சொந்தமாகும் சொக்கத் தங்கம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

மக்கள் முதலீடு செய்வதற்காகவும் தங்கத்தை நாடுவதால் தற்போது தங்கத்தின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  அப்படி தங்கத்தின் மீது நாட்டம் கொண்ட நேயர்களுக்காக பிரத்யேகமாக ஸ்ரீ சங்கரா டிவி வழங்கும் இந்நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிவருகிறது

உலகப் பொருளாதாரமே தங்கத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது.  அப்படி மனித வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.  பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் தற்போது ஆபரணங்கள் அணியும் மோகம் அதிகரித்துவருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்கத்தின் குணநலன்களையும் தங்கத்தால் செய்யப்படும் ஆபரணங்கள் குறித்தும் தரம் அறிதல் குறித்தும் தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடு குறித்தும் விரிவாக உரையாடுகின்றனர்.

நேயர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கம் குறித்த தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுகின்றனர்.  இந்நிகழ்ச்சி உங்கள் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி “ஸ்வர்ண ஆபரணம்”.

 

 

 

கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


9 × 5 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.