பிரார்த்தனா – தொலைக்காட்சி நிகழ்ச்சி

பிரார்த்தனை என்பது தமக்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்பட்டால் அது இரட்டிப்புப் பலனைத்தரும்.  அந்த வகையில் அடுத்தவர்களுக்காக அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்ய ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி வழங்கும் வித்தியாசமான புதிய நிகழ்ச்சி “பிரார்த்தனா”.

இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்கு ஏற்படும் பலவிதமான தடங்கலை நீக்கும் விதமாக தடைகளுக்கு சம்பந்தமான திருக்கோவிலுக்கு சென்று நேயர்கள் சார்பில் அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அஷ்டோத்திர நாமாவளி செய்து அதனை அவர்கள் கண்டுகளித்திடும் விதமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் காலை 09:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தங்களது பிரச்சினைகள் தீர்ந்திட, நல்வாழ்வு மலர்ந்திட பிரார்த்தனை செய்துகொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி கோத்திரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சிக்கு எழுத்து மூலமாக தெரிவித்தால் உரிய ஆலயங்களில் அதற்கான பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.

தங்களது நண்பர்கள், உறவினர்கள் யாருக்காக வேண்டுமானாலும் – யார் வேண்டுமானாலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்.

 

கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


5 × 1 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.