மத்திய அரசு ஊழியர்க்கு 10% அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத அகவிலை நிவாரணத் தொகையும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க மத்திய அமைச்சரவை செப்.16 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களது அடிப்படைச் சம்பளத்தில் 35 சதவீத தொகை அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஓய்வூதிய தொகையில் 35 சதவீத தொகை அகவிலை நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி வழங்குவது குறித்து தில்லியில் செப்.16 அன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 6ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 35 சதவீத அகவிலைப்படியுடன் மேலும் 10 சதவீதம் அகவிலைப்படி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2010 ஜூலை 1ஆம் தேதி முதல் இது கணக்கிட்டு வழங்கப்படும்.

இந்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.9302.2 கோடி அதிகம் செலவாகும். 2010ஆம் ஆண்டு ஜூலை முதல் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான 8 மாதங்களில் இதனால் அரசுக்கு ரூ.6,202.1 கோடி கூடுதல் செலவாகும்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 5 = 8


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.