blogspot.com

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


3 × = 15


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.