முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம் ‘ஜனவரி 29′
- Sunday, August 29, 2010, 4:34
- பொது
- 1 views
- Add a comment
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்பிய வீர மைந்தன் முத்துக்குமார் பற்றிய ஆவணப் படம், ‘ஜனவரி 29′ என்கிற பெயரில் உருவாகி உள்ளது.
இந்த ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா, 2010 ஆகஸ்டு 29ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு, அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர் கலந்துகொண்டு முதல் சிடி வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர்.
இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பேச உள்ளனர். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் ஐந்துகோவிலான் தொகுத்து வழங்குகிறார்.
ஒருங்கிணைப்பு – உதவி இயக்குநர் மகேந்திரவர்மா



